Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அதிகரிக்கும் குற்றங்களும் அடுக்கடுக்காக எழும் ஐயங்களும்

Featured Replies

வடக்கில் அதி­க­ரிக்கும் குற்­றங்­களும் அடுக்­க­டுக்­காக எழும் ஐயங்­களும்

 

 
 

ஆறு­ த­சாப்த உரிமை போராட்­டத்தால் அமை­தி­யான வாழ்­வொன்றை வாழ­ முடி­யாத நிலையில் வட­மா­காண மக்கள் உள்ளனர். ஆயுதப் போராட்டம் 2009 மே 18இல் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்­னரும் கூட நிம்­ம­தி­யாக வாழ­மு­டி­யாத நிலை­மையே தற்­போதும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

Jaffna.jpg

யுத்தம் நிறை­வ­டைந்­த­தாக அர­சாங்கம் அறி­வித்து தற்­போது ஏழாண்­டுகள் கடந்­துள்ள போதும் தற்­போதும் வடக்கு மக்கள் உள­ரீ­தி­யான அச்­சத்­துடன் அன்­றா­டப்­பொ­ழுதை நகர்த்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை­யி­லி­ருந்து வெளியே வர­மு­டி­யா­த­வர்­க­ளா­க­வுள்­ளனர்.

யுத்தம் நிறை­வ­டைந்த பின்­னரும் கூட இடம்­பெற்ற இரா­ணுவ ரோந்­துகள், விசா­ர­ணைக்­கான அழைப்­புக்கள், விசேட தேடு­தல்கள், புலனாய்­வா­ளர்­களின் செயற்­பா­டுகள் போன்­ற­வற்றால் பொது­மக்கள் அச்­ச­மான சூழலில் இருந்­தனர். தற்­போது அவை கணி­ச­மாக குறைந்­தி­ருந்­தாலும் முழு­மை­யாக இல்­லை­யெனக் கூற­மு­டி­யாது.

அதே­நேரம் யுத்­த­கா­லத்­தி­லி­ருந்த நிலை­மை­க­ளி­லி­ருந்து திடீ­ரென ஏற்­பட்ட மாற்­றத்தால் வடக்கு இளை­ஞர்கள் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான வீதி மோதல்­களும், ஏதோ­வொரு கார­ணத்­திற்­காக பழி­வாங்கும் செயற்­பா­டு­களும் அவ்­வப்­போது அரங்­கேறு­வ­தற்கு ஆரம்­பித்­தன.

அத­னைத்­தொ­டர்ந்த காலப்­ப­கு­தி­களில் கிறிஸ் பூதம் என்ற விவ­காரம் பூதாகர­மா­கி­யது. அது­கூட தேர்­த­லை­யொட்­டிய காலப்­ப­கு­தி­களில் எழுந்­தி­ருந்­த­மையை ஆழ்ந்து பார்க்­கையில் அவ­தா­னிக்க முடிந்­தது.

அதன்­பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வடக்கில் இளம் சமு­தா­யத்­தி­னரின் போதைப்­பொருள் பாவனை, பாட­சாலை மாணவி முதல் வயோ­திப பெண்கள் வரையில் பாலியல் துஷ்­பி­ர­யோகம் போன்ற சம்­ப­வங்கள் அதி­க­ரித்­தன. இதனால் தமிழ் சமூ­கத்தின் சாதா­ரண வாழ்க்கையை நகர்த்­து­வதில் பலத்த நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன.

பாட­சா­லைக்கும், தனியார் வகுப்­பு­க­ளுக்கும் மாண­விகள் செல்­கின்­றமை, பெண்கள் வேலைத்­த­ளங்கள் உட்­பட தமது தேவை­க­ளுக்­காக வெளியில் நட­மா­டு­கின்­றமை போன்­றவை உட்­பட பெரும் அச்­ச­மான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. அதே­நேரம் சிறு­வர்கள் மீதான பாலியல் ரீதி­யான செயற்­பா­டு­களும் வெகு­வாக அதி­க­ரி­த்­தி­ருந்­தன.

