Jump to content

சதுரங்க வேட்டை


Recommended Posts

பதியப்பட்டது

சதுரங்க வேட்டை

இத்திரியில் சதுரங்க புதிர்களை பதியலாமென்று இருக்கின்றேன். சதுரங்கம் பற்றிய, எழுத்து, குறியீடுகள் பற்றி விளக்கம் தேவையாயின் கேட்கலாம். ஒவ்வொருநாளும் புதிதாக ஒரு புதிர் போட முடியாது - காரணம் நான் ஒரு சோம்பேறி. நேரம் கிடைக்கும்போது புதிய புதிர்களை பதிகின்றேன். ஆரம்பத்தில் இலகுவான புதிர்களே பதியப்படும். அதாவது சில நகர்த்தல்களில் செக்மேட் வரக்கூடியதான புதிர்கள்.

உறவுகளே கலந்து கொள்ளுங்கள்.

 

0001.png
free photo hosting

 

Posted

என்னடா இது யாராவது பதில் தருவாங்கள் எண்டு பாத்தால் இணையவனும் நந்தனும் பச்சையை குத்திட்டு நழுவிட்டாங்கள். எப்படியாயினும் வரவேற்ற இணையவனுக்கும் நந்தனுக்கும் நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் யோசித்துப் பார்கிறன் புலிகேசி நழுவிக் கொண்டே போகிறார்....! :cool:  tw_blush:

Posted
6 minutes ago, suvy said:

நானும் யோசித்துப் பார்கிறன் புலிகேசி நழுவிக் கொண்டே போகிறார்....! :cool:  tw_blush:

நழுவுற புலிகேசிய அமத்தி பிடியுங்கோவன்.

அவனவன் மனுசியை வைச்சே காரியம் சாதிக்கிறான். எதுக்கும் உங்கட மனுசியை புலிகேசிக்கு கொடுத்து பாருங்களேன் - சிங்கன் சிக்கனமா மாட்டுவான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஜீவன் சிவா said:

நழுவுற புலிகேசிய அமத்தி பிடியுங்கோவன்.

பரணில கிடக்கிற போர்ட்டைத் தேடி எடுத்துத்தான் போர் தொடுக்க வேண்டும்....!

Posted
Just now, suvy said:

பரணில கிடக்கிற போர்ட்டைத் தேடி எடுத்துத்தான் போர் தொடுக்க வேண்டும்....!

 

3 minutes ago, ஜீவன் சிவா said:

அவனவன் மனுசியை வைச்சே காரியம் சாதிக்கிறான். எதுக்கும் உங்கட மனுசியை புலிகேசிக்கு கொடுத்து பாருங்களேன் - சிங்கன் சிக்கனமா மாட்டுவான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்... யுரேக்கா...! மற்றவர்களும் முயற்சிக்கட்டும்....!! மனிசியின் உதவியுடன் குதிரையாலே அடித்து விட்டேன்...!

Posted
10 minutes ago, suvy said:

ம்... யுரேக்கா...! மற்றவர்களும் முயற்சிக்கட்டும்....!! மனிசியின் உதவியுடன் குதிரையாலே அடித்து விட்டேன்...!


விடை தவறு என்று நினைக்கின்றேன். குதிரையின் இடம் மாறாது - மாறினால் சிங்கனை சிக்க வைக்க முடியாது.

Queen D3 check (Qd3+), Bishop kill Queen at D3(B*d3), அப்புறம் என்ன என்பது உங்கள் ஊகத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது விடை 
Black 1st Move

Black Queen d6----d3 check

White Bishop f1---->d3

Black Rook d7----->d3 check

White king f3---->e4

Black Bishop e6---->d5 Check mate

சிங்கன் சிக்கிட்டான் 

Posted
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எனது விடை 
Black 1st Move
Black Queen --->d6---d5 Check

White Move

========================================

White King f3---->g3

Black 2nd Move 

Black Queen---->d5--->d3 Check

White move

White Bishop--->f1---->d3

Black 3rd Move..

Black rook --->d7---->d3 Check Mate

ஆனால் Whit King f3--->e3 வந்தால் கொஞ்சம் கஷ்ட்டம் போல தெரிகிறது 

...   Qd5+

Kg3 

ஒன்று கிங் e3 விற்கு போகலாம் அல்லது குதிரை e4 இக்கு வரலாம். இது கறுப்பின் வெற்றி வாய்ப்பை இழந்ததிற்கு சமன்.

