Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

என் அத்தை மக…. சினிமா பாடல் வரிகளை விசில் அடித்துக் கொண்டு சிவா  வீட்டுக்கு கீழ் உள்ள நிலவறையில் காரை நிறுத்தி விட்டு மாடிப்படியேறி ஓடுகிறான். அன்று வெள்ளிக்கிழமை வார இறுதிநாள். திருமணமாகி இரு வாரங்களே கடந்த புது துணைவி. அவளுடனான புதுவாழ்க்கைக்கு இடையே இருவரது பணிகளின் குறுக்கீடு. இருந்தாலும் அவன் சந்தோசமாகவே இருந்தான் தான் விரும்பியவளை கரம்பிடித்த மகிழ்வை அவனின் துள்ளல் நடை பறைசாற்றியது.  பணியிடத்தின் பணிச்சுமைகளை இறக்கி விட்டு புத்துயிர் பெற்றவனாய் இன்ப சொரூபமான அவளை நோக்கி செல்கிறான்.

தொடர்ந்து  வாசிக்க %E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%

என் அத்தை மக…. சினிமா பாடல் வரிகளை விசில் அடித்துக் கொண்டு சிவா  வீட்டுக்கு கீழ் உள்ள நிலவறையில் காரை நிறுத்தி விட்டு மாடிப்படியேறி ஓடுகிறான். அன்று வெள்ளிக்கிழமை வார இறுதிநாள். திருமணமாகி இரு வாரங்களே கடந்த புது துணைவி. அவளுடனான புதுவாழ்க்கைக்கு இடையே இருவரது பணிகளின் குறுக்கீடு. இருந்தாலும் அவன் சந்தோசமாகவே இருந்தான் தான் விரும்பியவளை கரம்பிடித்த மகிழ்வை அவனின் துள்ளல் நடை பறைசாற்றியது.  பணியிடத்தின் பணிச்சுமைகளை இறக்கி விட்டு புத்துயிர் பெற்றவனாய் இன்ப சொரூபமான அவளை நோக்கி செல்கிறான்.

 

கதவை திறந்து உள்ளே போன போது வழமையாக பணி முடித்து வந்து மாமியாருடன் திரைப்படம் அல்லது ஏதோ ஒரு நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு மாமியாரை தன் தாயை போல பராமரிக்கும் அவளை இன்று காணவில்லை. என்னாச்சு…? “எங்கம்மா சாரும்மா? ” என்னாச்சு என்று தெரியல்ல வந்து ஒன்றுமே பேசல்ல தலை வலிக்குது அத்த படுக்கிறன் என்று ரூமுக்க இருந்து சொல்லீட்டு ரூம பூட்டீட்டு படுத்திட்டா. என்னென்று போய் பாருப்பா… தாய் கூறிய வார்த்தைகள் அவனுக்கு கவலையை தந்தது. என்  சாருவுக்கு  என்ன  நடந்தது? அவள் போன் கூட  அது  தான்  வேலை செய்யல்லையா

 

ஏனம்மா இன்று வேலை அதிகாமாமா? அப்போத  போனில  கூப்பிட்டன்  அதுக்கும் பதில்  இல்ல.  “தெரியல்லப்பா எதைவுமே சொல்லல்ல ” சரியம்மா சாப்பிட்டீங்களா? மருந்து போட்டாச்சா? சரி நீங்க படுங்கம்மா நான் விடிய கதைக்கிறன். அவன் மாடிப்படியேறி தமது அறைக்கு செல்கிறான். ஒவ்வொரு படியையும் தடை தாண்டுவது போல தாண்டி கதவுக்கருகில் சென்ற போது உள்ளே எந்த சலனமும் இல்லாதது அவனுக்கு வருத்தத்தை தந்தது. கதவை தட்டுகிறான். சாரும்மா சாரும்மா…. என்னாச்சு? கதவை திறவுங்கோ.

 

“கதவு திறந்து தான் கிடக்கு…” அவன் அவளின் குரல் மாற்றத்தை அவதானித்தான். என்னாச்சு இவளுக்கு? கதவை தறந்து கொண்டு உள்ளே போனவன் அந்த அறையில் வழமைக்கு மாறான ஒரு மணம் சூழ்ந்திருப்பதை உணர்ந்து கொள்கிறான். என்ன சாரும்மா வித்தியாசமான மணம் ஒன்று வருகுது? அவள் எதுவும் பேசவில்லை. மடிக்கணனி பாக்கை மேசை மீது வைத்து விட்டு அவளருகில் செல்கிறான். ” என்னாச்சுடா தலை வலிக்குதா? அவளின் தலையை தொட போனவனை தடுக்கிறாள் அவள். “எனக்கொன்றுமில்ல விடுங்க….” அவள் பேசும் போது எழுந்த காற்றில் கடந்து வந்த அந்த மணம் அவனுக்கு அருவருபை தந்தது. அவன் புரிந்து கொள்கிறான் நடந்தது  என்ன  என்பதை.

