Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டிக் கதைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


sonertSdop8f4cg128 u16201iem27lhr096à mcH9m:,481625t7f6tmh3h
 ·

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா என்ற குழப்பம் உண்டாகியது.. எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான். கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இது வரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்தன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம். நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தாருக்கு அனுப்பிடுவோம்னு பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது. தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு

மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது. கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே.. கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான். கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்.. நமக்கு எதுக்கு வம்புன்னு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..

அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார். அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும் அந்த அனுபவத்தின்படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை.. ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து.. மாநில அமைச்சரிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு வந்து..

மாவட்ட கலெக்டரிடமிருந்து

தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து

விஏஓக்கு வந்து..

விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது...

#Repeated multiple times....!

631735896_122275637726037466_86074196363

  • Replies 341
  • Views 72.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • கருத்துக்கள உறவுகள்


rtdsSpoeon2it06cicfi0 cf1g871e1l7tf21rlu4lH714f,9u3h à38771:
 ·

கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி.

திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.

பிறகு நடந்தவை:

“குட் ஈவினிங் குமார் சார்!” -

இது கேட்கீப்பர்.

உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?

குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.

பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?.

குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே.

நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….

அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?

ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க….

டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க….

வேற யாரும் கிடைக்கலையா?...

(குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....)......!

633588358_2727351464314754_6075127944005

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் பெருமை a une nouvelle photo. 

Suivre

osorendtpSfaa67uihlt9a91c1lt5c17g2079m801u112h3c07t8hf i3c50 ·

சன் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செய்தேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கடைத்தெருவில்தான் அந்தக் கீரை விற்கும் 75 அல்லது 80 வயது இருக்கும் பாட்டியைச் சந்தித்தேன்.

ஒரு சிவப்பு சின்னாளம்பட்டு புடைவை, கருப்பு ரவிக்கை, நெற்றியில் நாலணா அளவிற்கு குங்குமப்பொட்டு, கருப்பு ஆனாலும் வசீகரமான முக அமைப்பு... அந்தப் பாட்டியிடம் என்னை அறியாமல் அழைத்துச்சென்றது.

முதல் சந்திப்பே ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபுபோல ஒரு சண்டையில் ஆரம்பமானது. பாட்டியா? ஆயாவா? எப்படிக் கூப்பிடுவது? என்ற சந்தேகத்துடன் எங்கள் வீட்டு வழக்கப்படி பாட்டி, “அகத்திக் கீரை இருக்கா?”ன்னு கேட்டேன்.

“இருக்கு ராசா. முழு கீர, அரக்கீர, பொன்னாங்கண்ணிக் கீர, பருப்புக்கீர எல்லாம் இருக்கு. பாலக் வேணுமா? இதோ இருக்கு” என்றாள் பாட்டி.

“எனக்கு அகத்தி கீரதான் வேணும். மாட்டுக்குப் போடணும்” என்றேன்.

“நல்ல மகராசனா போடு. இந்தா இந்தக் கட்டு நாற்பது ரூபா.”

“நாற்பது ரூபாவா. ஏன் பாட்டி இவ்வளவு வெல சொல்ற. கீரயா, தங்கமா இது?” என்றேன்.

அவ்வளவுதான் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.

“இந்தாய்யா கீர வேணும்னா வாங்கு. தங்கம் வைரம்னு வீணா பேசாதே” என்றாள் பாட்டி.

பாட்டிக்கு இவ்ளோ கோபம் வரும்னா எனக்கு எவ்ளோ வரும்.

“பாட்டி நீ மட்டும்தான் கீர விக்கிறியா? இன்னும் எவ்வளவு கடையிருக்கு. நான் முப்பது ரூபாய்க்கு இதே கீரயா வாங்கிக் காட்டுகிறேன் பார்.” அப்படீன்னு சவால் விட்டுட்டு பக்கத்துலே உள்ள எல்லா கடைகளிலும் அகத்தி கீர விலை கேட்டேன். 50 ரூபாய், 45 ரூபாய் என்றனர். மழை சரியாக பெய்யலையாம். அதனால் எல்லா காய்கறி விலையும் ஏறிடுத்தாம்.

வேற வழியில்லாம 45 ரூபாய் சொன்ன ஒரு அம்மாவிடம் கீரைய வாங்கினேன். ஆனா, பாட்டியோட நேர்மை மட்டும் என்னைக் கவர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் அதிக விலைவைத்து விற்கும்போது, பாட்டி மட்டும் நியாயமா விற்கிறது என் மனதைத் தொட்டது.

அடுத்த வெள்ளிக்கிழமை சைக்கிள் நேராக பாட்டி கடைக்கு நின்றது.

“வா ராசா... இந்த அகத்தி கீரை” என்று பழசையெல்லாம் மறந்து என்னைப் பார்த்து பாசமாக பேச ஆரம்பித்தாள்.

“மாட்டுக்குத்தான போடற. இந்தா இதையும் போடு” என்று இலவசமாக ஒரு கட்டையும் கொடுத்தாள்.

“டீ சாப்பிடறயா பாட்டி?” என்றேன்.

“வேண்டாம்யா. இப்பதான் ஒரு டீ குடிச்சேன்.”

இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பல வாரங்களைக் கடந்தது. செவ்வாய், வெள்ளி என்றாலே பாட்டியைப் பார்க்கப் போகும் உற்சாகம் என்னைத் தழுவும்.

அன்று கடைத்தெருவிற்கு 6 மணிக்கே சென்றேன். பாட்டி அப்போதுதான் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஒரு பாய், ஒரு பெரிய மரப்பெட்டி. இவ்வளவுதான் கடை. (‘சந்திரமுகி’ கட்டிலை அநாயாசமாக தூக்குவதுபோல்) அந்தப் பெரிய மரப்பெட்டியைத் தூக்கி முன்னாலே வைத்து அதில் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்துள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளை அடுக்கினாள். பின்பு எல்லாவற்றிலும் தண்ணீர் தெளித்தாள். என்னைப் பார்த்ததும் “என்ன ராசா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்றாள்.

“அது இருக்கட்டும் பாட்டி. நீ ஏன் தனியா கஷ்டப்படறே. உன் வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்றேன்.

“அதையேன் கேட்கற ராசா. என் புருசன் நல்லவருதான். கல்யாணம் ஆன புதிசுல என்ன அப்படி பாத்துப்பான். (பொக்கை வாயில் வெட்கம்) ஆனா பாரு... அப்புறம் வேற ஒருத்தியோட குடுத்தனம் நடத்தப் போயிட்டான். அவளும் இவன்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் வாங்கிட்டு அம்போனு நடுத்தெருவில விட்டுட்டா. பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாம திரும்ப என்கிட்டேயே வந்து விழுந்தான். இதுல குடி வேற. என்ன பண்றது?

நான் காய்கறி வித்து வரக் காசுல என் ஒரே பொண்ணு திருவண்ணாமலைல இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் அனுப்புறேன். மீதிய நானும் வுட்டுக்காரரும் கஞ்சி குடிக்க வச்சுக்குவோம். அப்பப்ப குடிக்கவும் அவனுக்கு பணம் குடுக்கறேன். போயிட்டு போறான். நம்மதான் இப்படி வெய்யில்லயும் மழைலயும் பாடுபடறோம். அவனாவது குடிச்சிட்டுக் கவலையில்லாம இருக்கட்டுமே” என்றார்.