இவ்­வா­றான நிலை­மை­கள் உடன் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்ற கருத்­துக்கள் அர­சியல்இ சமூகஇ சமய மட்­டங்­க­ளி­லி­ருந்து வலுத்­த­போது யாழ்.மாவட்ட நீதி­ப­தி­யாக எம்.இளைஞ்­செ­ழியன் நிய­மிக்­கப்­பட்­ட­தோடு வடக்­கிற்­கான பொலிஸ் மற்றும் இரா­ணுவ உயர்­மட்டப் பத­வி­க­ளிலும் மாற்­றங்கள் நிகழ்ந்­தன.

இத­னை­ய­டுத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களால் அக்­குற்­றங்கள் ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டன எனக் கூறக்­கூ­டி­ய­ள­விற்கு நிலை­மைகள் மாறி­யி­ருந்­தன. எனினும் அண்­மைக்­கா­ல­மாக யாழ்.மாவட்­டத்தில் அரங்­கே­றி­வரும் சம்­ப­வங்­களால் பொது­மக்கள் அச்­ச­ம­டைந்து பதற்­றத்­துடன் வாழு­மொரு நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

ஆம்இ ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தற்­போது வரையில் கொள்ளைஇ வாள்­வெட்­டென தலா ஆறு சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யுள்­ள­தோடு பொது மக்­களை அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்கும் சம்­ப­வ­மொன்றும் பதி­வா­கி­யுள்­ளது.

குறிப்­பாக அச்­சு­வேலி, கோப்பாய், நீர்­வேலி, சங்­கானை, வட்­டுக்­கோட்டை பகு­தி­களில் தொடர்ச்­சி­யாக வீடு­களும் வியா­பா­ர­ நி­லை­யங்­களும் உடைத்து கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. குடா­நாட்டின் பல பகு­தி­க­ளிலும் வழிப்­ப­றி­களும் அவ்வப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. அதே­போன்று உடுவில், யாழ்ப்­பாணம், கோப்பாய் போன்ற பகு­தி­களில் வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. பட்­டப்­ப­கலில் பகி­ரங்­க­மாக இந்த வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

இதனை விடவும் வெள்ளிக்­கி­ழமை யாழ். நக­ரி­லுள்ள நான்கு வீடு­க­ளுக்கு தொட­ராகச் சென்ற கொள்ளைக் கும்பல் வீடு­க­ளுக்கு வெளியே இருந்த வாக­னங்கள் மற்றும் பொருட்­க­ளுக்கு சேதம் விளை­வித்­துள்­ளன.

யாழ்ப்­பாணம் மாம்­பழச் சந்­திக்கு அரு­கி­லுள்ள விடு­தி­யொன்றில் காலி மாவட்­டத்தைச் சேர்ந்த சுற்­றுலாப் பய­ணிகள் தங்கி­யி­ருந்­துள்­ளனர். அங்கு மூன்று மோட்டார் சைக்­கிளில் முகத்தை கறுப்பு துணி­களால் மூடி­ய­வண்ணம் வந்த ஆறுபேர் கொண்ட குழு­வினர் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணி­களின் பேருந்தை இரும்புக் கம்­பிகள் மற்றும் வாள்கள் கொண்டு அடித்து நொறுக்­கி­யுள்­ளனர்.

