Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ் காந்தியை நிற்க வைத்தது யார்? -குற்றவாளியைக் கைகாட்டும் 'பைபாஸ்' (வீடியோ இணைப்பு)

Featured Replies

சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ் காந்தியை நிற்க வைத்தது யார்? -குற்றவாளியைக் கைகாட்டும் 'பைபாஸ்'  (வீடியோ இணைப்பு)

rajivassa2.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்டு, கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், சிறையில் நீண்ட ஆயுளைத் தொலைத்துவிட்டார்கள். இந்நிலையில், 'படுகொலையின் சந்தேகங்கள் இன்னமும் தீரவில்லை. தமிழக காவல்துறையை நோக்கியே எங்களது சந்தேகங்கள் நீள்கின்றன' என அதிர வைக்கிறது 'பைபாஸ்' திரைப்படம். இது தொடர்பாக முன்னரே விகடன்.காமில் செய்தி வெளியாகியிருக்கிறது.


ஸ்ரீபெரும்புதூரில், 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி,  இரவு 10.20 மணிக்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் ராஜீவ்காந்தி. இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் காவல்துறையால் சொல்லப்பட்டவர்கள், தடா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், 'இந்தப் படுகொலையில் மர்மம் இருக்கிறது. உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை' என்ற விவாதம் எழுந்து கொண்டே இருந்தது. இதுதொடர்பாக, எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்நோக்கு விசாரணை ஏஜென்சியின் விசாரணை இன்னமும் முடியவில்லை. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகியோர், கடந்த எட்டு ஆண்டுகளாக ராஜீவ்காந்தி படுகொலையின் மர்மத்தை நோக்கிப் பயணித்திருக்கிறார்கள்.

தடா நீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றம் நடந்த இடத்தின் புலனாய்வு அறிக்கைகள், உடல்கூறு ஆய்வுகள், வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் அறிக்கைகள் என தீவிரமான தேடுதலின் முடிவை, 'பைபாஸ்' (bypassfilm2016.wordpress.com) என்ற படத்தின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக் கூடிய படத்தில், ராஜீவ் படுகொலை மர்மத்தை சிலப்பதிகார, மணிமேகலை காப்பியங்களில் சொல்லப்படும் இடங்கள், அங்கவை, சங்கவையின் துயரம், மணிமேகலை சொல்லும் நீதி, தவறான நீதியால் கொல்லப்பட்ட கோவலன் என சரித்திர சம்பவங்களின் பின்னணியில், ராஜீவ் படுகொலையின் மர்ம முடிச்சை மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

 

ramesh11.jpg


முன்னரே அப்படம் உண்டாக்கிய விவாதம் குறித்த 10 மர்மங்களை தொகுத்திருந்தோம். இப்போது முழு படமும் வெளியான நிலையில், மேலும் சில  சந்தேகங்கள் எழுகின்றன. அவை பின்வருமாறு...

* படுகொலை நிகழ்த்தப்பட்ட பின்னர், 'மறுநாள் காலை 6 மணிக்குத்தான் எனக்குத் தகவல் கிடைத்தது' என தடயவியல் துறை இணை இயக்குனர் வாட்சன், தடா கோர்ட்டில் சொல்லியிருக்கிறார். அவர் சென்னையில் இருந்து தனது குழுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்ற நேரம் காலை 9 மணி. அந்த நேரத்தில் பலியான உடல்கள் எதுவும் அங்கு இல்லை. குற்றம் நடந்த இடத்தில் ஆவணங்களைச் சேகரிப்பதற்கு தடய அறிவியல் துறையை அனுமதிப்பதில் காவல்துறை தாமதம் செய்துள்ளது.