எனக்கு இப்போது பாட்டி இளங்கோவடிகளின் கண்ணகியைப்போல் தோன்றினாள்.

“அப்புறம் ராசா, என் பொண்ணுக்கு ஒரே பையன். கான்வென்ட்ல படிக்கறான். இங்கிலிசு நல்லா பேசறான். போன லீவுக்கு போய்ப் பார்த்தேன். Grandma comeன்னு ஏதேதோ சொல்லுது. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. கொழந்தை நல்லா இருக்கணும். என் உயிரே அவன்தான். என் கதைய வுடு. இந்த அகத்திக்கீரை” என்று கீரைக்கட்டை நீட்டினாள். கூடவே இலவச கட்டும் இருந்தது.

பல வாரங்கள் கடந்தன. ஒருநாள் நான் சற்று லேட்டாகக் கடைக்குச் சென்றேன். அங்கே பாட்டி வழக்கமான சிரிப்புக்குப் பதிலா ரொம்பவும் பதற்றமாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள்.

“என் ராசா வந்துட்டயா. உனக்கு கீரைய குடுத்துட்டுதான் ஊருக்குக் கிளம்பணும்னு இருக்கேன்.”

“ஏன் பாட்டி என்ன ஆச்சு?” என்றேன்.

“அதையேன் கேட்கற. நேத்து புள்ளைய ஸ்கூல்ல வுட சைக்கிள்ள போன என் பொண்ணு மேலே ஒரு லாரி மோதிட்டான். பொண்ணும் பேரனும் பக்கத்துல இருந்த பள்ளத்தில் விழுந்து ரொம்ப அடியாம். பொண்ணு இப்ப பரவாயில்லையாம். ஆனா, குழந்தைதான் இன்னும் கண்ணு முழிக்கலையாம். ராசா தலைல நல்ல அடியாம். திருவண்ணாமலை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் எப்படி உயிரோடு இருப்பேன்? இந்த ராசா கீரை புடி. நான் கிளம்பறேன்...” என்றாள்.

பாட்டியின் இந்த நிலைமையிலும் வாடிக்கைக்காரரை மதிக்கும் உயர்ந்த எண்ணம் என்னை உலுக்கியது.

“கொஞ்சம் இரு பாட்டி... இப்ப எப்படி திருவண்ணாமலைக்கு போவ?” என்றேன்.

அழுகையுடன் “இப்ப 1ஆம் நம்பர் பஸ் வரும். அதுல ஏறி கோயம்பேடு போயி அங்கேருந்து 122 பஸ் புடிச்சு போயிடறேன்” என்றாள்.

“கொஞ்சம் இரு பாட்டி” என்று சொல்லி பாக்கெட்டில் கையை விட்டேன். ஒரு 100 ரூபாய்தான் இருந்தது. நல்லவேளை எச்.எப்.டி. டெபிட்கார்டும் கூடவே இருந்தது. பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் 5000 ரூபாய் எடுத்தேன். ஓலா ஆப்பில் ஒரு கேப் புக் பண்ணி கோயம்பேடுக்கு பாட்டி சீக்கிரம் செல்ல ஏற்பாடு செய்தேன்.

“பாட்டி இதை வச்சுக்கோ. இப் ஓலா வரும். அதுல எத்திவுடறேன். உன் பேரனுக்கு ஒண்ணும் ஆவாது. திருவண்ணாமலை அருணாசலம் பாத்துப்பார். நீ கவலை படமா போயிட்டு வா” என்றேன்.

பாட்டி கண்களில் தாரைதாரையாக கண்ணீர். என் கண்களிலும்தான். எப்படியோ பாட்டியை ஓலாவில் ஏத்திவிட்டு ஒடிபியை டிரைவரிடம் சொல்லி பாட்டியை பத்திரமாக அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.

அப்புறம் மூன்று, நான்கு வாரங்களுக்கு பாட்டியைக் காணோம். பேரனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. பாட்டியை பார்க்காத ஏக்கம் வேறு. கடைத்தெரு எனக்குப் பாலைவனமாகத் தோன்றியது.

அடுத்த வாரம், பாட்டி கடையைத் திறக்காமல் ஓரமாக நின்றுகொண்டு நான் வருகிறேனா என்று பார்த்தவாறு இருந்தாள். பாட்டியைக் கண்ட மகிழ்ச்சியில் சைக்கிளை வேகமாக ஒட்டி பாட்டியிடம் சென்று நிறுத்தினேன்.

நான் பேசுவதற்குள் பாட்டி பேசினாள். “ராசா உன் புண்ணியத்தால பேரன் உயிர் பொழைச்சுட்டான். நீ சொன்ன அண்ணாமலை என்னைக் கைவுடல. நா போய் ஆஸ்பத்திரி நிக்கவும் பேரன் கண் முழிச்சி, பாட்டி வந்துட்டாயான்னா கேட்கவும் சரியா இருந்தது ராசா. நேரத்துல எனக்கு உதவி செஞ்சியே. இந்தா உன் பணம். ஊர்ல ஒரு பழைய மாட்டு வண்டி இருந்தது. அத வித்துத்தான் உன் பணத்தை ரெடி பண்ணி கொண்டாந்திருக்கே. இந்தா பிடி. இப்பவும் நான் திருவண்ணாமலைக்குத்தான் என் புருஷனையும் இட்டுக்குனு போறேன். என் பொண்ணு கூடவே இருந்து பேரனைப் பாத்துக்கப் போறேன். உன்னப் பாத்து சொல்லிட்டுத்தான் போணும்னு நின்னிருக்கேன். வரேன் ராசா. ஒனக்கு எவ்வளவு பெரிய மனசு. 5000 ரூவாவ முள்ளங்கி பத்த மாதிரி எடுத்துக் கொடுத்து பேரன போயி பார் பாட்டீன்னியே.

யார் ராசா அப்படி பண்ணுவா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் ராசா. இதோ 1 நம்பர் பஸ் வருது. நான் வரேன்.”

பாட்டி பஸ்சில் ஏறும்போது என் கையில் இருந்த அந்த 5000 ரூபாயை பாட்டி கையில் திணித்தேன். “இது என் ஞாபகமா வச்சுக்கோ” என்றேன்.

“எனக்கு எதுக்கு ராசா இவ்வளவு பணம்?” என்றாள்.

“பேரனுக்கு நல்ல டிரஸ் வாங்கிக் குடு. விளையாட பொம்மை இந்த மாமா வாங்கி தந்ததா சொல்லி வாங்கிக்கொடு.”

பாட்டி புடவை தலைப்பால் கண்களை துடைப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. என் மனம் அமைதியின்றி தவித்தது. எத்தனையோ பிரிவுகளை சந்தித்த மனம் பாட்டியின் பிரிவை ஏன் ஏற்க மறுக்கிறது? பாட்டிக்கும் எனக்கு என்ன தொடர்பு. ஏன் இந்த நட்பு? புரியவில்லை.

காஞ்சி பெரியவரின் பொன்மொழி மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. “ஈஸ்வரன் நமக்கு சம்மந்தம் இல்லாது பலவற்றுடன் நம்மைச் சம்மந்திப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான்". கல்கியில் வந்த புனைவு கதை.