மற்­றொரு வீட்­டுக்குச் சென்ற இக்­கு­ழு­வினர் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்­சக்­க­ர­வண்­டி­களை சேதப்­படுத்தி வீட்டின் கதவின் மீதும் கண்­ணா­டிகள் மீதும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். அதேபோல் ஏனைய இரு வீடு­க­ளிலும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெற்­றி­ருக்­கின்ற போதும் தற்­போது வரையில் அத­னுடன் தொடர்­பு­பட்ட எந்­த­வொரு நபர் கூட கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்­நி­லையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், வட­மா­கா­ணத்தில் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்து செல்­கின்­றன. இந்­நி­லையில் அதி­க­ரிக்கும் இந்த குற்­றச்­செ­யல்­களின் பின்­ன­ணியில் யார்­ இ­ருக்­கின்­றனர் என்­பதை உட­ன­டி­யாக கண்­ட­றிந்து அவற்றை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே­நேரம் மாவட்ட நீதி­பதி இளஞ்­செ­ழி­யனும் தனது கடு­மை­யான எச்­ச­ரிக்­கையை வெளியிட்­டுள்­ள­தோடு அடுத்து எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். குறிப்­பாக கூறு­வ­தாயின், வீதிச்­சண்­டித்­த­னத்தில் ஈடு­ப­டுவோர், 6 மணிக்கு பின்னர் வீதி­களில் கூடும் இளை­ஞர்கள் சிறை­செல்­வ­தற்கு நேரிடும். போதை­வஸ்து வழக்­கு­களில் யாழ்.மன்றில் ஒரு­வ­ரு­ட­மாக பிணை வழங்­கப்­ப­ட­வில்லை. பாரிய குற்­றங்­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்­கப்­ப­டு­கின்­றது என்­பதை குறிப்­பிட்­டுள்ளார்.

பாசையூர் சென். அந்­தனிஸ் விளை­யாட்­ட­ரங்கு, புதிய செம்­மணி வீதி, கல்­வி­யங்­காட்டுச் சந்தி, கோப்பாய் சந்தி, கொக்­குவில் சந்தி, சுன்­னாகம் சந்தி, யாழ்.இந்­துக்­கல்­லூரி வளாகம், ஆகி­ய­வற்றில் சட்ட­வி­ரோத ஒன்றுகூடல்­களும், ரவு­டிகள் நட­மாட்­டமும் காணப்­ப­டு­வ­தாக தக­வல்கள் கசிந்துள்­ளதால் விசேட கண்­கா­ணிப்­புக்­களை மேற்­கொண்டு நட­வடிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

அதே­போன்று ரவு­டித்­தனம், சமூக சீர்­கேடு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்­க­ளுக்கு ஈவி­ரக்கம் காட்­டப்­ப­ட­மாட்­டாது என்­ப­தோடு தனி­ம­னி­தனை விடவும் சமூக நலனே நீதி­மன்­றத்­திற்கு முக்­கி­ய­மெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

யாழ்.குடா­நாட்டுப் பகு­தியில் இவ்­வா­றான இறுக்­க­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு நீதி­பதி பொலி­ஸாரைப் பணித்­துள்­ள­போதும்இ இடம்­பெறும் சம்ப­வங்கள் குறித்து மக்கள் பிர­தி­நி­திகள் பொலி­ஸாரின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்­ற­போதும் அவ்­வா­றான சம்­ப­வங்கள் திடீ­ரென அதி­க­ரித்­தி­ருக்­கின்­ற­மைக்­கான பின்­னணி தொடர்பில் சில வினாக்கள் மேலெ­ழு­வதை தவிர்க்­க­மு­டி­யா­துள்­ளது.

முத­லா­வ­தாக வட­மா­க­ாணத்தைப் பொறுத்­த­வ­ரையில் மூன்று பொது­ம­க­னுக்கு ஒரு இரா­ணு­வத்­தினர் நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். பொலிஸார் சிவில் சேவைக்­காக அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். அவற்­றுக்கு மேல­தி­க­மாக, குற்­ற­வியல், பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் நட­மா­டு­கின்­றனர். விசேட ரோந்து நட­வ­டிக்­கைகள் நடை­பெறு­கின்­றன. இவற்­றுக்­கெல்லாம் அப்பால் யாழ்.நக­ரத்­திற்கு வெளியில் இடம்­பெற்ற விட­யங்­களை விடுத்து பார்க்­கையில் யாழ். நக­ரத்­தினுள் எவ்­வாறு துணி­க­ர­மான கொள்ளை மற்றும் அச்­சு­றுத்தும் செயற்­பாடுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இரண்­டா­வ­தாக வீடு­களில் கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. சில இடங்­களில் அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றது. கொள்­ளை­யிட்ட வீடு­களில் தம்­மைப்­பற்றி சாட்­சி­ய­ம­ளித்தால் விளை­வுகள் வேறு­வி­த­மாக அமையும் எனவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ரு­க்கின்­றது. அதன் பிர­காரம் பார்க்­கையில் இங்கு தனியே கொள்­ளை­யி­டு­வது மட்டும் நோக்­க­மல்ல. அத­னையும் தாண்டி மக்­களை உள ரீதி­யாக அச்­சு­றுத்தி வைத்­தி­ருக்க வேண்­டு­மென்ற பின்­ன­ணியில் காணப்­ப­டு­கின்­றமை புல­னா­கின்­றது.

