Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியாவுக்கு - மிரட்டல் விடுக்கும் மழை!

உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியாவுக்கு - மிரட்டல் விடுக்கும் மழை!

20 ஓவர் உலக கிண்ணத்தை முதல்முறையாக வெல்லும் வேட்கையுடன் ஆயத்தமாகியிருக்கும் அவுஸ்திரேலிய அணி இந்த ஆண்டில் தான் விளையாடிய ஆறு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 25 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியது.

பரீட்சாத்த முயற்சிகள் எல்லாம் முடிந்து, உலக கிண்ணத்துக்கு முழு அணியாக களம் புகுந்துள்ளது. ஆல்-ரவுண்டர்கள், அதிரடி சூரர்கள், திறமையான பந்துவீச்சாளர்கள் என்று அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. மேக்ஸ்வெல், வார்னர், ஆரோன் பிஞ்ச், ஷேன் வாட்சன், தலைவர் ஸ்டீவன் சுமித் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விட்டால் எதிரணியின் பந்து வீச்சை சிதைத்து விடுவார்கள்.

இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா விளையாட வாய்ப்புள்ளது.

தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஊதி தள்ளிய உற்சாகத்துடன் உள்ள நியூசிலாந்து அணி அடுத்து அவுஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி அளிக்க வியூகங்களை தீட்டியுள்ளது.

அனேகமாக நியூசிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்று தெரிகிறது. இந்த ஆட்டத்திற்கு மழை ஆபத்து இருக்கிறது. தர்மசாலாவில் நேற்று விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இன்றும் அங்கு மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாகிஸ்தான் வீராங்கனையை பதம்பார்த்த பந்து 

மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிலியா கானெல் வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் அணியின் ஜவேரியா கானின் கையை பதம் பார்த்ததில் அவரது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Javeria_Khan1.jpg

மகளிர் கிண்ண இருபதுக்கு -20 உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது அந்த அணியின்  ஆரம்பத்துடுப்பாட்ட வீராங்கனை ஜவேரியா கான்  பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்தார்.

 

Javeria_Khan.jpg

பாகிஸ்தான் வீராங்கனை ஜவேரியா கான் பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்ததால் மைதானத்தில் சிறிது பதற்றம் ஏற்பட்டது.

 

மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிலியா கானெல் வீசிய பவுன்சர் பந்தே ஜவேரியா கானின் கையை பதம் பார்த்தது. பின்னர் அவரது தலையையும் பதம்பார்த்தது.

 

 

இதையடுத்து ஜவேரியா கான் மைதானத்திலே நிலைகுலைந்து விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது கையின் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து ஒருநாள் சிகிச்சையின் பின்னர்  ஜவேரியா கான் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.

 

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/4318

  • தொடங்கியவர்
லசித் மாலிங்க காயம் காரணமாக இன்று இலங்கைக்குத் திரும்புகிறார்
2016-03-18 15:53:56

15608_malinga.jpgஐ.சி.சி. உலக இருபது போட்டிகளுக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.

 

காயம் காரணமாக போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, உலக இருபது20 போட்டிகளுக்கான பயிற்சிக் குழாமிலுள்ள எஞ்சிய வீரர்களுக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று மாலை கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெறுகின்றன.  

 

இப்போட்டிகளிலிருந்து, மாலிங்கவுக்குப் பதிலாக இலங்கைக் குழாமில் சேர்க்கப்படவுள்ள வீரரை  தேர்வாளர்கள் தெரிவுசெய்வர் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15608#sthash.zbxUnICj.dpuf
  • தொடங்கியவர்

நியூசீலாந்து வெற்றி

  • தொடங்கியவர்

உ.கோ.டி20: நியூஸிலாந்து அபார வெற்றி; ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

 

 
  • வெற்றியைக் கொண்டாடும் நியூஸிலாந்து வீரர்கள். | படம்: பிடிஐ.
    வெற்றியைக் கொண்டாடும் நியூஸிலாந்து வீரர்கள். | படம்: பிடிஐ.
  • அருமையாக வீசிய சோதி (வலது கோடி). | படம்: ஏ.பி.
    அருமையாக வீசிய சோதி (வலது கோடி). | படம்: ஏ.பி.

தரம்சலாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை, நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது. ஆனால் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 7-வது ஓவரில் 51/1 என்று வலுவாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு ஸ்மித், கவாஜா, வார்னர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 51/1 என்பதிலிருந்து 66/4 என்று ஆனது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மீண்டும் போட்டிக்குள் வந்ததற்கு சாண்ட்னர், ஐ.எஸ். சோதி ஆகியோரது அபாரப் பந்து வீச்சும் அற்புதமான பீல்டிங்கும் காரணமாகும். கடைசியில் பிடித்த கேட்ச்கள் நெருக்கடி தருணங்களில் கடினமான கேட்ச்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பலவீனம் மீண்டும் வெளிப்பட்டது. இதுதான் அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். அதனை நியூஸிலாந்து நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.