#தமிழ்_வரிகள் #சிறுகதைகள் #தமிழில்பகிர்வோம் #அறிந்து_கொள்வோம்


637726209_1348468770630647_4750315780849

பாட்டி ஏன் மஞ்சள் ஜாக்கட் போட்டிருக்கு என்று யாராவது கேட்டால் அவர்கள் கதையை ஊன்றிப் படித்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி . .........! 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

தமிழ் மொழியின் பெருமை a une nouvelle photo. 

Suivre

osorendtpSfaa67uihlt9a91c1lt5c17g2079m801u112h3c07t8hf i3c50 ·

சன் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செய்தேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கடைத்தெருவில்தான் அந்தக் கீரை விற்கும் 75 அல்லது 80 வயது இருக்கும் பாட்டியைச் சந்தித்தேன்.

ஒரு சிவப்பு சின்னாளம்பட்டு புடைவை, கருப்பு ரவிக்கை, நெற்றியில் நாலணா அளவிற்கு குங்குமப்பொட்டு, கருப்பு ஆனாலும் வசீகரமான முக அமைப்பு... அந்தப் பாட்டியிடம் என்னை அறியாமல் அழைத்துச்சென்றது.

முதல் சந்திப்பே ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபுபோல ஒரு சண்டையில் ஆரம்பமானது. பாட்டியா? ஆயாவா? எப்படிக் கூப்பிடுவது? என்ற சந்தேகத்துடன் எங்கள் வீட்டு வழக்கப்படி பாட்டி, “அகத்திக் கீரை இருக்கா?”ன்னு கேட்டேன்.

“இருக்கு ராசா. முழு கீர, அரக்கீர, பொன்னாங்கண்ணிக் கீர, பருப்புக்கீர எல்லாம் இருக்கு. பாலக் வேணுமா? இதோ இருக்கு” என்றாள் பாட்டி.

“எனக்கு அகத்தி கீரதான் வேணும். மாட்டுக்குப் போடணும்” என்றேன்.

“நல்ல மகராசனா போடு. இந்தா இந்தக் கட்டு நாற்பது ரூபா.”

“நாற்பது ரூபாவா. ஏன் பாட்டி இவ்வளவு வெல சொல்ற. கீரயா, தங்கமா இது?” என்றேன்.

அவ்வளவுதான் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.

“இந்தாய்யா கீர வேணும்னா வாங்கு. தங்கம் வைரம்னு வீணா பேசாதே” என்றாள் பாட்டி.

பாட்டிக்கு இவ்ளோ கோபம் வரும்னா எனக்கு எவ்ளோ வரும்.

“பாட்டி நீ மட்டும்தான் கீர விக்கிறியா? இன்னும் எவ்வளவு கடையிருக்கு. நான் முப்பது ரூபாய்க்கு இதே கீரயா வாங்கிக் காட்டுகிறேன் பார்.” அப்படீன்னு சவால் விட்டுட்டு பக்கத்துலே உள்ள எல்லா கடைகளிலும் அகத்தி கீர விலை கேட்டேன். 50 ரூபாய், 45 ரூபாய் என்றனர். மழை சரியாக பெய்யலையாம். அதனால் எல்லா காய்கறி விலையும் ஏறிடுத்தாம்.

வேற வழியில்லாம 45 ரூபாய் சொன்ன ஒரு அம்மாவிடம் கீரைய வாங்கினேன். ஆனா, பாட்டியோட நேர்மை மட்டும் என்னைக் கவர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் அதிக விலைவைத்து விற்கும்போது, பாட்டி மட்டும் நியாயமா விற்கிறது என் மனதைத் தொட்டது.

அடுத்த வெள்ளிக்கிழமை சைக்கிள் நேராக பாட்டி கடைக்கு நின்றது.

“வா ராசா... இந்த அகத்தி கீரை” என்று பழசையெல்லாம் மறந்து என்னைப் பார்த்து பாசமாக பேச ஆரம்பித்தாள்.

“மாட்டுக்குத்தான போடற. இந்தா இதையும் போடு” என்று இலவசமாக ஒரு கட்டையும் கொடுத்தாள்.

“டீ சாப்பிடறயா பாட்டி?” என்றேன்.

“வேண்டாம்யா. இப்பதான் ஒரு டீ குடிச்சேன்.”

இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பல வாரங்களைக் கடந்தது. செவ்வாய், வெள்ளி என்றாலே பாட்டியைப் பார்க்கப் போகும் உற்சாகம் என்னைத் தழுவும்.

அன்று கடைத்தெருவிற்கு 6 மணிக்கே சென்றேன். பாட்டி அப்போதுதான் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஒரு பாய், ஒரு பெரிய மரப்பெட்டி. இவ்வளவுதான் கடை. (‘சந்திரமுகி’ கட்டிலை அநாயாசமாக தூக்குவதுபோல்) அந்தப் பெரிய மரப்பெட்டியைத் தூக்கி முன்னாலே வைத்து அதில் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்துள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளை அடுக்கினாள். பின்பு எல்லாவற்றிலும் தண்ணீர் தெளித்தாள். என்னைப் பார்த்ததும் “என்ன ராசா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்றாள்.

“அது இருக்கட்டும் பாட்டி. நீ ஏன் தனியா கஷ்டப்படறே. உன் வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்றேன்.

“அதையேன் கேட்கற ராசா. என் புருசன் நல்லவருதான். கல்யாணம் ஆன புதிசுல என்ன அப்படி பாத்துப்பான். (பொக்கை வாயில் வெட்கம்) ஆனா பாரு... அப்புறம் வேற ஒருத்தியோட குடுத்தனம் நடத்தப் போயிட்டான். அவளும் இவன்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் வாங்கிட்டு அம்போனு நடுத்தெருவில விட்டுட்டா. பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாம திரும்ப என்கிட்டேயே வந்து விழுந்தான். இதுல குடி வேற. என்ன பண்றது?

நான் காய்கறி வித்து வரக் காசுல என் ஒரே பொண்ணு திருவண்ணாமலைல இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் அனுப்புறேன். மீதிய நானும் வுட்டுக்காரரும் கஞ்சி குடிக்க வச்சுக்குவோம். அப்பப்ப குடிக்கவும் அவனுக்கு பணம் குடுக்கறேன். போயிட்டு போறான். நம்மதான் இப்படி வெய்யில்லயும் மழைலயும் பாடுபடறோம். அவனாவது குடிச்சிட்டுக் கவலையில்லாம இருக்கட்டுமே” என்றார்.

எனக்கு இப்போது பாட்டி இளங்கோவடிகளின் கண்ணகியைப்போல் தோன்றினாள்.

“அப்புறம் ராசா, என் பொண்ணுக்கு ஒரே பையன். கான்வென்ட்ல படிக்கறான். இங்கிலிசு நல்லா பேசறான். போன லீவுக்கு போய்ப் பார்த்தேன். Grandma comeன்னு ஏதேதோ சொல்லுது. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. கொழந்தை நல்லா இருக்கணும். என் உயிரே அவன்தான். என் கதைய வுடு. இந்த அகத்திக்கீரை” என்று கீரைக்கட்டை நீட்டினாள். கூடவே இலவச கட்டும் இருந்தது.

பல வாரங்கள் கடந்தன. ஒருநாள் நான் சற்று லேட்டாகக் கடைக்குச் சென்றேன். அங்கே பாட்டி வழக்கமான சிரிப்புக்குப் பதிலா ரொம்பவும் பதற்றமாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள்.

