Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டுமா? துருக்கித் தூதுவருடன் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டுமா? துருக்கித் தூதுவருடன் நேர்காணல்

நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்

இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டுமா? துருக்கித் தூதுவருடன் நேர்காணல்

 

 
இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டும் என்று கூறுபவர்கள் இறுதிப் போரின் போது இங்கு நடந்தவை குறித்து போதுமான அறிவைக் கொண்டிராதவர்கள் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் சுட்டிக்காட்டுகின்றார். இலங்கை பிரச்சனைக்கு தீர்வுகண்டவழியில் நாமும் தீர்வுகாணவேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
போரின் போது இலங்கை பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என துருக்கிய அரசியல்வாதியொருவர் தெரிவித்ததாக அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து வினவியபோதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
 
 
 

இந்த நாட்டிற்கு நீங்கள் வருகைதந்து சில மாதங்களாகிவிட்டன. இந்த நாட்டின் ஜனநாயகப் பயணம் தொடர்பாக நீங்கள் எத்தாகைய மதிப்பீட்டைக் கொண்டுள்ளீர்கள்?

 
நான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நான் இலங்கைக்கு வருகை தந்தேன்.உண்மையில் இந்த நாட்டில் மாற்றமொன்று ஆரம்பமாகிய வேளையிலேயே நான் இங்கு வந்திறங்கியிருந்தேன். ஒரு புதிய சுவாசம்; ஒரு புதிய பரிமாணம்; ஒரு புதிய முன்னோக்கிய பார்வை இந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.மக்களின் எழுச்சிமிக்க உள்ளக்கிடக்கை குறித்து நான் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அது என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ரீதியிலும் ஊக்கமளிக்கின்றது. இங்குள்ள எனது சகபாடிகளுடன் பேசும்போது நீங்கள் சரியான நேரத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்துள்ளீர்கள் ஏனென்றால் இங்குள்ள அனைத்து விடயங்களுமே புதிய ஆரம்பத்துக்குள்ளாக பயணிக்கத் தொடங்கியுள்ளன என்றுணர்த்தினர். அதிகளவான கருத்து வெளியிடும் சுதந்திரத்துடன் புத்தூக்கம் நிறைந்ததாக ஊக்கத்துடன் இந்த நாட்டை ஆளுகைசெய்வது ஊக்கமளிப்பதாகவுள்ளது. மிகவும் ஆக்கபூர்வமானதும் அர்த்த புஷ்டியானதுமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தோடு கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது முதலாக அனைத்துவிடயங்களும் கருத்தொருமைப்பாட்டுடன் கூடியதாக தீர்மானிக்கப்படுகின்றது. அது தனித்துவமானதென்பதுடன் மிகவும் சிறப்பானதாகும்.
 
 
ஆறாண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன்  பின்னர் வரலாற்றின் பல விடயங்களில் குறிப்பாக நல்லிணக்கத்தை நோக்கிய தேடலில்   தீர்க்கமான கட்டத்தில் இலங்கை  பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில்  துருக்கி எவ்வாறு பங்களிக்க முடியும் என நினைக்கின்றீர்கள்?
 
இலங்கையின் நட்பு நாடாக மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டதாக  துருக்கி திகழ்கின்றது. இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் ஜனநாயமயமாக்கல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை துருக்கி அவதானித்துக்கொண்டிருப்பதுடன் அதற்கு ஆதரவளித்துவருகின்றது. கடந்த கால கசப்புணர்வுகள் தொடர்பில் சிறப்பான ஜனநாயகப்பான்மையுடன் தீர்வுகாண்பதற்கு எடுத்துவருகின்ற முயற்சிகளையும் சிரமமான விடயங்களை தமது வல்லமைக்குட்பட்ட வகையிலும் தமது சொந்த முன்முயற்சியினாலும் கையாண்டுவருகின்றமை தொடர்பிலும்  நாம்  இலங்கை நண்பர்களின் சாதகமான அணுகுமுறைகளை நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.ஜனாதிபதி; பிரதமர்; அமைச்சரவையின்  தீர்க்கரமான உறுதிப்பாடு ஊக்கமளிப்பதாகவுள்ளது.
 
 
 
துருக்கியும் உள்நாட்டுப் பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளது. இது போன்ற கடினமான காலப்பகுதியில் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்?
 