 

“தண்ணி அடிச்சியா? ” இப்பிடி நாறுது? எப்ப இருந்து இந்த பழக்கம்? அவள் எழுந்து இருக்க முயல்கிறாள் ஆனால் முடியவில்லை. “உன்னோட கொஞ்சம் கதைக்கனும் சிவா … ” சொல்லி முடிக்க முதல் அவளை மீறி வாந்தி… சிட்… என்னடி பழக்கமிது? நீ தண்ணி அடிப்பியா? அவன் அதிர்ந்து போகிறான். அந்த இடமே எதோ ஒரு சாராய நெடியால் நிரம்பிக் கிடக்கிறது. அவன் வாழ்க்கையே சுக்குநூறாகி கிடப்பதான உணர்வு எழுந்து கொள்ள அவன் அவளை விட்டு விலகுகிறான். என் குடும்பத்தில் இல்லாத பழக்கம் உனக்கு எப்பிடி வந்திச்சு? என்  அத்து  உன்னை  அப்பிடி  வளர்க்கல்லைடி  எப்பிடிடி  இது  உனக்கு  பழக்கம்  வந்திச்சு. அவன் அவளை திட்ட தொடங்கிய போது. வேறு  வார்த்தை எதுவும் வரல்ல அவன் அதோடு நிறுத்துகிறான். வெளிநாட்டு பழக்கவழக்கமா  இது?

 

சிவா  உன்னோட கொஞ்சம் பேசனும்… பிளீஸ் புரிஞ்சுக்க நான் குடிகாரி இல்ல முதன்முதலா  இன்று தான் குடிச்சன் அதுவும் கொஞ்சம் தான் குடிச்சன் எனக்கு உன்னுடன் ஒரு விசயம் பேசனும் அதுக்காக தான் குடிச்சன் இது தப்புத்தான் எனக்கு நிதானமா  பேச முடியல்ல அதுக்காக தான் குடித்தன், நான் சொல்ல போற விடையம் இதை விட முக்கியமானது.  வடிவா கேள் ” சிவா  உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல்ல நான் ஒருத்தன காதலிக்கிறன். அவன கட்டனும் என்று ஆசைப்பட்டன் அவனோட என் வாழ்க்கை  முழுவதும் சந்தோசமா இருக்க  ஆசைப்பட்டன் ஆனால் அது  நடக்கவில்லை அம்மாவின் கட்டாயத்திலே உன்னை கட்டினன் அம்மாவின்  ஆசைக்கு  மறுப்பு சொல்ல  முடியல்ல சிவா அதனால தான் உங்கள  கட்டுறதுக்கு  ஓம்  என்றன் ஆனா எனக்கு அவன் தான் வேணும். என்னை புரிஞ்சுக்க. நீ என்னை தொடும் ஒவ்வொரு தடவையும் நான் நெருப்பில விழுந்த புழுவாக துடிப்பன் ஆனா தடுக்க முடியல்ல என்னால. நீ என்னை சந்தோசப்படுத்துறதா நினைத்து செய்யுறது எல்லாமே எனக்கு வெறுப்பை தான் தருகுது பிளீஸ் என்னை இனி தொடாதே… என் அருகில் வராதே. என் மனசு இப்போது செத்து  போய் கிடக்கிறது தயவு செய்து என்னை புரிஞ்சு நடந்துக்க. எனக்கு நீ வேண்டாம். உன் அன்பு வேணாம் நீ எனக்காக எதுவும் பண்ண வேணாம். நான் உழைக்கிறேன். என்னை நான் பார்த்துக்கிறேன். நீ உன் பாட்டில் இரு. நான் என்பாட்டில் இருக்கிறேன். ஆனால் ஒரு விடையம் புரிந்துக்க உன் அம்மாவை நான் என் அம்மாவாக தான் பார்ப்பேன். அவாவை ஏமாற்ற மாட்டேன், ஆனால் நாங்கள் விலகியே இருப்போம். எனக்கு உன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்னை விட்டு விலகிவிடு.

