Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் முளைவிடும் இனக்கலவர வித்து..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vavuniya_0030.jpg
வவுனியா சிங்களப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உலர் உணவுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க பொதுபல சேனா அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகள் கடும் பாரபட்சம் காட்டுவதாக பொதுபல சேனா அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.

குறித்த, பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு குறைந்த பட்சம் சுகாதார வசதிகள் கூட தமிழ் அதிகாரிகளால் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில், வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு பொதுபல சேனா முன்னின்று சேகரித்த உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இன்று விநியோகம் செய்ய உள்ளனர்.

அதற்கான ஏற்பாடுகளை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கொண்டுள்ளார்.

இதுவரை காலமும் முஸ்லிம் மக்களுடன் வம்புக்கு நின்ற பொது பல சேனா அமைப்பு அண்மைக்காலமாக தமிழ் மக்களை நோக்கித் திரும்பியுள்ளது.

இதன் ஒரு கட்டமாகவே வவுனியாவில் வாழும் சிங்கள- தமிழ் மக்களிடையே பிரிவினை மற்றும் இனக்கலவரத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் பொது பல சேனா அமைப்பு இறங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரம் பறிபோவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்ற ரீதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது அண்மைக்காலம் வரை கடும் விரோதப் போக்குடன் நடந்து கொண்டிருந்தார்.

அக்காலப் பகுதியில் பொது பல சேனாவும் தமிழ், முஸ்லிம்கள் தொடர்பில் தீவிர இனவாதத்தை தொடர்ச்சியாக கக்கிக் கொண்டிருந்தது.

எனினும் அண்மைக்காலமாக ராஜபக்ஷ தரப்பு முஸ்லிம்களுடன் வலிந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் நிலையில், பொதுபல சேனாவும் முஸ்லிம் விரோதப் போக்கை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

அதற்குப் பதிலாக ராஜபக்ஷவினரை அடியொட்டி தமிழர் விரோதப் போக்கை கூர் தீட்டும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vavuniya_0010.jpg

vavuniya_0020.jpg

vavuniya_0030.jpg

vavuniya_0040.jpg

vavuniya_0050.jpg

இதில் இனக்கலவரத்தைத் தூண்டும் தகவலைக் காணவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழரசு said:
vavuniya_0030.jpg
வவுனியா சிங்களப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உலர் உணவுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க பொதுபல சேனா அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகள் கடும் பாரபட்சம் காட்டுவதாக பொதுபல சேனா அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.

குறித்த, பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு குறைந்த பட்சம் சுகாதார வசதிகள் கூட தமிழ் அதிகாரிகளால் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில், வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு பொதுபல சேனா முன்னின்று சேகரித்த உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இன்று விநியோகம் செய்ய உள்ளனர்.

அதற்கான ஏற்பாடுகளை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கொண்டுள்ளார்.

7 hours ago, Iraivan said:

இதில் இனக்கலவரத்தைத் தூண்டும் தகவலைக் காணவில்லையே.

தெற்கிலே, வடக்கிலே உள்ள தமது உறவுகளுக்கு என்று உலர் உணவை ஒரு போரோ கலவரமோ அற்ற சூழலில் சேகரிப்பதனூடாகத் தெற்கிலே உள்ள சிங்களவருக்கு என்ன செய்தி சொல்லப்படுகிறது என்பது ஒரு முக்கியமான வினாவாகும். இதுகூட ஒருவகை இனவாத உருவேற்றல் செயற்பாடாகும். 

சிங்களமும் அதன் ஆக்கிரமிப்புச் சக்திகளும் ஒன்றில் போரினூடாக ஆக்கிரமித்தல். குடியேற்றத்தினூக ஆக்கிரமித்தல். அச்சுறுத்தி ஆக்கிரமித்தல்……. வெளியேற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான முன்னோட்டமாகவே நோக்கவேண்டும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Iraivan said:

இதில் இனக்கலவரத்தைத் தூண்டும் தகவலைக் காணவில்லையே.

சீ,,,சீ இதில் இனகலவரம் என்ற சொல்லுக்கே இடமில்லை.... . வேனுமென்றால் இனவழிப்பு என்று சொல்லலாம் அதுவும் தாயக மக்கள் விரும்பினால் மட்டுமே....tw_tounge_wink:

47 minutes ago, nochchi said:

தெற்கிலே, வடக்கிலே உள்ள தமது உறவுகளுக்கு என்று உலர் உணவை ஒரு போரோ கலவரமோ அற்ற சூழலில் சேகரிப்பதனூடாகத் தெற்கிலே உள்ள சிங்களவருக்கு என்ன செய்தி சொல்லப்படுகிறது என்பது ஒரு முக்கியமான வினாவாகும். இதுகூட ஒருவகை இனவாத உருவேற்றல் செயற்பாடாகும். 

சிங்களமும் அதன் ஆக்கிரமிப்புச் சக்திகளும் ஒன்றில் போரினூடாக ஆக்கிரமித்தல். குடியேற்றத்தினூக ஆக்கிரமித்தல். அச்சுறுத்தி ஆக்கிரமித்தல்……. வெளியேற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான முன்னோட்டமாகவே நோக்கவேண்டும்.

10 minutes ago, putthan said:

சீ,,,சீ இதில் இனகலவரம் என்ற சொல்லுக்கே இடமில்லை.... . வேனுமென்றால் இனவழிப்பு என்று சொல்லலாம் அதுவும் தாயக மக்கள் விரும்பினால் மட்டுமே....tw_tounge_wink:

உலர் உணவுப் பொருள்களை சேகரித்து வழங்கும் நடவடிக்கை மட்டுமேதான் பொதுபலசேனவின் தகவல். செய்தியின் தகவல் மட்டுமே இனக்கலவரத் தூண்டலாகக் காட்டுகிறது. எங்களது செயற்பாடுகளால் கவனிக்கப்படாமல் போன தமிழரை பொதுபலசேன ஆதரித்து உலர் உணவு வழங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Iraivan said:

உலர் உணவுப் பொருள்களை சேகரித்து வழங்கும் நடவடிக்கை மட்டுமேதான் பொதுபலசேனவின் தகவல். செய்தியின் தகவல் மட்டுமே இனக்கலவரத் தூண்டலாகக் காட்டுகிறது. எங்களது செயற்பாடுகளால் கவனிக்கப்படாமல் போன தமிழரை பொதுபலசேன ஆதரித்து உலர் உணவு வழங்குகிறது.

சிங்கள மக்களுக்குதான் உலர் உணவு வழங்க‌ப்படுகின்றது ....தமிழர்களுக்கு அல்ல இறைவன்,,,,,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.