23 minutes ago, ஜீவன் சிவா said:

Queen D3 check (Qd3+), Bishop kill Queen at D3(B*d3), அப்புறம் என்ன என்பது உங்கள் ஊகத்திற்கு.

இங்கிருந்து முயற்சி பண்ணி பாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கவும் ஜீவன் சிவா 
விடையை மாற்றிவிட்டேன் 

மீண்டும் ஒருதடவை பாருங்கள் 

Posted
21 minutes ago, அக்னியஷ்த்ரா said:

Black Queen d6----d3 check

White Bishop f1---->d3

Black Rook d7----->d3 check

White king f3---->e4

Black Bishop e6---->d5 Check mate

இதை சதுரங்க பாசையில் இப்படி எழுதுவார்கள்

.... Qd3+

B*d3, R*d3+

Ke4, Bd5#

பதிலுக்கு  நன்றி + வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, ஜீவன் சிவா said:


விடை தவறு என்று நினைக்கின்றேன். குதிரையின் இடம் மாறாது - மாறினால் சிங்கனை சிக்க வைக்க முடியாது.

Queen D3 check (Qd3+), Bishop kill Queen at D3(B*d3), அப்புறம் என்ன என்பது உங்கள் ஊகத்திற்கு.

தவறுதான் வருந்துகிறேன். படத்தில் பார்த்ததும் ராஜா, ராணிக்குள் எனக்குகுழப்பமாகி விட்டது. நிறைய வருடங்களாகி விட்டன செஸ் விளையாடி. நான் கறுப்பு ராஜாவை ராணியாகப் பாவித்து மூவ் பண்ணிட்டன்....!

தொடருங்கள் ஜீவன்...!

 

அப்படியே வெள்ளை ராணியையும் ராஜாவாக நினைத்து விட்டேன்...!

Posted
3 minutes ago, suvy said:

தவறுதான் வருந்துகிறேன்.

ஏன் இது ஒரு விளையாட்டுதானே, இதுக்கேன் வருத்தம்.  

நீங்கள்  ராணியை கொடுக்க பயந்து விட்டீர்கள் போலும். சில வேளைகளில் ராணியை கொடுத்துத்தான் பல நாடுகளையே பிடித்திருக்கிறார்கள் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்... நாங்கள் யார்... சன்டை என்று வந்தால் அடிக்கிறவனுக்கும் அங்க இஞ்ச இரண்டு அடி விழத்தான் செய்யும்....! நானும் ரவுடிதான் விஜய் சேதுபதி...! tw_blush:  

Posted

எங்களில்  பலருக்கு சதுரங்கம் விளையாட தெரிந்திருந்தாலும் FIDE அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டமை குறைவு . அவர்களுக்காக குறியீடுகள் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

 

சதுரங்களைப் பெயரிடுதல்[தொகு]

சதுரங்கப்பலகையின் ஒவ்வொரு சதுரமும் தனித்துவமான ஒருங்கிணைப்புச் சோடியால் அழைக்கப்படும். அதில் ஒரு ஆங்கில எழுத்தும் ஒரு இலக்கமும் அமைந்திருக்கும். வெள்ளையின் இடது பக்கத்திலிருந்து (இராணி பக்கம் இருந்து இராசா பக்கம்) செங்குத்து வரிசைகள் a இலிருந்து h வரை பெயரிடப்பட்டிருக்கும். வெள்ளையின் பக்கத்திலிருந்து கிடை வரிசைகள் 1 இலிருந்து 8 வரை இலக்கமிடப்பட்டிருக்கும். செங்குத்து வரிசை எழுத்தைத் தொடர்ந்துவரும் கிடை இலக்கம் கொண்ட பெயர் ஒவ்வொரு சதுரத்தையும் அடையாளப்படுத்தும். (உதாரணமாக, வெள்ளையின் இராசா e1 எனும் சதுரத்திலிருந்து தனது விளையாட்டை ஆரம்பிக்கும்; b8 இலுள்ள கருப்பின் குதிரையானது நேரேயுள்ள கடடங்களான a6 மற்றும் c6 என்பவற்றிற்கு நகர முடியும்.)