நாட்டில் நீண்டகாலமாக இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதக விளைவுகளையும் துயரங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய சில நாடுகளில் ஒன்றாக துருக்கி விளங்குகின்றது. ஏதோ வழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதில் இலங்கை வெற்றிகண்டிருக்கின்றது.ஆனால் துருக்கி இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றது.துருக்கியிலும் முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமான நீட்சிகொண்ட பிரிவினைவாத பயங்கரவாதம் உள்ளது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுகின்றோம். துருக்கி; ஐரோப்பிய கவுன்ஸிலின் அங்கத்துவ நாடாகவும் ஐக்கிய நாடுகள் சாதனத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பாகவும் உள்ளது.பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகையில் நாம் எதனைச் செய்தாலும் சட்டத்தின் ஆட்சி என்ற வரையறைக்குள்ளேயே நாம் அதனை செய்கின்றோம். நாங்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவை யாவும் சட்டத்தின் ஆட்சி என்ற கட்டமைப்பிற்குள்ளாக அமைந்திருக்கின்றது. சட்டங்களையும் நியதிகளையும்  பின்பற்றாத  பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடும் போதுகூட ஜனநாயக நாடொன்று அந்த நாட்டினுடைய சட்டங்களையும் நியதிகளையும் தவிர்த்துச் செயற்படமுடியாது.பயங்கரவாதிகளுக்கு எல்லைகளென எதுவும் கிடையாது. பொதுமக்கள்  குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து அவர்கள் கவனத்திற்கொள்வதில்லை.பாடசாலைகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டாலும் வைத்தியசாலைகள் அழிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கணக்கில்லை. அவர்கள் அது போன்ற விடயங்கள் தொடர்பாக கவலைகொள்வதில்லை.பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் போது சட்டத்தின் ஆட்சியை முன்னிறுத்தி செயற்படுகின்ற ஜனநாயக நாடு தனது நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.
 
 

 

 

கடைசிக் கேள்விக்கு நீங்கள் வழங்கிய பதில் உங்களது துருக்கிய அமைச்சரொருவர் அண்மையில் கூறிய கருத்தை நினைவுபடுத்துகின்றது. இலங்கையில் போரின் போது பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியதாக ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்துகொண்டேன். இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றவற்றை துருக்கி ஏற்றுக்கொள்கின்றது என இந்த அறிக்கையை வைத்து பொருள்கொள்ளமுடியுமா?
 
 
இல்லை. இது முற்றுமுழுதாக தவறானது.  முதலில் அந்தக்கருத்தைக் கூறியவர் துருக்கிய அமைச்சரும் இல்லை அரசாங்க அங்கத்தவரும் இல்லை. இவ்வாறான உதாரண அறிக்கைகளை கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள்  இலங்கை போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்தவை பற்றி போதுமான அறிவைக் கொண்டிருக்கவில்லை. இலங்கை பிரச்சனைக்கு தீர்வுகண்டது அதே வழியில் நாமும் செயற்படவேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர். அந்தக்கருத்துக்கள் தனிப்பட்டவை. அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான கருத்துக்கள் அல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டிற்குரித்தான சூழ்நிலைகள் களநிலைகள் உள்ளன. ஒருதரப்பினர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமானது ஏனையோருக்கு உதாரணமாக முடியாது. எம்முடைய சூழ்நிலைகள்- களநிலைகள முற்றுமுழுதாக வித்தியாசமானவை. அதனால் தான்  வேறொரு நாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை இறக்குமதி செய்து எடுத்துக்கொண்டு எங்களுடைய சொந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது சாத்தியமல்ல என்று கூறுகின்றேன்.
 
போரின் போது  இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் தேவையென போரில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர். மேற்கு நாடுகளும் பொறுப்புக்கூறலில் அவசியம் குறித்து தொடர்ச்சியாக கோரிவந்துள்ளன. இலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என நினைக்கின்றீர்களா? அன்றேல் ஒரு நாட்டை இலக்குவைப்பதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுவதாக நினைக்கின்றீர்களா?
 
இது இரு முனைகளைக் கொண்ட கத்திபோன்றதாகும். அதாவது இரு வாதங்களும் செல்லுபடியானவை என அர்த்தம்கொடுக்கின்றேன். மோதலின் போது தவறான நடவடிக்கைள் இடம்பெற்றுள்ளன. உள்ளகப் பிரச்சனையை தீர்க்கமுனைகையில் அவை இடம்பெற்றுள்ளன. அது சரியானதல்ல. அந்த கசப்பான உணர்வுகளைத் தாண்டி மேலெழுவதற்காக நாம் பணியாற்றுவோம். இந்த நாட்டை நல்லிணக்கப்படுத்துவோம் என்று ஒரு நாட்டிடம் நீங்கள் கூறமுடியும். அப்போது நல்லிணக்கம் இடம்பெறுமிடத்து எவ்விதமான கசப்புணர்வுகளும் இன்றி இலங்கை முன்னோக்கிப் பயணிக்க முடியும். இது சாதகமான அணுகுமுறையாகும். இந்த சாதக அணுகுமுறை இலங்கை அரசினாலும் பாராட்டப்படுவதாகவுள்ளது. மற்றைய அணுகுமுறை அதாவது சில கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிடம் வலுக்கட்டாயமாக கோரிக்கைகளை விடுப்பது என்னைப் பொறுத்தவரையில் எதிர்விளைவைக் கொண்டுவரக்கூடியதாகும். இலங்கையொரு இறைமையுள்ள நாடாகும். நாட்டை நிர்வகிப்பதற்கான சுயாதீனமான நீதித்துறையையும் ஏனைய தனக்குரித்தான சுயாதீனமான நிறுவனங்களையும் அது கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்த ரீதியில் தனது எதிர்காலம் தொடர்பாக இலங்கை தீர்;மானிக்க முடியும். ஆனால் நட்பு நாடுகளின் நல்லெண்ணத்துடன் கூடிய சிநேகபூர்வமான ஆலோசனைகள் நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி இட்டுச்செல்ல வழிகோலமுடியும்.
 