 

மூச்சு விடாமல் அவள் சொல்லி முடித்த அத்தனையையும் அவன் செவிகள் உள்வாங்கினாலும் எதுவுமே அவனுக்கு புரியவில்லை. தலை சுற்றி வீழ போனவன் அருகில் இருந்த சுவரோடு சாய்ந்து கொள்கிறான். ஏன் சாரு? ஏன் நான் என்ன செய்தன்? உன்னை மட்டுமே வாழ்க்கை என்று நினைத்தது தவறா? நீ மட்டுமே என் சந்தோசம் என்று நினைச்சனே அது தவறா? உனக்காக என் உணவு பழக்கவழக்கங்கள் என் நட்புக்கள் உறவுகளை தூர வைத்தேனே? அது தவறா ? அவன் கேட்டுக் கொண்டிருக்க அவள் ஒரே பதிலில் முடிக்கறாள் ” ஆமா நீங்க நினைச்சது எல்லாமே தவறு தான். என் மனச யாருமே பார்க்கல்ல, அம்மாக்கு அவன பிடிக்கல்ல என்றதால நான் காத்திருந்தன் எப்போதோ ஒருநாள் என்னை புரிந்து எங்களை சேர்த்து வைப்பா என்று ஆனா அவா உங்கள கட்ட சொல்லி பிடிவாதமா இருந்தா… என்னால மறுக்க முடியல்ல ஆனா என் வாழ்க்கையில அவன் இல்லாது சந்தோசமே இல்ல. தயவு செய்து புரிஞ்சுக்க. இனி என் பக்கத்தில வராத என்னுடன்  காதல் கதை பேசாதே. என்னை  தொட நினைக்காதே. அப்பிடி என்னை நீ தொடனும் என்று நினைச்சா நான் சாகிறேன். அதுக்கு பின்னாடி என் பிணத்தை தொடு. அவள் சொல்லி முடித்து போர்வையை இழுத்து போர்த்து கொள்கிறாள்.

 

நீண்ட நேரம் சுவரோடு சாய்ந்து இருந்தவன் எழுந்து முகத்தை கழுவி கொண்டு மேசை மீது இருந்த மடிக்கணனியை இயக்கி தன் மனசை எழுத தொட்கினான்.

 

அன்புடன் சாரும்மா

இப்பிட சொல்வது கூட உனக்கு பிடிக்காது இருக்கலாம் ஆனால் இதை மட்டுமாவது எனக்கு அனுமதி. நான் உன்னை காதலிச்சன் உன்னிடம் அதை சொல்லாது விட்டது தவறு தான். ஆனால் உன் அம்மா என் மீது அதீத பாசம் வைத்திருப்பது நீயே அறிவாய். அவாவுக்கு என்னை மருமகனாக்க வேண்டும் என்பது பிடிவாத ஆசை அதுவே உன் மீது நான் பாசம் வைக்க காரணமானது. இன்றும் என் அம்மாவும் உன் அம்மாவும் நாம் சந்தோசமாக வாழ்கிறோம் என்று நம்பி இருக்கிறார்கள். அதை பொய்மையாக்க நான் விரும்பவில்லை. அதானல் நான் அலுவலக வேலை என்று சொல்லி வேறு இடத்துக்கு சென்று விடுகிறேன். நீயும் அதையே கூறி அவர்களை சமாதானப்படுத்து. எனக்கு வேறு எதுவும் தேவையில்லை என் அம்மாவும் உன் அம்மாவும் சந்தோசமாக இருப்பது மட்டும் போதும் அந்த ஆசையாவது நிறைவேற்று எமக்குள் இருக்கும் இந்த பிரச்சனை வெளியில் தெரிய வேண்டாம்

என்றும் காதலுடன்

சிவா

 

தன் மின்னஞ்சலில் இருந்து அவளுக்கு அதை அனுப்பியவன்  தாய் தூங்கி விட்டதை உறுதிப்படுத்தி கொண்டவனாய் ஜக்கட்டை போட்டு கொண்டு வெளியே செல்கிறான். எங்கே செல்வது? என்ன பண்ணுவது? எதுவும் புரியாது காரை எடுத்து கொண்டு புறப்படுகிறான். அவளை விட்டு பிரிந்து இருப்பதுவே அவளுக்கு சந்தோசமெனில் செத்திடலாமா என்று தோன்றியது ஆனால் தாயும் அத்தையும் அவனுக்காக இருக்கிறார்களே தன் இறப்பு அவர்களை சாகடிக்குமே என்று நினைத்தவனாய் காரை ஒரு ஓரமாய் நிறுத்துகிறான்.. என்ன செய்ய? இருக்கையில் இருந்து சிந்தித்தவன். செய்வது தெரியாது அப்பிடியே  இருக்கிறான்.