காய்களைப் பெயரிடுதல்[தொகு]

ஒவ்வொரு காய் வகைகளும் (சிப்பாய்களைத் தவிர) தனித்துவமான ஆங்கிலப்பெரிய எழுத்துக்களால் குறிக்கப்படும், பெரும்பாலும் விளையாடுபவர் பேசும் மொழியில் காணப்படும் காய்களின் பெயரின் முதல் எழுத்துகள் பதிவதற்கு பயன்படுத்தப்படும். ஆங்கிலம் பேசும் ஆட்டக்காரர்கள் K எனும் எழுத்தை அரசனுக்கும், Q எனும் எழுத்தை அரசிக்கும், R எனும் எழுத்தை கோட்டைக்கும், B எனும் எழுத்தை அமைச்சருக்கும், மற்றும் N எனும் எழுத்தைகுதிரைக்கும் (K ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதால்) பயன்படுத்துவர். S (செருமனியில் குதிரையை குறிக்கும் Springer எனும் சொல்லில் இருந்து) என்பது ஆரம்பகால இயற்கணிதக் குறிமுறையில் குதிரையை குறிக்க பயன்பட்டது.

மற்றைய மொழிகள் வெவ்வேறு எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன, உதாரணமாக, பிரெஞ்சு ஆட்டக்காரர்கள் மந்திரியைக் குறிக்க F (from fou) பயன்படுத்தல். சர்வதேச கவனத்திற்காக எழுதப்பட்ட சதுரங்க இலக்கியத்தில், சர்வதேச நியம உருவங்களை காய்களைக் குறிக்கும் எழுத்துகளிற்கு பதிலாக பயன்படுத்தியது. இதனால் ஒருங்குறியில் சதுரங்க காய்கள் உருவாகியது.

சிப்பாய்கள் பெரிய எழுத்துகளால் அடையாளங்காணப்படாவிட்டாலும் அவை எழுத்து இல்லாமையால் அடையாளப்படுத்தப்படுகிறது. பல சிப்பாய்கள் இருக்கும் இடத்தில் நகர்த்தப்பட்ட காயை இனங்காண அவசியம் ஏற்படாது. ஏனென்றால் ஒரு சிப்பாயாலேயே குறிப்பிட்ட ஒரு சதுரத்துக்கு நகரமுடியும். (சிப்பாய்கள் கைப்பற்றும் இடத்தைக் குறிப்பதைத் தவிர, அது வித்தியாசமான முறையில் குறிக்கப்படும். கீழே விளக்கப்பட்டுள்ளது.)

நகர்த்தல்களைப் பெயரிடல்[தொகு]

ஒவ்வொரு நகர்த்தலும் காய்களைக் குறிக்கும் பெரிய எழுத்துக்களுடன் கூடிய நகர்த்தப்பட்ட சதுரத்தின் பெயராலும் குறிக்கப்படும். உதாரணமாக, Be5(e5 சதுரத்திற்கு மந்திரியை நகர்த்தல்), Nf3 (f3 சதுரத்திற்கு குதிரையை நகர்த்தல்), c5 (c5 சதுரத்திற்கு சிப்பாயை நகர்த்தல்— காய்களுக்கான குறிப்பிட்ட முதல் எழுத்து சிப்பாய் நகர்த்தல்களில் காணப்படாது). சில வெளியீடுகளில், காய்கள் எழுத்துகளுக்குப் பதிலாக உருவங்களால் குறிக்கப்பட்டுள்ளன, உதாரணமாக: c6. இது உருவ இயற்கணிதக் குறிமுறை (Figurine algebraic notation,FAN) எனப்பட்டதுடன் இந்த முறைக்கு மொழிகள் பயன்படுத்தப்படாமையால் அனைவருக்கும் பயனுடையது.

கைப்பற்றல்களை பெயரிடல்[தொகு]

ஒரு காய் இன்னொரு கையைக் கைப்பற்றும் போது, "x" என்பது உடனே கைப்பற்றப்பட்ட சதுரத்தின் பெயர் முன் இடப்படும். உதாரணமாக, Bxe5 (e5 இலுள்ள காயை மந்திரி கைப்பற்றுகிறது). ஒரு சிப்பாய் இன்னொன்றைக் கைப்பற்றும் போது, கைப்பற்றும் சிப்பாய் இருந்த செங்குத்து வரிசையைக் குறிக்கும் எழுத்தானது சிப்பாயை இனங்காண உதவும். உதாரணமாக, exd5 (e-செங்குத்து வரிசையில் உள்ள சிப்பாயானது d5 இலுள்ள கையைக் கைப்பற்றுகிறது). சிலநேரங்களில் முக்காற்புள்ளியானது (:) "x" இற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது, "x" இடப்படும் அதே இடத்தில் (B:e5) அல்லது முடிவில் (Be5:) இடப்படும்.

