Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sunday Leader editor faces arrest

Featured Replies

Sunday Leader editor faces arrest

[TamilNet, Thursday, 28 December 2006, 10:46 GMT]

Sri Lankan Criminal Investigation Department (CID) has been instructed by the Defence Ministry to arrest Lasantha Wikramatunga, the editor of the Sunday Leader, who exposed last Sunday a move to build a 500 million rupee bunker at Sri Lankan President Mahinda Rajapakse's official residence, editorial staff of the paper said. Media personnel have surrounded the Sunday Leader office following the development.

The CID officials who have been in touch with Lasantha Wickramatunga had informed him about the move.

The Free Media Movement in Colombo, in a press release issued recently said that the public security and anti-terrorism measures introduced by the government are "potentially extremely negative for freedom of speech and expression in Sri Lanka."

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20750

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஓரளவுக்காவது மற்றப் பத்திரிகைகள் சிங்கள அரசாங்ககளோடு ஒத்துப் போகின்றபோது சண்டே லீடர் தான் இப்போது ஓரளவு உள்விவாகராங்களை வெளியில் காட்டம் பத்திரிகை என குறிப்பிடலாம். இது ஜதேக சார்பு கொண்டதாகப் பலரால் சொல்லப்படுவது உண்டு.

லசந்த விக்கிரமதுங்கவுக்கும், மகிந்த ராஜபக்சாவுக்கும் இடையில் சில காலங்களாகவே பனிப்போர் நடந்து வருகின்றது. மகிந்த ஆட்சி ஏறி இந்தியா போனபோது அங்கே கேரளாவில் ஒரு கோவிலில் மகிந்த ராஜபக்சாவின் மனைவி போனதைப் பெரிய பிரச்சனையாக்கியவர் லசந்த. மகிந்த ராஜபக்சாவின் மனைவி கிறிஸ்தவர் என்று பெரும் பிரச்சனையைக் கிளப்பி, மகிந்தவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். பின்னர் சில நாட்களில் மகிந்த நேரடியாக போனில் கொலை மிரட்டல் விடுத்தார் என்று பத்திரிகையில் ஒரு கிழி கிழித்தார்.

அதன் பின்னர் சந்திரிக்கா இலங்கை வந்தபோது, அவரைப் பேட்டி கண்டு, சந்திரிக்காவுக்கு மகிந்த இலங்கை வருகையில் அவமானப்படுத்தினார் என்று செய்தி வெளியிட்டார். அவ்வாறே சிறிலங்கா சுதந்திரக்கட்சி எவ்வளவு மிரட்டி கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றியது என்பதை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டது சண்டே லீடர்.

இப்போது மகிந்தவோடு முறுகல். ஆனால் எது எப்படியானாலும் சண்டே லீடரின் இப்படியான கட்டுரைகள் ஓரளவு ஆதாரத்தோடு தான் இருப்பது வழமை.

மகிந்தவின் பதுங்கு குழியை அம்பலப்படுத்திய சண்டே லீடர் ஆசிரியரை கைது செய்ய முயற்சி.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனதும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக இரகசியமாக அமைத்து வரும் 400 மில்லியன் ரூபாய் செலவிலான பதுங்கு குழி தொடர்பான தகவல்களை வெளியிட்டதற்காக சண்டே லீடர் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு குற்றப் புலனாய்வுத்துறையை பணித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் லசந்த விக்கிரமதுங்கவிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஊடகவியலாளர்கள் சண்டே லீடர் பத்திரிகை காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை சூழ்ந்து கொண்டனர்.

அரசினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டமும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளும் இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மிகவும் பாதிக்கும் என்று சுதந்திர ஊடக அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.

www.puthinam.com

வடக்கில் உதயன் போல் தெற்கில் ஒரளவிற்கேனும் ஊடக தர்மத்தை நிலைநாட்ட பிரயத்தனப்படும் ஒரேயொரு ஊடகம் Sunday Leader.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் இராணுவ முகாம்கள் சண்டே லீடர் மூலம் தான் விளாவரியாக அம்பலப்படுதப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் நிர்மூலமாக்கப்பட்டதுக் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களின் விருந்துபசாரத்தில் அழையா விருந்தாளியாக பங்கேற்ற மகிந்த.

ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான வருட இறுதி விருந்துபசார நிகழ்வில் மகிந்த ராஜபக்ச திடீரென பங்கேற்றார்.

கிரான்ட் ஒரியன்டல் விடுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்ச்சி நிரலில் மகிந்தவின் வரவு இருக்கவில்லை.

சண்டே லீடர் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மகிந்த விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

www.puthinam.com

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.