143 ரன்கள் இலக்கைத் துரத்த உஸ்மான் கவாஜாவும் ஷேன் வாட்சனும் களமிறங்கினர். கோரி ஆண்டர்சன் பந்து வீச்சை தொடங்க கவாஜா மிட்விக்கெட் மற்றும் கவர் திசையில் இரண்டு அருமையான பவுண்டரிகளை அடிக்க முதல் ஓவரிலேயே 11 ரன்கள் வந்தது. பிறகு ஆடம் மில்ன வீசிய 2-வது ஓவரில் மிட் ஆனில் ஒரு தூக்கி அடித்த பவுண்டரியும், ஒரு கட் ஷாட் பவுண்டரியும் விளாசினார் கவாஜா.

3-வது ஓவர் பந்து வீச்சு மாற்றப்பட்டு கிராண்ட் எலியட் கொண்டு வரப்பட்டார், ஆனால் கவாஜா, வாட்சன் ஆகியோர் முறையே ஆஃப் திசையில் 2 பவுண்டரிகள் விளாச அந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது. மெக்லினாகன் அடுத்த ஓவரில் ஒரு இன்கட்டரில் கவாஜாவின் பேடைத் தாக்கினார். அவுட்டுக்காக கதறினார், ஆனால் அது நாட் அவுட். அடுத்த பந்தே பவுண்டரி பறந்தது. பிறகு ஆண்டர்சன் ஒரு ஓவரை சிக்கனமாக வீச 5 ஓவர்களில் 42/0. இதில் கவாஜா 20 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 31 நாட் அவுட்.

6-வது ஓவரை மெக்லினாகன் வீச வாட்சன் 13 ரன்களில் ஸ்லோ பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார்.

சாண்ட்னர் ஏற்படுத்திய திருப்பு முனை:

இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னர் அழைக்கப்பட்டார். இவர் காலங்காலமாக டேனியல் வெட்டோரி செய்ததை இன்றும் செய்தார். 6 ரன்கள் எடுத்த ஸ்மித் மேலேறி வந்து பிளைட் பந்தை ஆட முயல பந்து பிட்ச் ஆகி வெளியே திரும்ப லூக் ரோங்கி ஸ்டம்ப்டு செய்தார். சாண்ட்னர் 1 ஓவர் 2 ரன்கள் 1 விக்கெட்.

இடையில் வார்னர், கவாஜாவுக்கு வில்லியம்சன், கிராண்ட் எலியட் சிக்கனமான ஓவர்களை வீசினர். இதில் நெருக்கடி அதிகரித்தது. எலியட்டின் ஓவரில் 27 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த கவாஜா ரன் அவுட் ஆனார். நேராக ஒரு ஷாட்டை வார்னர் அடிக்க 2-வது ரன்னை முயற்சி செய்தனர். ஆனால் டீப்பிலிருந்து அருமையான பீல்டிங் மற்றும் த்ரோவை மில்ன செய்ய கவாஜா ரன் அவுட் ஆனார்.

மேக்ஸ்வெல் களமிறங்க, பதட்டம் அதிகரித்தது. ஆனால் ஐ.எஸ்.சோதி என்ற லெக் ஸ்பின்னர் மேக்ஸ்வெல், வார்னர் ஆகியோருக்கு அருமையான முதல் ஓவரை வீசி 4 ரன்களே கொடுத்தார். 11-வது ஓவரில் மீண்டும் இடது கை ஸ்பின்னர் சாண்ட்னர் அழைக்கப்பட வார்னர் பெரிய புல் ஷாட்டை முயன்று டீப் மிட்விக்கெட்டில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார்.

மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெலுடன் இணைந்தார். 71/4 என்ற நிலையில் 8 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 72 ரன்கள் தேவை என்றானது. மில்ன வீச அழைக்கப்பட இன்சைடு எட்ஜில் மேக்ஸ்வெல் 2 அதிர்ஷ்ட பவுண்டரிகளை அடித்தார். அந்த ஓவரில் 14 ரன்கள் வந்தது. ஆனால் 14-வது ஓவரை சோதி மீண்டும் சிறப்பாக வீசினார், அவரது லெக்ஸ்பின்கள் நன்றாகத் திரும்பியது இதனால் மார்ஷ், மேக்ஸ்வெல் திணற 4 ரன்களே அந்த ஓவரில் எடுக்க முடிந்தது.

36 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் சாண்ட்னரை, மேலேறி வந்து மிட்செல் மார்ஷ் லாங் ஆஃப் திசையில் 101 மீ நீள சிக்ஸ் விளாசினார்.