* குற்றம் நடந்த இடத்தில் ஒரு சடலத்தின் மீது கேமரா இருந்துள்ளது. 'அதில் இருக்கும் நெகட்டிவை டெவலப் செய்து கொண்டு வாருங்கள்' என ஐ.ஜி ஆர்.கே.ராகவன் உத்தரவிட்டுள்ளார். சுங்குவார் சத்திரம் அருகில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் பிலிமை டெவலப் செய்யக் கொடுத்துள்ளனர். அங்கு கலர் பிரிண்ட் போடும் வசதியில்லாததால், தனியாக பிலிமை கட் செய்து கொடுத்துள்ளார் ஸ்டூடியோ உரிமையாளர் நாராயணன். பிறகு மீண்டும் அந்த கேமரா சடலத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் இருந்த தடயவியல் உதவியாளர் ஏ.ஆர்.மோகன் இதற்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மேலும், அந்த கேமராவைக் கொண்டு போன நான்கு பேரில் அவருட்ம் ஒருவர். இப்படிச் செய்வது குற்றம் நடந்த இடத்தின் தன்மையை பாதிக்கும் என தடயவியல் நிபுணர்களுக்குத் தெரியாதா?

pugal1.jpg* 2014-ல் சுங்குவார் சத்திரம் ஸ்டூடியோ உரிமையாளர் நாராயணனை பைபாஸ் படக் குழு சந்தித்துள்ளது. அவர், 'என்னை அங்கே இரவு 12 மணிக்குக் கூட்டிப் போனார்கள். சம்பவ இடத்தில் நிறைய புகைப்படங்களை எடுத்தேன். அங்கு முழுக்க ரத்தத் துளிகள் நிரம்பிய ஒரு கேமராவைப் பார்த்தேன். அதைத் துடைத்து சுத்தம் செய்தேன். அந்தக் கேமராவில் பிளாஷ் இருந்தது' என்கிறார். ஹரிபாபு பிளாஷ் போட்டுத்தான் படம் எடுத்தார். அந்த கேமரா பாதிப்புக்குள்ளாகியிருந்தது. ஆனால், போலீஸார் காண்பித்த கேமராவில் பிளாஷும் இல்லை, சேதமும் அடையவில்லை. இது எப்படி?


* இதுபற்றிச் சொல்லும் தடயவியல் பேராசிரியர் சந்திரசேகர், 'கேமரா பற்றி எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை' என்கிறார். ஆனால், மறுநாள் காலை 11 மணிக்கு அவர் சம்பவ இடத்திற்குப் போகிறார். அப்போதும் கேமரா பற்றி எதுவும் சொல்லப்படவில்லை' என்று சொல்கிறார். அன்றைய மாலை நாளிதழில், '30 வயதுள்ள சடலத்தின் மீது கேமரா கிடந்ததாகவும், மறுநாள் அதைத் தேடிச் சென்றது' குறித்து பேட்டி கொடுத்ததாக, தனது புத்தகத்தில் சொல்கிறார். ஆனால், 1996-ல் தடா கோர்ட்டில், அவரை குறுக்கு விசாரணை செய்தபோது, ' தனக்கு கேமராவைப் பற்றி காஞ்சிபுரம் தடயவியல் உதவியாளர் ஏ.ஆர்.மோகன் கூறினார்' என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பத்திரிகையாளர் ஒருவருக்கு குற்றவாளியின் படங்களைக் கொடுத்து, ' உண்மை வெளியில் வரட்டும் எனக் கொடுத்ததாக'க் குறிப்பிடுகிறார். ஆனால், கோர்ட்டில், ' இந்தப் படங்களை வெளியிட்டது யார் என்று தனக்குத் தெரியாது' என்கிறார். இதில் எதுதான் உண்மை?


* சம்பவ இடத்தில் இரண்டு பூக்கூடைகள் கிடந்துள்ளன. ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் சுலைமான் என்பவர் தனது உதவியாளர்கள் மூலம் பூக்கூடைகளை அனுப்பி வைத்திருக்கிறார். இதைப் பற்றி சுப்ரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் பார்க்கலாம். சுலைமானின் உதவியாளர்களில் ஒருவரைத்தான் ஹரிபாபு என போலீஸார் கதைகட்டிவிட்டதாகச் சொல்கின்றனர் படக் குழுவினர்.

