Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

இந்திய அணிக்கு உரக்க ஒலிக்கும் எச்சரிக்கை மணி

 
 
இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி.
இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி.

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ் தானிடம் இதுவரை தோற்றதில்லை என்னும் பெருமையைத் தக்கவைத்துக் கொண்ட இந்தியா தொடக்க கட்டத் தடுமாற்றத்திலிருந்து மீண்டு சுதாரித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை 18 ஓவர்களில் 118 ரன்களுக்குள் முடக்கிய இந்தியா, அந்த இலக்கை எட்டும் முயற்சியிலும் தொடக்கத்தில் தடுமாறி, மீண்டு வந்திருக்கிறது. மீண்டும் விராட் கோலியின் அற்புதமான இன்னிங்ஸ் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

தோல்வி அடையும்போது ஒரு அணியின் பலவீனங்கள் அம்பலமாகும். வெற்றி பலவீனங்களை மூடி மறைக்கும். ஆனால், நியூஸிலாந்திடம் பெற்ற அதிர்ச்சித் தோல்வி, பாகிஸ்தானிடம் போராடிப் பெற்ற வெற்றி ஆகிய இரண்டுமே இந்தியாவின் சில பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்தியா கோலியை அளவுக்கதிகமாக நம்பியிருப்பதுதான் அதன் முதல் பலவீனம். இந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஒத்துழைப்பு இருந்தாலும், கோலியின் இன்னிங்ஸ்தான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. கோலி ஒருவேளை ஆட்டமிழந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மகேந்திர சிங் தோனியை நம்பலாம் என்றாலும் அவருக்குத் துணையாக நிற்க யாரும் இல்லை. ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நெருக்கடியான கட்டத்தில், உயிர்ப்புள்ள ஆடுகளத்தில் தங்கள் திறமையை இன்னமும் நிரூபிக்க வில்லை.

நியூஸிலாந்துடனான ஆட்டமே இதற்குச் சிறந்த உதாரணம். அடுத்தடுத்து விக்கெட்கள் விழ, கோலியும் தோனியும் கவனமாக ஆடி இன்னிங்ஸை நிலைப்படுத்தினார்கள். கோலி ஆட்ட மிழந்ததும் தோனிக்குத் துணைக்கு ஆளில்லாமல்போனது. பாண்ட்யாவும் ஜடேஜாவும் சுழல் பந்தை முன்னே பின்னே பார்த்ததே இல்லை என்பதுபோல ஆடி ஆட்டமிழந்தார்கள். இந்திய மண்ணில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கிவரும் சுரேஷ் ரெய்னாவும் பரிதாபமாக ஆட்டமிழந்தார். பாகிஸ்தானுடனான போட்டியிலும் மட்டை வரிசை இதேபோலச் சரிந்தது. யுவராஜின் ஆட்டம் கைகொடுத்தாலும் கோலிதான் இன்னிங்ஸைத் தாங்கிப் பிடித்தார். கோலி ஆட்டமிழந்திருந்தால் இந்தியாவின் உலகக் கோப்பை கனவே ஆட்டம் கண்டிருக்கும்.

தொடர்கதையாகும் சரிவு

இதே நிலைமை ஆசியக் கோப்பைப் போட்டியிலும் இருந்தது. அப்போது பாகிஸ்தானுடன் நடந்த போட்டியிலும் கிட்டத்தட்ட இதே நிலை. அன்றும் யுவராஜின் துணையோடு கோலிதான் காப்பாற்றினார். நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கை கொடுக்கும் மட்டையாளராக இருப்பது கோலிக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் கோலி மட்டுமே அப்படி இருப்பது மற்றவர் களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல. கடந்த இரண்டு போட்டிகளில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஆட்டமிழந்த விதம் அதிர்ச்சிகரமானது. குறிப்பாக நியூஸிலாந்து போட்டியில் இவர்கள் ஆட்டமிழந்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பெரிய இலக்கைத் துரத்தும்போது ரன் விகிதம் முக்கியம். எனவே கவனத்தைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு ஆட வேண்டியிருக்கும். ஆனால் குறைவான இலக்கைத் துரத்தும்போது இன்னிங்ஸை நிலை நிறுத்திக்கொள்வதற்கான அவகாசம் இருக்கும். இதைப் பயன்படுத்திக்கொண்டு கவனமாக ஆடி, அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதே முன்னணி மட்டையாளர்களின் கடமை. இந்த மூவரும் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். கோலி ஒவ்வொரு ஆட்டத்திலும் இதைச் செய்கிறார். அடுத்த ஆட்டங்களிலாவது இவர்கள் மூவரும் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.

உயர் நிலை மட்டை வரிசை மட்டு மின்றி, கீழ் நடு வரிசையும் தள்ளாடு கிறது. ஒவ்வொரு அணியிலும் விக்கெட் காப்பாளரையும் சேர்த்து 7 மட்டை யாளர்கள் இருப்பார்கள். இந்திய மட்டை வரிசையில் விக்கெட் காப்பாளர் தோனி 6-ம் ஆட்டக்காரராகக் களம் இறங்குகிறார். ஏழாவது மட்டையாளர் எங்கே என்று பார்த்தால் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் தான் தென்படுகிறார்கள். இவர்கள் இருவரும் இதுவரை ஆட்டத்தை முடித்துவைக்கும் தங்கள் திறனை நிரூபிக்கவில்லை. அதுவும் பெரிய அணி களுக்கெதிராக இவர்கள் இன்னமும் தங்களை நிரூபிக்கவில்லை. இதனால் முதல் ஆறு பேர் ஆடினால்தான் உண்டு என்ற நிலை உள்ளது. டி-20 ஆட்டத்தைப் பொறுத்தவரை பல சமயம் இரண்டு பேர் நன்கு ஆடினாலே போதும். ஆனால் கடைசி ஓவர்களில் ஆடக்கூடிய 7, 8-ம் நிலை ஆட்டக்காரர்களும் ரன் அடிக்கக்கூடியவர்களாக இருந்தால்தான் வெற்றி வசமாகும். பாண்ட்யாவும் ஜடேஜாவும் இந்தப் பணிக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அணி நிர்வாகம் அவர்களைத் தாண்டி யோசித்தாக வேண்டும். அஜிங்க்ய ரஹானே, மனீஷ் பாண்டே முதலான பலர் காத்திருக்கிறார்கள். ஜடேஜாவின் சுழல் பந்துக்காக மட்டும் அவரை அணியில் சேர்க்கவில்லை. ஆல்ரவுண்டர் என்பதால்தான் பிற சுழலர்களைக் காட்டிலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

