Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் வீதிவலம் வரவுள்ள சியெட்

Featured Replies

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் வீதிவலம் வரவுள்ள சியெட்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் வீதிவலம் வரவுள்ள சியெட்

 

´ஜய வே ஸ்ரீலங்கா´ எனும் தொனிப்பொருளில் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தமது வாழ்த்தினை தெரிவிக்கும் வகையில் பிரசாரம்

இலங்கையை உள்ளடக்கிய இந்திய உபகண்டத்தில் கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியை மேலும் உற்சாகப்படுத்தும் பணியை சியெட் தொடங்கியுள்ளது. முன்னணி டயர் வர்த்தக முத்திரையான சியெட் நாட்டின் கிரிக்கெட் அணிக்குப் பின்னால் ரசிகர்களை ஒன்று திரட்டும் ஒரு உன்னதமான பணியைத் தொடங்கியுள்ளது.

சர்வதேச 20க்கு 20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இந்த பிரசாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் எட்டாம் திகதி இந்தப் போட்டிகள் இந்தியாவில் தொடங்கவுள்ளன. ´சியெட் ஜயவேவா ஸ்ரீலங்கா´ எனும் தொனிப்பொருளில் தொடங்கவுள்ள இந்தப் பிரசாரம் மிகப் பெரிய அளவிலான LED டச்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட டிரக் வண்டியைக் கொண்டிருக்கும். 25 நாற்களுக்கு இலங்கை முழுவதும் வலம் வரவுள்ள இந்த டிரக் வண்டியில் அதி நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி ரசிகர்கள் தமது அணிக்கான வாழ்த்தினை பதிவு செய்ய முடியும்.

இந்த பிரதான டிரக் வண்டிக்கு புறம்பாக இன்னொரு வண்டியும் அதை பின் தொடரும். அதிலும் மிகப் பெரிய டுநுனு திரை பொருத்தப்பட்டு அன்றைய தினத்தில் இடம்பெறுகின்ற விளையாட்டுப் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். இலங்கையின் பிரதான 51 நகரங்கனை ஊடறுத்து இந்த டிரக் வண்டிகள் வலம் வரவுள்ளன. ரசிகர்கள் தமது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றைப் பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் திரைவழியாக அவர்கள் படம் பிடிக்கப்பட்டு அவர்களின் வாழ்த்து பதிவாகும். இவ்வாறு பிடிக்கப்படும் ரசிகர்கள் அனைவரதும் படங்கள் இலங்கையின் தேசப் பட உருவத்துக்குள் பதிவு செய்யப்பட்டு ஒட்டு மொத்த வாழ்த்தாக உருவாக்கப்படும்.

விளையாட்டு அமைச்சு வளாகத்துக்குள் இந்த நடவடிக்கைகள் கௌரவம் மிக்க பிரமுகர்கள் மற்றும் உயர் தர அதிகாரிகளின் பங்களிப்போடு தொடக்கி வைக்கப்பட்டன. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் சியெட்டின் இந்த அற்புதமான சேவையை மிகவும் வரவேற்று பாராட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருண, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் ஓட்ட வீரர் சுகத் திலக்கரட்ண, 2016 தெற்காசிய போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹிமேஷ் ஹெஷான், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான ஜெஹான் முபாரக், ஏன்ஜலோ பெரேரா, பர்வேஷ் மஹ்றூப், கிரிக்கெட் துறை அதிகாரிகள் ஏஷ்லி டி சில்வா, மொஹான் டி சில்வா, ஷம்மி டி சில்வா ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

´விளையாட்டுத் துறைக்கு ஆதரவளிப்பதும், இலங்கையர்களின் அபிலாஷைகள் நிறைவேற ஆதரவளிப்பதும், இந்த நாட்டுக்கான எமது அர்ப்பணங்களாகும்´ என்று கூறினார் சியெட் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விஜய் காம்பீர். ´நாட்டின் டயர் தேவையில் கிட்டத்தட்ட அரைவாசியைப் பூர்த்தி செய்பவர்கள் என்ற வகையில் இந்த நாட்டின் சகல சமூக பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபட்ட ஒன்றாக சியெட் ஸ்ரீ லங்கா நிறுவனம் திகழுகின்றது.

