Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருக்கேதீச்சரக் காணியில் அத்துமீறல் எதிர்ப்புத் தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம்

Featured Replies

10593.jpg

மன்னார் திருக்கேதீச்சரத்து சிவன் ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் சொரூபம் நிறுவுவதற்கு எதிர்ப் புத் தெரிவித்து நாளை புதன்கிழமை அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி சொரூபம் நிறுவும் முயற்சிக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் ஆலய நிர்வாகம் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 

நாளைய தினம் சொரூபம் நிறுவப்படவுள்ள இடத்தில் இந்துக்கள் கூடி தமது அகிம்சை வழி எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.       

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10593&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் ,ஜேசு ,அல்லா எல்லோருக்கும் அந்த மண்ணில் ஒரு கண்......tw_tounge_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராக இருந்தாலும் மத சுதந்திரத்தை துர்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

யாராக இருந்தாலும் மத சுதந்திரத்தை துர்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

கிறிஸ்தவர்கள் சொல்லுவினம் ஜேசுவை அதில குடியிருத்துவது தங்களுடைய மத சுதந்திரம் என்று.இந்துக்கள் சொல்லுவினம் அவரை குடியிருக்க விடமால் தடுப்பது தங்கள் சுதந்திரம் என்று.:rolleyes:

தமது மதம் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நேர்மையாக ஆன்மீக வழிகாட்டி, அவர்களின் வளர்ச்சிக்கு, ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவுவதை விட்டுவிட்டு மற்றவர்கள், மற்ற மதத்தவர்கள் உரிமைகளில், உணர்வுகளில் தலையிடும் அனைத்து மத அமைப்புகளும் மதவெறி அமைப்புக்களே .

அடுத்தவன் வீட்டு வளவில் குப்பை கொட்டுவதைப் போலவே அடுத்தவன் காணியை அபகரித்து சிலை நிறுவும் மதவெறியர்கள் இலங்கையில் பரவலாக காணப்படுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சில மதவெறி அமைப்புக்கள் அடுத்தவனை நச்சரித்து, தனது மதத்துக்கு  மதம் மாற்றி பிழைப்பு நடத்துவதை தொழிலாக கொண்டுள்ளது.  

திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு சொந்தமான காணிகளை அபகரிக்க மிக நீண்ட காலமாக சில மதவெறியர்கள் முயற்சித்து வருவதை அங்குள்ள நிலைமைகளை அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இது போன்ற கும்பல்களால் தமது மதம் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நேர்மையாக ஆன்மீக வழிகாட்டி, அவர்களின் வளர்ச்சிக்கு, ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவும் நேர்மையா மதபோதகர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இந்த கள்ளக் காணி பிடித்தல், அடுத்தவன் வளவில் சிலைகளை நிறுவுதல், மதம் மாற்றுதல் போன்ற  கேவலமான மத வியாபாரங்களில் ஈடுபடும் அனைத்து மதவெறியர்களின் செயல்களும் கடும் கண்டனத்துக்கு உரியவை, தடை செய்யப்பட வேண்டியவை.

  • தொடங்கியவர்

கேதீச்சர பாலாவிக் கரையில் மாதா சொரூபம் இந்து அமைப்புகள் அமைதி முறையில் ஆர்ப்பாட்டம்

10616.jpg

ஈழத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தினால் அத்துமீறி அமைக்கப்படும் மாதா திருச்சொரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட இந்து சமய ஆலயங்களின் பிரதிநிதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களின் மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். முன்னதாக ஆலயத்தின் முன்வாயிலில் இருந்து திருவாசகம் ஓதலுடன் ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, பாலாவி தீர்த்தத்தை வந்தடைந்தது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத போதிலும் பொலிசார் பெருமளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டு இருந்ததோடு, குறித்த மாதா சொரூபத்திற்கு பாதுகாப்பு வழங்கியதனையும் காண முடிந்தது. இதனால் அமைதிவழியிலான கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்கள் அச்சமடைந்திருந்தனர்.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பாலாவி தீர்த்ததிற்கு அருகாமையில் மாந்தை சந்தியில் உள்ள காணி ஒன்றில், குறித்த மாதா சொரூபத்தினை ஆலயத்திற்கு எவ்வித அறிவித்தல்லும் வழங்காமல் திடீரென குறித்த மாதா சொரூபம் சிலரால் அங்கு வைக்கப்படுள்ளது. குறித்த சொரூபம் வைப்பதற்கு முன்னர் சிரமதானம் என்ற பெயரில் மக்களை அழைத்து,

காணியை துப்பரவு செய்துவிட்டு வேலி அடைக்க பயன்படுத்தப்படும் நான்கு தூண்களை நாட்டி அதற்கு மேல் மாதா சொரூபத்தினை அவசர அவசரமாக கம்பிகளால் வைத்து கட்டிவிட்டு சென்றுள்ளனர். சிலருடைய இந்த விசமத்தனமான நடவடிக்கையால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தமக்குள்ளே முரண்பட ஆரம்பித்துள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரச்சனை இந்து கிறிஸ்தவ பிரச்சனை அல்ல எனவும், இது சிலருடைய சுய நல நோக்கங்களுக்காக இரு மதத்தினரயையும் தூண்டி விடுவதற்காக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட வேலை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த இடத்தில் ஏற்கனவே லூர்த்து மாதா ஆலயம் இருக்கும் போது,

அதற்குள் மாதா சொரூபத்தை அமைக்காமல் பாலாவி தீர்த்த கரையோடு மடு மாதா சொரூபத்தை அமைப்பதற்கான நோக்கம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ள நேற்று கவனஈர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்கள், இந்து கிறிஸ்தவ மக்களை இதன் மூலம் மோத விட்டு குளிர் காயும் நபர்களை கிறிஸ்தவ தமிழ் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைதி வழி கவனஈர்ப்பின் பின்னர் மன்னார் மாவட்ட இந்து கோவில்களின் பிரதிநிதிகளினால், குறித்த அத்து மீறல் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை கையளிப்பது என முடிவெடுக்கப்பட்டு மதியம் பன்னிரண்டு மணியளவில் கவனயீர்ப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை குறித்த சொருபம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை 24 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10616&ctype=news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22.6.2016 at 0:59 PM, putthan said:

கிறிஸ்தவர்கள் சொல்லுவினம் ஜேசுவை அதில குடியிருத்துவது தங்களுடைய மத சுதந்திரம் என்று.இந்துக்கள் சொல்லுவினம் அவரை குடியிருக்க விடமால் தடுப்பது தங்கள் சுதந்திரம் என்று.:rolleyes:

வைரவர் என்ரை கனவிலை வந்து மடுமாதா இருக்கிற காணியிலை எனக்கு ஒரு குடிலாவது போட்டுத்தா எண்டு சொன்னவர் ....இப்ப என்ன செய்வீங்க்....என்ன செய்வீங்க   dancing stickman emoticon

இவர்கள் எதற்குப் போராடுகிறார்களோ தெரியவில்லை!

சட்ட விரோதமாக கள்ளக் காணியில் காடையர்களால் வைக்கப்பட்ட சிலையை உடனடியாகவே உடைத்து எறிந்திருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.