சூழலுக்கேற்ற உத்தி

மட்டை வரிசை இப்படி இருக்க, பந்து வீச்சைப் பயன்படுத்தும் விதத்தில் தோனியின் முடிவுகள் கேள்விக்குரிய வையாக உள்ளன. பாகிஸ்தானுடனான போட்டியின்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் ரெய்னாவும் நன்றாக வீசினார்கள். அஸ்வினுக்கு மூன்று ஓவர்கள்தான் கொடுக்கப்பட்டன. ரெய்னா வுக்கு ஒரே ஒரு ஓவர். ஆடுகளத்தில் பந்து கூர்மையாகத் திரும்பும் நிலையில் இவர்கள் இருவருக்கும் குறைந்தது ஆளுக்கொரு ஓவர் கொடுத்திருக்கலாம். மாறாக, ஜஸ்ப்ரீத் பூம்ராவுக்கு 4 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.

பாண்டியா 2 ஓவர்கள் போட்டார். பூம்ராவின் மூன்றாவது ஓவரில் 13 ரன்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அவரைக் கடைசி ஓவர் போடச் செய்ததைத் தவிர்த்திருக்கலாம். சுழல் எடுபடக்கூடிய ஆடுகளத்தில், நன்கு வீசும் சுழலர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களை அதிக மாகப் பயன்படுத்துவதுதான் சரியான உத்தியாக இருக்க முடியும்.

கடைசியில் வெற்றி வசமாகிவிட்டதால் இந்தக் குறை தெரியவில்லை. இந்தியா தோல்வி அடைந்திருந்தால் பூம்ரா கொடுத்த 32 ரன்கள் எவ்வளவு விலை மதிப்பு வாய்ந்தவை என்பது தெரிந்திருக்கும். சூழலுக்கேற்ற உத்தி (Horses for the sourses) என்பதைத் தன் உத்தியாகச் சொல்லிவரும் தோனி இந்த விஷயத்தில் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்னும் இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இந்தியா சிக்கலில்லாமல் அரை இறுதிக்குப் போக முடியும். ஒரு போட்டியில் தோற்றாலும் பிறரது தோல்விக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டியிருக்கும். முதல் இரு போட்டிகளும் எச்சரிக்கை மணியை வலு வாக எழுப்பியுள்ளன. இந்திய அணி அதைக் கேட்டுச் சுதாரித்துக்கொள்ள வேண்டும். தன் அணுகுமுறையில் தேவை யான மாற்றக்களைச் செய்துகொண்டால் இந்தியாவால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/article8384002.ece?homepage=true

 

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
டில்ஷானின் ஆட்டமிழப்பு பேரிழப்பு; எமது களத்தடுப்பும் மோசமாக இருந்தது – ஏஞ்சலோ மெத்யூஸ்
2016-03-22 10:45:03

(பெங்­க­ளூ­ரி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

1566329.jpg''மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான போட்­டியில் நாங்கள் 20 முதல் 30 ஓட்­டங்­களைக் குறை­வாக எடுத்தோம்.

 

அத்­துடன் களத்­த­டுப்பு படு­மோச­மாக இருந்­தது'' என இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

 

பெங்­களூர் சின்­ன­சு­வாமி விளை­யாட்­ட­ரங்கில் நேற்று முன்தினம் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான போட்­டியில் அடைந்த தோல்­விக்­கான கார­ணத்தை ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

''இப் போட்­டியில் 150 ஓட்­டங்­களைப் பெற வேண்டும் என்ற இலக்­குடன் களம் இறங்­கினோம். ஆனால், நாங்கள் 20 முதல் 30 ஓட்­டங்கள் குறை­வாக எடுத்தோம்.

 

எமது களத்­த­டுப்பு மிக மோச­மாக இருந்­தது. எமது முன்­வ­ரி­சையும் காலை வாரி­யது. இந்த நாள் எங்­க­ளுக்கு மிகவும் சிர­ம­மாக இருந்­தது'' என்றார்.

 

உபாதை கார­ண­மாக களத்­த­டுப்­பின்­போது வெளி­யே­றி­யதால் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீர­ராக களம் இறங்­க­மாட்டார் என்­பதை அறிந்­ததால் என்ன மாற்­றத்தை ஏற்­ப­டுத்த நினைத்­தீர்கள் எனக் கேட்­ட­போது, ''கெய்ல் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக களம் இறங்­க­மாட்டார் என்­ப­தாலும் 10. 12 ஓவர்கள் வரை அவரால் களம் இறங்க முடி­யாது என்­ப­தாலும் மூன்­றா­வது ஓவ­ரி­லி­ருந்து சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­களை பந்­து­ வீச அழைத்தேன். வெண்­டர்சே திற­மை­யாக பந்து­ வீ­சினார்.

 

மற்­றை­ய­வர்­களும் பந்­து­வீச்சில் திற­மை­யாக செயற்­பட்­டனர். ஆனால் களத்­த­டுப்பு மிகவும் மோசம். பயிற்­சி­க­ளின்­போது திற­மையை வெளிப்­ப­டுத்­து­ப­வர்கள் முக்­கிய போட்­டி­யின் ­போது கோட்டை விட்­டு­வி­டு­கின்­றனர்'' என்றார்.