 

அவனுக்கு செய்வது என்ன…? புரியவே இல்லை. தன் நிலை  புரியாத புதிராகிய போது அவன் தன் அடுத்த நிலை நோக்கி செல்ல முனைகிறான். காரை விட்டு இறங்கியவன் ஒரு வொட்கா  போத்தலும் ஜூஸ் போத்தலும்  ஒரு சிகரட் பைக்கட்டும் வாங்கியவாறு வருகிறான். கார் மீண்டும் வீடு நோக்கி செல்கிறது. என்றுமே இல்லாத புது பழக்கம் ஒன்றை அவன் ஆரம்பிக்க போகிறான். அவனுக்குத் தெரியும் அது தப்பானது என்று ஆனாலும் நிலை தடுமாறி இருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. கார் நிலவறையில் வந்து நிக்கிறது. போத்தல் உடைக்கப்பட்டு ஊற்றப்படுகிறது. சிகரட் மூட்டப்படுகிறது. ஆனால் அவை இரண்டுமே அவனின் முடிவுக்காக காத்திருந்தன. குடிக்க உதட்டருகே கொண்டு போனவன் தந்தையின் புன்னகையை நினைத்து கீழே வைக்கிறான்.

 

சிவா  நீ பீடா போடுறத கூட நான் விரும்பல்ல ஆனா நீ இன்று தண்ணி அடிக்க முயலுறா என்னடா இது? அவர் கேட்பது போன்ற உணர்வு… எங்கோ அசரீரீ கேட்கிறதான ஒலி/  அவன் கையில் இருந்து இரண்டும் கீழே விழுகின்றன. சீ இவளுக்காக என் அப்பாவின் சந்தோசத்தை கொள்கையை உடைக்கப் பார்த்தேனே என்ன கொடுமையான முடிவு இது …? அவன் குழப்பத்தோடு காரை ஓங்கி குத்துகிறான். “அப்பா  எனக்கு ஏன் இந்த நிலை? அவள் தான் சாகிறாளாம் தன் பிணத்தை தொடட்டாம் நான் என்ன அவளின் தொடுகைக்காகவா அவளை கட்டினேன் அப்பா? அவளின்  மனசுக்காக அவளின் தமிழ் பண்பாட்டுக்காக. என் அத்தையின் மாமாவின் சந்தோசத்துக்காக  தானே? ஏன் அப்பா நான் அவளை காதலிக்கவில்லையா? என்ன வார்த்தை சொன்னாள்? இத கேட்டும் நான் உயிரோடு இருக்கனுமா அப்பா…? அவன் காருக்குள் இருக்கும் தந்தையின் புன்னகைக்கும் படத்தின் முன்னே அழுது கொண்டு வினவுகிறான். அவர் புன்னகைத்தபடியே இருக்கிறார்.

 

எதுவுமே முடியவில்லை காலை விடியும் முன் தனது அறைக்கு சென்றான் குளித்தான் உடைகள் சிலவற்றை ஒரு பையில் போட்டு எடுத்து கொண்டு மடிக்கணனியையும் தூக்கி கொண்டு புறப்பட்டான். அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. அவன் சென்றுவிட்டான். அந்த விடிகாலை எழுந்து அறையை துப்பரவாக்கி தலைக்கு தண்ணீர் விட்டு தன் உடலை சுத்தம் பண்ணி மேசையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவள் இவனை திரும்பி பார்க்கிறாள். அவன் எதுவுமே பேசவில்லை படியிறங்கி சென்று விடுகிறான். சிவா…. அழைக்க முனைந்தவளின் குரல் தேய்ந்து போகிறது அவன் சென்று விட்டான். எங்கே செல்கிறான்? அவனுக்கும் புரியவில்லை அவளுக்கும் புரியவில்லை இருவரிடையிலும் பலத்த மௌனம் மட்டுமே பதிலாக கிடந்தது.