அடுத்த ஓவரில் அபாய வீரர் மேக்ஸ்வெலை, சோதி வீழ்த்தினார். தூக்கி அடித்தார், ஆனால் வில்லியம்சனின் நல்ல களவியூகத்தினால் அது எக்ஸ்ட்ரா கவரில் வில்லியம்சன் கையில் கேட்ச் ஆக, மேக்ஸ்வெலின் திருப்தியற்ற இன்னிங்ஸ் அவரது சொந்த எண்ணிக்கையான 22 ரன்களில் முடிவுக்கு வந்தது.

16 ஓவர்களில் 101/5 என்ற நிலையில் சாண்ட்னர் 17-வது ஓவரை வீச வந்தார், அது சிறு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அந்த ஓவரில் மார்ஷ் ஒரு பெரிய சிக்சரையும் ஆஷ்டன் ஆகர் ஒரு பெரிய சிக்சரையும் அடிக்க நியூஸிலாந்துக்கு அழுத்தம் அதிகரித்தது.

ஆனால் மீண்டும் ஐ.எஸ். சோதி தனது 4-வது, கடைசி, ஓவரை மிகச்சிறப்பாக வீசி 5 ரன்களையே கொடுக்க 12 பந்துகளில் 22 ரன்கள் என்ற சமன்பாடு நிலவியது.

இந்நிலையில் 19-வது ஓவரை மெக்லினாகன் வீச, 24 ரன்கள் எடுத்த அபாய வீரர் மிட்செல் மார்ஷ், ஸ்லோயர் பந்தை தப்பாக அடிக்க லாங் ஆனில் மில்னவிடம் கேட்ச் ஆனது. அதே ஓவரில் 9 ரன்கள் எடுத்த ஆகர் புல் ஆட மிட்விக்கெட்டில் ராஸ் டெய்லர் 15 அடி தூரம் ஓடி வந்து தாழ்வாக அருமையாக கேட்ச் பிடித்தார்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில், கோரி ஆண்டர்சன் 2 ரன்களில் பாக்னரை வீழ்த்தினார், இதுவும் கப்தில் பிடித்த அருமையான கேட்ச் ஆகும். இடையில் நெவில் ஒரு எதிர்பாராத சிக்ஸ் அடித்தார். கடைசியில் கூல்டர் நைல் பவுல்டு ஆக ஆஸ்திரேலியா 8 ரன்கள் குறைவாக முடிந்து தோல்வி தழுவியது.

நியூஸிலாந்து அணியில் மெக்லினாகன் 3 ஒவர்களில் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார். சாண்ட்னர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, உண்மையில் அற்புத பவுலிங் என்றால் லெக் ஸ்பின்னர் ஐ.எஸ்.சோதிதான். இவர் 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு 2 பெரிய திமிங்கிலங்களை நியூஸிலாந்து வீழ்த்தியதை வைத்துப் பார்க்கும் போது ஒரு வேளை....

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-8-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article8371131.ece

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா கலக்கல் விளையாட்டு......! 229 / 4.....20. ஓவர்.

  • தொடங்கியவர்

இந்திய-பாகிஸ்தான் போட்டிகள் ஆஷஸை விட பெரியது: அஸ்வின்

 
Ashwin_2779924f_2780027f.jpg
 

நாளை (சனிக்கிழமை), கொல்கத்தாவில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் ஸ்பின்னர் அஸ்வின், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ஆஷஸை விடவும் பெரியது என்று கூறியுள்ளார்.

“இந்தப் போட்டி மிகப்பெரியது. எந்த அளவுக்குப் பெரியது என்று கணிக்க முடியவில்லை. ஆஷஸை விடவும் பெரிது என்று கூறலாம். இந்தியர்கள், பாகிஸ்தானியர்களைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தை வெறும் கிரிக்கெட் ஆட்டமாகப் பார்க்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். இது ஏதோ எல்லையோர பகை போல்தான் இருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட போட்டி மையம் பெறுவதைக் காட்டிலும் இதில் கூடுதலான உணர்வுகள் மோதும் என்றே நான் கருதுகிறேன். ரசிகர்களைப் பொறுத்தவரை நிச்சயம் அதிகம் உணர்ச்சிவயப்படுவார்கள்.

வீரர்களைப் பொறுத்தவரை உணர்ச்சிகளை புறமொதுக்கி விட்டு எவ்வளவு சிறப்பாக ஆட முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக நாங்கள் அமர்ந்து எங்கள் தலையில் ஒருவருக்கொருவர் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்றி மோதவிடுவதில்லை. இது குழப்பத்திற்குத்தான் வழிவகுக்கும். ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட திட்டங்கள் உள்ளன. என்னைப் பொருத்தவரை நான் நிறைய திட்டமிடுவேன், இதுதான் எனக்கு கடந்த காலத்தில் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. ஆனால் எளிதாக எடுத்துக் கொள்ளவே முயல்வோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை நாங்கள் லேசாகவே எடுத்துக் கொள்வோம். பாகிஸ்தானுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியுமே அழுத்தம் நிரம்பியதுதான், இதற்கு நாங்கள் பழகிவிட்டோம்.

முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இங்கிருந்து நாங்கள் வெற்றி பெறத் தொடங்கினால் இந்திய அணி அபாயகரமாக அணியாகவே இருக்கும். எவருக்கும் சாதகம் என்று கூற முடியாது. நாங்கள் 50-50 என்றே தொடங்குவோம், ஆனால் பாகிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்தியிருப்பதால் உற்சாகம் கூடுதலாக இருக்கும். ஆனால் நாங்கள் எங்கள் தரத்தை உயர்த்தி எங்கள் திறமைக்கேற்ப ஆடினால் இந்தப் போட்டியையும் வெல்ல முயற்சி செய்வோம்” என்றார்.

பாகிஸ்தான் வியர்வை பிசுபிசுக்க பயிற்சியில் ஈடுபட்ட போது, இந்திய அணி ஏன் பயிற்சி செய்யவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த அஸ்வின், “எங்களை விட அவர்கள் கொஞ்சம் கூடுதலாக உழைத்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை ரிலாக்ஸ் செய்வதுதான் சிறந்தது என்று முடிவெடுத்தோம். கடந்த 3 மாதங்களாக நெரிசலாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறோம். எனவே நாங்கள் சிந்திக்க வேண்டும், என்பதே முக்கியம், ஆனால் பொதுவாக தோவ்லிக்குப் பிறகு கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு போட்டியன்று களைப்படைவது நடந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். இதுதான் நாங்கள் பயிற்சி செய்யாததன் உட்கருத்து.

உலகக்கோப்பை போட்டிகளில் உத்வேகம் பெறுவது முக்கியம். நாங்கள் ஈடன் கார்டன்ஸ் போட்டியிலிருந்து உத்வேகம் பெறுவோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article8371214.ece?homepage=true

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10403246_986599784720548_777873618181785

  • கருத்துக்கள உறவுகள்

230/8....19.4. இங்கிலாந்து வெற்றி.

Group 1

  Team              
Last updated 18 March 2016 at 17:37
1 West Indies 1 1 0 0 0 0.97 2.0
2 Sri Lanka 1 1 0 0 0 0.58 2.0
3 England 2 1 1 0 0 -0.41 2.0
4 South Africa 1 0 1 0 0 -0.24 0.0
5 Afghanistan 1 0 1 0 0 -0.58 0.0

Group 2

  Team              
Last updated 18 March 2016 at 17:37
1 New Zealand 2 2 0 0 0 1.38 4.0
2 Pakistan 1 1 0 0 0 2.75 2.0
3 Australia 1 0 1 0 0 -0.40 0.0
4 India 1 0 1 0 0 -2.35 0.0
5 Bangladesh 1 0 1 0 0 -2.75 0.0

http://www.bbc.com/sport/cricket/world-twenty20/table

  • தொடங்கியவர்

10351881_565990386897624_510399045628855

11937441_986685211378672_848569856468639

  • தொடங்கியவர்
229 ஓட்டங்களைக் குவித்தது தென் ஆபிரிக்கா; அதையும் கடந்து வென்றது இங்கிலாந்து
2016-03-18 23:06:10

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்க அணியை இங்கிலாந்து 2 விக்கெட்களால்  வென்றது.

 

15613engaland.jpg

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைக் குவித்தது.  


ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹஷீம் அம்லா 31 பந்துகளில் 58 ஓட்டங்களையும்  குய்ன்டன் டி கொக் 24 பந்துகளில் 51 ஓட்டங்களையும் குவித்தனர். ஜீன் போல் டும்னி 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார்.


230 ஓட்டங்கள் எனும் பிரமாண்ட இலக்கை நோக்கி இங்கிலாந்து துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர் போட்டிகளின் ஓட்ட இலக்கைப் போன்ற இந்த இலக்கை அடைவதற்கு இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடியது. 

 

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்டது.  4 விக்கெட்கள் கைவசம் இருந்தன.

15613_Joe-Root.jpg

ஜோ ரூட்


 

எனினும் அந்த ஓவரில் முதல் இரு பந்துகளில் 2 விக்கெட்களை கைப்பற்றியது தென் ஆபிரிக்கா.  ஆனால் 19.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி  வெற்றி இலக்கை அடைந்தது.  ஜோ ரூட் 44 பந்துகளில் 83 ஓட்டங்களைக் குவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15613#sthash.1EacGtF2.dpuf
தென் ஆபிரிக்க மகளிர் அணியை அவுஸ்திரேலிய மகளிர் அணி வென்றது
2016-03-18 22:33:06

மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணியை அவுஸ்திரேலிய மகளிர் அணி  6 விக்கெட்களால் வென்றது.


நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றது. டேன் வான் நீகேர்க் 47 பந்துகளில 47 ஓட்டங்களைப் பெற்றார்.

