Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிகிறது பிரிட்டன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EU referendum results

ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிகிறது பிரிட்டன்..

இங்கிலாந்து மக்கள் அதிரடி தீர்ப்பு!

லண்டன்: ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 54 % பேர் பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும், 46 % பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனும் அங்கம் வகிக்கிறது. இதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரெக்ஸிஸ்ட்' என அழைக்கப்படும் இந்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக, இதுவரை இல்லாத அளவு 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதுகுறித்து பிரிட்டன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐரோப்பிய யூனியனுடன் தொடர்ந்து இணந்திருப்பது குறித்து முடிவெடுப்பதற்கான பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக 46,499,537 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 2.30 மணி வரை நடந்த வாக்குப்பதிவு பெரும்பாலான இடங்களில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் 4.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து பதிவான வாக்குகளின் ஓட்டு பெட்டிகள் 382 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில் 39 மையங்களின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் 54 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும், 46 சதவீதம் பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Remain  
48%
14,828,257   
  
Leave
52%
15,908,812
Eastern 
After 43 results out of 47 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1,273,544 - 43.24%
Leave 1,671,469 - 56.76% 

East Midlands 
After 32 results out of 40 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 798,353 - 41.56% 
Leave 1,122,403 - 58.44%

London 
After 29 results out of 33 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes 
Remain 1,955,018 - 59.94% 
Leave 1,306,503 - 40.06% 

North East 
After 11 results out of 12 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 480,573 41.36 
Leave 681,404 58.64 

Northern Ireland 
After one result out of one in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1 440,707 55.78 
Leave 0 349,442 44.22 

North West 
After 38 results out of 39 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1,603,565 - 46.18% 
Leave 1,868,843 - 53.82% 

Scotland 
After 32 results out of 32 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1,661,191 - 62.00% 
Leave 1,018,322 - 38.00% 

South East 
After 58 results out of 67 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1,937,512 - 47.71%
Leave 2,123,281 - 52.29% 

South West & Gibraltar 
After 31 results out of 38 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1,122,386 - 47.86% 
Leave 1,222,974 - 52.14% 

Wales 
After 22 results out of 22 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 772,347 - 47.47% 
Leave 854,572 - 52.53% 

West Midlands 
After 27 results out of 30 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1,038,695 - 40.89% 
Leave 1,501,474 - 59.11% 

Yorkshire & The Humber 
After 20 results out of 21 in the EU referendum, running totals are: 
Voting Total Share 
areas votes % 
Remain 1,094,681 - 41.63%
Leave 1,534,954 - 58.37%
http://www.theguardian.com/politics/live/2016/jun/23/eu-referendum-result-live-counting-leave-remain-brain-in-europe

பிரிட்டன் வாக்கெடுப்பு: கடும் போட்டியில் 'வெளியேறவேண்டும்' தரப்பு முன்னிலை

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் இருக்கவேண்டுமா , வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறிய நேற்று வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி , வெளியேற வேண்டும் என்ற தரப்பு குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலையில் இருக்கிறது.

160623212410_brexit_640x360_reuters_nocr
 

ஆனால் இன்னும் பெருமளவு வாக்குகள் எண்ண வேண்டியிருக்கும் நிலையில், போட்டி கடுமையாக இருப்பதாகவே தெரிகிறது.

தற்போதைய ( இந்திய நேரப்படி காலை 8 மணி) நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் , பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற தரப்புக்கு சுமார் 53 லட்சம் வாக்குகளும், ஒன்றியத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற தரப்புக்கு சுமார் 51 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன.

வெளியேறவேண்டும் என்ற தரப்புக்கு இது வரை 50.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

ஆனால் , தொடரவேண்டும் என்ற தரப்பு பின்னிலையிலிருந்து சற்று முன்னேறி வரத் தொடங்கியிருக்கிறது.

160623045038_brexit_512x288_bbc_nocredit  

வடகிழக்கு இங்கிலாந்தும், வேல்ஸும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற தரப்புக்கு ஆதரவாக வாக்களத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. அந்தப் பகுதிகளில் பொதுத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் , பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கவேண்டும் என்ற தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

ஆனால் லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் இன்னும் பல லட்சக்கணக்கான வாக்குகள் எண்ணப்படவேண்டியுள்ளன.

வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில் வெளியான சில கருத்துக் கணிப்புகள் , தொடரவேண்டும் என்ற தரப்பு வெல்லக்கூடும் என்று சுட்டிக்காட்டியதை அடுத்து பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு உயர்ந்து பின்னர் மீண்டும் சரிந்தது.

பொதுதேர்தலில் ஒவ்வொரு தொகுதி முடிவுகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்த கருத்தறியும் வாக்குப் பதிவில், மொத்த வாக்குகளில் பெரும்பான்மையே முடிவை நிர்ணயிக்கும்.

மொத்தம் 382 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

தேர்தல் வல்லுநர் பேராசிரியர் ஜான் கர்டிஸ் இந்த ஆரம்ப கட்டத்தில் வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, வெளியேறவேண்டும் என்ற தரப்பு வெல்லக்கூடும் என்று கூறுகிறார்.

எந்த ஒரு தரப்பும் வெற்றி பெற 1.68 கோடி வாக்குகள் தேவைப்படும் என்று அவர் கணிக்கிறார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160624_brexitvote

 

பிரிட்டன் கருத்தறியும் வாக்கெடுப்பு: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தரப்பு வெற்றி- பிபிசி கணிப்பு

 

பிரிட்டனில் பெரும்பான்மை வாக்காளர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்துடனான 43 ஆண்டு கால உறவை முடிவுக்குக் கொண்டுவர வாக்களித்திருக்கிறார்கள் என்று பிபிசி இப்போது கணித்திருக்கிறது

160624044237_cn_euref_brexit_badge_640x3
 

பெரும்பான்மையான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், வாக்களித்தவர்களில் 52 சதவீதத்தினர் , பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற தரப்பு லண்டனிலும், ஸ்காட்லாந்திலும் பெரும்பான்மையைப் பெற்றது ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகவேண்டும் என்ற தரப்புக்கே ஆதரவு கிடைத்திருக்கிறது.

பிரிட்டன் இப்போது முன்பு பயணிக்காத பாதையில் செல்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரனுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தக் கருத்துக் கணிப்பின் தாக்கம் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் அதற்கப்பாலும், இன்னும் சற்று காலத்துக்கு, பெரும் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று பிபிசியின் அரசியல் செய்தியாளர் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160624_bbcforecastbritain

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று என்னுடன் வேலை செய்யும் போலந்து நாட்டுக்காரன், காலையில் வேலை ஆரம்பிக்க முதலே...
தங்களது நாட்டு தொலைக் காட்சியில்.. நேற்று இரவு இங்கிலாந்தில் வசிக்கும்  இந்திய வியாபாரி ஒருவர், தங்களது கடையில் விற்கும் பொருட்களை விட... இங்கிலாந்தில் வியாபாரம் செய்யும்  போலந்து நாட்டுக்காரரின்  கடைகளில் விலை மலிவாக விற்பதால்.... தமது வியாபாரம் படுத்து விட்டது  என்பதால்.... பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று பேட்டியளித்ததை மிகுந்த ஆவேசத்துடன்  கூறினார்.

இந்தியனும் வெளிநாட்டுக்காரன், போலந்துக்காரனும் வெளிநாட்டுக்குகாரன்....
இவன் என்ன கருத்தை சொல்வது? வெள்ளைக்காரன் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று  சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன், தங்களது நாட்டை இழுக்க,  இவன் யார்... என்று கவலைப் பட்டான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.