Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

கிளிநொச்சியில் 2015 இல் குற்றச்செயல்களுக்கான தண்டப்பணம் 1 கோடியே 87 இலட்சம்:


Recommended Posts

பதியப்பட்டது
கிளிநொச்சியில் 2015 இல் குற்றச்செயல்களுக்கான தண்டப்பணம் 1 கோடியே 87 இலட்சம்:

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பொலீஸ் நிலைய பிரிவுக்குட்ப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இடம்பெற்ற  பல்வேறு குற்றச் செயல்களில் நீதி மன்றில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் ஒரு கோடியே 87 இலட்சத்து 2000 ரூபா என கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்எல்ஜேடி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்.


கடந்த ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பிரஜைகள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அங்கு  அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த 2015 ஆம் ஆண்டு  கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தினால்   வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 624 மொத்த வழக்குகளில் 382 வழக்குகள் நீதி மன்றினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணமே மேற்படி தொகை எனவும், இன்னும் 242 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் இந்த வழக்குகளும் தீர்க்கப்பட்டிருப்பின் தண்டப்பணம் மேலும் அதிகரிதிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.


அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு கசிப்பு உற்பத்திகான கோடா  வைத்திருந்த குற்றசாட்டில் 34 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 11 வழக்குகள் குற்றவாளிகாக தீர்ப்பளிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் 11 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 23.


மற்றும் 257 கசிப்பு உற்பத்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 94 வழக்குகள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் 54 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 163.


88 கஞ்சா வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு 56 வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 32. பிடிப்பட்ட கஞ்சாவின் நிறை 7 கிலோ, 978 கிராம்.


198 சட்டவிரோத மணல்  வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது இதில் 120 உழவு இயந்திரமும்,78 டிப்பர் வாகனமும். இதில் 187 வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் 31 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா நிலுவையில் உள்ள வழக்குகள் 11.


47 சட்டவிரோத சாரயம் விற்பனை  இதில் 34 குற்றம் நிரூபிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் 15 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 13.


60 சட்டவிரோத மரம் கடத்தல்  இதில் 35 வழக்குகள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் 13 இலட்சத்து 96 ஆயிரத்து 350 ரூபா. நிலுவையிள் உள்ள வழக்குகள் 25 ஆகும்.


உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்டு இது வரைக்கும் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள் மூலம் விதிக்கப்பட்;ட தண்டப்பணமே  ஒரு கோடியே 87 இலட்சத்து 2000 ரூபா ஆகும்.


கிளிநொச்சி மாவட்டத்தில்  ஆறு பொலீஸ் நிலைய பிரிவுகள் காணப்படுகிறது அதில் ஒன்று கிளிநொச்சி பொலீஸ் நிலையம்  இந்த பொலீஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட  வழக்குகளின் மூலமே மேற்படி  தொகை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131071/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.