 

தில­க­ரட்ன டில்ஷான் ஆட்­ட­மி­ழந்த விதம் குறித்து கேட்­ட­போது,
''மத்­தி­யஸ்­தரின் தீர்ப்பே மகே­சனின் தீர்ப்பு. அது குறித்து விமர்­சிக்­கவோ கருத்துக் கூறவோ முடி­யாது. ஆனால், அந்த ஆட்­ட­மிழப்பு எமக்கு பேரி­ழப்­பா­கவும் துர­தி­ருஷ்­ட­வ­ச­மா­கவும் அமைந்­தது” என பதி­ல­ளித்தார்.

 

''முன்­வ­ரிசை வீரர்கள் குறைந்த எண்­ணிக்­கை­க­ளுக்கு ஆட்­ட­மிழந்­ததால் மத்­திய வரி­சையில் நல்ல இணைப்­பாட்­டத்தை ஏற்­ப­டுத்தும் பொருட்டு நானும் திசர பெரே­ராவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க நேரிட்டது.

 

குறிப்பாக திசர பெரேரா திறமையாக துடுப்பெடுத்தாடியிருந்தார், எனினும் எங்களால் கணிசமான ஓட்டங்களைப் பெறமுடியாமல் போனது'' எனவும் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15663#sthash.wAw2Qhax.dpuf
  • தொடங்கியவர்

தொடக்க வீரர்களை விரைவில் வீழ்த்தும் வங்கதேசத்தை முறியடித்த கவாஜா, வாட்சன்

 
வாட்சன் (வலது), கவாஜா. ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள். படம்: அகிலேஷ் குமார்.
வாட்சன் (வலது), கவாஜா. ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள். படம்: அகிலேஷ் குமார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை ஆஸ்திரேலியா எளிதில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

வங்கதேசம் முதலில் பேட் செய்து 156 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 157/7 என்று வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கலக்கிய ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சிலும் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ச்சியாக 10 டி20 போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக எந்த அணியின் தொடக்க வீரர்களும் ஜோடியாக 50 ரன்களைச் சேர்த்ததில்லை. நேற்று இது முடிவுக்கு வந்தது, வாட்சன், கவாஜா இணைந்து 7.2 ஓவர்களில் 62 ரன்களை முதல் விக்கெட்டுக்காக சேர்த்தனர். இதற்கு முன்னர் வங்கதேசத்துக்கு எதிராக 10 டி20 போட்டிகளில் எதிரணியினரின் தொடக்க ஜோடி ரன் சேர்ப்பு சராசரி வெறும் 12.9 ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 45 ரன்கள்தான் இந்த 10 போட்டிகளில் எதிரணியின் தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதில் 6 முறை எதிரணியினர் 10 ரன்களைச் சேர்க்கும் முன்னரே வங்கதேசம் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா நேற்று 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலிய டி20 வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித் (3/20), கிளென் மேக்ஸ்வெல் (3/13) கேமரூன் பாய்ஸ் ஆகியோர் மட்டுமே இதற்கு முன்னர் ஸ்பின் வீச்சாளர்களாக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர்.

வங்கதேச அணி நேற்று ஆஸ்திரேலிய பந்துவீச்சை கடைசி 3 ஓவர்களில் பதம் பார்த்து சேர்த்த 44 ரன்கள் அந்த அணி கடைசி 3 ஓவர்களில் அடித்த அதிகபட்ச ரன்களாகும். இதில் மஹமுதுல்லா மட்டுமே 13 பந்துகளில் 32 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்காக 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்த வகையில் ஆஸ்திரேலியாவுக்காக வாட்சன், கவாஜா அமைத்த அரைசதக் கூட்டணி நேற்று 9-வது முறையாகும், மற்ற அணி எதுவும் தொடக்க ஜோடிக்காக 9 முறை அரைசதக்கூட்டணி அமைத்ததில்லை. முதல் விக்கெட்டுக்காக ஆஸ்திரேலிய தொடக்க ஜோடி 4 சதக்கூட்டணியும் 5 முறை 50-99 வரையிலான பார்ட்னர்ஷிப்பையும் நிகழ்த்தியுள்ளது.

வங்கதேச வீரர் மஹமுதுல்லா நேற்றைய ஸ்கோர் உட்பட நம்பர் 6 அல்லது அதற்கும் கீழே இறங்கி கடந்த 5 டி20 போட்டிகளில் 163 ரன்களை எடுத்துள்ளார். இந்த 5 இன்னிங்ஸ்களிலும் அவர் அவுட் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 96 பந்துகளில் 163 ரன்களை இந்த 5 போட்டிகளில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 169.79!!

டி20 கிரிக்கெட்டில் 4 பேட்ஸ்மென்கள் 6,000 மற்றும் அதற்கும் கூடுதலாக ரன்கள் எடுத்துள்ளனர். நேற்ற் 17 ரன்கள் எடுத்த வார்னர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். மொத்தமாக கிறிஸ் கெயில், பிராட் ஹாட்ஜ், பிரெண்டன் மெக்கல்லம் இவருக்கு முன்னேயுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article8385484.ece

 