போகும்போது பிடித்தல் முறையிலான கைப்பற்றல்கள், கைப்பற்றும் சிப்பாய் இருக்கும் செங்குத்து வரிசைப்பெயர், பின் "x", இறுதியில் கைப்பற்றும் சிப்பாய் அமரும் இடம் (கைப்பற்றப்படும் காய் இருந்த கட்டம் அல்ல) என்ற ஒழுங்கில் பெயரிடப்படும். மேலும் (விரும்பின்) இது ஒரு போகும்போது பிடித்தல் கைப்பற்றல் எனக்குறிக்க பின்னொட்டான "e.p." இணைக்கப்படும்.[4] உதாரணமாக, exd6e.p.

சில உரைகள், சதுரங்கத் திறப்புகளுக்கான கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Chess Openings) போன்றவை, ஒரு கைப்பற்றல் இடம்பெற்றதற்கான அறிகுறிகளை தவிர்க்கின்றன. (உதாரணமாக, Bxe5 இற்கு பதிலாக Be5, exd6 அல்லது exd6e.p. ஆகியவற்றிற்கு பதிலாக ed6) இது தெளிவானதாக இருந்தாலும், ஒரு சிப்பாயின் கைப்பற்றலைக் குறிக்க சம்பந்தப்பட்ட இரு செங்குத்து வரிசைகளின் பெயர்களை (exd அல்லது ed) மட்டுமே பயன்படுத்துகிறது. இந்தக் குறுகிய வடிவங்கள் சிலவேளைகளில் சிறிய அல்லது குறுகிய இயற்கணிதக் குறிமுறை என அழைக்கப்படுகிறது.

குழப்பமான நகர்த்தல்களை பெயரிடல்[தொகு]

ஒரே சதுரத்திற்கு இரண்டு (அல்லது மேற்பட்ட) ஒரே வகையான காய்கள் நகர முடியும் எனில், நகர்த்தப்படும் காய் தனித்துவமான அக்காயின் எழுத்தாலும், தொடர்ந்து

  1. கைப்பற்றும் காய் புறப்படும் செங்குத்து வரிசை எழுத்து (அவை வெவ்வேறாக இருந்தால்); அல்லது
  2. காய் புறப்படும் கிடை வரிசை எண் (செங்குத்து வரிசை ஒன்றாய் இருந்து கிடை வரிசை வேறுபட்டால்); அல்லது
  3. செங்குத்து வரிசை மற்றும் கிடை வரிசைப் பெயர்களால் (ஒன்றைப் பயன்படுத்தி காயை இனங்காண முடியாத போது— ஒன்று அல்லது மேற்பட்ட சிப்பாய்கள் நிலை உயர்வடைவதன் மூலம் ஒரே வகையான பல காய்கள் ஒரு சதுரத்திற்கு நகர சாத்தியமான நிலை ஏற்படும். இது அரிதாகவே இடம்பெறுகிறது).

உதாரணமாக, g1 மற்றும் d2 கட்டங்களில் குதிரைகளை வைத்திருப்பவர், ஏதாவது ஒன்றை f3 நகர்த்தினால் அந்த நகர்த்தல் Ngf3 அல்லது Ndf3 என எழுதப்படும், நகர்த்துவதற்கு ஏற்ப. g5 மற்றும் g1 இல் குதிரை இருந்தால், N5f3 மற்றும் N1f3 என நகர்த்தல்களை எழுதுவர். மேலே குறிப்பிட்டதன் படி, "x" ஆனது கைப்பற்றலை குறிக்க உள்ளிடப்படலாம், உதாரணமாக: N5xf3.
என்னொரு உதாரணம்: d3 மற்றும் h5 சதுரங்களில் கோட்டை இருந்தால், ஏதாவது ஒன்று d5 இற்கு நகர்த்தப்படலாம். ஒருவேளை d3 இலுள்ள கோட்டை d5 இற்கு நகர்ந்தால், Rdd5 அல்லது R3d5 ஐப் பயன்படுத்தி வேறுபடுத்தலாம், ஆனால் செங்குத்து வரிசையே முன்னுரிமை பெறுவதால், Rdd5 என்பதே சரியானது. (இதைப்போலவே நகர்த்தல் ஒரு கைப்பற்றல் ஆக இருந்தால், Rdxd5 என்பதே சரியானது.)