மூன்­றா­வ­தாக வெளிமா­வட்­டத்­தி­லி­ருந்து வந்த மக்­க­ளி­டத்தில் கொள்­ளையோ பறி­மு­தல்­களோ செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக அவர்­க­ளையும் அச்­சு­றுத்­திய நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் பெரும்­பான்மை இனத்­த­வர்கள், வெளிமா­வட்­டத்­த­வர்கள் யாழ்.மண்ணில் காலடி பதிப்­ப­தற்கு உகந்த சூழல் அல்ல என்­பதை காட்­டு­வ­தற்கு விழை­கின்­றார்­களா அல்­லது முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முனை­கின்­றார்­களா என்ற வினா எழு­கின்­றது.

நான்­கா­வ­தாக ஏனைய பிராந்­தி­யங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­ட­வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்ள பொலிஸார் வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து அந்நியப்­பட்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். இதனால் இவ்­வா­றான சம்­ப­வங்­களை முழு­மை­யாக தடுக்க முடி­ய­வில்­லையா என்ற சந்­தே­கமும் ஏற்­ப­டு­கின்­றது.

ஐந்­தா­வ­தாக ஏனைய பிர­தே­சங்­களை விடவும் தமிழ் மக்கள் அதி­க­மாக வாழும் பகு­தி­யான வடக்கில் இவ்­வா­றான சம்பவங்கள் அரங்­கேற்­றப்­ப­டு­வ­தனால் ஏற்­க­னவே முன்­வைக்­க­ப்பட்­டுள்ள இரா­ணு­வப்­பி­ர­சன்­னத்தை குறைக்கும் கோரிக்­கைக்கு பதி­லொன்றை வழங்க முடி­யு­மென்ற அடிப்­ப­டையில் திரை­ம­றைவு நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னவா என்ற சந்­தே­கமும் எழுகின்­றது.

ஆறா­­வ­தாக உள­ரீ­தி­யாக பல துன்­பங்­களை அனு­ப­வித்த தற்­போது அனு­ப­வித்­தாலும் அதனை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்த முடி­யா­தி­ருக்கும் மக்­களை மேலும் அச்­சத்தின் பால் நெருக்­க­டிக்­குள்­ளாக்­கு­வதால் அபி­லா­ஷைகள் தொடர்­பான கோரிக்­கை­களில் அதிக அக்­கறை காட்­ட­மாட்­டார்கள் என்­பதை பின்­பு­ல­மாக வைத்து இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­ற­னவா என்ற ஐயப்­பாடும் உள்­ளது.

இவற்­றுக்­கெல்லாம் மேலாக போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­ய­வர்கள் தமது பணத்­தே­வைக்­காக கொள்­ளை­களில் ஈடு­ப­டு­கின்­றார்­களா என்ற வினாவும்இ சினிமா பாணியில் தம்மை சமூ­கத்தில் ஹிரோக்­க­ளாக காட்­டு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் அடா­வ­டித்­த­னங்­களா என்ற வினாவும் எழாம­லில்லை.

இத்­தனை ஐயப்­பா­டான வினாக்கள் அடுக்­க­டுக்­காக எழு­கின்ற அதே­நேரம் வடக்கில் பண்­பாட்டு ரீதி­யாக வாழ்ந்து வரும் தமிழ் சமூகத்தின் மத்­தியில் இத்­தகைய நிலை­மைகள் எழு­கின்­ற­மை­யா­னது அந்த இனத்தின் எதிர்­கா­லத்தை மலி­னப்­ப­டுத்­து­வ­தற்கே வித்­தி­டு­வ­தாக அமையும் என்­பது கண்­கூடு.