 

பொழுது புலர்ந்து பல மணி நேரமாகிய பின் எழுந்த சிவாவின் தாய் “எங்கம்மா சிவாவ  காணல்ல? ” அது.. வந்து அத்த வேலையிடத்தில இருந்து அவசரமா கூப்பிட்டாங்க விடியவே போட்டார். எதோ ஒரு பொய்ய சொல்லி முடித்தாள். சாப்பிடுங்க அத்த நான் வெளிக்கிட போறன் நேரமாகுது சரி  சாரும்மா தலைவலி  இப்ப  ஓகேவா? அவள் அந்த இடம் விட்டு நகரமுன் தொலைபேசி சிணுங்க பதிலழிக்கிறாள். மறுமுனை “நீ என்னுடன் பேசுவதாக எதாவது சொல்லி விட்டு அம்மாவிடம் குடு ” என்றது அவளும் சரி… இப்பத்தான் அத்த கேட்டவா..,நான் குடுக்கிறன்… தொலைபேசி கை மாற ” அம்மா நான் அவசரமா தூர இடத்துக்கு வேலையா போகனும் வீட்ட வர முடியாது ஒருகிழமைக்கு மேல ஆகும் அம்மா சொறி…. பிறகு எடுக்கிறன். அவன் தாயை பேச கூட விடாது துண்டிக்கிறான்.

 

இவன் என்ன பெடியன் இப்பிடி பண்ணுறான் கல்யாணமாகி பத்துநாள் கூட ஆகல்ல அவருக்கு வேலை… சீ தாய் சினந்து கொள்கிறாள். நீ குறை நினைக்காதம்மா அவனுக்கு வேலை என்றா எல்லாத்தையும் மறந்திடுவான் நீ தினமும் போன் பண்ணி பேசு சரியா… சரி அத்த நான் இறங்கவா? சரிம்மா. அவள் சென்று விடுகிறாள். அவளுக்கும் இப்போது ஒரே கேள்வி தான் “எங்க போறான்? ” பதில் இல்லாத வினாவை தேடி இருவருமே தமது பணி இடங்களுக்கு சென்று விட. எந்த பணியிலும் ஈடுபடமுடியாத குழப்ப நிலை மனதில் உருவாகியது. இருவருமே விடுப்பு எடுத்து கொண்டு பணியிடத்தில் இருந்து  திரும்புகின்றனர்.

 

அவனின் கார் எங்கோ தூரவாக உள்ள ஒரு பூங்காவை சென்று சேர்கிறது அவள் வீட்டுக்கு வந்து படுக்கையில் வீழ்கிறாள். எங்க போறான்? அவள் தேடிக் கொண்டே இருக்கிறாள். கைபேசியை எடுத்து எதையோ தேடியவள் அவனின் மின்னஞ்சலை கண்டு கொள்கிறாள். அவனுக்காக அவள் விழிகள் பனித்தாலும், மனம் முழுவதும் நிறைந்து கிடக்கும் அவளது காதல் அவனை வஞ்சிக்க வைத்தது. தன் காதலின் தோல்விக்கு பின்னால் காதலனுடன் பேசுவதை அவள் நிறுத்தி இருந்தாலும் அவளால் அவனை மறந்து சிவாவை  ஏற்றுக் கொள்ள முடியாது இருந்தது. மன ஒற்றுமை இல்லாது இரண்டு தாய்மாரின் ஆசைக்காக இணைந்த மனங்கள் இரண்டும் இரு வாரத்துக்குள்ளே மணமுறிவை எதிர்பார்த்து கிடக்கின்றன.

 

இரவு 12 மணிக்கு பின்னான நேரம் அவனின் கார் வீட்டின் நிலவறையில் வந்து நிற்கிறது. எதுவும் சாப்பிடவில்லை வரமறுத்த தூக்கத்தை கட்டாயமாக வரவழைத்து கொள்கிறான் அவன். ஆனால் அந்த குளிர்ந்த பூமியில் நிலவறையின் குளிர் தாங்க முடியாது போகிறது ஒரு போர்வையை இழுத்து போர்த்துக் கொண்டு கார் இருக்கைகளை படுக்கையாக்கினான் சிவா. விடிகாலை முன் எழுந்து அருகில் இருக்கும் பொது கழிவறையில் காலை கடமைகளை முடித்து குளித்து வேலைக்கு சென்று பூங்கா சென்று என அவன் தனது நாட்களை கடத்தினான். ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது. தாய்க்கு இடையிடை தொடர்பில் வருவான் தான் பிஸியாக இருப்பதாக காட்டிக் கொள்வான். அதேபோல் அவளின் தாய்க்கும் தொடர்பில் வந்து இருநிமிடங்கள் பேசுவான். இது மட்டுமே அவன் உறவுகளுடன் பேணும் தொடர்பாடல்.

