Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடிமுழக்கம்

Featured Replies

இடிமுழக்கம் குறும்படம் இங்கே.

http://desu2.mcmblogs.net/mon_weblog/files...am_the_film.wmv

http://desu2.mcmblogs.net/mon_weblog/files...akkam_divx.divx

விமர்சனங்கள் தேவை. நன்றி.

படத்தை முழுமையாக பார்த்து முடிக்கவில்லை. ஒரு பகுதியை பார்த்துள்ளேன்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....

  • தொடங்கியவர்

இப்படத்துக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை ...

எமது இளைஞர்களின் கலை படைப்புக்களை உள்வாங்கி...

அவற்றின் உணர்வுகளை உணர்கின்ற உங்களில் ஒருவன்....

நின்ற இடத்தில் இருந்து கொஞ்சம் முன்நகர்த்தி பாருங்கள் வேலைசெய்யும் குளகாட்டன்.

(.wmv or .divx file களில் வேலை செய்யும். அப்பகுதிதான் இந்த குறும் படத்தின் கரு :lol: )

நன்றி

Edited by Netfriend

  • 2 weeks later...

அப்படிய? உங்களுக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? இணைய நண்பா :P

இணைத்தமைக்கு நன்றி. நான் இன்றுதன் ஒலி அமைப்புடன் படத்தை பார்த்தேன். ஆனாலும் இறுதி கட்டம் பார்க்க முடியவில்லை. கோப்பில் குழப்பம் என்று விண்டோஸ் மிடியா பிளேயர் காட்ட மறுத்துவிட்டது.

இப்படத்தில் வருவது கற்பனையே என்று போட்டிருக்கே??

விமர்சனம் செய்யுமளவுக்கு எனக்கு முடியாது. ஆனால் புலம்பெயர் இளையவர்களின் ஒரு பக்கத்தை காட்ட முயன்றிருக்கிறார்கள்.

அதற்கு பாராட்டுக்கள்.

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

இளையசமுதாயத்தை... அதே இளையசமுதாயம்... திருத்தவோ... நய்யபுடைப்பதோ...

துணிந்து தம் கருத்தை சொல்வது... செய்வது.... ஒருபடைப்புத்தான் :icon_idea: இந்த இணைய உலகில்... (நான் இளைஞன் அல்ல) அதை நாம் இங்கு கருத்தாடுதல் ...விமர்சித்தல் நமக்கு நன்மைபயக்கும் (அது யாழுக்கோ அல்லது உரிமையானவர்களுக்கும் மட்டும் அல்ல... அவர்களுக்கு இதனால் எத்தனையோ பிரச்சனைகள் எழுந்தாலும்...இருந்தாலும் ...:icon_idea: )

winamp பில் வேலைசெய்யும் முயற்சியுங்கள் குளகாட்டன்.

Edited by Netfriend

இடி முழக்கம் - சிறு விளக்கம்: சுமார் இருபது நிமிடங்கள் இடி முழக்கத்தை பார்த்த பின் இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இடி முழக்கம் என்ற குறும்படம் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டுங்கெட்டான் இளைய தமிழ் சமூகத்தின் (அதாவது இப்பிள்ளைகளில் தாய் நிலத்தின் வாசனையும் இல்லை. அடைக்கலம் புகுந்த தேசத்தின் வாசனையும் இல்லை) சில வாழ்வியல் போக்குகளை, பிரச்சினைகளை அழகாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. புலம்பெயர்ந்த நாட்டில் வாழும், வாழப்போகும் தமிழ்ப்பெற்றோருக்கு தமது குழந்தைகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவேண்டிய சில ஆபத்தான செய்திகளை பற்றி தலையில் இடியாக வந்து முழங்குகின்றது.

கதையில் வரும் பாத்திரங்கள் நட்பென்றால், காதலென்றால், குடும்பமென்றால், ஏன் வாழ்க்கையென்றால் கூட எதுவென்று புரியாத ஞானசூனியங்களாக, விலங்குகளாக வாழ்கின்றார்கள். அடி, தடி, ரகளைகள் செய்தல், ஆட்களை வெருட்டுதல், புகைப்பிடித்தல், போதையடித்தல், பெண்களைத் துரத்துதல், டேட்டிங் செய்தல், பெற்றோரை ஏமாற்றுதல், பெரியோர்சொல் கேட்காமை போன்ற புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் ஒரு அவரேஜ் தமிழ் இளைஞனின் அல்லது யுவதியின் அடையாளச் சின்னங்கள், குணாம்சங்கள் படத்தில் அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இளஞ்சமூகம் எவ்வாறு தமிழை, தன் தாய்மொழியை பேசுகின்றது, உச்சரிக்கின்றது என்பது படத்தில் பார்க்க வேண்டிய அருமையான அம்சம். படத்தின் காட்சியமைப்புக்களும் கச்சிதமாக உள்ளது.