சிப்பாய் நிலை உயர்வு[தொகு]

ஒரு சிப்பாய் கடைசிக் கிடை வரிசையை அடையும் போது நிலை உயர்வு பெறும், நிலை உயர்வடைந்த காய் நகர்த்தலின் பெயரின் பின் இடப்படும், உதாரணமாக: e8Q (இராணியாக நிலை உயர்வு பெறுகிறது). சிலவேளைகளில் சமன் குறி அல்லது அடைப்புக்குறி பயன்படுத்தப்படும்: e8=Q அல்லதுe8(Q), ஆனால் இவை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் சதுரங்க விதிகளில்,[5] அடைப்புக்குறியுக்குள்ள ஒரு சமன் குறியானது, "(=)", ஒப்புதலின் பேரில் கிடைக்கும் சமநிலையை, நகர்த்தல் பதியும் தாளில், நகர்த்தலின் பின் எழுதப் பயன்படும், ஆனால் இது இயற்கணிதக் குறிமுறையின் ஒரு பகுதியில்லை.[6] எளிய விளையாட்டுக் குறிமுறையில் (Portable Game Notation, PGN), சிப்பாயின் நிலை உயர்வானது எப்போது சமன் குறியீட்டு முறையிலேயே அடையாளப்படுத்தப்படும் (e8=Q).

பழைய புத்தகங்களில், சிப்பாய் நிலை உயர்வானது குறுக்குக் கோடு ஒன்றின் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கும்: e8/Q.

கோட்டை கட்டுதல்[தொகு]

கோட்டை கட்டுதல் ஆனது 0-0 (இராசா பக்க கோட்டை கட்டுதலுக்கு) மற்றும் 0-0-0 (இராணி பக்க கோட்டை கட்டுதல்) ஆகிய விசேடமான குறிமுறைகளால் குறிப்பிடப்படும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் கையேட்டில், பின்னிணைப்பு C.13[7] ஆனது பூச்சியத்தைப் பயன்படுத்தினாலும் (0-0 மற்றும் 0-0-0), எளிய விளையாட்டுக் குறிமுறையானது (Portable Game Notation, PGN) ஆங்கிலப் பெரிய எழுத்தான Oஐ எழுதப்பயன்படுத்துகிறது (O-O மற்றும் O-O-O).

முற்றுகை மற்றும் இறுதி முற்றுகை[தொகு]

எதிரியின் இராசாவை முற்றுகைக்கு உள்ளாக்கும் ஒரு நகர்த்தலானது வழமையாக "+" குறியீடு இணைக்கப்பட்டு எழுதப்படும். அல்லது சில நேரங்களில் சிலுவை அடையாளம் (†) பயன்படுத்தப்படும், அல்லது ஆங்கிலத்தில் செக் (check) என்பதன் சுருக்கமான "ch" பயன்படுத்தப்படும். இரட்டை முற்றுகையானது பொதுவாக முற்றுகையைப் போலவே அடையாளப்படுத்தப்பட்டாலும், சிலநேரங்களில் விசேடமாக "dbl ch" எனவும், அல்லது பழைய புத்தகங்களில் "++" எனவும் அடையாளப்படுத்தப்படும். சதுரங்கத் திறப்புகளுக்கான கலைக்களஞ்சியமானது (Encyclopedia of Chess Openings) முற்றுகை இடம்பெற்றதற்கான அடையாளங்களைத் தவிர்க்கிறது.

நகர்த்தல்களின் நிறைவில் ஏற்படும் இறுதி முற்றுகை ஆனது "# " எனும் குறியீட்டால் குறிப்பிடப்படும் ("++" என்பதும் சிலரால் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஐக்கிய அமெரிக்க சதுரங்கக் கூட்டமைப்பானது (United States Chess Federation,USCF) "# " என்ற குறியீட்டையே பரிந்துரைக்கிறது). அல்லதுமுற்றுகை (mate) எனும் சொல் பொதுவாக பயன்படுத்தப்படும். சிலவேளைகளில் இரட்டைச் சிலுவைக் (‡) குறியீட்டையும் காணலாம். ஆப்பிள் நிறுவனம் இறுதி முற்றுகையை "≠" எனும் குறியீடு மூலம் அடையாளப்படுத்துகிறது.