உரிமை வேட்கை தற்­போது வரையில் நிறை­வே­றா­தி­ருக்­கையில் அர­சியல், சமூகஇ பொரு­ள­ாதார ரீதி­யாக எவ்­வ­ளவோ முன்­னேற்­றங்­களை எட்­ட­வேண்­டி­யி­ருக்­கின்ற இன­மொன்று இவ்­வாறு சீர்­கு­லைந்த நிலைக்குள் சென்­று­கொண்­டி­ருப்­பதை ஏற்றுக்­கொள்­ள­மு­டி­யாது.

ஆகவே அர­சியல் தலை­வர்கள், அதி­கா­ரிகள், சம­யத்­த­லை­வர்கள், சிவில் சமூகத்­தினர், புத்­தி­ஜீ­விகள், பெரி­யோர்கள், பெற்­றோர்கள் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் தமக்கான சமூகப்பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு சமூக சீர்குலைவை உடன் தடுத்து நிறுத்துவதற்கான இலக்கில் ஒன்றிணைவது அவசரமான அவசியமாகின்றது.

http://www.virakesari.lk/article/5649

  • கருத்துக்கள உறவுகள்
Quote

முத­லா­வ­தாக வட­மா­க­ாணத்தைப் பொறுத்­த­வ­ரையில் மூன்று பொது­ம­க­னுக்கு ஒரு இரா­ணு­வத்­தினர் நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். பொலிஸார் சிவில் சேவைக்­காக அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். அவற்­றுக்கு மேல­தி­க­மாக, குற்­ற­வியல், பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் நட­மா­டு­கின்­றனர். விசேட ரோந்து நட­வ­டிக்­கைகள் நடை­பெறு­கின்­றன. இவற்­றுக்­கெல்லாம் அப்பால் யாழ்.நக­ரத்­திற்கு வெளியில் இடம்­பெற்ற விட­யங்­களை விடுத்து பார்க்­கையில் யாழ். நக­ரத்­தினுள் எவ்­வாறு துணி­க­ர­மான கொள்ளை மற்றும் அச்­சு­றுத்தும் செயற்­பாடுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

அரச படைகள், பொலிசார், புலனாய்வு துறை என்பன கொலை  களவுகளை ஊக்குவிக்கின்றனர். இவர்கள் தமிழ் மக்களை பாதுகாக்க நிறுத்தப்படவில்லை. மூன்று பேருக்கு ஒராளாக இருந்து மக்களை பாதுக்காக்க முடியாமல் போய் விட்டது என்பது பொய். மக்களை குழப்பத்திலும் பீதியிலும் வைத்திருக்க வேண்டும் என்பதே மெய்.

  • கருத்துக்கள உறவுகள்

150,000 சிங்களப் படைகளால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை என்றால்.. வடக்குக் கிழக்கில்.. 150,000 இந்தியப் படைகளால் அது சாத்தியமில்லை என்ற போது அதனை 1989 இல் வெளியேறக் கேட்ட சொறீலங்கா சிங்களவர்கள்.. ஏன் சிங்களப் படைகளை வெளியேற்றக் கோரவில்லை...??! நோக்கம் தமிழர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதும்.. தமிழர்களை அச்ச சூழ்நிலைக்குள் வைச்சு சிறிது சிறிதாக நாட்டை விட்டு அடித்து விரட்டுவதும். அவன் அகதின்னு உலகம் பூரா ஓடுவான்.. இடையில சாகிறவன் போக.. மிச்சம் பேர்.. வெளிநாட்டுப் பிரஜையாக கொலிடே வருவான்.. அந்நியச் செலவாணி வரும்.. நாடும் நமதாகிடும்.. என்ற சிங்களவனின் சிந்தனை தான். வேற ஒன்றும் இல்லை. இது ஜே ஆர் அன்று போட்ட திட்டத்தின் தீவிர அமுலாக்கம். அதனை ரணில் செய்து முடிப்பார். மைத்திரி ஒத்துழைப்பார். சந்திரிக்கா.. துணை நிற்பார். சம் சும் கும்பல்.. துதிபாடி நிற்கும். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.