Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்: 34 பேர் பலி

Featured Replies

பெல்ஜியம் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு..
 

CeInASgUMAAf_b1.jpg

BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown

CeInJxTXEAAH-ok.jpg

  BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown

At Brussels Airport in Zaventem, it should have come to two explosions. The airport has already been cleared. The explosions are said occurred on American Airlines switch shortly before eight o'clock haben.- Several people were injured. Meanwhile, the train service is interrupted to the airport.

Edited by நவீனன்

பெல்ஜியம் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 3 குண்டுவெடிப்புகளில் 27 பேர் பலி

 

 

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி ,குண்டு வெடிப்பு சவெண்டம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 

குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

பெல்ஜியம் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 11 பேர் பலி, பலர் படுகாயம்

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem என்ற விமான நிலையத்தில் சற்று முன்னர் இரண்டுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வெடிக்கும் பலத்த ஓசை எழுந்ததை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

இந்த பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தை மூடியதுடன், அங்கிருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.

மேலும், இந்த விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் Antwerp விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதேசமயம், சில விமானங்கள் தரையிறங்கவும் முடியாமல், மற்ற விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பவும் முடியாமல் Liege நகருக்கு மேல் இன்னும் வட்டமடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான தகவலில் இந்த விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க விமான நிறுவன உதவி மையத்திற்கு அருகில் இந்த வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி பிரஸ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்ட நிலையில், இதே நகரில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் வெடிக்காமல் இருந்த பல வெடிகுண்டுகளை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இது தீவிரவாத தாக்குதல் தான் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ரயில் நிலையங்களிலும் வெடி குண்டு தாக்குதல்: 3 குண்டுவெடிப்புகளில் 27 பேர் பலி

Maalbeek, Schuman என்ற ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும், இந்த தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இந்த ரயில் நிலையங்களின் அருகில் ஐரோப்பிய ஆணையத்திற்கு சொந்தமான சில அலுவலகங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தலைநகரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்ததாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த பெல்ஜியம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

bomp_blast%20(1).jpg

bomp_blast%20(2).jpg

bomp_blast%20(3).jpg

bomp_blast%20(4).jpg

bomp_forien%20(1).jpg

bomp_forien%20(2).jpg

bomp_forien%20(3).jpg

bomp_forien%20(4).jpg

bomp_forien%20(5).jpg

bomp_forien%20(6).jpg

bomp_forien%20(7).jpg

 

http://www.tamilwin.com/show-RUmuyDRWSXmtzG.html

  • தொடங்கியவர்

பிரஸல்ஸ் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி; பலர் காயம்

 
 
 
  • குண்டு வெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு பிரஸல்ஸ் விமான நிலையத்தில் குழப்ப நிலை. | படம்: பிடிஐ.
    குண்டு வெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு பிரஸல்ஸ் விமான நிலையத்தில் குழப்ப நிலை. | படம்: பிடிஐ.
  • குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் பெல்ஜியம் விமான நிலையத்தைச் சுற்றி நிறுத்திவைக்கப்பட்ட போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் | படம்: ராய்ட்டர்ஸ்.
    குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் பெல்ஜியம் விமான நிலையத்தைச் சுற்றி நிறுத்திவைக்கப்பட்ட போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் | படம்: ராய்ட்டர்ஸ்.
  • குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பின் விமான நிலையத்திலிருந்து கரும்புகை கிளம்பியது | படம்: @திஆன்டனிடேவிஸ்.
    குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பின் விமான நிலையத்திலிருந்து கரும்புகை கிளம்பியது | படம்: @திஆன்டனிடேவிஸ்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.

11 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 10 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக பிரஸல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பியர் மெய்ஸ் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது.

பெல்ஜியம் விமான நிலையத்தின் விமானப் பயணிகளின் காத்திருப்பு பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் தகவல் மையம் அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவமும் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பிரஸல்ஸ் விமான நிலையத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விமான நிலையத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விமான நிலையத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. யாரும் விமான நிலையத்துக்கு வர வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு:

விமான நிலையத்தில் நடந்த வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பெல்ஜியம் உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும், பெல்ஜியத்தை சுற்றியுள்ள 4 அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரஸல்ஸ் விமான நிலையத்துக்கு வரும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக பிரஸல்ஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிலையத்திலும்..

மத்திய பிரஸ்ல்ஸில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

தீவிரவாதி கைதுக்கு பழிவாங்கலா?

கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் பிரஸல்ஸில் கைது செய்யப்பட்டார். 26 வயது சலா அப்டெஸ்லாம் கைதுக்கு பழிவாங்கும் நோக்கில் இன்றைய தாக்குதல் நடந்திருக்கலாம் என பெல்ஜியம் உள்நாட்டு அமைச்சர் ஜான் ஜாம்போன் தெரிவித்துள்ளார்.