விளையாட்டின் முடிவு[தொகு]

நகர்த்தல்களின் இறுதியில் 1–0 இடப்பட்டால் அதில் வெள்ளை வெற்றிபெற்றதாகவும், 0–1 என இடப்பட்டால் அதில் கருப்பு வெற்றிபெற்றதாகவும், ½–½என இடப்பட்டால் அது சமநிலையாகவும் கருதப்படும்.

பெரும்பாலும் ஒரு வீரர் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது பற்றிய எந்தக் குறிப்பும் காணப்படாது (இறுதி முற்றுகையைத் தவிர, மேலே பார்க்க), ஆகையால் ஒரு வீரர் நேரக்கட்டுப்பாட்டால் தோல்வி பெற்றார் அல்லது வேறு வகையில் தோல்வி பெற்றார் என்பதைக் குறிக்க வெறுமனே 1–0 அல்லது 0-1 என எழுதப்படும். சிலநேரங்களில் நேரடியாக வெள்ளை தோல்வியை ஒத்துக்கொண்டார் (White resigns) அல்லது கருப்பு தோல்வியை ஒத்துக்கொண்டார் (Black resigns) என எழுதுவர், ஆனால் இது இயற்கணிதக் குறிமுறையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்படாது, மாறாக ஒரு விவரிப்பு உரையாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

நகர்த்தல்களின் தொடருக்கான குறிமுறை[தொகு]

ஒரு ஆட்டம் அல்லது நகர்த்தல்களின் தொடரானது இரண்டு வகையில் எழுதப்பட்டாலும் பொதுவாக ஒரு வகையிலேயே எழுதப்படும்.

  a b c d e f g h  
8
Chessboard480.svg
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
a6 black pawn
c6 black knight
b5 white bishop
e5 black pawn
e4 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
h1 white rook
8
7 7
6 6
5 5
4 4
3 3
2 2
1 1
  a b c d e f g h  
1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 a6 பின்னரான நிலை
  • இரண்டு நிரல்களாக, வெள்ளை/கருப்பு சோடிகளாக, ஒரு இலக்கம் மற்றும் ஒரு முற்றுப்புள்ளியின் பின் எழுதப்படும்:
    1. e4 e5
    2. Nf3 Nc6
    3. Bb5 a6
  • கிடையாக எழுதப்படும்:
    1. e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 a6

நகர்த்தல்கள் இடையிடையே விலக்கப்படலாம் (மேற்கோள்கள்). விளக்கப்பட்ட பின், அடுத்ததாக கருப்பின் நகர்த்தல் வந்தால், சொல்லெச்சம் (...) வெள்ளையின் நகர்த்தலுக்கான இடத்தை நிரப்பும். உதாரணமாக:

1. e4 e5 2. Nf3
வெள்ளை கருப்பின் e-சிப்பாயைத் தாக்குகின்றது.
2... Nc6
கருப்பு சிப்பாயைப் பாதுகாப்பதுடன் தனது காயையும் அபிவிருத்தி செய்கிறது.
3. Bb5
வெள்ளை உருய் உலோப்பசு திறப்பை செய்கிறது.
3... a6
கருப்பு உருய் உலோப்பசின் மோர்பி தற்காப்பை செய்கிறது.

உதாரணம்[தொகு]

கீழே ஒரு முழு ஆட்டத்தின் இயற்கனிதக் குறிமுறை தரப்பட்டுள்ளது. இந்த ஆட்டம் காஸ்பரோவால் உலகத்திற்கு எதிராகவிளையாடப்பட்டது. காரி காஸ்பரொவ் (வெள்ளையாக) இணையம் மூலம் மிகுதி உலக மக்களோடு (கருப்பாக), உலக அணிகளின் நகர்வுகளில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற நகர்வு, கிராண்ட் மாசுடர்களைக் கொண்ட ஒரு குழுவின் வழிகாட்டலுடன் தெரிவு செய்யப்பட்டு விளையாடப்பட்டது. இந்த ஆட்டமானது மேலே குறிப்பிட்ட குறிமுறைகளுக்கு செயல் விளக்கம் அளிக்கிறது.