Twenty20 Internationals Batting 2016

Overall figures
Player Mat Inns NO RunsDescending HS Ave BF SR 100 50 0 4s 6s  
V Kohli (India) 10 9 5 430 90* 107.50 326 131.90 0 5 0 47 5 investigate this query
Sabbir Rahman (Ban) 14 14 3 425 80 38.63 330 128.78 0 2 0 42 12 investigate this query
Mohammad Shahzad (Afg) 10 10 1 379 118* 42.11 244 155.32 1 1 0 37 23 investigate this query
H Masakadza (Zim) 9 9 1 361 93* 45.12 251 143.82 0 3 0 36 18 investigate this query
MJ Guptill (NZ) 8 8 2 352 87* 58.66 203 173.39 0 4 0 33 23 investigate this query
RG Sharma (India) 13 13 0 352 83 27.07 278 126.61 0 3 2 36 10 investigate this query
Tamim Iqbal (Ban) 9 9 2 330 103* 47.14 231 142.85 1 1 0 27 17 investigate this query
KS Williamson (NZ) 8 8 2 309 72* 51.50 262 117.93 0 3 0 34 3 investigate this query
LD Chandimal (SL) 11 11 0 266 58 24.18 256 103.90 0 2 0 28 6 investigate this query
S Dhawan (India) 12 12 2 265 60 26.50 222 119.36 0 2 0 32 8 investigate this query
TM Dilshan (SL) 10 10 2 256 83* 32.00 205 124.87 0 2 2 31 5 investigate this query
Mahmudullah (Ban) 14 12 5 252 54 36.00 167 150.89 0 1 0 21 10 investigate this query
HM Amla (SA) 5 5 2 251 97* 83.66 157 159.87 0 3 0 27 10 investigate this query
Muhammad Usman (UAE) 11 11 2 248 49* 27.55 226 109.73 0 0 0 27 8 investigate this query
Babar Hayat (HK) 8 8 1 245 122 35.00 165 148.48 1 1 1 25 10 investigate this query
Asghar Stanikzai (Afg) 10 9 1 239 62 29.87 186 128.49 0 2 1 17 12 investigate this query
Shakib Al Hasan (Ban) 14 14 5 236 50* 26.22 208 113.46 0 1 0 22 4 investigate this query
SR Watson (Aus) 7 7 1 236 124* 39.33 161 146.58 1 0 0 19 11 investigate this query
Shoaib Malik (Pak) 10 9 3 235 63* 39.16 187 125.66 0 1 0 27 6 investigate this query

 

 

High scores
Player Runs Balls 4s 6s SR   Team Opposition Ground Match Date Scorecard
Tamim Iqbal 103* 63 10 5 163.49   Bangladesh v Oman Dharamsala 13 Mar 2016 T20I # 534
CH Gayle 100* 48 5 11 208.33   West Indies v England Mumbai 16 Mar 2016 T20I # 537
ADS Fletcher 84* 64 6 5 131.25   West Indies v Sri Lanka Bangalore 20 Mar 2016 T20I # 543
Tamim Iqbal 83* 58 6 3 143.10   Bangladesh v Netherlands Dharamsala 9 Mar 2016 T20I # 524
Highest totals
Team Score Overs RR Inns   Opposition Ground Match Date Scorecard
England 230/8 19.4 11.69 2   v South Africa Mumbai 18 Mar 2016 T20I # 540
South Africa 229/4 20.0 11.45 1   v England Mumbai 18 Mar 2016 T20I # 540
South Africa 209/5 20.0 10.45 1   v Afghanistan Mumbai 20 Mar 2016 T20I # 542
Pakistan 201/5 20.0 10.05 1   v Bangladesh Kolkata 16 Mar 2016 T20I # 536
Most wickets
Player Mat Inns Overs Mdns Runs Wkts BBI Ave Econ SR 4 5
Shakib Al Hasan (Ban) 5 4 15.0 0 110 9 4/15 12.22 7.33 10.0 1 0
Mohammad Nabi (Afg) 5 5 19.0 1 121 8 4/20 15.12 6.36 14.2 1 0
Rashid Khan (Afg) 5 5 20.0 0 140 7 3/11 20.00 7.00 17.1 0 0
PA van Meekeren (Neth) 3 2 6.0 0 28 6 4/11 4.66 4.66 6.0 1 0
MJ Santner (NZ) 3* 2 8.0 0 41 6 4/11 6.83 5.12 8.0 1 0
KJ Abbott (SA) 2 2 7.4 0 77 5 3/41 15.40 10.04 9.2 0 0
DT Tiripano (Zim) 3 3 10.4 0 88 5 2/20 17.60 8.25 12.8 0 0
WP Masakadza (Zim) 3 3 12.0 1 89 5 4/28 17.80 7.41 14.4 1 0
GH Dockrell (Ire) 2 2 4.0 0 25 4 3/7 6.25 6.25 6.0 0 0
IS Sodhi (NZ) 3* 2 8.0 0 32 4 3/18 8.00 4.00 12.0 0 0
  • தொடங்கியவர்
மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
2016-03-22 20:30:57

இந்­தி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் தரம்­சாலா, இமா­லய பிரதேச கிரிக்கெட் சங்க விளை­யாட்­ட­ரங்கில் பர­ப­ரப்­பான முடிவைத் தந்த மகளிர் உலக இரு­பது 20 குழு பி கிரிக்கெட் போட்­டியில் 2 விக்­கெட்­களால் இங்­கி­லாந்து வெற்­றி­பெற்­றது.

 

15668match.jpg

 

பந்­து­வீச்­சா­ளர்கள் ஆதிக்கம் செலுத்­திய இப்போட்­டியில் இரண்டு அணி­யி­னரும் ஓட்­டங்கள் பெறு­வதில் சிர­மத்தை எதிர்­கொண்­டனர்.

 

இந்தப் போட்­டியில் அடைந்த தோல்­வி­யுடன் அரை இறு­தியில் விளை­யாடும் இந்­தி­யாவின் வாய்ப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட இந்­திய மகளிர் அணி கடும் சிர­மத்­திற்கு மத்­தியில் 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­களை இழந்து 90 ஓட்­டங்­களைப் பெற்­றது.

 

ஹார்­மன்ப்ரீத் கோர் (26), அணித் தலைவி மிதாலி ராஜ் (20) அகிய இரு­வரே 20 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றனர்.

