Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தயாராகும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda_therar_001.jpg

நாட்டுக்கும் மக்களுக்கு அழிவை கொண்டு வரும் சகல சந்தர்ப்பங்களிலும் பௌத்த மத தலைவர்கள் முன்னுக்கு வந்து அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாக அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக பேசுவதை இந்த காலத்தில் இனவாதம் என வர்ணிக்கின்றனர் எனவும் இவ்வாறு நாட்டுக்காக பேசிய 48 பிக்குமாரை அரசாங்கம் கைது செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற துறவிகளின் குரல் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திகளை தற்போதைய அரசாங்கம் அழித்து வருகிறது. ஜா-எல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நடை பயிற்சி செய்யும் பாதையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் இரவு நேரங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அரசாங்கம் ஆடிய ஆட்டமும் இல்லை. மேளமும் உடையவில்லை.

பிக்குமாருக்கு எதிரான அடக்குமுறை மற்றும் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 6 ஆம் திகதி கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் புத்தர் சிலைக்கு அருகில் எதிர்ப்பு கூட்டம் நடத்தப்படும்.

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க தயார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தை மண்டியிட வைத்த பௌத்த மத தலைவர்களுக்கு, இந்த அரசாங்கத்தை மண்டியிட வைப்பது பெரிய காரியமல்ல எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிகத் தீவிரமான ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmuyDRcSXlo7D.html

  • கருத்துக்கள உறவுகள்

 ஐயா! நீங்கள் அப்பிடி நினைத்தா....? வீட்டுக்கு அனுப்பி விடுவீங்களா? எதிர்க்கட்சித் தலைவர் சும்மா வாய் பாத்துக்கொண்டிருப்பார் என்று மட்டும் கனவு காணாதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழரசு said:

mahinda_therar_001.jpg

 

ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தை மண்டியிட வைத்த பௌத்த மத தலைவர்களுக்கு, இந்த அரசாங்கத்தை மண்டியிட வைப்பது பெரிய காரியமல்ல எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிகத் தீவிரமான ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmuyDRcSXlo7D.html

தேரர் எதை சொல்கின்றார் ....ஓஓஒ....இந்தியாவின்1987 ஆண்டு ஒப்பந்தம் கைசாத்திடும் பொழுது கொழும்பு மாநகரில் செய்த அட்டகாசத்தை சொல்லுகிறார் போலும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.