Solid white.svg a b c d e f g h Solid white.svg
8 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 8
7 22px-Chess_t45.svg.png b7 black pawn 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png e7 black pawn 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 7
6 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png c6 black knight d6 black pawn e6 black king 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 6
5 22px-Chess_t45.svg.png b5 black pawn 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png e5 black bishop 22px-Chess_t45.svg.png g5 white bishop h5 white pawn 5
4 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png f4 black pawn 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 4
3 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 3
2 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png f2 white pawn g2 white pawn 22px-Chess_t45.svg.png 2
1 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png f1 white rook g1 white king 22px-Chess_t45.svg.png 1
Solid white.svg a b c d e f g h Solid white.svg
31...Kxe6 பின்னரான நிலை
Solid white.svg a b c d e f g h Solid white.svg
8 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 8
7 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png g7 white pawn 22px-Chess_t45.svg.png 7
6 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png f6 white king 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 6
5 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 5
4 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png d4 black pawn e4 black queen 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 4
3 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 3
2 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png f2 white queen 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 2
1 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png c1 black king 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 22px-Chess_t45.svg.png 1
Solid white.svg a b c d e f g h Solid white.svg
62.g7 பின்னரான இறுதி நிலை
1. e4 c5 2. Nf3 d6 3. Bb5+ Bd7 4. Bxd7+ Qxd7 5. c4 Nc6 6. Nc3 Nf6 7. 0-0 g6 8. d4 cxd4 9. Nxd4 Bg7 10. Nde2 Qe6!? (இரினா குருசு ஆல் பரிந்துரைக்கப்பட்ட இந்த விந்தையான நகர்த்தலானது உலக அணிக்கு பெரும் திருப்பமாக கருதப்படுகிறது)11. Nd5 Qxe4 12. Nc7+ Kd7 13. Nxa8 Qxc4 14. Nb6+ axb6 15. Nc3 Ra8 16. a4 Ne4 17. Nxe4 Qxe4 18. Qb3 f5 19. Bg5 Qb4 20. Qf7 Be5 21. h3 Rxa4 22. Rxa4 Qxa4 23. Qxh7 Bxb2 24. Qxg6 Qe4 25. Qf7 Bd4 26. Qb3 f4 27. Qf7 Be5 28. h4 b5 29. h5 Qc4 30. Qf5+ Qe6 31. Qxe6+ Kxe6 (படத்தைப் பார்க்கவும்) 32. g3 fxg3 33. fxg3 b4 (உலக அணியானது 33...Bxg3 34.h6 Be5 35.h7 Bg7 36.Rf8 b4 37.h8=Q Bxh8 38.Rxh8 இதை நம்பவில்லை) 34. Bf4 Bd4+ 35. Kh1! b3 36. g4 Kd5 37. g5 e6 38. h6 Ne7 39. Rd1 e5 40. Be3 Kc4 41. Bxd4 exd4 42. Kg2 b2 43. Kf3 Kc3 44. h7 Ng6 45. Ke4 Kc2 46. Rh1 d3 (46...b1=Q? 47.Rxb1 Kxb1 48.Kxd4 செய்து வெள்ளை வெற்றி பெற்றுவிடும்) 47. Kf5 b1=Q 48. Rxb1 Kxb1 49. Kxg6 d2 50. h8=Q d1=Q 51. Qh7 b5?! 52. Kf6+ Kb2 53. Qh2+ Ka1 54. Qf4 b4? 55. Qxb4 Qf3+ 56. Kg7 d5 57. Qd4+ Kb1 58. g6 Qe4 59. Qg1+ Kb2 60. Qf2+ Kc1 61. Kf6 d4 62. g7 1–0
https://ta.wikipedia.org/wiki/இயற்கணிதக்_குறிமுறை_(சதுரங்கம்)
Posted
On 14/06/2016 at 8:47 AM, ஜீவன் சிவா said:

புதிர் 0002

0002.png
imgurl

இதுவரை யாரும் விடையை தராமையால் நானே எழுதிவிடுகின்றேன். சரி பார்த்துக் கொள்ளுங்கள் உறவுகளே. சந்தேகம் இருந்தால் தாராளமாக கேட்கலாம்.

Kb7, Ka5 ( வெள்ளை ராஜாவின் இந்த நகர்வுக்கு பின்னர் கருப்பு ராஜா போவதற்கு இந்த ஒரு இடம் மட்டுமே மிச்சமுள்ளது.)

Qa6#

தவறுதலாக வெள்ளை  (அதாவது ராணியை )  C3  (Q C3) இக்கு நகர்த்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாராவது பதில் சொல்லுங்களேன்.

  • 4 weeks later...
Posted

stalemate and game end up with Draw.

Because there is no moves for Black King.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.