 

15612aus-vs-sa-600.jpg


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக அலெக்ஸ் பிளெக்வெல் 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15612#sthash.YvHNQkPx.dpuf
அயர்லாந்து மகளிர் அணியுடனான போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணி 93 ஓட்டங்களால்வெற்றி
2016-03-18 22:11:45

மகளிருக்கான உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அயர்லாந்து  மகளிர் அணியை நியூஸிலாந்து மகளிர் அணி 93 ஓட்டங்களால் வென்றது.

 

15611nez-zealand-women%5C%5C%5C%27s-cric


மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைக் குவித்தது.


அணித்தலைவி சுஸி பேட்ஸ் 60 பந்துகளில் 82 ஓட்டங்களைக் குவித்தார். ஷொபி டிவைன் 34 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 85 ஓட்டங்களையே பெற்றது.  அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக அணித்தலைவி இஸபெல் ஜோய்ஸ் 33 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் ஆட்ட நாயகியாக சுஸி பேட்ஸ் தெரிவானார்.


இன்று நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் அவுஸ்திரேலிய அணியை நியூஸிலாந்து அணி 8 ஓட்டங்களால் வென்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15611#sthash.Ma2lrvNN.dpuf
  • தொடங்கியவர்

நாளைய போட்டி

இந்தியா vs பாகிஸ்தான்

மத்திய ஐரோப்பிய நேரம் 15.00

  • தொடங்கியவர்

லசித் மாலிங்கவிற்குப் பதிலாக ஜெப்ரி

லசித் மாலிங்கவிற்குப் பதிலாக ஜெப்ரி

March 19, 2016  11:37 am

Bookmark and Share
 
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில், இலங்கை அணி சார்பாக விளையாடுவதற்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் இடத்திற்கு ஜெப்ரி வெண்டர்ஸே பெயரிடப்பட்டுள்ளார்.

உபாதைக்குள்ளாகியுள்ள லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் லசித் மாலிங்கவிற்கு பதிலாக ஜெப்ரி வெண்டர்ஸே 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில், இலங்கை அணி சார்பாக விளையாடுவார் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
  • தொடங்கியவர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை: வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் தோனி குழுவினர்

 
 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள். படம்: பிடிஐ.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள். படம்: பிடிஐ.

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கோப்பையை வெல்லும் அணியாக கருத்தப்படும் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. அரையிறு திக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

டி 20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் தோற்கடித் தது. இதன் மூலம் தங்களை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் அணி மீண்டும் நிருபித்தது.

பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளனர் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி 32 பந்தில் 49 ரன் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

மொகமது ஹபீஸ், அகமத் ஸெஷாத் ஆகியோரும் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது. இந்த கூட்டணி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 பந்தில் 95 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. இவர்களுடன் ஷர்ஜீல்கான், ஷோயிப் மாலிக், உமர் அக்மல் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களான உள்ளனர்.

மொகமது அமீர், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ் வேகப்பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அப்ரீடியுடன் இமாம் வாசிம் பலம் சேர்க்கக்கூடும்.

கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உள்ளதால் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி, ரெய்னா, தோனி, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதில் சிரமம் இருக்காது.

பந்து வீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் இவர்களிடம் இருந்து மீண்டும் கட்டுக்கோப்பான பந்து வீச்சை எதிர்பார்க்கலாம்.

டி 20 உலகக் கோப்பைபோட்டியை நடத்தும் நாடு கோப்பையை வென்ற தில்லை என்ற வரலாறு உள்ள நிலையில் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்கும்.

அணிகள் விவரம்:

இந்தியா:

தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், பவன் நேகி, முகமது ஷமி.

பாகிஸ்தான்:

அப்ரீடி (கேப்டன்), மொகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், மொகமது இர்பான், ஷர்ஜீல் கான், வஹாப் ரியாஸ், முகமது நவாஸ், முகம்மது சமி, காலித் லத்தீப், மொகமது அமீர், உமர் அக்மல், சர்ப்ராஸ் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, குர்ராம் மன்சூர்.

நேரம்: இரவு 7.30 இடம்: கொல்கத்தா

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தோற்றதில்லை

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப் பையில் இதுவரை இந்தியாவை வென்றதில்லை. 2007, 2012, மற்றும் 2014-ம் ஆண்டு உலகக்கோப்பைகளில் நேருக்கு நேர் மோதி தோல்வியை சந்தித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ராசி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு ராசியானதாக அமைந்துள்ளது. அந்த அணி இங்கு இந்தியாவுக்கு எதிராக மோதிய 4 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள் ளது. மேலும் தற்போது டி 20 உலகக் கோப்பையை வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியுடனும் தொடங்கி யுள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article8373692.ece

 

  • தொடங்கியவர்
கொல்கத்தாவில் கன மழை.. இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி ரத்தானால் எந்த அணிக்கு லாபம்?
 