ஆகா, ஓகோ என்று இந்தியக் களைஞர்களை வைத்து வியாபாரம் செய்யும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் 'இடிமுழக்கம்' போன்ற நம்மவரின் கலைப்படைப்புக்களை ஊக்குவிப்பது எதிர்காலத்தில் ஆயிரம், ஆயிரம் மானமுள்ள தமிழ்ப் பெற்றோர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஆகக் குறைந்தது தமது கோவணங்களோடாவது வாழ்ந்திட உதவியாக இருக்கும்.

70/100

நன்றி இணைய நண்பா.... இறுதி 2 நிமிடங்களை இன்று தான் பார்க்க முடிதது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

உனது நண்பன் யாரென்று சொல்லு

நான் உன்னை யார் என்று சொல்லுகிறேன் என்பார்கள்

TELL ME WHO IS YOUR FRIEND

I WILL SAY WHO YOU ARE

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயரின் இளம் தலைமுறைகளின் பொறுப்பில்லா தன்மைகள் குறும்படமாக காட்டிய விதம் அழகு. இதை பார்த்து எம்மவர் திருந்த வேண்டும்.

பெற்றோரின் கவனிப்பற்ற தன்மையாலும் இப்படிப்பட்டவர்கள் உருவாவத்ற்கு காரணமாக இருக்கின்றது.

லண்டனிலும் இப்படி பல குழுக்கள் இணைந்து இவ்வகைச் செயல்களில் இறங்கி இறுதியில் கொலை, கொள்ளை, கற்பளிப்பு எல்லாம் நடந்தேறி, இறுதியில் வாழ்வினை தொலைக்கின்றார்கள்.

இவர்கள் தானாக திருந்தவேண்டும்.

படிப்பினையைத்தரும் இந்த படைப்பினை இணைத்தமைக்கு நன்றி.

இணைப்புக்கு நன்றி.

உனது நண்பன் யாரென்று சொல்லு

நான் உன்னை யார் என்று சொல்லுகிறேன் என்பார்கள்

TELL ME WHO IS YOUR FRIEND

I WILL SAY WHO YOU ARE

அழகாய் சொல்லியிருக்கிறிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைத்ததுக்கு மிக்க நன்றி Netfriend. இடிமுழக்கம் மிகவும் நன்றாக எடுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக மெல்லிய நகையாடல் தொனி இழையோட கதை சொல்லியிருப்பது, எடுத்தாண்ட கருவை கதையாக்கவுதற்கு பொருத்தமாகவுள்ளது... பிரச்சார நெடியில்லாமலிருப்பதற்கு அது உதவியிருக்கும் என நம்புகிறேன். ம்... புலம்பெயர்ந்த இளம்தமிழ் சமுதாயகம் விழிப்படைந்தால் நல்லது! அப்படி விழிப்படைய எடுக்கும் இது போன்ற முயற்சிகள் பாராட்டக்கத்தக்கன.

  • தொடங்கியவர்

உனது நண்பன் யாரென்று சொல்லு

நான் உன்னை யார் என்று சொல்லுகிறேன் என்பார்கள்

ஈழபிரியன் எனக்கு அது பொருந்தாது... ;)

http://www.voicetamil.com/index.php?option...view&id=105

Edited by Netfriend

நல்ல குறும்படம் யதார்த்ததை பிரதிபலிகின்றது

இடிமுழக்கம் ஜதார்த்தமான ஒரு குறும்படம்.

சிறு குழந்தைகளாகச் சிறுவயதிலேயே பெற்றோருடன் சேர்ந்து புலம்பெயர்ந்த

தமிழ் இளையோர் சிலரது வாழ்க்கை சரியான வழிகாட்டலின்றி சின்னாபின்னப்பட்டுப்

போவதை இப்படம் சிறிய கண்ணோட்டத்துடன் சித்தரிக்கிறது.

இவ்வகை இளையோர் ஒருபுறமிருக்க இன்னுமொருவகை இங்கு பிறந்து வளர்ந்த

முதலாவது தலைமுறை தமிழ் இளையோர். ஒளிமயமான எதிர்காலத்தை

அமைத்துக்கொள்வதற்கு கோடி சந்தர்ப்பங்கள் இவர்கள் காலடியில் கிடக்க

அதைக் கண்டுகொள்ளாது உதாசீனம் செய்வதுமல்லாமல் தமது கலாசாரத்தையும்

இவர்கள் பேணுவது கிடையாது. இவர்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் மொழிப்பிரச்சனை

என்று எதுவும் கிடையாது ஆனால் கலாசாரத்தைப் பொறுத்தளவில் இரண்டு தோணியில்

கால்வைத்தவர்களாக இருந்து தடுமாறுவார்கள். இவர்களும்கூட பெற்றோரின் சரியான

வழிகாட்டலின்றி வாழ்வில் கஷ்டங்களை அனுபவிப்பது அன்றாடம் நாம் காணும்

விடயம். இடிமுழக்கம் இவர்களுக்குந்தான் சரியான பாடம்.