 

இங்­கி­லாந்து மகளிர் பந்­து­வீச்சில் ஹீதர் நைட் 15 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் அணியா ஷ்ரப்சோல் 12 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து மகளிர் அணி 19 ஓவர்­களில் 8 விக்­கெட்­களை இழந்து 92 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

 

துடுப்­பாட்­டத்தில் டமி போமன்ட் (20), நட்­டாலி சிவர் (19), சாரா டெய்லர் (16) ஆகி­யோரே இரட்டை இலக்க எண்­ணிக்­கை­களைப் பெற்­றனர்.

 

இந்­திய மகளிர் பந்­து­வீ­சிசல் எக்டா பிஷ்ட் 21 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்கெட் களையும் ஹார மன்ப்ரீத் கோர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகியாக ஹீதர் நைட் தெரிவானார். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15668#sthash.qhNVI9pc.dpuf
  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்க கெயில் தயார்

 
கிறிஸ் கெயில். | படம்: கே.பாக்ய பிரகாஷ்
கிறிஸ் கெயில். | படம்: கே.பாக்ய பிரகாஷ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மார்ச் 25-ம் தேதி நாக்பூரில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 போட்டியில் களமிறங்க கிறிஸ் கெய்ல் தயாராகி விட்டார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறிவதனா கொடுத்த கேட்சை பிடித்த கெயிலின் இடது தொடை தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டதால் பெங்களூர் ரசிகர்களின் ஏமாற்றமாக அவர் அன்று களமிறங்க முடியாமல் போனது.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். இவரும், மற்றொரு அதிரடி வீரர் பிளெட்சரும் தொடக்கத்தில் களமிறங்குகின்றனர்.

ஏற்கெனவே இங்கிலாந்திடம் வாங்கிக் கட்டிக் கொண்ட தென் ஆப்பிரிக்கா, அன்று ஆப்கான் அணியின் மொகமது ஷசாத் அதிரடிக்கும் சிக்கித் தவித்தது. இந்நிலையில் கிறிஸ் கெயில் களமிறங்குகிறார் என்ற செய்தி தென் ஆப்பிரிக்க அணியினர் வயிற்றில் ‘புளியைக் கரைக்கும்’ செய்தியாகும்.

கெயில் கூறியதாவது:

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பிளெட்சர் கொடுக்கப்பட்ட வாய்ப்பை இருகைகளினாலும் பற்றிக் கொண்டு விட்டார். அபாரமாக ஆடிய பிளெட்சர் கடைசி வரை நின்று வெற்றி பெறச் செய்ததுதான் முக்கியம். இப்படிப்பட்ட வீரர்கள்தான் அணிக்கு முக்கியம். இந்த பிட்ச் நிலைமைகளில் செட்டில் ஆகி விட்டால் கடைசி வரை நின்று விட வேண்டும்.

சாதுரியமாக ஆடுவது அவசியம். அடிக்க வேண்டிய பவுலர்களை சரியாகத் தெரிவு செய்ய வேண்டும். ஒரு பேட்ஸ்மெனாக புதிய பந்தை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் 6 ஓவர்களைக் கடந்து விட்டால் அதன் பிறகு முழுதும் ஆட வேண்டும். நடு ஓவர்களில் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தால் போதும், எந்த இலக்கையும் எளிதில் துரத்தி விட முடியும்.

நான் பிளெட்ச்சருடன் சில முறை களமிறங்கியுள்ளேன், அவர் எந்த வகையான பேட்ஸ்மென் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அபாயமான வீரர், பெரிய ஸ்கோர்களை எடுக்கக் கூடியவர்” என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான சதம் குறித்து...

நான் உண்மையில் சதம் பற்றி யோசிக்கவில்லை. பவர் பிளே முழுதையும் மர்லான் விளையாடினார். நான் எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன் என்ன நடந்தாலும் நின்று விடுவது என்று மனதிற்குள் உறுதி செய்து கொண்டேன். அவர்களிடம் ஒரு லெக் ஸ்பின்னர் உட்பட 2 ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே இடது கை வீரராக லெக் ஸ்பின்னை எதிர்கொள்வது எளிதாகையால் நின்று விட முடிவெடுத்தேன்.

மொயீன் அலி ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்தது உத்வேகம் அளித்தது. அதன் பிறகே யார் போட்டாலும் அவரை அடித்து விடுவது என்ற முடிவோடுதான் ஆடினேன். அப்போதுதான் யோசித்தேன், ‘கடின உழைப்பைப் போட்டுள்ளோம், சதம் எடுப்போம்’ என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்துக் கொண்டேன். ஆனாலும் 96 ரன்கள் வந்த பிறகே சதம் எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

இவ்வாறு கூறினார் கிறிஸ் கெயில்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article8385789.ece

  • தொடங்கியவர்

1796659_1149468208407343_490045239504149

535266_1149468251740672_9346834618511488

 

Pak 61/5

 

  • தொடங்கியவர்

காயம் காரணமாக அடுத்த போட்டியில் டுமினி இல்லை

March 22, 2016

உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் தென் ஆபிரிக்க சகலதுறை ஆட்ட வீரர் டுமினி விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20140521030834

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான உலகக்கிண்ண போட்டியில் டுமினியின் இடது தொடையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாக்பூரில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான இறுதி லீக் போட்டியில் டுமினி விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான சிகிச்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண தொடரில் இதுவரை இரு போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆபிரிக்கா இரண்டிலும் வெற்றிபெற்று நான்கு புள்ளிகளுடன் பிரிவு ‘1’ இல் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=11176&cat=2

  • தொடங்கியவர்

’’நான் வர்ணனை பணியில் மட்டுமே ஈடுப்பட்டுகிறேன்’’ ஜெயவர்த்தனே

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தற்போது அணியுடன் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது.