 

ஒழுங்கான உணவு, தூக்கம் எதுவுமே அற்று சிவா பயங்கர சோர்வு நிலைக்கு சென்று விட்டான் அவனால் மேலே எதையும் செய்ய முடியவில்லை அதிகாலை எழும்ப வேண்டியவன் இயலாமையில் காருக்குள்ளே கிடக்கிறான். அவளுக்கும் இதே நிலை தான் மனசு முழுவதும் காதல் நிறைந்திருந்தாலும் இடையிடையே எட்டிப்பார்க்கும் இவனின் முகம் இவன் நிலை என்ன என்று அறிய துடிக்கும். தொலைபேசி பண்ணலாமா என்று கையில் எடுப்பதும் வைப்பதுமாக கடந்த ஐந்தாறு நாட்கள் அவளும் கழித்தாள். அவளுக்கு அவனின் பணியிடம் பற்றி கூட முழுமையாக தெரியாது. யாரிடம் விசாரிப்பது என்றும் தெரியாது. அவனது தொலைபேசி இலக்கத்தை கூட பதிவு பண்ணியது கிடையாது ஆனால் வருகை பதிவில் இருக்கும் என்பதால் அவள் முனைவாள் பிறகு நிறுத்துவாள். இப்போது அவளுக்கு அவனை பற்றி அறிய வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இப்போது இருக்கிறது. உண்ண முடியவில்லை இரவில் தூங்க முடியவில்லை அவனின் தலையணையை வெறித்த படியே அவள் கிடக்கிறாள். அவன் படுக்கும் இடத்தை கரத்தால் வருடுகிறாள். அழுகை பீரிட்டு வருகிறது அடக்கி கொள்கிறாள். சிவா அவளிடம் பேசிய காதல் வார்த்தைகள் வந்து போகின்றன.

 

சிவா சொறி சிவா  நான் அப்பிடி செய்திருக்க கூடாது. எங்க போட்டீங்க சிவா? சொல்லுங்க பிளீஸ். அவள் விழியில் இருந்து முதன்முதலாக இவனுக்காக நீர் வந்தது. ஆனாலும் காதலனின் நினைவு வர துடைத்துக் கொண்டு தூங்க முயல்கிறாள். ஏன் நான் அழனும் தனக்கு தானே கேள்வி கேட்கிறாள். எனக்குத்தான் இவரை பிடிக்கல்லையே எதுக்கு இவருக்காக அழனும்? எப்பிடியாவது இந்த பிடிக்காத வாழ்க்கையில் இருந்து கொஞ்ச நாளாவது நின்மதி. அவள் மறுபக்கம் திரும்பி படுப்பாள். ஆனால் சிறிது நேரம் கழிய மீண்டும் சிவாவின் முகம். அழுவாள். திரும்பி படுப்பாள். இப்படியே அவள் அன்றைய  இரவு கடந்து  போய் கொண்டிருந்தது.  அன்று விடிந்து அவள் பணிக்கு செல்ல கார் எடுக்க வந்த போது இவனின் காரை கண்டு சிறு மகிழ்வு கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல அவள் அவனது காரை காணவும் இல்லை அவனை காணவும் இல்லை. அவனை கண்டது மகிழ்வை தரவே அருகில் செல்கிறாள். உள்ளே தூங்க முடியாத சிறு இடைவெளிக்குள் அவன் சிரமப்பட்டு தவிப்பதை கண்டு, சிவா … குரல் வெளியில் வர மறுத்தது. சிவா  மீண்டும் அழைக்கிறாள். அவன் அசைவற்று கிடக்கவே.. சிவா  என்று கொஞ்சம் சத்தமாக அழைக்கிறாள். அவன் எழவே இல்லை. கிட்ட சென்று பார்த்தவள். அதிர்ந்து போனாள்.

ஒரு வாரமாக அவனை காணாத அவள் அவனின் மெலிந்த தேகத்தையும் அவன் கிடந்த கோலத்தையும் கண்டு திகைப்படைகிறாள்  சாரு. சீ  நான்  என்ன  காரியம் செய்தேன். என் ஒருத்தியின் காதலுக்காக எந்த தப்புமே பண்ணாத இவர ஏன் நான் தண்டிச்சன். கட்டல என்றா முதலே மருத்திருக்கணும். இப்பிடி பண்ணி என் மேல உயிரை வைச்சிருக்கிற ஒரு உயிரை காயப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டு வந்திட்டனே… அவள்  விம்முகிறாள் கைகள் தொட மறுத்தாலும் அவனை தொட்டு எழுப்புகிறாள். சிவா… சிவா அவள் வார்த்தைகள் அவனுக்கு கேட்கும் நிலையில் இல்லை. அவன் கிட்டத்தட்ட மயக்கத்திலே  இருந்தான். ஆனாலும்  “சாரும்மா ஐ லௌ யூடி உன்னை மட்டும் தான்டி நான் விரும்புறன் நீ எனக்கு வேணும்டி ” அவன் முணுமுணுத்த படி மயக்க நிலையில் கிடக்க அவனது வார்த்தைகளை கேட்டு திகைத்து போனாள் அவள். இப்படியான நிலையில் கூட என்னை  தான் நினைக்கிறியா  சிவா. அவள் மனசுக்குள் கேட்டு கொண்டு அவனை அழைக்கிறாள் சிவா எழும்புங்க சிவா பிளீஸ் எழும்புங்க.