படத்தை ஆரம்பம்முதல் இறுதிவரை வி.எல்.சி மீடியா பிளேயரில் பார்த்தேன்.

சுமாராகவே இருந்தது, எதுவித தொழில் நுட்பக்கோளாறும் இருக்கவில்லை.

ஆனால் ஆரம்பத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிகவும் வேகம் குறைந்து

காணப்பட்டது.

நல்ல முயற்சி. எனது பாராட்டுகள்.

வி.எல்.சி மீடியா பிளேயர் தரவிறக்கம் செய்ய:

http://www.videolan.org/vlc/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல குறும்படம் யதார்த்ததை பிரதிபலிகின்றது

ஒஸ்திரேலியாவிலும் இந்தப் பிரச்சினை இருக்கோ? :rolleyes:

ஒஸ்திரேலியாவிலும் இந்தப் பிரச்சினை இருக்கோ? :rolleyes:

ஒஸ்திரேலியாவில் காங் பிரச்சினை இல்லை இப்படி சேட்டைகளும் இல்லை ஆயுதபுழக்கம் எம்மவரிடம் இல்லை ஆனால் பிள்ளைகளை கவனிக்காமல் வேலை பணம் என ஓடிதிரியும் பெற்றோர் அதிகம் இது மெல்பேன் நிலவரம் சிட்னி பற்றி எனக்கு தெரியாது அங்கும் இல்லை எனவே நினைகின்றேன்.

இங்கு எம்மவருக்கு நல்ல மதிப்புள்ளது வேலைகளை இலகுவாக பெறமுடியும் அத்துடன் வேறு நாட்டவர் எம்மவர் மீதும் எம் தோலின் நிறத்தை கொண்டவர் மீதும் நாம்பிக்க்கை வைத்துள்ளார்கள்

ஏன் இதில் காட்டப்படும் காட்சிகாள் உண்மையாக நடக்குமா???அப்படி நடக்க காரணம் யாது?? ஆயுத புழக்கம் அதிகமா??

இவ் குறும்படத்தை பார்க்க divx தரவிறக்கி இன்ரோல் பண்ணினால் விண்டோஸ் மிடியா பிளையரிலும் பார்க்கலாம்

http://www.divx.com/

அல்லது நான் நினைகின்றேன் divx code ஜ மட்டும் இன்ரோல் பண்ணினாலும் பார்க்ககூடியதாக இருக்கும் என நினைகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... ஏன் இதில் காட்டப்படும் காட்சிகாள் உண்மையாக நடக்குமா???அப்படி நடக்க காரணம் யாது?? ஆயுத புழக்கம் அதிகமா??

...

அந்த சட்டைக்க கைவிட்ட கதைய விட மற்ற அன்னைத்தும் ஐரோப்பா/கனடாவில நடந்தாகக் கேள்விப்பட்டுள்ளேன். <_< இப்பொழுது இப்பிரச்சினை முன்னரிலும் பார்க்க குறைந்துள்ளது, ஆனால் முற்றாக ஒழிந்துவிடவில்லை என நம்புகிறேன்.

காரணங்கள் என்றால் எனது ஊகம்:

-பெற்றோர் (இருவரும்) வேலையில் அதிக நேரம் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம்.

-பெற்றோரை விட பிள்ளைகள் விரைவாக புலம்பெயர் நாட்டுநடப்புகளை கற்றறியும் வாய்பும்/நிகழ்வும் பெற்றோரின் அத்தாறிற்ரியை செல்லுபடியாகாமல் போகச்செய்தல்.

-பதின்ம வயதுகளில் வந்தோர் சிலர் இங்குள்ளவர்க்ளுடன் (வெள்ளையர்) சகசமாக புழங்க(முடிய)வில்லை, அதால் இச்சமூகதின் பால் வெறுப்பு, அதன் தொடர்ச்சியாக அவர்களீன் கரும்புள்ளி/செம்புள்ளிகளுக்கும் (police record/ rules & regulations) மதிப்பளிக்காமை.

-இங்குள்ள ஊடங்கங்கள், காங் கள்சர் முதலியன.

ஆயுத புழக்கம் அதிகம் உண்டு, இப்பட்டத்தில் அவர்களுக்குள் தான் மோதி சாகிறார்கள், நிஜ வாழ்வில் பல அப்பாவிகளையும் ஆள்மாறாட்ட, குறொஸ் ஃபயர், அவர்களின் ஆணவத்தைத் (தவறுவதாகவேனும்) சீண்டப்பட்டதால் எண்டு போட்டுத்தள்ளியுள்ளனர்.

  • தொடங்கியவர்

இதையும்...

புலத்தோர் பார்க்கவேண்டியது கட்டாயம்..... :D

பார்தீர்களா... :(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.