 
கொல்கத்தா: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடுவே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தி்ல உலக கோப்பை டி20 சூப்பர்-10 சுற்று போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், அங்கு மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணியளவில் மேகமூட்டம் அதிகரித்த நிலையில், 9 மணி முதல் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் நல்ல மழை கொட்டித் தீர்த்துள்ளது.
 
இதன்பிறகு சூரியன் மெல்ல தலை காட்டினாலும், பிறகு மேக மூட்டமாகவே உள்ளது. மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதேநேரம், அடை மழையாக இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
19-1458370620-raining35-600.jpg
 
 
நவீன வசதிகள்
தற்போது நவீன வசதிகள் பலவும் செய்யப்பட்டுள்ளன. எனவே மழை பெய்தாலும் ஓவர்களை குறைத்து, போட்டியை நடத்திவிடலாம் என்று மைதான பராமரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
8268_10154428809839578_22900780590919015
 
புள்ளிகள்
இப்போட்டி மழையால் கைவிடப்படும்பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். பாகிஸ்தான் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளதால், இப்போட்டி ரத்தானாலும் அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இல்லை.
 
இந்தியாவுக்கு பின்னடைவு
இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றுள்ளது. எனவே இப்போட்டியில் வென்றேயாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மழையால் 1 புள்ளிதான் கிடைத்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவுதான். எனவே மழை இடையூறு இன்றி போட்டி நடைபெற்றாக வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
 
பந்து வீச்சு
மழை காரணமாக பிட்சில் ஈரப்பதம் உருவாகியுள்ளது. இது பந்துகளை ஸ்விங் செய்ய உதவும் என்கிறார் கள பராமரிப்பாளர். எனவே பந்து வீச்சு நன்கு எடுபடும் என்பது கணிப்பாக உள்ளது.
 
பாதுகாப்பு
தர்மசாலாவில் நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி, பாதுகாப்பு காரணங்களால், கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், மழை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2016-thundershower-predicted-kolkata-india-vs-pak-clash-placee-249329.html
  • தொடங்கியவர்

இன்று ஏன் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்?

 
 

விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறது  உலககோப்பை டி20. உலககோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் முதல் போட்டியிலேயே  தோல்வியை தழுவியிருக்கிறது, நியூசிலாந்து செம மாஸ் ஃபார்மில் இருக்கிறது. இங்கிலாந்து சாதனை சேஸ் செய்கிறது, அதிரடி கெயில், சிக்ஸர் மன்னன் அஃப்ரிடி ஆகியோர் கலக்க    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்  ஆகிய அணிகள் நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கின்றன. சூப்பர் 10 சுற்றில் அனைத்து அணிகளும் ஒரு போட்டியாவது விளையாடி முடித்துவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தோல்வியடைந்த  அதிர்ச்சியில் இருக்கின்றன. இந்நிலையில் இந்தியா இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை சந்திப்பது ஏகத்துக்கும் ஃபீவர் ஏற்றியிருக்கிறது.

235349.jpg


இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆசிய கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி மல்லுக்கட்டின, கடைசியில் விராட் கோலி உதவியால் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை உலககோப்பையில்  இந்திய அணியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதே கிடையாது என்பது வரலாறு. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதே இல்லை என்பது வரலாறு. இப்படி முரண்பட்ட சூழ்நிலையில் தான் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இன்று காலை முதல் மழை  பெய்து வருவதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவும் இருக்கிறது. இந்த போட்டி பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

ஏன் முக்கியம்?

நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது இந்திய அணி. சூப்பர் 10 க்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளில் மிக மிக மோசமான ரன்ரேட்டுடன் பின் தங்கியிருப்பது இந்திய அணி மட்டுமே. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் தோல்வியடைந்திருந்தாலும் ரன் ரேட் பெரிய அளவில் சரியவில்லை என்பதால் வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு விளையாடினால் போதுமானது. ஆனால் இந்தியாவுக்கு வெற்றியுடன் ரன் ரேட்டும் தேவை. இந்தியா இடம்பெற்றிருக்கும் பிரிவில் ஏற்கனவே   இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி சிறந்த ரன்ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறது நியூசிலாந்து. இந்தியா இப்போதைக்கு அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றாலும் கூட மற்ற அணிகளை சார்ந்தே இருக்கிறது. நியூசிலாந்து அனைத்து போட்டிகளையும் வென்று, இந்தியா மீதி இருக்கும் மூன்றும் போட்டிகளையும் வென்றால், இந்தியாவும்,  நியூசிலாந்தும் அரையிறுதிக்கு சென்று விடும்.