 
மேலைத் தேய நாடுகளில் ஏன் உங்களது நாட்டில் கூட உங்களது சொந்தப் பிள்ளையை அடித்தால் கூட பொலிஸிற்கு அழைப்பெடுத்தால் அவர்கள் வந்து மிகுதியைப் பார்த்துக்கொள்வர். அப்படியிருக்கும் போது தன்னுடைய மக்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ள ஓர் அரசாங்கம் பயங்கரவாத்தை எதிர்த்துப் போரிடுகின்றதான போர்வையில் சொந்த மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இடத்தில் அன்றேல்  அந்த மக்களைக் கொன்றொழிக்குமிடத்தில் எவ்வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?
 
ஜனநாயக மயமாக்கலும் சட்டத்தின் ஆட்சியுமே இருக்கின்ற ஒரே வழியாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சிவில் சமூகத்தினரும் ஒன்றுதிரண்டு பொதுவான இணக்கப்பாட்டை அடைந்துகொள்ள முற்படவேண்டும். ஜனநாயகம் மற்றும் அநீதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்படும் போது அனைத்துவிதமான உள்ளக தெரிவுகளும் தீர்ந்துவிட்டநிலையில் அதாவது அவற்றை இயன்றளவு முயற்சித்துப்பார்த்தும்  சரிவராத நிலையில் தான் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவிகளைக் கோருவது ஒரு தெரிவாக இருக்க முடியும். ஜனநாயகம் மற்றும் நீதி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். சட்டத்தின் ஆட்சி என்பது கட்டாயமானது. அது இல்லாத விடத்தில் நிரந்தரமான தீர்வைக் கண்டுவிட முடியாது. மேம்பட்ட ஜனநாயகத்தைகக் கொண்ட மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட தவறுகள் இடம்பெறக்கூடும். ஆனால் அதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படவேண்டும். இறுதியாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டவேண்டும் அதாவது இலங்கையின் பிரச்சனைகளுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான இலங்கையின் தீர்வுகள் காணப்படவேண்டும். இந்த முயற்சியில் நட்புரீதியான நாடுகளின் நேர்மையானதும் நல்ல நோக்கம் கொண்டதுமான ஆலோசனைகளில் இலங்கை நம்பிக்கை கொண்டிருக்க முடியும்
  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியை தூக்கியானந்து.. இந்து சமுத்திரத்தின் மத்தியில் வைச்சிட்டு... உதைப் பற்றி யோசிங்கப்பு. சொறீலங்காவின் பூகோள அமைவிடமும்.. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய வல்லரசுகளின்.. ஆதிக்கப் போட்டியும் சிங்களவனுக்கு தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்தை ஒடுக்க கைகொடுத்திச்சு. ஆனால்.. துருக்கிக்கு அது சாத்தியமே இல்லை. நேட்டோ அங்கத்துவ நாடாக இருந்தும்.. வல்லரசுகளால்... துருக்கியை மீட்க முடியல்லையே... மாறாக.. குர்திஷ்தான்.. தனி நாடாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

குர்திஷ்தானின் விடிவில் தமிழர்கள் நிச்சயம் மகிழ்ந்திருக்க வேண்டும். துருக்கிய அரச பயங்கரவாதம் அங்கு தோற்கடிக்கப்படுவது உலக அளவில் அரச பயங்கரவாதத்தை ஏவி விடுதலைக்காகப் போராடும் மக்களை கொன்றொழிக்கும் முயற்சிக்கான தற்கால உலகப் போக்கில் ஏற்படும் முதல் தோல்வியாக.. கொள்கைத் தோல்வியாக அது நோக்கப்படும். அதில் தமிழர்களுக்கும் ஆதாயம் உள்ளது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.