Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளியாப்பிட்டிய சிறுவனின் கல்விக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி

Featured Replies

குளியாப்பிட்டிய சிறுவனின் கல்விக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி

 

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியால் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்ட சிறுவன், தனது கல்வியை தொடர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.

160305142107_lanka_hiv_640x360_bbc.jpg
குளியாப்பிட்டியவில் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.

இந்தச் சிறுவனை பார்வையிடுவதற்காக குளியாப்பிட்டியவிலுள்ள அவரது வீட்டுக்கு சென்ற பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அங்கிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டபோதே, அவர் இவ்வாறு கூறினார் என அங்கு சென்றுள்ள எமது செய்தியாளர் பிரசாத் பூர்ணிமால் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிறுவனின் வீட்டுக்குள் சென்று, அவருக்கு உணவு ஊட்டி அவருடன் விளையாடியதை, இந்த சிறுவன் தமது பிள்ளைகளுடன் பள்ளியில் கல்வி கற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பார்த்தனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

151106125338_maithree_moragahakanda_chil

 

 சிறுவனின் கல்விக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறுவனின் தாயாருக்கு ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார் (கோப்புப் படம்).

ஆறு வயதான இந்த சிறுவனின் தந்தை நோயினால் உயிரிழந்த நிலையில், அவர் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த பிரதேசத்தில் வதந்தி பரவியது.

இதனால் சிறுவனுக்கும் நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த கிராம மக்கள், அந்தச் சிறுவனுடன் தமது பிள்ளைகள் கல்வி பயில்வதை தவிர்ப்பதற்காக, தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை நிறுத்தினர்.

  160301153252_lanka_hiv_640x360_bbc.jpg

கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என பெற்றொருக்கு விளக்கமளித்தபோதிலும், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வில்லை.

இதனால் சிறுவனை, அவர் சேர்க்கப்பட்ட பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்ள மாகாண கல்வி அமைச்சர் தீர்மானித்தார்.

எனினும் சிறுவனின் அடையாள ஆவணங்களை மாற்றி வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மாகாண கல்வி அமைச்சர் கூறினார்.

தனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டதன் மூலம், கல்வி கற்பதற்கான உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது தாயார் கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160305_hiv_boy_president

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கொடிய மன நோயாளிகளை கொண்ட நாடு என் திரு நாடு. tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்

சசியர், அறியாமையால் ஏற்படும் பயம் தான் இதற்குக் காரணம்! உண்மையில் இந்தச் சிறுவனுக்கு எச்.ஐ.வி இருந்தால் கூட, இவரோடு பழகும் விளையாடும் எவருக்கும் வைரசு தொற்றாது என்று நூறு வீத உறுதியோடு மருத்துவ அறிவுள்ள யாராலும் சொல்ல முடியும். ஏனெனில், எச்.ஐ.வி வைரஸ் எச்சிலிலும் சிறு நீரிலும் வெளிவரும் ஒன்றல்ல! ஆனால், இல்லாத வியாதிக்கு மந்திரவாதிகளிடம் மருந்து எடுக்கும் கிராமத்து மனிதர்களுக்கு எச்.ஐ.வி தொற்று கொல்லும் வியாதி என்பது மட்டுமே தெரியும்! நீண்ட கால நோக்கில் சிங்களத்திலும் தமிழிலும் அடிப்படை மருத்துவ விஞ்ஞான அறிவை மக்களிடையே பரப்புவது தான் இது மாதிரியான பிரச்சினைகளுக்குத் தீர்வு என நான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

எச்.ஐ.வி. வதந்தி: சிறுவனுக்கு கொழும்பில் கல்வி

இலங்கையின் வட-மேல் மாகாணத்தில் குளியாபிட்டிய என்ற இடத்தில் எச்.ஐ.வி வதந்தியால் பள்ளிக்கூடத்தில் பயிலும் வாய்ப்பை இழந்த ஆறு வயது சிறுவனை, தலைநகர் கொழும்பிலுள்ள முக்கிய பள்ளிக்கூடம் ஒன்று சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

160306133505_akila_viraj_512x288_bbc.jpg
 கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

அந்த சிறுவனின் கல்வி நடவடிக்கைகளை எவ்வித தடங்கலுமன்றி தொடர்வதற்கு, தனியார் நிறுவனமொன்று நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது சிறுவனின் தாய்க்கு வீடொன்றை வழங்கி, சிறுவன் தனது தாயுடனேயே இருப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் கூறினார்.

தாயிடமிருந்து சிறுவனை பிரிக்க நேரிடலாம் என்று நேற்று தான் கூறிய தகவல் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த சிறுவனும் அவரது தாயும் வாழ்ந்த வீடு, அவர்களது சூழ்நிலை, தாயின் சுகாதாரம் ஆகியவை காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஒரு பீதி இருந்து வந்ததாகவும், அதனால் சிறுவனின் நலனை கருத்திற்கொண்டு, சில காலம் அவரை தாயிடமிருந்து பிரித்துவிட்டு, இந்த பிரச்சனை தணிந்தவுடன் சிறுவனை தாயுடன் சேர்ப்பதற்கு திட்டமிட்டுதான் அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

160302104830_lanka_kuliyapitiya_hiv__512  பாதிக்கப்பட்ட சிறுவன்

தற்போது பரவிய வதந்தியானது, இனிவரும் காலத்தில் சிறுவனை பாதித்துவிடக்கூடாது என்பதில், தான் உறுதியாக இருப்பதாகவும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதனிடையே இந்த சிறுவனின் தாய் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் நேற்று கூறியிருந்தமைக்கு அகில இலங்கை பாடசாலை அதிபர் சங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160306_hiv_boy_school

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.