291427-mahela-jaya-odi-clb-700

சமீபத்தில் ஏற்பட்ட தொடர் தோல்வியால் அரவிந்த டி சில்வா தலைமையில் புதிய தெரிவுக் குழு உருவாக்கப்பட்டது. இதில் உறுப்பினராக முன்னாள் வீரர் சங்கக்காரா இடம்பெற்றிருந்தார்.  அதேபோல் ஜெயவர்த்தனேவும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இது தொடர்பாக ஜெயவர்த்தனே டுவிட்டரில் கூறுகையில், ”இந்த தகவல் எங்கிருந்து வந்தது. நான் வர்ணனை பணியில் மட்டுமே ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இலங்கை அணியுடன் இல்லை” என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=11162&cat=2

  • தொடங்கியவர்

”இலங்கை அணிக்கு மிகவும் கடினமான தொடர் இது’’ சங்கக்காரா

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் வாய்ப்பு குறித்து குமார் சங்கக்காரா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி குரூப் 1ல் விளையாடி வருகிறது. இலங்கை 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 1 தோல்வி அடைந்துள்ளது.

Portrait of a boy with the flag of Sri Lanka painted on his face

இந்தப் பிரிவில் உள்ள 5 அணிகளில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில் இலங்கை அணியின் உலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு பற்றி முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”இது கண்டிப்பாக இலங்கை அணிக்கு மிகவும் கடினமான தொடர். நமது பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 2 அணிகள் மட்டுமே அரையிறுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் கண்டிப்பாக அடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இது கடினமானதாக இருக்கப் போகிறது.

நாங்கள் நடப்பு சாம்பியன் என்று நினைத்து கொண்டு விளையாடும் போது நெருக்கடி ஏற்பட்டு சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம். அதனால் தங்களால் முடிந்த உழைப்பை அணிக்கு கொடுக்க வேண்டும். இலங்கை அணியில் சிறப்பான பந்துவீச்சு இருக்கிறது. அதே சமயம் துடுப்பாட்டத்தில் நல்ல ஓட்டங்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=11170&cat=2

  • தொடங்கியவர்

நியூசீலாந்து வெற்றி..

12802715_989302431116950_573400540279060

Group 2

  Team              
Last updated 22 March 2016 at 17:22
1 New Zealand 3 3 0 0 0 1.28 6.0
2 Pakistan 3 1 2 0 0 0.25 2.0
3 Australia 2 1 1 0 0 0.11 2.0
4 India 2 1 1 0 0 -0.90 2.0
5 Bangladesh 2 0 2 0 0 -1.75 0.0
  • தொடங்கியவர்
உலக இருபதுக்கு-20இன் நாளைய போட்டிகள்
 
 

article_1458648995-TamilPreIndBanWT20.jpஇந்தியாவில் இடம்பெற்று வரும் உலக இருபதுக்கு-20 தொடரின் ஆண்களுக்கான நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இங்கிலாந்து மோதவுள்ளதுடன், இந்திய அணியை எதிர்த்து பங்களாதேஷ் எதிர்த்தாடவுள்ளது. பெண்களுக்கான இன்றைய போட்டியில், அயர்லாந்து அணியை தென்னாபிரிக்கா எதிர்த்தாடவுள்ளது.

ஆண்களுக்கான தொடரின் நாளைய முதற் போட்டியாக, இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள குழு ஒன்று போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இங்கிலாந்து ஆடவுள்ளது. இதுவரையில், இரண்டு போட்டிகளில் பங்குபற்றி ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு, அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இப்போட்டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மறுகணம், தமது இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும் போராட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அணிக்கெதிராக வெற்றியைப் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளது.

அடுத்து, இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் இடம்பெறவுள்ள குழு இரண்டு போட்டியொன்றில், இந்தியாவும் பங்களாதேஷும் மோதவுள்ளன. இதில், இந்திய அணி, இதுவரையில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், இந்திய அணியின் துடுப்பாட்டா வரிசையில் நான்காமிடத்தில் தடுமாறி வரும் ரெய்னாவுக்கு பதில் யுவ்ராஜ் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகணம், பெண்கள் பிரிவில், சென்னையில் இடம்பெறவுள்ள குழு ஏ போட்டியொன்றில் அயர்லாந்தும் தென்னாபிரிக்காவும் மோதவுள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/168623/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-#sthash.yP4YWNIj.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பாகிஸ்தானை 22 ஓட்டங்களால் வென்றது நியூஸிலாந்து ; அரையிறுதிக்கும் தகுதி
2016-03-22 22:56:00

உலக இருபது20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை நியூஸிலாந்து அணி22  ஓட்டங்களால் வென்றது.

 

15674new-zealand-vs-pakistan.jpg

 

மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைக் குவித்தது. மார்ட்டின் கப்டில் 48 பந்துகளில் 60 ஓட்டங்களையும் ரொஸ் டெய்லர் 23  பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் குவித்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் மொஹம்மத் சமி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  அணித்தலைவர்  சஹீத் அவ்ரிடி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சர்ஜீத் கான் 25 பந்துகளில் 47  ஓட்டங்களையும் அஹமத் ஷெஹ்ஸாட் 32 பந்துகளில் 30 ஓட்டங்களையும் குவித்தனர்.

 

 எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் அவ்வணி  20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களையே பெற்றது.