* பத்திரிகையாளர் ராமசுந்தரத்திற்கு சந்திரசேகர் கொடுத்த வீடியோ பேட்டியில், ராஜீவ் காந்தி அணிந்திருந்த லோட்டோ ஷு, தனுவின் சல்வார் கமீஸ், சுவிட்ச் போன்றவற்றைக் காண்பிக்கிறார். இந்தப் பொருட்களை எடுக்க வேண்டும் என்றால், அவர் சம்பவ இடத்திற்குப் போயிருக்க வேண்டும். ஆனால், ராஜீவ்காந்தி போஸ்ட்மார்ட்டத்திற்கு மட்டுமே போனதாக சந்திரசேகர் சொல்கிறார். 22-ம் தேதி காலை இந்தப் பேட்டியை சந்திரசேகர் கொடுத்ததாக ராமசுந்தரம் கூறுகிறார். 21-ம் தேதி நள்ளிரவு ஸ்ரீபெரும்புதூர் செல்லவில்லை என்றுதான் இதுவரையில் சந்திரசேகர் சொல்லி வந்திருக்கிறார். சம்பவ இடத்திற்குப் போகாமல், இந்தப் பொருட்களை வீடியோ பதிவில் காட்ட முடியாது. இதை ஏன் சந்திரசேகர் மறைக்கிறார்? ' தனக்குக் கொடுத்த மிக முக்கியமான வீடியோ பேட்டி பற்றி எந்த இடத்திலும் சந்திரசேகர் குறிப்பிடவில்லை' என்கிறார் ராமசுந்தரம். காவல்துறையின் உத்தரவுப்படி செயல்பட்டாரா சந்திரசேகர்?

* சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காஞ்சிபுரம் ஜி.ஹெச்சுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒன்பது உடல்களில், ஒரே ஒரு உடலுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. மிக முக்கியமான சாட்சியான கேமரா வைக்கப்பட்டிருந்தது இந்த உடலின் மீதுதான். இதன் மீது தடயவியல் நிபுணர்கள் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாதது ஏன்?

haribabu1.jpg* சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், போட்டோகிராபர் ஹரிபாபுவின் அப்பா சுந்தரமணி, உடலுக்கு உரிமை கோரி ஆஸ்பத்திரிக்கு வருகிறார். அவரிடம், தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்ட சடலத்தைத்தான், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ஜீவானந்தம் காண்பிக்கிறார். முகம் முழுக்க கருகிப் போய், மார்பில் குண்டு துகள்கள் துளைக்கப்பட்ட அந்த உடலை, ஹரிபாபு என நம்ப வைத்திருக்கிறார்கள். தவிர, 'ஹரிபாபுவின் வயது 22. போஸ்ட்மார்ட்டத்தில் சொல்லப்பட்ட வயது 30. அதுவும் சுன்னத் செய்யப்பட்ட இளைஞரின் உடல் அது. ' உடலை ஒப்படைத்தவர்கள் ஏன் சுன்னத் செய்யப்பட்டது என்ற கேள்வியை எந்த இடத்திலும் கேட்கவில்லை. புதைக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கப்பட்ட உடலை, ஹரிபாபு குடும்பத்தினர் ஏன் எரித்தார்கள்?' எனப் பல கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றி எந்த இடத்திலும் தடயவியல் நிபுணர்கள் கேள்வியும் கேட்கவோ, எந்த அறிக்கையிலும் பதிவு செய்யவோ இல்லையே ஏன்?

* ராஜீவ்காந்தி நடந்து வரும் சிவப்புக் கம்பளத்தின் தெற்கில் நின்றபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரிபாபு.  அவருக்குப் பக்கத்தில் சங்கர்-கணேஷ் இசைக் குழுவின் போட்டோகிராபர் ஜெயபாலனும் போட்டோ எடுத்தபடியே நின்றிருக்கிறார். குண்டு வெடித்ததும் காதில் ரத்தம் வடிய மயக்க நிலைக்குச் சென்ற ஜெயபாலன் பிழைத்துவிட்டார். அவரோடு சேர்ந்து ஹரிபாபுவும் பிழைத்திருக்கவே வாய்ப்பு அதிகம். வடதுபக்கம் இறந்துகிடந்த ஒரு முஸ்லிம் இளைஞரின் உடலின் மீது காவல்துறை கேமராவைப் போட்டுவிட்டு, அவர்தான் ஹரிபாபு என நம்ப வைத்திருக்கிறது என்கிறது ஆவணப்படக் குழு. இது உண்மையா?