அரபு மொழியில் கோஷம்:

குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு முன்னதாக விமான நிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அரபு மொழியில் ஒருவர் கோஷம் எழுப்பியதாகவும் பெல்கா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8384967.ece?homepage=true

  • தொடங்கியவர்

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் படுகாயம்!

பெல்ஜியம் விமான நிலையத்தில்,  தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

jet+Airways+flights+.jpg

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் விமான நிலையத்தில்,  இன்று பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்புக்கு முன்பாகவே மும்பையில் இருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம்,  பிரசெல்ஸ் விமான நிலையத்தில் காலை 7.11 மணிக்கும், டெல்லியில் இருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் காலை 8 மணிக்கும் தரையிறங்கியுள்ளது.

குண்டுவெடிப்புக்கு முன்னதாகவே ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றதால் அங்கிருந்த ஊழியர்கள் 3 பேர் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/61051-jet-airways-flights-brussels-airport-blasts.art

  • தொடங்கியவர்

பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:26 பேர் பலி

தற்போதைய செய்தி:

 

இந்தத் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக கோழைகளால் நடத்தப்பட்டவை என பெல்ஜிய அதிபர் சார்லஸ் மிஷேல் கூறியுள்ளார். இந்த நாள் ஒரு கருப்பு தினம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

160322115643_brussels_victims_624x351_ap
 விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சிலர்

தாக்குதல்களை அடுத்து பிரசல்ஸ் நகரின் அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன.

நகரின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அணுமின் நிலையங்களில் மேம்பட்ட பாதுகாப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகளவில் எழுந்துள்ள அச்சுறுத்தலில் வெளிப்பாடே பிரசல்ஸ் நகரில் இடம்பெற்றத் தாக்குதல்கள் என பிரெஞ்ச் அதிபர் ஒலாந் கூறியுள்ளார்.

இப்படியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச அளவில் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நீண்டபோரை உலகம் எதிர்கொண்டு வருகிறது எனவும் பிரெஞ்ச் அதிபர் எச்சரித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரசல்ஸின் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் இதுவரை குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

160322093312_brussels_airport_640x360_ap

 இது ஐரோப்பா மீதான தாக்குதல் என பன்னாட்டுத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஜாவெண்டெம் விமான நிலையத்தில் நடைபெற்றத் தாக்குதலில் 11 பேரும், பிரசல்ஸ் சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்றத் தாக்குதலில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் குறைந்தது 35 பேர் காயமடைந்துள்ளனர்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெல்ஜியத்தில் நடைபெற்றுள்ள இத்தாக்குதல்கள் ஐரோப்பாவை இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.

160322114342_belgium_metro_station_blast  பிரசல்ஸ் சுரங்க ரயில் சேவை மூடப்பட்டுள்ளது

தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகே இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திலுள்ள அனைவரும் அலுவலகத்தைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நடைபெற்றுள்ள இத்தாக்குதல்கள் பயங்கரவாத்ததுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் முடுக்கிவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன என்று பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெஹ்நாஹ் காசநோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸுக்கு வந்துசெல்லும் அனைத்து யூரோஸ்டார் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்றத் தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து பெல்ஜியத்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது.

160318174803_belgium_police_512x288_reut  நாடு முழுவதும் கடும் பாதுகாப்பு மற்றும் சோதனைகள்

யூரோஸ்டார் மூலம் லீலுக்கு பயணம் செய்து அங்கிருந்து வாகனம் மூலம் பிரசல்ஸ் செல்பவர்கள் சோதனைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரஸ்ஸல்ஸிலுள்ள அரண்மனையில் சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்வர்ப் ரயில் நிலையத்திலுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு, பிரஸ்ஸல்ஸிலுள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என பெல்ஜிய அரச வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸின் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.

160322080653_belgium_explosion_512x288_b  ஜாவெண்டென் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன

பிரஸ்ஸல்ஸ் நகரிலுள்ள ஜாவெண்டெம் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகளும், நகரின் மத்தியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் வெடித்துள்ளன.

விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து கிடப்பதையும், கூரையின் சில பகுதிகள் இடிந்து அந்த இடிபாடுகள் தரையில் விழுந்துள்ளதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

இத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜாவெண்டெம் விமான நிலையத்தில் உள்ளோர்களை வெளியெற்றும் பணி நடைபெறுகிறது.சுரங்க ரயில் பாதையும் மூடப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்புகளுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

பாரிஸ் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முக்கிய நபரான சாலஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெறுள்ளன.

http://www.bbc.com/tamil/global/2016/03/160322_belgiumblasts

சாலஹ் அப்தஸ்லாம் கைதினை தொடர்ந்து சில மறைவிடங்களும், வெடிபொருள் வைப்பகங்களும், மறைமுக முகவர்களும் காட்டி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவருடன் தொடர்புடைய வலைப்பின்னலை சேர்ந்த நபர்களை வைத்து இந்த தாக்குதலை IS செய்திருக்க வாய்ப்புண்டு. 

