Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரி திட்டியதால் அகதி ஒருவர் தற்கொலை

Featured Replies

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் உயர் அழுத்த மின்கம்பியைப் பிடித்து மரணம்

 

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்த ரவீந்திரன் என்பவர், அருகில் உள்ள மின்சார கோபுரத்தில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியைப் பிடித்து உயிரிழந்தார்.

160306190040_refugee_camp_madurai_640x36
 மதுரை திருமங்கலம் அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்.

ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி, ரவீந்திரனின் கடைசி மகன் அங்கு இல்லாததால் அவரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கவிருப்பதாகக் கூறியதையடுத்தே ரவீந்திரன் இவ்வாறு செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அந்த வருவாய் அதிகாரி சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து அந்த அதிகாரியை மீட்டனர்.

இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.

http://www.bbc.com/tamil/india/2016/03/160306_sl_refugee

 

  • தொடங்கியவர்

இலங்கை அகதி தற்கொலை: வருவாய் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

 

suci.jpgமதுரை: திருமங்கலம் அருகே இலங்கை அகதியை திட்டி, தற்கொலைக்குத் தூண்டியதாக வருவாய் ஆய்வாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 500க்கும் மேற்பலட்ட இலங்கை அகதி குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த முகாமில் உள்ள அகதிகளை கணக்கெடுக்கும் பணிக்காக, வருவாய் ஆய்வாளர் துரைபாண்டியன் நேற்று வந்திருக்கிறார். அப்போது, ரவீந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் அங்கு இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து துரைபாண்டியன் விளக்கம் கேட்டிருக்கிறார்.

அப்போது, அங்கு வந்த ரவீந்திரன், தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வருவதாக விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், அதனை ஏற்காத வருவாய் அதிகாரி  துரைபாண்டியன், இதை வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன்  துரைபாண்டியன், ரவீந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரவீந்திரன், அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருமங்கலம் அருகே இலங்கை அகதியை திட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டியன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/60144-sri-lankan-refugee-suicide-case-revenue-inspector.art

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் பிறந்த ஒரே காரணத்தால் எத்தனை சுமைகள். எங்கேயும் அவமானம் துயரம், சுரண்டல், கொலை, கொள்ளை. நாங்கள் இழந்தது, பட்டது இன்னும் போதவில்லையோ? எப்பதான் இதற்கு எல்லாம்  முடிவு வரப்போகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.