Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல் தெல்லிப்பழையில் இயற்கை விவசாயம்!

Featured Replies

இரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல் தெல்லிப்பழையில் இயற்கை விவசாயம்!

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மானிடம் இயற்றை விவசாயப் பண்ணையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டதுடன் இதுபோன்ற இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இராசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளின் தாக்கத்தினால் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கு இரசாயனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்தும் அவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ப.நந்தகுமார் எடுத்த நடவடிக்கையின் பயனாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் உள்ள காணியில் இயற்கை விவசாயப் பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மானிடம் அறக்கட்டளையும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள தாய்மார் கழகமும் இணைந்து இதனை அமைத்துள்ளன. இங்கு மரக்கறிப் பயிர்கள், சோளன், மரவள்ளி, கீரை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் தினமும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. இந்தப் பண்ணைக்கு அறக்கொடையாளர் இ.செல்வநாயகம் குறிப்பிட்டளவான காணியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கடந்த புதன்கிழமை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைத் திறப்புவிழாவுக்கு சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டோர் இதனைச் சென்று பார்வையிட்டனர். அன்றைய தினம் குறித்த நிகழ்வுக்குச் சென்றவர்கள் இங்கு மரக்கறிகளைக் கொள்வனவு செய்து சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை, இந்தப் பண்ணையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதை முன்னுதாரணமாகக்கொண்டு விவசாயிகள் இரசாயன உரம் பயன்படுத்தாமல் விவசாயச் செய்கையில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

7955e6r.jpg

7955e8r.jpg

7955e9r.jpg

7955e7r.jpg

 

7955e5r.jpg

 

 

http://malarum.com/article/tam/2016/04/09/14262/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.hprEMIwv.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவர்கள் கடின உழைப்பிற்கு தயங்காதவர்கள். நூறுவீதம் இயற்கையான விவசாயத்தை செய்ய முடியும். இப்படியான விவசாயிகளுக்கு ஆதரவளிக்க காத்திருக்கின்றேன். ஆதரவளித்தும் இருக்கின்றேன். எந்தவொரு மனிதனும் இப்படியான விவசாய முறைகளுக்கு ஆதரவு கொடுத்தால் போற்றப்படக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைசார் விவசாயம் என்பதே சரியான பதம்.

படங்களைப் பார்க்கும்போது இன்னமும் இவர்கள் செய்யவேண்டியவேலை நிறையவே உள்ளதாக எனக்குத்தோன்றுகிறது. நீர்ப்பாசன முறையில் மாற்றம், உயிர்வேலி அமைத்தல், மூடாக்கு இவைபோன்றவற்றை இவர்கள் செய்யவில்லைப்போலும்.

ஆனால் இது ஒரு ஆரம்பமே பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில்  இயற்கைசார் விவசாயத்தில் விளைந்த கறிவேப்பிலை ஒரு கிலோ லூசா 35பவுன் கட்டா 20பவுன் கெமிக்கல் கறிவேப்பிலை முழுக்க தடை .

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வீரியமான உரவகைகளால் மாசடைந்த மண்வளத்தை இப்படியான இயற்கைசார் விவசாயத்தினால்தான் மாற்ற முடியும், அத்துடன் நீர் வளமும் சிறப்பாக மாறும்...!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எமது மண்ணின் வளத்தினை அதிகரிக்கச்செய்ய நம்மாள்வாரைப் படிப்பதே மேலானது தவிர அவரது அறிவிசார் கருத்துக்களை உள்வாங்கி தற்போது தமிழ்நாட்டில் பரவலாக இயற்கைசார் விவசாயம் செய்து பலர் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். விகடன் வெளியீட்டு நிறுவனம் பசுமை விகடன் எனும் பெயரில் இயர்கைசார் விவசாயத்தை முன்னிறித்து மாதம் ஒரு இதழினை வெளியிடுகின்றது நான் விவசாயம் செய்கிறேணோ இல்லையோ பசுமை விகடனை வாசிக்கத் தவறுவதில்லை.

பசுமை விகடன் தமிழ்நாட்டில் இயற்கைசார் விவசாயத்தில் வெற்றிபெற்றவர்களை ஒன்றுதிரட்டி ஊர்தோறும் கருத்தரங்கங்கள் நடாத்துகின்றது. அவர்களுடன் தொடர்புகொண்டால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இயற்கைசார் விவசாயம் தொடர்பான கருத்தரங்கங்கள் மற்றும் செயற்திட்டங்களை முன்னெடுத்து எமது மக்களை இயற்கைசார் விவசாயத்தின்பால் நாட்டமுறச்செய்யலாம்.

விவசாம் பொய்பது அல்லது நட்டமடைவது என்பது தவறான வழியில் விவசாயத்தைச் செய்வதே. இதில் பெரும் பணச்செலவு என்பது மூட்டுவழிச்செலவு எனும் இடுபொருள்களுக்கானது அதாவது இராசாயன உரங்கள் பூச்சிகொல்லிகள் ஆகியனவாகும் விவசாயத்துக்குத் தேவைப்படுவது பூச்சிகொல்லிகள் அல்ல பூச்சிவிரட்டிகளே.

மேலும் அறியவேண்டுமெனில் மசானபுஃபுகோகா எனும் ஜப்பானிய விவசாயி அவர்களது ஒற்றைவைக்கோல் புரட்சி எனும் நூலினைப் படிக்கலாம்.

கூடியவிரைவில் நான் ஊர் திரும்புவேன் அப்போது இனியெல்லாம் இயற்கையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.