 

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் அடம் மில்னே 26ட ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்   மிட்ஷெல் சாண்டர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

இவ்வெற்றியின் மூலம் உலக இருபது20 தொடரின் அரை இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15674#sthash.C91HhiGW.dpuf

 

12794367_1129597417059498_40195444610893

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஓய்வு பெறுகிறார் ஷஹீட் அப்ரிடி..
இன்றைய தோல்விக்குப் பின்னர், அடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தான் விளையாடவுள்ள போட்டியே தனது இறுதி சர்வதேசப் போட்டியாக அமையும் என்று அறிவித்துள்ளார் பாகிஸ்தான் தலைவர் அப்ரிடி

10739_1008024182579609_28383998287376037

  • தொடங்கியவர்

நாளைய போட்டிகள்கள்

ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து

மத்திய  ஐரோப்பிய நேரம் 10.30

 

இந்தியா vs பங்களாதேஷ்

மத்திய  ஐரோப்பிய நேரம் 15.00

  • தொடங்கியவர்
எந்தவொரு மகளிர் அணியையும் வெற்றிகொள்ளும் திராணி பாகிஸ்தான் மகளிர் அணிக்கு உள்ளது - அணித்தலைவி சானா மிர் கூறுகின்றார்
2016-03-23 09:35:40

1568309.jpgசர்­வ­தேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் எத்­த­கைய அணி­யையும் வெற்­றி­கொள்ளும் திராணி தங்­க­ளது அணிக்கு இருப்­ப­தாக பாகிஸ்தான் அணித் தலைவி சானா மிர் தெரி­விக்­கின்றார்.

 

இவ் வருட உலக மகளிர் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் சம்­பி­ய­னாகக் கூடிய அணி­களுள் ஓன்­றாக கரு­தப்­படும் இந்­தி­யாவை வெற்­றி­கொண்­டது எதிர்­பா­ராத ஒன்­றல்ல எனவும் அவர் குறிப்­பிட்டார்.

 

இந்­தி­யா­வுக்கு எதி­ரான வெற்றி எதிர்­பா­ராமல் கிடைத்த வெற்­றியா என அவ­ரிடம் வின­வப்­பட்­ட­போது, "அப்­ப­டி­யில்லை. நாங்கள் மிக நீண்­ட­கா­ல­மாக இந்­திய மகளிர் கிரிக்கெட் அணியின் நகர்­வு­களை நன்கு அவ­தா­னித்து வரு­கின்றோம். அதற்­கேற்ப நாங்கள் எங்­களை தயார் செய்­து­கொண்டோம்.

 

இந்­திய வீராங்­க­னை­களைப் பற்றி நாங்கள் நன்கு அறிவோம். அவர்கள் திற­மை­சா­லிகள்|" என்றார்."அண்மைக் கால­மாக நாங்கள் திற­மையை வெளிப்­ப­டுத்தி வரு­கின்றோம்.

 

உல­கி­லுள்ள எந்­த­வொரு அணி­யையும் எம்மால் வீழ்த்த முடியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது" என சானா மிர் மேலும் தெரி­வித்தார்.

 

டெல்­லியில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யின்­போது மழை குறுக்­கிட்­டதை அடுத்து டக்வேர்த் லூயிஸ் விதி­களின் பிரகாரம் இந்தியாவை 2 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15683#sthash.BCoOo1uD.dpuf
  • தொடங்கியவர்
பங்களாதேஷுடன் இன்று மோதுகிறது இந்தியா; ஓட்ட வேகமே குறி என்கிறார் தோனி
2016-03-23 09:47:53


15684dhoni-2-300x350.jpgபங்­க­ளா­தே­ஷூக்கு எதிராக இன்று நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 சுப்பர் 10 கிரிக்கெட் போட்­டியில் ஓட்ட வேகத்தைக் குறி­யாகக் கொண்டு விளை­யாட வேண்டும் என இந்­திய அணித் தலைவர் மஹேந்­திர சிங் தோனி தெரி­வித்­துள்ளார்.

 

இந்­திய அணியின் அதி­ரடி ஆரம்ப வீரர்கள் இதனைக் குறி­யாகக் கொண்டு துடுப்­பெ­டுத்­தாட வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 

அவுஸ்­தி­ரே­லியா, பங்­க­ளாதேஷ், இந்­தியா, நியூ­ஸி­லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்­பெறும் குழு இரண்டில் அரை இறுதி வாய்ப்பை பெற­வுள்ள இரண்­டா­வது அணி நிகர ஒட்ட விகி­தத்தில் தெரி­வாகும் நிலை ஏற்­ப­டலாம்.

 

இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே தோனி மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். நியூ­ஸி­லாந்­துக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் நேற்று நடை­பெற்ற போட்­டிக்கு முன்­ப­தாக நியூ­ஸி­லாந்து இரண்டு வெற்­றி­க­ளையும் பாகிஸ்தான், அவுஸ்­தி­ரே­லியா, இந்­தியா, ஆகி­யன தலா ஒரு வெற்­றி­யையும் பெற்று அணிகள் நிலையில் முதல் நான்கு இடங்­களை வகித்­தன.

 

நியூ­ஸி­லாந்­திடம் தோல்வியடைந்த இந்­தியா, பாகிஸ்­தா­னு­ட­னான போட்­டியில் வெற்­றி­ பெற்­றது. 

 

ஆனால், நிகர ஓட்ட வீதம் இந்­தி­யாவை நான்­கா­வது இடத்­திற்கு தள்­ளி­யுள்­ளது."முத­லா­வது போட்­டியில் ஓட்ட வேகம் சரி­வ­டைந்­தது. எனவே இனி­வரும் போட்­டி­களில் வெற்­றி­பெ­று­வது மாத்­திரம் போதாது.

 

ஓட்ட வேகத்­தையும் கணி­ச­மான அளவு அதி­க­ரிக்க வேண்டும். இதனை குறிக்­கோ­ளாகக் கொண்டு கடைசி இரண்டு சுப்பர் 10 போட்­டி­களை எதிர்­கொள்வோம்" என தோனி தெரி­வித்­துள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15684#sthash.zkbBU0Gj.dpuf
  • தொடங்கியவர்
முதலாவது அரை இறுதி டெல்லியில் நடைபெறுவது சந்தேகம்; டிக்கெட் விற்பனைத் தடையால் ஐ.சி.சி. அதிருப்தி
2016-03-23 10:57:01

(டெல்­லி­யி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

டெல்லி ஃபெரோஸ்ஷா கொட்லா விளை­யாட்­ட­ரங்கில் எதிர்­வரும் 30ஆம் திகதி நடை­பெ­று­வ­தற்கு அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உலக இரு­பது 20 கிரிக்கெட் முத­லா­வது அரை இறுதிப் போட்டி அங்கு நடை­பெ­றுமா என்­பதில் சந்­தேகம் நில­வு­கின்­றது.