“என் ராசா வந்துட்டயா. உனக்கு கீரைய குடுத்துட்டுதான் ஊருக்குக் கிளம்பணும்னு இருக்கேன்.”

“ஏன் பாட்டி என்ன ஆச்சு?” என்றேன்.

“அதையேன் கேட்கற. நேத்து புள்ளைய ஸ்கூல்ல வுட சைக்கிள்ள போன என் பொண்ணு மேலே ஒரு லாரி மோதிட்டான். பொண்ணும் பேரனும் பக்கத்துல இருந்த பள்ளத்தில் விழுந்து ரொம்ப அடியாம். பொண்ணு இப்ப பரவாயில்லையாம். ஆனா, குழந்தைதான் இன்னும் கண்ணு முழிக்கலையாம். ராசா தலைல நல்ல அடியாம். திருவண்ணாமலை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் எப்படி உயிரோடு இருப்பேன்? இந்த ராசா கீரை புடி. நான் கிளம்பறேன்...” என்றாள்.

பாட்டியின் இந்த நிலைமையிலும் வாடிக்கைக்காரரை மதிக்கும் உயர்ந்த எண்ணம் என்னை உலுக்கியது.

“கொஞ்சம் இரு பாட்டி... இப்ப எப்படி திருவண்ணாமலைக்கு போவ?” என்றேன்.

அழுகையுடன் “இப்ப 1ஆம் நம்பர் பஸ் வரும். அதுல ஏறி கோயம்பேடு போயி அங்கேருந்து 122 பஸ் புடிச்சு போயிடறேன்” என்றாள்.

“கொஞ்சம் இரு பாட்டி” என்று சொல்லி பாக்கெட்டில் கையை விட்டேன். ஒரு 100 ரூபாய்தான் இருந்தது. நல்லவேளை எச்.எப்.டி. டெபிட்கார்டும் கூடவே இருந்தது. பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் 5000 ரூபாய் எடுத்தேன். ஓலா ஆப்பில் ஒரு கேப் புக் பண்ணி கோயம்பேடுக்கு பாட்டி சீக்கிரம் செல்ல ஏற்பாடு செய்தேன்.

“பாட்டி இதை வச்சுக்கோ. இப் ஓலா வரும். அதுல எத்திவுடறேன். உன் பேரனுக்கு ஒண்ணும் ஆவாது. திருவண்ணாமலை அருணாசலம் பாத்துப்பார். நீ கவலை படமா போயிட்டு வா” என்றேன்.

பாட்டி கண்களில் தாரைதாரையாக கண்ணீர். என் கண்களிலும்தான். எப்படியோ பாட்டியை ஓலாவில் ஏத்திவிட்டு ஒடிபியை டிரைவரிடம் சொல்லி பாட்டியை பத்திரமாக அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.

அப்புறம் மூன்று, நான்கு வாரங்களுக்கு பாட்டியைக் காணோம். பேரனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. பாட்டியை பார்க்காத ஏக்கம் வேறு. கடைத்தெரு எனக்குப் பாலைவனமாகத் தோன்றியது.

அடுத்த வாரம், பாட்டி கடையைத் திறக்காமல் ஓரமாக நின்றுகொண்டு நான் வருகிறேனா என்று பார்த்தவாறு இருந்தாள். பாட்டியைக் கண்ட மகிழ்ச்சியில் சைக்கிளை வேகமாக ஒட்டி பாட்டியிடம் சென்று நிறுத்தினேன்.

நான் பேசுவதற்குள் பாட்டி பேசினாள். “ராசா உன் புண்ணியத்தால பேரன் உயிர் பொழைச்சுட்டான். நீ சொன்ன அண்ணாமலை என்னைக் கைவுடல. நா போய் ஆஸ்பத்திரி நிக்கவும் பேரன் கண் முழிச்சி, பாட்டி வந்துட்டாயான்னா கேட்கவும் சரியா இருந்தது ராசா. நேரத்துல எனக்கு உதவி செஞ்சியே. இந்தா உன் பணம். ஊர்ல ஒரு பழைய மாட்டு வண்டி இருந்தது. அத வித்துத்தான் உன் பணத்தை ரெடி பண்ணி கொண்டாந்திருக்கே. இந்தா பிடி. இப்பவும் நான் திருவண்ணாமலைக்குத்தான் என் புருஷனையும் இட்டுக்குனு போறேன். என் பொண்ணு கூடவே இருந்து பேரனைப் பாத்துக்கப் போறேன். உன்னப் பாத்து சொல்லிட்டுத்தான் போணும்னு நின்னிருக்கேன். வரேன் ராசா. ஒனக்கு எவ்வளவு பெரிய மனசு. 5000 ரூவாவ முள்ளங்கி பத்த மாதிரி எடுத்துக் கொடுத்து பேரன போயி பார் பாட்டீன்னியே.

யார் ராசா அப்படி பண்ணுவா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் ராசா. இதோ 1 நம்பர் பஸ் வருது. நான் வரேன்.”

பாட்டி பஸ்சில் ஏறும்போது என் கையில் இருந்த அந்த 5000 ரூபாயை பாட்டி கையில் திணித்தேன். “இது என் ஞாபகமா வச்சுக்கோ” என்றேன்.

“எனக்கு எதுக்கு ராசா இவ்வளவு பணம்?” என்றாள்.

“பேரனுக்கு நல்ல டிரஸ் வாங்கிக் குடு. விளையாட பொம்மை இந்த மாமா வாங்கி தந்ததா சொல்லி வாங்கிக்கொடு.”

பாட்டி புடவை தலைப்பால் கண்களை துடைப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. என் மனம் அமைதியின்றி தவித்தது. எத்தனையோ பிரிவுகளை சந்தித்த மனம் பாட்டியின் பிரிவை ஏன் ஏற்க மறுக்கிறது? பாட்டிக்கும் எனக்கு என்ன தொடர்பு. ஏன் இந்த நட்பு? புரியவில்லை.

காஞ்சி பெரியவரின் பொன்மொழி மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. “ஈஸ்வரன் நமக்கு சம்மந்தம் இல்லாது பலவற்றுடன் நம்மைச் சம்மந்திப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான்". கல்கியில் வந்த புனைவு கதை.

#தமிழ்_வரிகள் #சிறுகதைகள் #தமிழில்பகிர்வோம் #அறிந்து_கொள்வோம்


637726209_1348468770630647_4750315780849

பாட்டி ஏன் மஞ்சள் ஜாக்கட் போட்டிருக்கு என்று யாராவது கேட்டால் அவர்கள் கதையை ஊன்றிப் படித்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி . .........! 😀

பாட்டியின் கறுப்பு ரவிக்கை… எப்படி மஞ்சள் ஜாக்கெட்டாக மாறியது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

பாட்டியின் கறுப்பு ரவிக்கை… எப்படி மஞ்சள் ஜாக்கெட்டாக மாறியது. 😂

கதையைப் படிக்காத ஓவியரும்

காசுக்காக வரைந்திருக்கலாம்

கதாசிரியர் கூட

கூகுளில் சுட்டுப் போட்டிருக்கலாம்

எப்படியோ அவுஸ் போல்

ஹவுசுக்கு போகாமல்

சிம்பாவே 8 க்குள் போவது போல்

ஏதோ எமக்கொரு

கதையும் படமும் கிடைத்திருக்கு

அது போதும்........! 😂

  • கருத்துக்கள உறவுகள்


sSdtornoepag1ga686f crh,1eh438hhimtf1 :7uff4r7v817i2uég0186l
 ·

" வதந்தி "....ஒரு முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை. ஆனால், கொஞ்சம் 'துடுக்குத்தனம்' நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்.

