Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது

Featured Replies

பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது 

 

இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வரு­வார்கள் என்­ப­து­போ­லவும், உலகம் நெருப்பால் மூடப்­படும் அல்­லது இந்த ஆண்­டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்­பனை எதிர்­வு­கூ­றலைப் போன்­றதே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் கருத்து. பிர­பா­கரன் போன்ற ஒருவர் இனிமேல் தலை­தூக்­கவே முடி­யாது என வட­மா­காண ஆளுநர் ரெஜினோல் குரே தெரி­வித்தார். ஊட­கங்­களில் கூறு­வ­தைப்­போல வடக்கில் குற்­ற­செ­யல்கள் அதி­க­ரிக்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.054dfdfdfdF.jpg

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே வட­மா­காண

ஆளுநர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது

தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் மக்­க­ளைப்போல் எவரும் யுத்த கஷ்­டங்­களை அனு­ப­வித்­தி­ருக்க மாட்­டார்கள். இழப்­புகள் என்றால் என்ன, வலி என்­பது என்ன என்­பது பற்றி எம்­மை­வி­டவும் அவர்­க­ளுக்கு அதிகம் தெரியும். அவ்­வாறு இருக்­கையில் மீண்டும் ஒரு­முறை அவர்கள் யுத்­த­மொன்று வேண்டும் என்ற எண்­ணத்­துக்கு ஒரு­போதும் வரப்­போ­வ­தில்லை. எனினும் அர­சியல் வாதி­க­ளுக்கு மீண்டும் மீண்டும் யுத்தம் ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. தமது அர­சியல் கொள்­கைகள் தொடர்ந்தும் இருக்­க­வேண்டும் என்றால், அதில் அவர்கள் குளிர்­காய வேண்டும் என்றால் அவர்­க­ளுக்கு குழப்பம் அவ­சி­ய­மா­கின்­றது. அதனால் தான் பிர­பா­கரன் மீண்டும் வருவார், நாட்டை பிரித்­ததுத் தருவார் என்ற கற்­பனைக் கதை­க­ளை­யெல்லாம் கூறு­கின்­றனர்.

எவ்­வாறு இருப்­பினும் எதிர்­வு­கூ­றல்கள் பல இந்த உல­கத்தில் உள்­ளது. இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் உல­கத்தை காப்பார் என்­ப­து­போ­லவும், நபிகள் வருவார் என்­பது போலவும் அதேபோல் உலகம் நெருப்பால் மூடப்­படும் அல்­லது இந்த ஆண்­டுடன் உலகம் அழியும் என்­றெல்லாம் உலகில் பலர் எதிர்­வு­கூறி வரு­கின்­றனர். அவ்­வா­றான ஒரு கற்­பனை எதிர்­வு­கூ­றலைப் போன்­றதே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் கருத்து. இவர்­களின் கருத்­து­க­ளை­யெல்லாம் உண்­மைகள் என நம்பி அவர்­களின் பின்னால் மக்கள் செல்லப் போவ­தில்லை. கூட்டம் சேர்க்கும் இவர்­களின் தந்­தி­ரத்தை கண்டு மக்கள் ஏமாறமாட்­டார்கள். ஒவ்­வொரு முறையும் இவர்கள் புலி­களை நினை­வு­கூர ஆட்­களை சேர்க்கும் போதெல்லாம் மக்கள் அவர்­க­ளுடன் செல்­வ­தில்லை. ஆகவே அவர்­களின் அர­சியல் கொள்கை அவ்­வாறு இருக்கும் பட்­சத்தில் மாற்றம் ஏற்­ப­டாது. வடக்கில் உள்ள ஒரு­சி­லரின் செயற்­பா­டுகள் தெற்கின் இன­வா­தத்தை பலப்­ப­டுத்தும். அதேபோல் தெற்கில் உள்ள ஒரு­சி­லரின் இன­வாதம் வடக்கில் இன­வாத கொள்­கையை பலப்­ப­டுத்தும். ஆகவே அவற்றை ஊட­கங்­களும் பூதா­க­ர­மாக்கி விளம்­ப­ரத்தை அதி­க­ரித்­த­வண்ணம் உள்­ளன.

http://www.virakesari.lk/article/6356

  • கருத்துக்கள உறவுகள்

"பிர­பா­கரன் மீண்டும் வருவார், நாட்டை பிரித்­ததுத் தருவார் என்ற கற்­பனைக் கதை­க­ளை­யெல்லாம் கூறு­கின்­றனர்."


இக்காலத்தை உணர்ந்த வட­மா­காண ஆளுநரின் கருத்தைப் புறம்தள்ள முடியாது. ஆனால் பிரபாகரனைவிடவும் வலிமையான ஓருவர் வரமுடியாது என்று ஆழுனரால் கூற முடியாது. ஆழுனர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்ல.
 

57 minutes ago, Paanch said:

"பிர­பா­கரன் மீண்டும் வருவார், நாட்டை பிரித்­ததுத் தருவார் என்ற கற்­பனைக் கதை­க­ளை­யெல்லாம் கூறு­கின்­றனர்."


இக்காலத்தை உணர்ந்த வட­மா­காண ஆளுநரின் கருத்தைப் புறம்தள்ள முடியாது. ஆனால் பிரபாகரனைவிடவும் வலிமையான ஓருவர் வரமுடியாது என்று ஆழுனரால் கூற முடியாது. ஆழுனர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்ல.
 

அதுதானே இப்ப தமிழன் கேவலப்பட்டு இருக்கின்றான் ....தலைவரை போல இனி முப்பொழுதும் அறிந்த ஒரு ஒருவர் வருவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை ...ஆனால் பிறக்கலாம் ...அது போல ஒரு துரோகிகளும் பிறப்பார்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் வருவார் என்று 1972 இல் எதிர்வுகூறி இருந்தால்.. இதனை ஏற்றுக் கொள்ளலாம்.

இவர் ஒரு சிவில் அதிகாரி. எதற்கு தேவையில்லாமல்.. சிங்கள இராணுவ வைபங்களை நடத்திறார்.. இப்படியான அரசியல் கருத்துக்களை வெளியிடுறார்.

ஒருவேளை ஐ தே கட்சியின் சிங்ள பெளத்த மேலாதிக்கத்தை நாசூக்காக விதைக்கிறார் போலும். 

இவரின் வரவை வாழ்த்தி வருவேற்றவர்களுக்கு இப்ப இவர் வாய் வசைபாடுகிறது. tw_blush:

வட மாகாண ஆளுநர் அரசியல் பேச்சுக்களை நிறுத்த வேண்டும்!- மனோ கணேசன்

 
0 SHARES
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அரசியல் பேச்சுக்களை பேசி வருவதை நிறுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் குரே வெளியிட்டு வரும் கருத்துக்கள் மேலும் மேலும் பதற்றத்தைஏற்படுத்தி வருவதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.

ரெஜினோல்ட் குரே ஒரு பொது அதிகாரியே தவிர தற்போது அரசியல் வாதி இல்லை என்றுமனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.