Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளலாம் நாட்டுமக்களின் நலனிற்காக என்பணி தொடரும்"

Featured Replies

'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளலாம் நாட்டுமக்களின் நலனிற்காக என்பணி தொடரும்"

 
'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளலாம்   நாட்டுமக்களின் நலனிற்காக என்பணி தொடரும்"

 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு தனது அரசாங்கம் மீது பழிசுமத்துவதற்கு சிறிசேன அரசாங்கம் முயன்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டு எதிர்கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .தனது அரசாங்கம் பெற்றுக்கொண்ட அளவுக்கதிகமான கடன்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தான் இரகசிய கடன்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் மகிந்தராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனது இன்னொரு மகனான நாமல் ராஜபக்சவை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆனால் இவற்றின் காரணமாக அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவார்கள் என எவரும் கனவு காணக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளினாலும் கூட நான் நாட்டுமக்களின் நலனிற்காக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130146/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இப்பத்தான் மோனை விட்டுக்கிடக்குது. அதுக்குள்ள அடுத்த மோனை உள்ளார அனுப்ப நாண்டு கொண்டு நிற்கிறார்.

  • தொடங்கியவர்

குடும்பத்தையே சிறையில் அடைத்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்க மாட்டேன்'

 

தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையில் அடைத்தாலும், தான் ஒருபோதும் அரசியலிலிருந்து விலகப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

160317150438_mahinda_at_rally_512x288_wi
 சமல் ராஜபக்ஷ, விமல் வீரவங்சவுடன் மேடையில் மஹிந்த ராஜபக்ஷ

பொது எதிரணிக் கூட்டணி என்று தங்களை அழைத்துக்கொள்ளும், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைநகர் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்த பேரணியில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எச்சரிக்கையையும் மீறி, அந்தக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்ட இந்தப் பேரணி, கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடந்தது.

முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய இந்த பேரணியில், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, விமல் வீரவங்ஷ, வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி உட்பட 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நீதிரயசர் சரத் என் சில்வா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

160317150547_mahinda_at_rally2_512x288_w ஹைட்பார்க் மைதானத்தில் நடந்த இன்றைய பேரணியின்போது

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்தப் பேரணியில் கலந்துக்கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போரை முடிவுக்கு கொண்டுவந்து தான் கட்டியெழுப்பிய நாட்டை, புதிய அரசாங்கம் சீரழித்துக்கொண்டிருப்பதாக இங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தான் ஆட்சியை பொறுப்பேற்றபோது, உலகம் பொருளாதார பிரச்சினை எதிர்கொண்டிருந்தபோதிலும், தனது அரசாங்கம் பொதுமக்களுக்கான மானியங்களை ஒருபோதும் ரத்துச் செய்யவில்லை என தெரிவித்த மஹிந்த, தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்தி வருவதாகவும் கூறினார்.

போரை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் தமிழ், சிங்கள மக்களே அதிகம் நன்மையடைந்தனர் என்றுகூறிய மஹிந்த ராஜபக்ஷ, 30 வருடங்களாக அழிக்க முடியாமல் இருந்த புலிகள் இயக்கத்தை இரண்டு வருடங்கள் ஒன்பது மாதங்களில் இல்லாதொழித்ததாகவும் தெரிவித்தார்.

புதிய அரசு கடன்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கியுள்ளபோதிலும், நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

தனது குடும்பத்தை எத்தனை வருடங்கள் சிறையில் அடைத்தாலும், அரசியலிலிருந்து தான் ஒருபோதும் விலகப்போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160317_mahinda_rally?ocid=socialflow_facebook

 

  • கருத்துக்கள உறவுகள்
தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையில் போட்டாலும் தனது அரசியல் பயணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று  நடைபெற்றது.

தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையில் போட்டாலும் தனது அரசியல் பயணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

   

'ஜன சட்டன' (மக்கள் போராட்டம் ) என்ற பெயரில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், ஸ்ரீலங்கா கட்சியைச் சேர்ந்த குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே, சமல் ராஜபக்‌ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரி.பி.எக்கநாயக்க, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, ரோகித அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்த நிலையில், அதையும் மீறியே இவர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மாகாணசபை மற்றும் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் களமிறங்கியிருந்தனர்.

அத்துடன், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாயணக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஜே.வி.பியின் முன்னாள் தலைவரான மக்கள் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, அங்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பெரும் ஆரவாரங்களுடன் வரவேற்பு அளி்க்கப்பட்டது. கடுமையான நெரிசலுக்கு மத்தியிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ நிகழ்வு மேடையை அடைந்தார். நிகழ்வின் இறுதியில் அவர் கடும் ஆவேசத்துடன் உரையாற்றினார். இதன்போது அவர் கூறியவை வருமாறு:-

"அரசுக்கு எதிராக மக்கள் அலையென திரண்டுள்ளதை காணும்போது மகிழ்வாக இருக்கின்றது. இந்தக் கூட்டத்துக்கு நான் வரமாட்டேன் என வதந்திகளைப் பரப்பிவிட்டனர். இவர்களைவிட பெரிய மடையர்கள் இந்த உலகில் இருக்கமாட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. நான் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது பொருளாதாரம் வீழ்ச்சி, வங்கித்துறை ஸ்தம்பிதம், உணவுப் பிரச்சினை, புலிகள் என ஐந்து வகையான பிரச்சினைகளை உக்கிரமடைந்திருந்தன. அவற்றை நாம் சமாளித்தோம்.

புலிகளை இரு வருடங்களில் ஒழித்தோம். தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினோம். விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களையும் பாதுகாத்தோம். சொபின் பையுடன் வந்த ரிஷாட்டும் இதை இன்று மறந்துவிட்டார். 9 வருடங்களில் நாட்டை பலமான நிலைக்குக் கொண்டுவந்தோம். ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் இருந்தோம். இப்படித்தான் ஆட்சியைக் கையளித்தோம். ஆனால், என்மீது போலிக்கடன் கணக்கு காட்டப்படுகிறது. தகவல்களை ஒளித்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இவையாவும் பொய்யாகும். உண்மை பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே காலத்துக்குக் காலம் போலிக்கதைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பிள்ளைகளை சிறையில் அடைத்து, எனக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன். அரசியல் பயணத்தை கைவிட்டுவிடுவேன் என சிலர் நினைக்கின்றனர்.

ஆனால், அது பகல் கனவு மட்டும்தான். அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் நாம் அடிபணியமாட்டோம். என்னையும், ஏன் எனது முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணத்தை கைவிடமாட்டேன். 1976இல் ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஷாக்களின் பயணம் தொடரும். இதை எவராலும் தடுக்க முடியாது. அரச வளங்களை விற்பனை செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். ஆட்சியை நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள். உரமானியம் வழங்குவோம். 10 நிமிடமாவது இருட்டில் வைக்கமாட்டோம். வேலைவாய்ப்புகளை வழங்குவோம். சீனாவை விமர்சிக்க வேண்டாம். கொழும்பு துறைமுகநகர் திட்டத்தை ஆரம்பியுங்கள். மக்களுடன் மக்களாக நான் இருப்பேன்" - என்றார்.

 

jana-sattana-180316-seithy%20(1).JPG

 

 

jana-sattana-180316-seithy%20(2).jpg

 

 

jana-sattana-180316-seithy%20(3).jpg

 

 

jana-sattana-180316-seithy%20(4).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=153639&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அரசாங்கத்தின் செயற்றிறன் அற்ற போக்கே இதற்கு காரணம். மகிந்தாவோட கூடியிருந்து கொள்ளை அடித்தார்களே  ஒழிய, அவரின்ர, எதிரிகளை ஒடுக்கும், சிதறடிக்கும்  தந்திரத்தை கற்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.