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம்.

'திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.. காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்.. சில நாள்களில் மாலையில் போகிறான்.. இரவில் வீடு திரும்புகிறான்.. ஒரு வேளை அவன் திருடனாக இருப்பானோ' என நினைத்தார். இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது. தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்... காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது.

ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால்,

'அவன் அப்பாவி' அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும் அவனை விடுவித்து விட்டார்கள்".. ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. 'நான் என்ன திருடனா' என்னைப் போய் கைது செய்து விட்டார்களே.. எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன் முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதியிடம் முதியவர் சொன்னார்... "நான் யாரையும் காயப்படுத்தவில்லை.. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன் அவ்வளவு தான் ".

டிரைவரோ, போலீஸால் தான் அலைக் கழிக்கப்பட்டது, அந்த அவமானத்தால் மனது பாதித்தது பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் என்பதை எடுத்துச் சொன்னான்.

நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள் நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா"?

"ஆமாம் ஐயா"...

"நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்.. அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’.

"அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும் அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?"

"முடியாதில்லையா?

அப்படித் தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை.. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை" என்றார்.

பகிர்வு பதிவு.

#likecommentsharefollowsupport.....!

628773406_25571259299212286_222238965694

  • கருத்துக்கள உறவுகள்


Rukmani Palaniappan
 ·oodntpeSrsu6m5tm7i7cml260076c2gat39mfgfa2lltcfi8u 2c1ah6lh6t ·

வாலி- துரத்தி விட்ட 3 அசிஸ்டெண்ட்ஸ்.. நாளடைவில் சினிமாவையே ஆட்சி செய்யும் டைரக்ட்டர்களான அதிசயம்!!

கடந்த 1967ஆம் ஆண்டு தன்னிடம் மூன்று பேர் உதவியாளராக சேர முயன்றனர் என்றும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய இயக்குனர் ஆகினர் என்றும் கவிஞர் வாலி பேட்டி ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியுள்ளார்.

கவிஞர் வாலி ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். தந்தை இறந்த நேரம் தாயும் நோய்வாய் படுக்கையில் இருந்த நேரம், தன்னுடைய வயிற்று சாப்பாட்டிற்கு கூட சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது.

அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சில பாடல்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. கவியரசு கண்ணதாசன் உச்சத்தில் இருந்ததால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்ணதாசனுக்கு மட்டுமே பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தனர்.

இந்த நிலையில்தான் ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்திற்காக வாலி ஒரு பாடல் எழுதினார். எதையும் தாங்கும் இதயம் என்ற அந்த பாடல் நல்ல ஹிட் ஆனாலும் அதன் பிறகு வாலிக்கு பாடல்கள் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இனி சினிமாவே வேண்டாம். மதுரைக்கு போய் விடுவோம் என்று வாலி முடிவு செய்தார். மதுரையில் டிவிஎஸ் கம்பெனியில் தனது நண்பர் வேலை பார்த்ததால் அவரிடம் சொல்லி ஒரு வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார்.

அவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு செல்லும்போது தான் அவரை பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் சந்திக்க வந்தார். எங்கே செல்கிறீர்கள் என்று அவர் கேட்டபோது, ‘இனிமேல் எனக்கு சினிமா வேண்டாம், நான் மதுரை செல்கிறேன்’ என்று வாலி கூறினார். பிபி ஸ்ரீனிவாஸ் அப்போது, ‘இந்த பாடலை நீ ஒரு முறை கேள், அதன்பிறகு நீ மதுரை செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் நான் தடுக்க மாட்டேன்’ என்று கூறினார்.

அந்த பாடல் கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

என்ற வரியை கேட்டதும் இனி சினிமாவிலேயே போராடுவது என்று வாலி முடிவு செய்தார். அதன் பின்னர்தான் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் சினிமாவின் உச்சத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் தான் திடீரென கண்ணதாசனிடம் உதவியாளராக சேர வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் 300 ரூபாய் சம்பளம் என்றும் பேசப்பட்டது. இந்த வாய்ப்பை கண்ணதாசனிடம் கேட்டு வாலிக்கு வாங்கி கொடுத்தவர் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் அந்த வாய்ப்பை வாலி மறுத்துவிட்டார்.

ஏன் என்று கேட்டபோது, ‘நான் கண்ணதாசனுக்கு எதிராக கடைவிரிக்க வந்திருக்கிறேன், அவரிடமே போய் உதவியாளராக இருந்தால் என்னுடைய தனித்தன்மை போய்விடும். ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தால் கடைசி வரைக்கும் காஜா போட தான் வைப்பார்கள். மிஷினில் உட்கார விடமாட்டார்கள். அதேபோல் நான் கண்ணதாசனின் உதவியாளராக சென்றால் கடைசி வரை உதவியாளராகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும், என்னுடைய தனித்தன்மை போய்விடும். இருக்கிற தமிழ் கொஞ்சமாக இருந்தாலும் அதை எப்படி காசு பண்ண வேண்டும் என்று பார்க்க வேண்டுமே தவிர, ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்.

இதனால் ஜி.கே.வெங்கடேஷ் அதிர்ச்சியடைந்து, ‘நீ உருப்படவே மாட்டாய்’ என்று சாபம் விட்டு சென்றார். அன்றைக்கு வாலி எடுத்த முடிவு மிகச் சரியானது என்பது போகப் போக தெரிய வந்தது. அன்றைக்கு மட்டும் அவர் கண்ணதாசனிடம் வேலைக்கு சேர்ந்திருந்தால் அவருடைய தனித்தன்மை மறைந்திருக்கும். கடைசி வரை கண்ணதாசனிடம் அவர் உதவியாளராக இருந்திருப்பார்.

இந்த நிலையில்தான் தன்னிடம் யாரும் உதவியாளராக வேலை கேட்டு வந்தால் அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்தார். மேலும் தன்னிடம் உதவியாளராக சேர்ந்தால் கடைசி வரை அவர்கள் உதவியாளராக இருக்க நேரிடும் என்பதுதான் அவர் அனுபவத்தில் கற்ற பாடம்.

இந்த நிலையில்தான் மூன்று பேர் தன்னிடம் உதவியாளராக சேர வாய்ப்பு கேட்டு வந்தனர் என்றும், ஆனால் நான் மூவரையுமே சேர்த்து கொள்ள மறுத்துவிட்டேன் என்றும் வாலி கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த மூவருமே தட்டு தடுமாறி திரையுலகில் வெற்றி பெற்றனர். அந்த மூவர்தான் கங்கை அமரன், ராம நாராயணன், மற்றும் ஆர்.சி.சக்தி. பின்னாளில் இந்த மூவரின் படங்களுக்கும் நான் பாடல்கள் எழுதினேன் என்றும் வாலி கூறினார்.

மேலும் என்னிடம் நீங்கள் உதவியாளராக சேர்ந்திருந்தால் இந்த அளவுக்கு பெரிய இயக்குனராக வந்திருக்க மாட்டீர்கள், இது நான் அனுபவத்தில் கற்ற பாடம், எதனால் நான் உங்களை உதவியாளராக சேர்க்கவில்லை என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் முன்னிலையிலேயே வாலி கூறினார்.

