Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு எதிர்க்கட்சியின் தாளத்துக்கு ஆடமாட்டேன்! - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டு எதிர்க்கட்சியினரின் தாளத்துக்கு ஆடத் தான் தயாரில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ நான் நீண்டகாலமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து நாடாளுமன்றத்தில் பணியாற்றியவன். எனக்கு அரசாங்கத் தரப்பில் இணைந்து செயலாற்றிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நான்தான்.

கூட்டு எதிர்க்கட்சியினரின் தாளத்துக்கு ஆடத் தான் தயாரில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ நான் நீண்டகாலமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து நாடாளுமன்றத்தில் பணியாற்றியவன். எனக்கு அரசாங்கத் தரப்பில் இணைந்து செயலாற்றிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நான்தான்.

   

தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதனால் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கத் தேவையில்லை. அரசாங்கத்தின் நல்ல செயற்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அதேநேரம் பொதுமக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வேண்டும்.

நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சரியாக செயற்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றவர்கள் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவாகும். அவர்கள் அரசாங்கத்தோடு ஒன்றாக இருந்து விட்டு தற்போது விலகிச் சென்றிருப்பவர்கள். அவர்களின் தாளத்துக்கு ஏற்ப ஆட நான் தயாராக இல்லை. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து சிறிது காலமே ஆகியுள்ளது. எனவே நாங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அரசாங்கத்துக்கு சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158020&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன 16 வயதா ?
எல்லா தளத்திற்கும் ஆடுவதற்கு.

முடிந்த அளவில் ஆடுகிறீர்கள்.
கருணாநிதி நிலைமயை கொஞ்சம் பார்த்து ஆடினால் 
புதுசா கொஞ்சம் ஆட்டம் பழகலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

16 பேரை வைச்சுக்கிட்டு இவர் நான் தான் எதிர்கட்சி தலைவர் என்றது போல காமடி எதுவும் இல்லை. மைத்திரியா ரணில் சந்திரிக்காவாப் பார்த்து.. போர்க்குற்ற விசாரணையை இல்லாமல் செய்ததற்கு இனப்படுகொலையை உச்சரிக்காமல் விட்டதற்கு போட்ட பிச்சை தான் இது.

சொந்த இனச் சாவுக்கு ஒரு நாளும்.. அஞ்சலி செய்யப் போகாத இவர் சொந்த மக்களுக்கு பிரதிநிதியாக இருக்க முடியாது.. இதில எதிர்கட்சி தலைவர் என்ற ஒரு நினைப்பு வேற.

யதார்த்தத்தில்.. இவர் உண்மையான எதிர்கட்சி தலைவரும் அல்ல.. அது சாத்தியமும் இல்லை. இது சொந்த இனத்துக்குச் செய்த துரோகத்திற்கு சிங்களம் அளித்த வெகுமதி. அவ்வளவே. 

இது கனகாலம் நிலைக்காது. tw_blush::rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போராடாமலே சுதந்திரம் பெற்ற நாடு இலங்கை.


முதல் பெண் பிரதமரை அறிமுகம் செய்தநாடு இலங்கை.


தனது இராணுவத்தைக் கொண்டு தனது மக்களை அழித்த நாடு இலங்கை.


அரசுடன் இணைந்து செயற்படும் எதிர்கட்சியைக் கொண்ட நாடு இலங்கை. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.