இதை நிச்சயமாக அவரை கைது செய்த பெல்ஜிய/பிரான்ஸ் புலனாய்வாளர்கள் கணித்திருப்பார்கள். அதையும் மீறி இந்த தாக்குதல் நடந்திருப்பது அவர்களின் பாதுகாப்பின் பலவீனமே. 

இந்த கைது முடிவல்ல என்பதை காட்டுவதையும் IS நோக்காக கொண்டிருக்கலாம்.

பெல்ஜியம் சில நாட்களாக தங்களின் பாதுகாப்பு பலப்படுத்தலை பற்றிய படங்களை வெளியிட்டு வந்தது. அது வெறும் கண்துடைப்பு என்பதை இந்த தாக்குதல் நிரூபித்துள்ளது.

  • தொடங்கியவர்

பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்: 34 பேர் பலி

 

தற்போதைய செய்தி:

விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்கொலை பெல்ட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

160322092455_belgium_explosion_512x288_g
 தாக்குதலை அடுத்து ஜாவுன்டெம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது

நடைபெற்றுள்ள இரண்டு தாக்குதல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களே என பெல்ஜியத்தின் தலைமை அரச வழக்கறிஞர் கூறுகிறார்.

இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் சிலர் கருத்துக்களை கூறி வருவதாக பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டிடியே ரெய்ண்டர் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரில் உடலுக்கு அருகில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

160322122415_brussels_airport__640x360_k  ஜாவுண்டெம் விமான நிலையத்தில் முதல் தாக்குதல் இடம்பெற்றது

இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சர் கூறுகிறார்.

விமான நிலையத்தில் 81 பேரும், ரயில் நிலையத்தில் 55 பேரும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரஸல்ஸ் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என பெல்ஜியப் பிரதமர் ஷார்ல் மிஷேல் கூறுகிறார்.

எது நடைபெறும் என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்தோமோ அது நடைபெற்றுவிட்டது எனக் கூறியுள்ள அவர், மிகவும் துக்ககரமான ஒரு நேரத்தை நாடு எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதாக பிரஸல்ஸிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

160322113859_charles_michel_belgium_atta பெல்ஜியம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது என பிரதமர் மிஷேல் கூறுகிறார்.

பல இடங்களில் இராணுவத்தினர் கூடுதலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக பெல்ஜிய பிரதமர் ஷார்ல் மிஷேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெல்ஜியம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்

விமான நிலையத்தில் 14 பேரும் ரயில் நிலையத்தில் 20 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக இப்போது வரும் தகவல்கள் கூறுகின்றன

---------------http://www.bbc.com/tamil/global/2016/03/160322_belgiumblasts-------------------------------------------------------------------------------------------------------------

  • தொடங்கியவர்

பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்புகளின் பின்னணி என்ன?

பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்துள்ள தொடர் குண்டு தாக்குதல்களில் குறைந்தது முப்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் புறம்படும் பகுதியில் முதல் குண்டு வெடித்துள்ளது.

மக்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடத் தொடங்கியபோது, இரண்டாவது பெரிய குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

தற்கொலை குண்டுதாரி இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல்கள் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூன்றாவது வெடிப்பு பிரஸ்ஸல்ஸின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு அருகே உள்ள இந்த ரயில் நிலையத்தில் காலை ஜனநெரிசல் மிக்க நேரத்தில் தாக்குதல் நடந்துள்ளது.

  • தொடங்கியவர்

பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்கள்: இலங்கைத் தமிழரின் நேரடி அனுபவம்
***********************************************************************************
பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸின் சர்வதேச விமானநிலையத்தில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரையான தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதல்கள் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த இலங்கைத் தமிழரான சசீந்திரன் பிபிசியிடம் தனது நேரடி அனுபவம் பற்றி பேசினார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்: குறைந்தது 30 பேர் பலி

 

தற்போதைய செய்தி:

பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் நடைபெற்றத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

160322172740_brussels_tributes_640x360_g
 உயிரிழந்தவர்கள் நினைவாக மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிப்பு

ஜாவுண்டெம் விமான நிலையத்தில் மூன்றாவதாக ஒரு குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது செயலிழக்கச் செய்யப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரஸல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர் அவரை தேடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிசிடிவியில் காணப்படும் ஒரு நபர் ஒருவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு சந்தேக நபர்கள் சிசிடிவியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூன்று நாட்கள் தேசியத் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

------------http://www.bbc.com/tamil/global/2016/03/160322_belgiumblasts-------------------------------------------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.