நமக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த திறமையை வைத்து, நாமாக முன்னேற வேண்டுமே தவிர இன்னொருவருக்கு உதவியாளராக இருந்து நமது திறமையை வீணடிக்க கூடாது என்ற வாலியின் வாழ்க்கை பாடம் நம் அனைவருக்குமே பொருந்தும்......!

641271773_2485454448540019_6899403147241

  • கருத்துக்கள உறவுகள்


roesSodtnpt72524913f3um927l9308c9guuchgg0l1cgahl2l9 7cthac0c
 ·

“இந்த மலைதான் என் மனைவியின் உ/யி..ரை எடுத்தது” என்ற வேதனையுடன், அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா?

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் — கெஹ்லூர். அந்த கிராமத்தைச் சுற்றி இருந்தது ஒரு பெரிய மலை.

அந்த மலை காரணமாக மருத்துவமனை, பள்ளி, சந்தை போன்ற அடிப்படை தேவைகளுக்கு மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை.

அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண கூலி தொழிலாளிதான் டஷ்ரத் மாஞ்சி.

ஒருநாள் அவரது மனைவி காயமடைந்தார். அருகிலிருந்த மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல முடியாமல், மலை சுற்றி நீண்ட தூரம் செல்ல வேண்டியதால் அவசர சிகிச்சை கிடைக்கவில்லை. அந்த வேதனை அவருடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றியது.

“இந்த மலை தான் என் மனைவியின் உயிரை எடுத்தது” என்ற வேதனையுடன், அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா?

👉"மலைக்கே எதிராக போராட வேண்டும்!

1960ஆம் ஆண்டு முதல், ஒரு சுத்தி மற்றும் ஒரு சீசல் (chisel) மட்டும் கொண்டு தனியாக மலை வெட்டத் தொடங்கினார்.

மக்கள் அவரை பெத்திய காரன் என்று சிரித்தார்கள்.

சிலர் அவமதித்தார்கள்.

ஆனால் அவர் நின்றுவிடவில்லை.

22 ஆண்டுகள்…

ஆம், முழு 22 ஆண்டுகள் தனியாக உழைத்து,

110 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலம், 7 மீட்டர் உயரம் கொண்ட பாதையை மலையில் உருவாக்கினார்.

அதன் விளைவு?

📍முன்பு 55 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய தூரம், 15 கி.மீ ஆக குறைந்தது.

📍"கிராம மக்களுக்கு மருத்துவ சேவை, கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தும் எளிதானது.

📍" ஒரே மனிதனின் உறுதி, ஒரு கிராமத்தின் விதியை மாற்றியது.

அவரை உலகம் “Mountain Man” என்று அழைக்க ஆரம்பித்தது.

டஷ்ரத் மாஞ்சி காட்டிய பாடம் என்ன?

இன்று நாம் பல விஷயங்களை பற்றி குறை கூறுகிறோம்.

ஆனால் ஒரே மனிதன் 22 ஆண்டுகள் தனியாக மலை வெட்டி பாதை அமைத்தார்.

அது வெறும் கல் வெட்டிய கதை இல்லை.

அது மன உறுதியின் சின்னம்.

அது காதலின் நினைவுச் சின்னம்.

அது மனிதனின் சாதனை.

இந்த மனிதனை பாராட்டாமல் இருக்க முடியுமா? 🙏"

#DashrathManjhi #MountainMan #Inspiration #RealHero.....!

640394992_122147290808978240_68297441158

  • கருத்துக்கள உறவுகள்


Sundhari S
 ·noSoedrpsté 5h0fc,9:411ih7ur8v90498fmc 278iemm84fl5ar116t5t2 ·

நம்ம முருகேசு அண்ணா, வெளியூருக்கு ரயிலில் பயணம் செய்தார். முன்பாகவே திட்டமிடாததால், ரயிலின் கடைசிப் பெட்டியில் தான் அவரால் ஏற முடிந்தது.

ரயில் கிளம்பிய சற்று நேரத்தில், அவருக்குப் பசித்தது. ஆனால், உண்ணுவதற்கு எதுவும் தன்னோடு எடுத்து வரவில்லை.

ரயில் ஒவ்வொரு ஊரில் நிற்கும் போதும், ஏதாவது வாங்கலாம் என்று தான் நினைத்தார். ஒவ்வொரு நிறுத்தத்திலும், உணவுப் பண்டங்கள் விற்கும் யாரும் இவரிருந்த கடைசிப் பெட்டி வரை வராமலே, திரும்பி விட்டார்கள்.

இவருக்கோ, பசி தாள முடியவில்லை. சரி, இறங்கி ரயில்வே உணவகம் வரை சென்று, சாப்பிட்டுத் திரும்பலாம் என்றால், எல்லா ஊரிலும் உணவகம் நடைமேடையின் மறுகோடியில் இருந்தது.

இறங்கிப் போய் ஏதாவது வாங்கிக் கொண்டு திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இவருக்கு. அதனால், இறங்கவில்லை.

பழங்களோ, குடிநீர் பாட்டிலோ கூட வாங்க முடியவில்லை.

பசியும், களைப்பும் ஒரு புறம். அவற்றால் விளைந்த கோபம் மறுபுறம்.

இறுதியில், ஒருவாறாகத் தன்னுடைய ஊர் வந்தடைந்தார்.

வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக, சாப்பிடக் கூடப் பொறுமை இல்லாமல், ரயில்வே அமைச்சருக்குத் தன் ஆத்திரத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து, ஒரு கடிதம் எழுதினார்:

"இனிமேல், எந்த ரயிலிலும் கடைசிப் பெட்டி என்ற ஒன்று இருக்கவே கூடாது. அப்படியே இருந்தாலும், அதை ரயில் வண்டியின் நடுவிலே தான் இணைக்க வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை உடனே நிறைவேற்ற வேண்டுகிறேன்"

நன்றி.!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcTCtHVnfstJ4qB3djW9qqG images?q=tbn:ANd9GcQABjI9JaPiOb1qAIPFinh images?q=tbn:ANd9GcQto13sVmM823c0Kmo6RmU

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், டெல்லியில் விஷமுள்ள கோப்ராக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனர். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இறந்த ஒவ்வொரு பாம்பிற்கும் ஒரு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்தினர்.

முதலில், இந்தக் கொள்கை வெற்றிகரமாகத் தோன்றியதாகத் தோன்றியது, பல கோப்ராக்கள் கொல்லப்பட்டன.

ஆனால் விரைவில், எதிர்பாராத விளைவு தோன்றியது. வெகுமதியைப் பெறுவதற்காக ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் கோப்ராக்களை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர். அரசாங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து, கோப்ரா திட்டத்தை ரத்து செய்தவுடன், வளர்ப்பாளர்கள் இப்போது பயனற்ற தங்கள் பாம்புகளை விடுவித்தனர்.

விளைவு? கோப்ராக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிக அளவில் அதிகரித்தது.