 

15685delhi-feroz-shah-kotla.jpg

 

விளை­யாட்­ட­ரங்கில் உள்ள ஆர்.பி. மெஹ்ரா பார்­வை­யாளர் தொகு­திக்­கான டிக்­ெகட்­களை டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் விற்­பனை செய்­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்ளமை குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையும் (ஐ.சி.சி.) இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையும் கவலை கொண்­டுள்­ள­தாகத் தெரி­கின்­றது.

 

இது குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை அதி­காரி ஓரு­வ­ரிடம் கேட்­ட­போது, அது குறித்து தங்­க­ளுக்கு எதுவும் அறி­விக்­கப்­ப­டவில்லை எனத் தெரி­வித்தார்.

 

இதன் கார­ண­மாக குறிப்­பிட்ட தினத்­தன்று போட்டி தொடர்­பான செய்­தி­களை சேக­ரிப்­ப­தற்கு விண்­ணப்­பித்­துள்ள ஊட­க­வி­ய­லா­ளர்கள், போட்­டியைக் கண்­டு­க­ளிப்­ப­தற்கு டிக்ெ­கட்­களைப் பதிவு செய்­துள்­ள­வர்கள் அனை­வரும் குழம்பிப் போயுள்­ளனர்.

 

ஆர். பி. மெஹ்ரா ஆசனத் தொகு­திக்­கான டிக்ெகட்கள் விற்­பனை செய்ய அனு­ம­திக்­கப்­ப­டா­விட்டால் அப்பகு­தியில் 1,800 ஆச­னங்கள் காலி­யாக இருக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

அத்­துடன் குறிப்­பிட்ட பகு­தியில் விளம்­பரப் பல­கை­களும் தொங்­க­வி­டு­வ­தற்கு அனு­மதி கிடைக்­குமா என்ற சந்­தே­கமும் நில­வு­கின்­றது.

 

இந்தக் கட்­டுப்­பா­டுகள் டெல்லி உயர்­நீ­தி­மன்­றத்­தினால் விதிக்­கப்­பட்­டன. எவ்­வா­றா­யினும் உலக இரு­பது போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான அனு­ம­தியை டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்­கத்­திற்கு உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்­ளது.

 

இவ்­வா­றான சூழ்­நி­லையில் முத­லா­வது அரை இறுதிப் போட்­டியை வேறு இடத்­திற்கு மாற்­று­வது குறி­த்து ஆலோசிப்பதாக உலக இரு­பது 20 கிரிக்கெட் ஏற்­பாட்­டுக்­குழு உறுப்­பினர் ஒருவர் குறிப்­பிட்டார்.

 

இந்த சிக்­க­லுக்கு உடன் தீர்வு காணப்­படும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை தனது கடைசி இரண்டு போட்­டி­களை பெரோஸ்ஷா கொட்லா விளை­ள­யாட்­ட­ரங்கில் விளை­யா­ட­வுள்­ளது.

 

இந்த விளை­யாட்­ட­ரங்கில் இங்­கி­லாந்தை 26ஆம் திகதி சந்திக்கும் இலங்கை, இரண்டு தினங்கள் கழித்து தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடவுள்ளது.

 

இந்த மூன்று அணிகளில் ஒன்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றால் அந்த அணி வேறொரு இடத்திற்கு பயணிக்க நிர்ப்பந்திக்கப்படலாம்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15685#sthash.Jx2Y19Z2.dpuf
  • தொடங்கியவர்

ஆப்கானிஸ் தான் அணியுடனான போட்டியில் 15 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. -

12801422_1150306354990195_75546707309978

  • தொடங்கியவர்

1463128_569035886593074_4368330827319756

பங்களாதேஷுக்கு 147 ரன்கள் இலக்கு

இந்தியா பங்களாதேஷ் டி20யில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 146/7 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் இருந்து சீரான இடைவேளையில் இந்தியா விக்கெட்களை இழந்தது. கோலி, ரெய்னா இணை சரிவில் இருந்து மீட்டது. அதிகபட்சமாக ரெய்னா 30 ரன்கள் குவித்தார். அரை இறுதிக்கு தகுதி பெற இந்தியா வெல்ல வேண்டியது கட்டாயம்.

12801264_1907415526151515_67816030993364

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தியா மண் கவ்வும் போல 

  • தொடங்கியவர்

1610042_1150446251642872_791205418979225

  • தொடங்கியவர்

இந்தியா வெற்றி

12525636_1204524412899986_73262178320311

1555489_569118549918141_6627073340479572

 

  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: கடைசி பந்தில் வங்கதேச அணியை வென்றது இந்தியா

 

உலகக் கோப்பை டி 20 போட்டியில் இன்று வங்கதேச அணியை இந்திய அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வென்றது.

160317102546_dhoni_trp_story_image_512x2
 கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி

கடைசி பந்து வரை இந்தப் போட்டியில் எத்தரப்புக்கு வெற்றி என்பது ஊசலாட்டமாகவே இருந்தது.

பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணியினர் தமது 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியினர் உறுதி தளராமல் நிதானத்துடன் ஆடி வெற்றியின் விளிம்பு வரை சென்று, கடைசி பந்தில் ஒரு ஓட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும், வங்கதேச அணியினரின் ஆட்டம் மிகவும் பாராட்டும்படி இருந்தது என வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தோல்வியை அடுத்து, நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து வங்கதேச அணி வெளியேறியுள்ளது.

எனினும் இந்தியா அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறுமா என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகே தெரியவரும்.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160323_t20_india_bd?ocid=socialflow_facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.