 

235359.jpg
 

மாறாக நியூசிலாந்து இனி ஏதாவதொரு போட்டியில் தோல்வி அடைந்தாலோ, இந்தியா ஏதாவது ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலோ இந்திய அணிக்கு  சிக்கல் தான். பாகிஸ்தான் ஏற்கனவே  +2.750 என நல்ல ரன்ரேட்டில் இருக்கிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய, வங்கதேச அணியை வென்றாலும் கூட அரையிறுதிக்கு செல்வது கடினமாகி விடும். எனவே இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அவசியம்.

ரன் ரேட் முக்கியமா?

இப்போதைக்கு இந்தியாவுக்கு வெற்றி தான் முக்கியம். பாகிஸ்தானுடன் எப்படியாவது வெற்றி பெற்றுவிட்டால் போதும், அதன் பின்னர் வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளுடன் நடக்கும் போட்டிகளில் ரன் ரேட் குறித்து கவலைப்பட்டு கொள்ளலாம். எனவே இன்றைய தினம் எக்கச்சக்க டென்ஷன் தேவையில்லை ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்தியா விளையாடுவது  அவசியம்.

http://www.vikatan.com/news/sports/60866-why-should-india-to-beat-pakistan-today.art

  • தொடங்கியவர்
இந்திய மகளிர் அணியை 96 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தியது பாக். மகளிர் அணி
2016-03-19 17:12:16

மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெறும் இந்திய மகளிர் அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு 97 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



15616pakistan-women-cricket--600.jpg

நீதா  தார்



சென்னையில்நடைபெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.


அதன்பின் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய மகளிர்  அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றது.  வேதா கிருஷ்ணமூர்த்தி 19 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார்.


அணித்தலைவி  மிதாலி ராஜ்,  ஹேர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா 16 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அனாம் அமீன் 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


அஸ்மவியா இக்பால் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அணித்தலைவி சனா மீர் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்  நீதா  தார் 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சாதியா இக்பால் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்திய, பாகிஸ்தான் மகளிர் அணிகள் 6 தடவை மோதியுள்ளன. இவற்றில் இந்திய மகளிர் அணி 5 தடவை வென்றது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இருபது தொடரில் இந்திய மகளிர் அணியை பாகிஸ்தான் மகளிர் அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15616#sthash.6Oq5zFNz.dpuf
  • தொடங்கியவர்

india vs pakistan, ind vs pak, india pakistan, india vs pakistan t20 2016, pakistan cricket, pakistan cricket team, pakistan cricket team, india cricket team, afridi, kohli, dharamsala, kolkata, cricket photos, india vs pakistan photos, cricket news, cricket

India vs Pakistan in Kolkata has rain threat looming over it. It was gloomy morning in Kolkata on Saturday and it rained. The sun was out in the afternoon but by the time evening set in, it was again dark. At the Eden Gardens, the ground is covered and the groundsmen are sitting at the ground. If rain plays spoilsport, India and Pakistan will share a one point each. But who wants that. A typical, tense India-Pakistan clash is what everyone wants. - See more at: http://indianexpress.com/
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
D/L முறையில் இந்திய மகளிர் அணியை வென்றது பாகிஸ்தான் மகளிர் அணி
2016-03-19 19:27:50

மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணியை  பாகிஸ்தான் மகளிர் அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 2 ஓட்டங்களால் வென்றது. பல திருப்பங்கள் கொண்டதாக  இப்போட்டி அமைந்தது.



15616pakistan-women-cricket--600.jpg

நீதா  தார்



டில்லியில் நடைபெற்றஇப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.


அதன்பின் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய மகளிர்  அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றது.  வேதா கிருஷ்ணமூர்த்தி 19 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார்.


அணித்தலைவி  மிதாலி ராஜ்,  ஹேர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா 16 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அனாம் அமீன் 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


அஸ்மவியா இக்பால் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அணித்தலைவி சனா மீர் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்  நீதா  தார் 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சாதியா இக்பால் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. 

 

15619India-women-vs-Pakistan-women.jpg

சித்ரா அமீன்  துடுப்பெடுத்தாடுகிறார்


 

ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான சித்ரா அமீன் 26  பந்துகளில் 26 ஓட்டங்களையும்   நஹீதா கான் 15 பந்துகளில் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

எனினும் 16 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி நெருக்கடிக்குள்ளானது.

 

அப்போது 6 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தது பாகிஸ்தான் மகளிர் அணி.  இறுதி நான்கு ஓவர்களில் பாகிஸ்தான் மகளிர்  அணிக்கு 4 விக்கெட்கள் கைவசம் இருந்த நிலையில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டன.  

 

அப்போது மழைய பெய்யத் தொடங்கியது. மீண்டும் போட்டியை ஆரம்பிக்க முடியாத நிலையில் அதையடுத்து டக்வேர்த் - லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது.

 

இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்திய, பாகிஸ்தான் மகளிர் அணிகள் 7  தடவை மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 5 தடவைகளும் பாகிஸ்தான் அணி இரு தடவைகளும் வென்றுள்ளன.