இந்த அத்தியாயம் கோப்ரா விளைவு (🐍THE COBRA EFFECT🐍) என்று நினைவுகூரப்படுகிறது, இது நல்ல நோக்கத்துடன் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் எவ்வாறு பின்வாங்கும், நோக்கம் கொண்ட விளைவுக்கு நேர் எதிரான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தற்சார்பு வாழ்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2da024e2-ea68-468d-ba6e-d68ef619baf9

ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான்.
" டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "
டாக்டரு சொன்னாரு..
"தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!"
"ரொம்பத் தேங்ஸ் டாக்டர்.
எவ்வளவு பீஸு?"
" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "
" ஓ அப்டீங்களா? சரிங்க
டாக்டர் ஐயா. வர்றேன். "
ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.
ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.
" அடடே என்னா தம்பி,
அப்புறம் வரவே இல்லே? "
"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."
" ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? "
" நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "
டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.
" என்ன தம்பி சொல்றீங்க?
வெவரமா சொல்லுங்க! "
" அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. "😄
animiertes-gefuehl-smilies-bild-0090.gif

ஓம் மணிகண்டன்

  • கருத்துக்கள உறவுகள்


eotrnSposd1a75f67 414ég5a72067,ev2igl37tru2g7hr 4ic0g2tt:30h
 ·

1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்பு த்திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னணி நடிகர்களான ...

(பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் தேடி ஓடி வந்தார்கள்.

சிவாஜியிடம் மனம்விட்டுபேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனார்கள்.

இதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழாவில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்தான்.

சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது.

விருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட்டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார்.

இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது.

பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேருவிடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்து வைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு.

உலக சினிமா வட்டாரத்தில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை..

‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது’’.......!

640358432_3684875994988810_6480928430760

  • கருத்துக்கள உறவுகள்


ntreSpsoodit98c4ugg2i0tm350h38c90 48673m2130uih334ia01619igg
 ·

பாரிஸின் பரபரப்பான வீதிகளுக்கு மத்தியில், 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியின் இருண்ட ரகசியங்களையும், உலகை மாற்றிய சரித்திர நிகழ்வுகளையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு ரகசிய சந்துதான் Cour du Commerce-Saint-André.

இந்த குறுகலான கல் பதிக்கப்பட்ட பாதையில் நடந்து செல்வது, ஒரு வரலாற்றுத் திரைப்படத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தரும்.

பிரெஞ்சுப் புரட்சி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது 'கில்லட்டின்' (Guillotine) எனப்படும் தலையைத் துண்டிக்கும் இயந்திரம் தான். அந்த கொடூரமான இயந்திரம் முதன்முதலில் உருவானது இந்தச் சந்தில் தான்!

மரண தண்டனையை வலியின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டாக்டர் கில்லட்டின் என்பவர் ஒரு கருவியை வடிவமைக்கச் சொன்னார். இந்தச் சந்தில் எண் 9-ல் வசித்து வந்த 'டோபியாஸ் ஷ்மிட்' (Tobias Schmidt) என்ற ஜெர்மானிய பியானோ தயாரிப்பாளர் தான் முதல் கில்லட்டின் இயந்திரத்தை மரத்தால் உருவாக்கினார். மனிதர்கள் மீது பயன்படுத்துவதற்கு முன்பு, இந்த இயந்திரம் சரியா வேலை செய்கிறதா என்பதை அறிய, இதே சந்தில் வைத்துத் தான் ஆடுகள் மற்றும் கன்றுகளின் மீது முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது. அமைதியான இந்தச் சந்தில் இப்படி ஒரு ரத்த சரித்திரம் அரங்கேறியது பலருக்கும் ஆச்சரியம்!

இந்தச் சந்து பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் ரகசியக் கூடாரமாகச் செயல்பட்டது. பிரெஞ்சு புரட்சியின் தீவிரவாதத் தலைவரான Jean-Paul Marat இங்குள்ள 8-ஆம் எண் வீட்டில் தான் வசித்து வந்தார்.

இங்கு வைத்துதான் அவர் தனது "L'Ami du Peuple" (மக்களின் நண்பன்) என்ற புகழ்பெற்ற செய்தித்தாளை அச்சிட்டார். இந்தச் செய்தித்தாள் தான் பிரெஞ்சு மக்களிடையே மன்னராட்சிக்கு எதிரான கோபத் தீயை மூட்டியது. இதே சந்தில் தான் புரட்சியாளர்கள் கூடி ரகசியத் திட்டங்களைத் தீட்டினார்கள்.

இந்தச் சந்தின் மற்றொரு மிகப் பெரிய பொக்கிஷம், 1686-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'லு புரோகோப்' (Le Procope). இதுவே பாரிஸின் செயல்படும் மிகப்பழமையான கஃபே (Coffeehouse) ஆகும். இது வெறும் உணவகம் அல்ல, உலக வரலாற்றை மாற்றிய பல மேதைகளின் விவாத மேடை!

பிரான்சின் புகழ்பெற்ற தத்துவஞானிகளான வால்டேர் (Voltaire), ரூஸோ (Rousseau) போன்றோர் இங்குத் தான் மணிக்கணக்கில் அமர்ந்து விவாதிப்பார்கள் (வால்டேர் தினமும் 40 கப் கோப்பி குடிப்பார் என்று ஒரு கதை உண்டு!).

அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin) பிரான்சுக்கு வந்திருந்தபோது இங்கு அமர்ந்துதான் அமெரிக்க அரசியலமைப்பின் சில பகுதிகளை எழுதினார்.

இளம் இராணுவ அதிகாரியாக இருந்த நெப்போலியன் போனபார்ட், ஒருமுறை இங்கு சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால், தனது தொப்பியை (Bicorne hat) அடமானமாக வைத்துவிட்டுச் சென்றார். அந்தத் தொப்பி இன்றும் இந்த உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது!

இன்று நீங்கள் இந்த இடத்திற்குச் சென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட அதே கற்களின் (Cobblestones) மீது நடக்கலாம். பழமையான இரும்பு விளக்குகள், சிறிய புத்தகக் கடைகள், தேநீர் விடுதிகள் என இந்த இடம் 18-ஆம் நூற்றாண்டின் அழகை அப்படியே பாதுகாத்து வருகிறது. லெ புரோகோப் உணவகத்தில் இன்றும் நீங்கள் சென்று உணவருந்தலாம்.

வரலாறும், புரட்சியும், கலையும் ஒருங்கே கலந்த ஒரு அரிய இடம் இது......!

645935440_26994989390089912_912337075824

  • கருத்துக்கள உறவுகள்


pSroosnedtgfHtg01u2àut5g328ig66ll6r03:16i89g9uu03et 9 i050,i
 ·

ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்.

கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அங்கிள்... அங்கிள்....

என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....

அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள்

prescription கொண்டுவந்தாயா குழந்தை????

அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா????

எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.

"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது.

சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன?????

குழந்தை மென்று விழுங்கி சொன்னது

" மெரிக்கள்"

கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார்.

நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு?????

மெரிக்கள் அங்கிள்...

அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது?????

குழந்தை கண்ணீருடன் சொன்னது....

டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது.

அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார்.

அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார்.

வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார்.

அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்.....

டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற

அதற்க்கு மருத்துவர்

இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம்.

எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்........!

646376928_4446653668887913_4198411349238

  • கருத்துக்கள உறவுகள்


sroepSnodt64uh780:3haf6at4s6fuu7fl61ragmm0af 5 m7m9509 m3ihc
 ·

ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பார்வதி கேட்டார் .

“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?

குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,

அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,

ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "

என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,

அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.

சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.

மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?

என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை

“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “

என வினவினார்.

"அவன் சொன்னான்”

எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.

கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.

நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.

" குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."

"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை

"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் "".......!

646369929_27303923049205469_751301032476

  • கருத்துக்கள உறவுகள்


sSprtoneodmc14002thgcc7uf4c5l1 h1451cma8haa9ahcm091g1i7clihi
 ·

சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன்.

.

சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த் தார்.

.

''என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்!

.

என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன்.

.

வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக்கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது.

.

அழகு ஒரு காரணம்... ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு.

.

அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம்.

.

அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?''

.

சாமி நிதானமாகக் கேட்டார், ''அது கிடக் கட்டும்... மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?''

.

சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான்.

.

''சா... சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?''

.

''உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்!

நீயாவது நிம்மதியா இரு!'' என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் 'சாமி'கள்.....!

649789113_27354508690813571_480413313703

  • கருத்துக்கள உறவுகள்


tdenrSoopst51 2aLfm0h:6615f6e1m351àg2635flmf  14s1al 195r0g6
 ·

"தங்கக்காப்பு"

தங்கப்பன் என்பவன் ஒரு வட்டிக்கடைக்காரன். அவனிடம் அவன் வசிக்கும் நல்லூர் வாசிகள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற ஊர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தேவைக்காக ஏதாவது பொருளை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவார்கள். அவனது வட்டி விகிதமும் குறைவே. ஆனால், பணத்தை வசூல் செய்வதில் அவன் கறாராக இருப்பான். கடன் கொடுத்தால் அதைத் திருப்பித் தரக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே கடனைக் கொடுப்பான். அவனை யாராலும் ஏமாற்றிவிட முடியாது.

தங்கப்பனிடம் அடிக்கடி கடன் வாங்கிப் போகிறவன் செல்லப்பன் என்ற குடியானவன். அவன் ஒவ்வொரு முறையும் தன்னிடமுள்ள தங்கக் கட்டைக் காப்பை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவான். அந்தக் கடனை அடைத்து அந்தக் காப்பை மீட்ட பிறகே, மறுபடியும் கடன் கேட்டு அதே காப்பை அடகு வைப்பான். ஏழை விவசாயி என்பதால் அவனுக்குப் பயிர் செய்ய அடிக்கடி பணம் தேவைப்பட்டது.

ஒருமுறை செல்லப்பன் தன் காப்பைத் தங்கப்பனிடம் அடகு வைத்துப் பணம் கேட்டபோது, அவ்வூர் பொற்கொல்லன் பொன்னுசாமி அங்கே இருந்தான். தங்கப்பன் காப்பை வாங்கிக் கொண்டு அதற்கு ஐம்பது வராகன்கள் (பணம்) கொடுத்து அனுப்பியதை அவன் பார்த்தான். செல்லப்பன் போனதும், அந்த காப்பை வாங்கிப் பார்த்த பொன்னுசாமிக்கு ஒரு உண்மை தெரிந்தது. அது சுத்த தங்கத்தால் ஆனது அல்ல; அதில் சரிபாதி பித்தளை சேர்க்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு வெறும் பத்து வராகன்கள் மட்டுமே என அவன் மதிப்பிட்டான்.

"எல்லோரிடமும் கறாராகப் பேசும் தங்கப்பன், செல்லப்பனிடம் ஏமாந்து விட்டானே! இவனுக்குத் தங்கம் பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கிறது" என்று பொன்னுசாமி நினைத்துக் கொண்டான்.

ஒரு மாதத்திற்குப் பின், பொன்னுசாமி சில பித்தளை நகைகளைச் செய்து அவற்றிற்குத் தங்க முலாம் பூசினான். பிறகு அந்த நகைகளைத் தங்கப்பனிடம் எடுத்துப் போய், "ஐயா! என் மகளுக்குக் கல்யாணம் திடீரென நிச்சயமாகிவிட்டது. எனக்கு உடனடியாக ஆயிரம் வராகன்கள் தேவைப்படுகிறது. ஐயாயிரம் வராகன்கள் பெறுமானமுள்ள இந்த நகைகளை ஈடாக வைத்துக் கொண்டு எனக்குப் பணம் கொடுத்து உதவுங்கள்" என்றான்.

தங்கப்பன் அந்த நகைகளை வாங்கிப் பார்த்து விட்டு, "பொன்னுசாமி! நீயோ பொற்கொல்லன். உனக்கே அசல் தங்க நகைகளுக்கும் போலி நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதா? இவை எல்லாம் தங்க முலாம் பூசிய நகைகள். இவற்றின் மதிப்பு பத்து வராகன் கூடத் தேறாது. என்னை ஏமாற்ற முடியாது" என்றான்.

அதைக்கேட்டு பொன்னுசாமி ஆச்சரியப்பட்டான். "ஐயா! நான் உங்களை ஏமாற்றவில்லை. ஆனால் நீங்கள் மகா மட்டமான தங்கத்தால் செய்யப்பட்ட செல்லப்பனின் தங்கக் காப்பிற்கு மட்டும் ஐம்பது வராகன்கள் கொடுத்தீர்களே? அது பத்து வராகன் தானே பெறும்?" என்று கேட்டான்.

அப்போது தங்கப்பன் பலமாகச் சிரித்து, "ஓஹோ! நீ அன்று அந்தக் காப்பைப் பார்த்ததை நினைத்து என்னைத் தங்கம் பற்றி தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாயா? செல்லப்பன் நேர்மையானவன். அவன் அந்தக் காப்பு அசல் தங்கத்தால் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அதில் பாதி பித்தளை கலந்திருப்பது எனக்குத் தெரியும். அந்தக் காப்பைச் செய்து கொடுத்தவனும் நீதான் என்பது எனக்குத் தெரியும்!" என்றான்.

தொடர்ந்து தங்கப்பன் சொன்னான்: "அவனிடம் அது நல்ல தங்கக் காப்பு அல்ல என்று நான் கூறிவிட்டால், அவன் தன் தேவைக்குக் கடன் வாங்க என்னிடம் வரமாட்டான். வேறு யாரும் அவனுக்கு அதன் பேரில் கடன் கொடுக்க மாட்டார்கள். அவனிடம் உள்ள ஒரே விலையுயர்ந்த பொருள் அந்தத் தங்கக் காப்புதான். அவன் அதைச் சுத்த தங்கம் என்றே நம்பிக் கொண்டிருக்கிறான். அவன் நம்பிக்கையைத் தகர்க்க வேண்டாம் என்றும், நேர்மையுடன் நடந்து வரும் அவனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும்தான், பத்து வராகன் கூடப் பெறாத அந்தக் காப்பிற்கு நான் ஐம்பது வராகன்கள் கொடுக்கிறேன்."

அதைக் கேட்ட பொன்னுசாமி திகைத்துப் போனான். இதுவரை தங்கப்பனை ஈவு இரக்கமில்லாத வட்டிக்கடைக்காரன் என்று நினைத்திருந்தான். பண விஷயத்தில் கறாராக இருந்தாலும், ஒரு நேர்மையான மனிதனின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தங்கப்பன் காட்டிய அந்த நல்ல குணத்தை எண்ணி வியந்தவாறே, தன் போலி நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

~மகிழா. 💃"

-பகிர்வு பதிவு.

🌹"

நன்றி - பட்டாம்பூச்சி சிறுகதை பூங்கா......!

648212896_1393446522808710_7465916594518

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.