Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் வடக்கு நோக்கிய நல்லிணக்க பயணம் ஆரம்பம்!

Featured Replies

தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் வடக்கு நோக்கிய நல்லிணக்க பயணம் ஆரம்பம்!



யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் நிலவரங்களைப் பார்வையிடவும் வடக்கு ஊடகவியலாளர்களுடன் நல்லுறவைப் பேணவும் தெற்கிலிருந்து ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்துச் செல்லும் பயணம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.

இதேவேளை வடபகுதிக்கு ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் செல்லும் தெற்கு ஊடகவியலாளர்கள் யுத்தத்தினால் உயிரிழந்த மூன்று ஊடகவியலாளர்களின் குடும்பங்களிற்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வினையும் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.

பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பயணத்தில் போரில் பாதிக்கப்பட்ட ஊடகவயலாளர்களுக்கான வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களின் நிலவரங்களையும் ஊடவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவும் என்று தெரிவித்த அமைச்சர் வடக்கின் நலன்புரிகள் குறித்து தெற்கு ஊடகவியலாளர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இது என்றும் கூறினார்.

மார்ச் மாதம் 26ஆம் திகதி புகையிரதம் மூலம் வடக்கிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குருநாகல், அனுராதபுரதம் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஊடகவியலாளர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் 26 முதல் 28 வரை வடக்கில்  விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களின் குடும்பங்களையும் இதன்போது சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரின் பின்னரும் புலனாய்வுத் துறையினரின் பின்தொடரல்கள், அச்சுறுத்தல்களை வடக்கு ஊடகவிலாயளர்கள் எதிர்நோக்கியிருப்பதாகவும் இந்தப் பயணத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130426/language/ta-IN/article.aspx

நல்ல விடயம், வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
பயணம்...
 
26-03-2016 03:37 PM
Comments - 0       Views - 10

article_1458987253-bbbbbbbbbbbbb.jpg

-அஷ்ரப் எ சமத்

ஊடக அமைச்சினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட தெற்கு 200 ஊடகவியலாளர்கள் வடக்கு நோக்கி பயணித்தனர்.

இன்று காலை 6.30 மணிக்கு யாழ்.  தேவி புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

article_1458987274-ccccccccccc.jpg

article_1458987293-dddddddddd.jpg

article_1458987311-eeeeeeeeeeeee.jpg

- See more at: http://www.tamilmirror.lk/168854/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE-#sthash.3qUwofB2.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
மூன்று நாள் நல்லிணக்க பயணமாக ஊடகத்துறை அமைச்சர் கயன்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்தேவி ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்றனர். இந்தக்குழுவினர் வடக்கின் 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளஉள்ளனர்.

மூன்று நாள் நல்லிணக்க பயணமாக ஊடகத்துறை அமைச்சர் கயன்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்தேவி ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்றனர். இந்தக்குழுவினர் வடக்கின் 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளஉள்ளனர்.

   

மதத்தலைவர்களைச் சந்தித்தல், முதலமைச்சரைச் சந்தித்தல், ஆளுநரைச் சந்தித்தல், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைத்தல், காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவிளலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு, பலாலியில் படை அதிகாரிகளுடனான சந்திப்பு, ஊடகச் செயலமர்வு, சான்றிதழ் வழங்குதல், கலாச்சார நிகழ்வுகள், கடன் அடிப்படையிலான மோட்டார் வாகனம் வழங்கல், பாதிக்கப்பட்ட ஊடக குடும்பங்கள் மூன்றிற்கு வீடு அமைக்கும் அடிக்கல் நாட்டல் வைபவம், நாகவிகாரை, நயினை நாகபூசனி அம்மன் ஆலய வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வானது வடக்கு ஊடகவியலாளர்களும் தெற்கின் ஊடகவியலாளர்களும் சங்கமிக்கும் நல்லிணக்கச் சந்திப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

south-media-jaffna-260316-seithy%20(2).j

 

http://www.seithy.com/breifNews.php?newsID=154211&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.