 

இதற்குமுன்  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இருபது தொடரில் இந்திய மகளிர் அணியை பாகிஸ்தான் மகளிர் அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15619#sthash.ZRqHqgiD.dpuf

 

 

 

 

 

இந்திய - பாகிஸ்தான் போட்டி: கொல்கத்தாவில் மழை
2016-03-19 18:50:01

உலக இருபது கிரிக்கெட் தொடரில மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இநதிய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி நடைபெறவுள்ள கொல்கத்தாவில் கடும் மழை பெய்கிறது.

 

15617India---Pakistan-eden-garden-kolkat

ஈடன் கார்டன் அரங்கில் சற்றுமுன் பிடிக்கப்பட்ட படம்.


 

கொல்கததா ஈடன் கார்டன் அரங்கில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஆனால், கொல்கத்தாவில் தற்போது மழைபெய்துகொண்டிருக்கிறது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15617#sthash.CKVDxerU.dpuf

237409.3.jpg

237423.3.jpg

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் விளையாடுது.

38/1....7.4.

46/2....9.2.

  • தொடங்கியவர்

11667330_562940437201119_402098491523309

பாகிஸ்தானுடனான போட்டியில் இந்திய அணிக்கு 18 ஓவர்களில் 119 ஓட்ட இலக்கு
2016-03-19 21:57:15

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு  18 ஓவர்களில் 119 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

15621ind-vs-pak.jpg

 

கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெறும் இப்போட்டி மழை காரணமாக தலா 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118  ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


 சொஹைப் மாலிக் 16 பந்துகளில் 26 ஓட்டங்களைக் குவித்தார். அஹ்மட் ஷெஸ்ஸாட் 28 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றார்.  உமர் அக்மல் 22 ஓட்டங்களையும்  சர்ஜீல்கான் 17 ஓட்டங்களையும் பெற்றார். அணித்தலைவர் சஹீத் அவ்ரிடி 8 ஓட்டங்களையே பெற்றார்.


இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் ஆசிஸ் நெஹ்ரா, பம்ரா, ஜடேஜா, ரெய்னா, பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


இப்போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னர் இந்திய, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15621#sthash.L7vWtmPf.dpuf
  • தொடங்கியவர்

1464670_1094367127288743_302289756922933

இந்தியா வெற்றி

 

டி20: இந்தியாவின் கனவு பலித்தது: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து.

அதனை தொடர்ந்து விளையாடி இந்திய அணி நிதானமாக விளையாடி 15.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்தியாவின் சார்பில் விராட் கோலி சிறப்பாக அரை சதம் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்

இதன் மூலம் எந்த ஒரு உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை என்கிற பெருமை மீண்டும் நிலை நாட்டியது இந்திய அணி

10001457_10154430766124578_7936724717095

 

  • தொடங்கியவர்

10391530_1126975373988369_76561520010333

  • தொடங்கியவர்
பாகிஸ்தானை 6 விக்கெட்களால் வென்றது இந்திய அணி
2016-03-19 23:23:48

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.


கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக தலா 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்களைப் பெற்றது.

 

15622_ind-vs-pak.jpg


 சொஹைப் மாலிக் 16 பந்துகளில் 26 ஓட்டங்களைக் குவித்தார். அஹ்மட் ஷெஸ்ஸாட் 28 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றார்.  உமர் அக்மல் 22 ஓட்டங்களையும்  சர்ஜீல்கான் 17 ஓட்டங்களையும் பெற்றார். அணித்தலைவர் சஹீத் அவ்ரிடி 8 ஓட்டங்களையே பெற்றார்.


இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் ஆசிஸ் நெஹ்ரா, பம்ரா, ஜடேஜா, ரெய்னா, பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

 

15622kohli.jpg

 

18 ஓவர்களில் 119 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி 15.5  ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

 

விராத் கோஹ்லி  37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய  யுவராஜ் சிங் 23 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர். 

 

அணித்தலைவர் எம்.எஸ். தோனி  9 பந்துகளில் ஆட்டமிழக்காமல்  13 ஓட்டங்களைப் பெற்றார்.  இந்திய அணிக்கு  7 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது சிக்ஸர் ஒன்றை அடித்த தோனி அடுத்த பந்தில் ஓர் ஓட்டம் பெற்று போட்டியை ஃபினிஷ் செய்தார்.   இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராத் கோஹ்லி தெரிவானார். 

 

ஒருநாள் உலக கிண்ணப் போட்டி அல்லது உலக இருபது20 போட்டிகளில் இந்திய அணியை வெல்லும் வாய்ப்பை இம்முறையும் பாகிஸ்தான் அணிக்கு கைகூடவில்லை.  

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15622#sthash.5ArBypaN.dpuf

960050_562982983863531_28009652218149453

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.