ramesh1.jpg* மேடையில், ராஜீவ்காந்தி பங்கேற்கும் நிகழ்வைத் தொகுத்து வழங்கிய ஏ.ஜெ.தாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். 10.12 மணிக்கு அவர் பேசும்போது, 'மேடைக்கு வலதுபக்கம் உள்ளவர்கள், மேடையின் இடதுபக்கம் உள்ள கார்பெட் ஏரியாவுக்கு வருமாறு' சொல்கிறார். மேடையின் பின்புறம் காங்கிரஸ் பிரமுகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அறிவிப்பு வெளியான உடன், பொதுமக்கள் கூட்டம் ரெட் கார்பெட் ஏரியாவை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. ராஜீவ்காந்தி நடந்து வந்த ரெட் கார்பெட்டில் போலீஸ் பந்தோபஸ்து இல்லை. ராஜீவை நோக்கி வருபவர்களைத் தடுக்க போலீஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேடைக்கு ராஜீவ்காந்தி வந்திருந்தால் வெடிகுண்டு வெடித்திருக்க வாய்ப்பில்லை. மாலை போட வருகிறவர்களை சோதனை செய்திருக்க முடியும். ஆனால், சிவப்புக் கம்பளத்தை குறிவைத்து ஏ.ஜெ.தாஸ் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டாரா? என்ற கேள்விக்கு, விடை சொல்கிறார் ராஜீவ்காந்திக்கு முதலில் மாலை போட்ட ரங்கநாத முதலியார். அவர் தனது வாக்குமூலத்தில், 'ஐ.ஜி ஆர்.கே.ராகவன்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிடச் சொன்னார்' என்கிறார். அப்படியானால், சிவப்புக் கம்பளத்தில் மக்களை நிற்க வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது ஆவணப்படம்.

* ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்குப் பின்புறம் சி.ஆர்.பி.எஃப் போலீஸார் 50 பேர் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என போலீஸ் தயார் செய்த பந்தோபஸ்து குறிப்பில் உள்ளது. சம்பவ இடத்தில் இப்படிப்பட்ட ஒரு போலீஸ் படை இருந்ததாக எவரும் குறிப்பிடவில்லை. கடைசிநேரத்தில், இவர்கள் வராமல் போனதற்கான ஆதாரம்தான் இருக்கிறது. இதற்கான மர்மம் என்ன?

- எனப் படுகொலையின் அனைத்து அம்சங்களையும் ஆதாரப்பூர்வமாக அலசியிருக்கிறது பைபாஸ் படக்குழு. படத்தின் முடிவில், மருத்துவர் புகழேந்தி பேசும்போது, 'புலனாய்வு வழக்குகளை மிகத் துல்லியமாக அலசி ஆராயும் டாபர்ட் விதிமுறைகள் எதுவும் இந்தப் படுகொலை வழக்கில் பின்பற்றப்படவில்லை. பொய்யும் புரட்டுமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. எங்கள் ஆசிரியர் சந்திரசேகர், வழக்கின் விசாரணையை பின்னி எடுத்துவிட்டார் என நாங்கள் மகிழ்ந்தோம். ஆதாரங்களைப் பார்த்தபோது அந்த பிம்பம் தூள் தூளாகிவிட்டது. எம்.டி.எம்.ஏ விசாரணையில் இந்தப் புதிய ஆதாரங்கள் அம்பலமானால், தீர்ப்பின் முடிவையே மாற்றியமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உண்மை நீதி வாழ வேண்டும் கச்சாமி" என புத்தர் சந்நிதியின் அருகில் இருந்து கவலை தோய்ந்த முகத்தோடு பேசுகிறார்.

- ஆ.விஜயானந்த்

’பைபாஸ்’ ஆவணப்பட வீடியோ கீழே...  

 

http://www.vikatan.com/news/tamilnadu/64962-bypass-reveals-the-secret-of-rajiv-assassination.art

Edited by நவீனன்

இருட்டறையில் நடந்த அரைகுறை விசாரணை, வசதிக்கேற்ப எழுதப்பட்ட வாக்குமூலங்கள், அவசர கோலத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள், நேர்மையான நீதித்துறை என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்துள்ள எவரும் ராஜீவ் கொலை வழக்கின் தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.