இந்த வகையில் கிரிக்கெட்டை நேசிக்கும் இந்தப் பெரும் எண்ணிக்கையான மக்களோடு இந்தப் பிரசாரத்தில் பங்கேற்பதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்´ என்று அவர் மேலும் கூறினார். நாட்டின் நான்கு பிரதான திசைகளையும் உள்ளடக்கியதாக 25 தினங்களுக்கு இந்த ´சியெட் ஜயவேவா ஸ்ரீலங்கா´ டிரக்குகள் நாடு முழுவதும் வலம் வரும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, எம்பிலிப்பிட்டிய, அம்பலாந்தொட்டை, லுணுகம்வெஹர, தணமல்வில, மொணராகலை, நுவரஎலிய, பண்டாரவளை, புத்தளம், அரலகன்வெல என்பன இந்த வண்டிகள் வலம் வரவுள்ள பிரதான நகரங்கள் சிலவாகும். புவியியல், இனம், சமூகம் என எல்லா விதமாகவும் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த பிரசார பவணி அமையும்.

இந்த வீதி உலாவின் முடிவில், நீர்கொழும்பு காலி ஆகிய இடங்களில் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் முதற் சுற்று போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இலங்கை பங்கேற்கும் போட்டிகள் இந்த பிரசார வண்டிகள் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்ட இலங்கையின் தேசப்படமும் இந்த வண்டிகளில் காட்சிக்கு வைக்கப்படும் இத்தோடு அவை சமூக வலைதளங்கள் ஊடாக வெளியிடப்படும் என்றும் கம்பனி அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சியெட் உலகளாவிய ரீதியில் 110 நாடுகளில் நிலைகொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரையாகும். 1924ம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் தோற்றம் பெற்ற Cavi Electrici Affini Torino அல்லது Electrical Cables & Allied Products of Turin, என்பதன் சுருக்க வடிவமாக உள்ளது. 2010, 2011,2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சிறந்த வர்த்தக செயற்பாட்டுக்காக தேசிய விருதை வென்றுள்ள சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2013ல் பாரிய அளவிலான உற்பத்திப் பிரிவில் தேசிய தர விருதையும் வென்றுள்ளது.

சியெட் களனி ஹோல்டிங்ஸ் இந்தியாவின் RPG குழுமத்துக்கும் களனி டயர் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு வெற்றிகரமான கூட்டு முயற்சியாகும். இலங்கையில் மிகப் பெரிய அளவில் மோட்டார் வாகன ஓட்டப் போட்டிகளுக்கு பங்களிப்பு வழங்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனமாகவும் சியெட் திகழுகின்றது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

எனி இப்படி அடாத்தா ஆணவத்துக்கு ஆதரவு திரட்டினால் தான் உண்டு. மற்றும்படி.. சொறீலங்கா கிரிக்கெட் எனி அவ்வளவு இலகுவில் தலைநிமிர வழி இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக அதன் ஆணவம் அழியும் வரை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுக்க ஆதரவு திரட்டி காசுதான் பார்க்கலாம், மைதானத்தில பதினொரு பேரத்தான் விளையாட விடுவினம்...! அவங்களைச் சரியாப் போடுங்கடா லூசுகளா...! சே... என்ன மடைத்தனம். பேட்டி பார்த்த கையோடு எழுதிப் போட்டன்...!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்த தொடரின் முதல் போட்டியில் வென்றிருந்தாலும்,அந்த வெற்றி சந்தோசமளிக்கவில்லை.ஆனாலும் நான் இலங்கையணி மீதான நம்பிக்கையை இழக்கவில்லை.

  • தொடங்கியவர்
6 hours ago, suvy said:

நாடு முழுக்க ஆதரவு திரட்டி காசுதான் பார்க்கலாம், மைதானத்தில பதினொரு பேரத்தான் விளையாட விடுவினம்...! அவங்களைச் சரியாப் போடுங்கடா லூசுகளா...! சே... என்ன மடைத்தனம். பேட்டி பார்த்த கையோடு எழுதிப் போட்டன்...!

நல்லகாலம் பீப் சாங் பார்த்த கையோடு எழுதவில்லை..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.