 

என்ன செய்வது அத்தையை கூப்பிடவா? சீ அவா இப்பிடி அவர கண்டால் குழம்பிவிடுவா பிறகு நடந்தது எல்லாம் தெரியவரும். எதையும் நினைக்க முடியவில்லை அவளால். அம்லன்ஸ்க்கு அழைக்கிறாள் அவன் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறான். அவள் சிகிச்சை  அறை வாசலில் செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறாள். சிவா உங்க அம்மாவுக்கு என் அம்மாவுக்கு என்ன சொல்லுவன் நான்? அவைக்கு எப்பிடி சொல்லுவன் பிளீஸ் சிவா எழும்பி வாங்கோ. நான் தானே தப்பு பண்ணினன் என்னை தண்டிக்கிறதுக்காக நீங்க ஏன் இப்பிடி அனுபவிச்சீங்க? சிவா பிளீஸ் கண்ணை திறந்து பாருங்கோ சிவா. என் மேல உயிரை வைச்சிருக்கிற நீங்கள் என்னை விட்டு போகலாமா? சொல்லுங்க சிவா. சிவா பிளீஸ்… சிவா நீங்க வேணும் சிவா எனக்கு பிளீஸ் என்னை ஏமாத்தாதீங்க  எப்பவுமே நான் உன் சாரும்மாவா இருக்கணும் சிவா. என்னை ஏமாத்திடாதீங்க . பிளீஸ் வாங்க சிவா வந்து உங்க சாரும்மாவ கூட்டிகொண்டு போங்க. நீங்க  மட்டும் போதும்டா என் காதலும் வேணாம் ஒன்றும் வேணாம் பிளீஸ் சிவா வாங்க சிவா எழும்புங்க சிவா …. அவள் அழுவது அந்த மருத்துவமனை சுவரெங்கும் எதிரொலிக்கிறது.

அவனுக்கு சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியில் வருவதை பார்த்து, ஓடி செல்கிறாள் டொக்டர் என் ஹஸ்பெண்ட் எப்பிடி இருக்கார்? ஒன்றும் இல்ல அவருக்கு இப்ப ஒகே நீங்க பயப்பிட வேணாம்.  சாப்பாட்ட கவனிக்காம வேலை வேலை என்று ஓடுவாரோ? ஏன் சாப்பிடாம இருந்தார்? ஏனம்மா நீங்க அவரோட வைவ் தானே நீங்களாவது கவனிக்க கூடாதா? அல்லது  பணம் பணம் என்று நீங்களே கலைப்பீன்களா? அவர் அவளை கடிந்து கொள்கிறார். அப்பிடி  இல்ல  டாக்டர் அவர் வெளியூர் போயிருந்தார். அவள் பேசிய ஆங்கில வார்த்தைகள் அவரை சென்றடையும் முன்னே அவர் குறுக்கிட்டு, அதுக்காக சாப்பிடாம இருப்பாரா? சரி இனி இப்பிடி நடக்காம பாருங்கோ  பல நாட்கள் சாப்பாட்ட கவனிக்காம  விட்டதால உடல் சோர்வு வேறெதுவும் இல்ல இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா கோமா ஆக்கி இருக்கும் ஆள் பயங்கர வீக்காகிட்டார் இனி பயமில்ல சேலைன் போட்டிருக்கு கண் முழிச்சிட்டார் போய் பாருங்க… காலில் விழாத குறையாக நன்றி டொக்டர். என்றவள் கதவை திறந்து உள்ளே போக,…

 

வருவதை கண்டும்,  இவளை பார்க்காது மறுபக்கம் திரும்புகிறான் சிவா. சிவா  “பிளீஸ் என்னை மன்னிச்சுக்க அப்பிடி பேசினது தப்பு சிவா. சொறி சிவா பேசுங்க சிவா. அவள் கெஞ்சுகிறாள். ஆனால் அவன் மனசு இறுகி கிடந்தது. எதுக்கு என்னை காப்பாத்தினாய் செத்திருந்தா நீ சந்தோசமா அவனோட வாழலாமே…. சொல்லி முடிக்க முன் அவனது வாயை பொத்துகிறாள் அவள்… சொறி சிவா எனக்கு யாரும் வேணாம் நீங்க மட்டும் போதும் சொறி சிவா.  உங்கள் அன்பை புரிந்து கொள்ளாது உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என் அறிவீனம். இதுக்கு என்ன தண்டனையும் தாங்கோ ஆனால் சாகிற கதை கதைக்காதீங்க. இப்ப புரிந்து கொண்டன் உங்கட அன்பை உணர்ந்து கொண்டான் சிவா தயவு செய்து என்னை ஏற்று கொள்ளுங்கோ சிவா. பிளீஸ். அவள் வார்த்தைகளோடு கண்ணீரும் பெருக்கெடுக்க  சிவா கொஞ்சம் கலங்கித்தான்  போனான்.

 

அவள் கண்ணீர் அவனை இளக செய்தது. கரத்தை நீட்டி. “ஏய் லூசம்மா இங்க வா, ஏன் தூர நின்று பேசுறா? ” அவள் அதற்குள் சிறைபடுகிறாள். என் சாரும்மாடி நீ உனக்காக என் உயிர கூட குடுப்பனடி… வேணாம் சாகிற கதை வேணாம் சிவா  நீங்க எனக்கு எப்பவுமே வேணும் சிவா. அவள் கெஞ்ச அவன் அவளை அணைத்து கொள்கிறான். பைத்தியம் உன்னை விட்டு ஏன்  நான் சாக போறான்? என் செல்ல குடிகாறியடி நீ. சீ போங்க அப்பிடி சொல்ல வேணாம் அந்த கருமம் என்ன என்றே தெரியாது. இனி இப்பிடி சொல்ல வேணாம்.   என் மாமா மேல சத்தியமா அந்த கருமத்தை இனி தொடவே மாட்டன். அவன் அணைப்புக்குள் கிடந்து முனுமுனுக்கிறாள். நான் இனி சிவாவின் சாரும்மா மட்டும் தான். இனி சிவாக்கு மட்டுமே முழுமையாக சொந்தமானவள். என் கனவு என் வாழ்க்கை என் நினைவு எல்லாமே சிவா மட்டுமே… அவள் ஏதோவெல்லாம் கூறி கொண்டு போக…

 

அவளது கையில் இருந்து தொலைபேசி சிணுங்குகிறது. எடுத்து பார்த்தவள், ” தயவு செய்து இனி எனக்கு கோல் பண்ணாத எனக்கு கல்யாணமாச்சு இனி என் புருசன் கூட சந்தோசமா வாழ வேணும் என்னை மறந்திடு நான் உன்னை மறந்திட்டன் இனி உனக்கும் எனக்கும் ஒன்றுமே இல்ல. தயவு செய்து என்னை வாழ விடு. கல்யாணமான நிமிசத்தில் இருந்து நீ அடிச்சா எடுக்காம விட்டது ஏன் என்று புரியவில்லையா? என் சிவா எனக்கு போதும் இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல உனக்கு சொல்லுறது இனியும் புரியல்ல என்றால் நான் என்ன செய்வது.  இனி எடுக்காத. உன்னோட பேச எனக்கு எதுவும் இல்ல. அவள் மூச்சு விடாமல் கூறிய ஆங்கில வார்த்தைகள் அந்த சுவரெங்கும் எதிரொலித்து கொண்டிருக்க. சிவா அவள் கண்களில் தோன்றிய உண்மைத்தன்மையை பார்த்து கொண்டே இருந்தான். பேசி  முடித்து போனில் அவன் நம்பரை புளக் லிஸ்ட்ல போட்டு விட்டு நிமிர….

 

சாரும்மா நீ பேசினதெல்லாம் நியமா…? ஆமாடா என் கறுப்பா… அவள் அவனின் கர சிறைக்குள் கிடந்து அவனின் நெஞ்சு முடியை கோதுகிறாள். சொறி சிவா… இனி அப்பிடி எல்லாம் பண்ணாதீங்க நான் தப்பு பண்ணினா என்னை திட்டுங்க அதுக்காக என்னை விட்டிட்டு போக வேணாம். இது உங்க சாரும்மா உயிர் மேல சத்தியம். மீறினா உங்க சாரும்மா செத்திடுவன். சிவா உங்க சாரு எந்த தப்பும் பண்ண மாட்டன். என் சிவா எனக்கு வேணும் சிவா அவன் இதழோடு அவள் இதழ்கள் பொருந்துகின்றன கரங்கள் அவளை அனைத்து கொள்கிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.