Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்ய போவதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு

Featured Replies

விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்ய போவதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு

 

பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார்.

 

160313084637_scottish_snp_nicola_sturgeo

 பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்யப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க மிகப் பெருமளவில் ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவு வந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஸ்காட்லாந்தின் விருப்பதற்கு எதிராக அதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே கொண்டு வருவது ஜனநாயக ரீதியில் ஏற்றுகொள்ள முடியாதது என்று அவர் கூறியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்து விடுதலை பெறுவதற்கு எதிராக வாக்களித்தபோது நிலைவிய சூழ்நிலைகளில் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு அர்த்தப்படுத்துகிறது. அதனால், புதிய வாக்கெடுப்பு நியாயமானதே என்று ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார்.

வட அயர்லாந்தில் பெரும்பாலானேர் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதைத் தெரிவு செய்திருக்கையில், அயர்லாந்து குடியரசோடு அது ஒன்றுபடவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான வாதம் வலுப்பட்டிருக்கிறது என்று அந்த மாகாணத்தின் மிக பெரிய தேசியவாத கட்சியான ஷின் ஃபெயின் தெரிவித்திருக்கிறது.

http://www.bbc.com/tamil/global/2016/06/160624_scotland_ireland

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகலும் (Brexit) இலங்கையும்-


ரிறினிடாட்டிலிருந்து சில எண்ணங்கள் - ரட்ணஜீவன் கூல்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகலும் (Brexit) இலங்கையும்-

 

இந்தக் கட்டுரையை பேராசிரியர்  ரட்ணஜீவன் கூல் எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னரே, ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தார். தமிழாக்கம் செய்து வெளியிடும்படி கேட்டிருந்தார். எமது வளப்பற்றாக்குறையும் நெருக்கடியும் உடனடியாகச் மொழியாக்கம் செய்ய முடியவில்லை.


ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரிட்டன் நிலைத்திருப்பதா? விலகிச் செல்வதா? என்ற வாக்கெடுப்பு முடிவுற்று, விலகிச்செல்லும் பிரிவினர் வெற்றிபெற்று, பிரதமர் டேவிட் கமரோனும் தன் பதவியை ராஜனாமாச் செய்த பின்னரே, இன்று தமிழில் பதிவிட முடிகிறது. இருப்பினும், இந்தக் கட்டுரை பலவிடயங்களை ஆய்வு செய்கிறது. அதன் முக்கியத்துவம் கருதி இங்கு பதிவிடுகிறோம்…
நடராஜா. குருபரன்..


Brexit என்பது பிரிவினைவாதமாக:


“Brexit” என்பது “Britain”, “Exit” என்ற இரு சொற்களையும் இணைத்துப் பெறப்பட்ட இணைப்புச் சொல்லாகும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா அல்லது அதிலிருந்து வெளிச் செல்வதா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு வியாழக்கிழமை இடம்பெறுகின்றது. 1970 களின் ஆரம்பத்தில் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனக்கு ஞாபகம் இருக்கின்றது அப்போதைய கன்சவேடிவ் கட்சியை சார்ந்த பிரித்தானிய பிரதமர் எட்வேட் கீர்த், அப்போதைய பொதுச் சந்தையில் அங்கத்துவம் வகிப்பதன் நன்மைகள் பற்றி BBC வானொலிச் சேவையில் வலியுறுத்திச் சொல்லி வந்தார். அந்தப் பொதுச்சந்தையில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 65% வாக்குகள் 1975 ஆம் ஆண்டு பெறப்பட்டது.

தனித்திருத்தல் எதிர் சர்வதேசியமயப்படல்:


இனப் பதற்றங்கள் குறைந்திருந்த அந்தக் காலத்தில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவனாக, நான் பிரித்தானிய தேர்தலில் வாக்களித்திருந்தேன். இருந்தபோதும், கன்சவேட் கட்சியைச் சேர்ந்த மக்கரெட் தட்சர் எமக்கிருந்த அந்த உரிமையையும் இல்லாமலாக்கியதோடு, நான் ஒரு வெளிநாட்டு மாணவனென்பதால், எனது கல்விக்கான கட்டணமும் இரட்டிப்புச் செய்யப்பட்டது. இன்று அரசியல் தஞ்சம் கோரி மற்றும் நிரந்தர விதிவிட உரிமை கோரி ஐரோப்பியாவிற்குள் வருபவர்களால், மற்றையவர்களின் சகிப்புத்தன்மை நீண்டே விட்டது. அதனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான வேண்டுகையானது உண்மையில் இது வெள்ளையரல்லாதோரின் குடியேற்றங்களிற்கு எதிரான வேண்டுகையே இது. அதாவது இது முழுமையாக அவர்களின் இறைமைக்கான வேண்டுகையே.

"த ரைம்ஸ்" ஜூன் 21 இல் நடத்திய கருத்துக் கணிப்பின் படி, உழைக்கும் வர்க்கம் மற்றும் வேலையற்றோர் மத்தியில்,  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்ற கருத்து 20% இனால் முன்னிலை வகிக்கின்றது. அதே நேரத்தில், நடுத்தர மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் 20% ற்கு மேற்பட்ட விழுக்காட்டினால் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற கருத்து முன்னிலை பெறுகின்றது. 


ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற கருத்து பட்டமேற்படிப்பு முடித்த பிரித்தானியர்கள் மத்தியில் 40% இனால் முன்னிலை வகிக்கின்றது. 18-29 வயதெல்லையில் இருக்கும் அதாவது மிகக்குறைந்த இனத்துவ சிந்தனை கொண்டோர் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற சிந்தனை மேலும் அதிக விழுக்காட்டால் முன்னிலை பெறுகின்றது. 


தாராளமயவாத கொள்கையிலுள்ள "கார்டியன்" என்ற செய்தித்தாளின் வாசகர்கள் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்க வேண்டும் என்ற கருத்து 90% முன்னிலை வகிக்கையில், "த சண்" என்ற செய்தித்தாள் வாசகர்கள் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கருத்து 40% இனால் முன்னிலை வகிக்கின்றது. இதிலிருந்து இது குறித்து கற்றோர்கள் மத்தியில் நிலவும் சர்வதேசியப் பார்வை தெளிவாகப் புலனாகின்றது.

எண்ணிக்கை பலம்:

ஒரு நாட்டின் வலிமை அந்த நாட்டிலுள்ள மக்களின் எண்ணிகையில் தங்கியுள்ளது என கற்றோர்கள் அறிவார்கள். வெள்ளையின மக்கள் தமது நாட்டிற்கு தேவையான சனத்தொகையை அதிகரிப்பதில் பங்கு வகிப்பதில்லை என்றே சொல்லலாம். பிரித்தானியாவின் சொந்தப் பொருட்களை வாங்கி அதன் பொருளாதார அபிவிருத்திக்கு உறுதி செய்யும் சொந்த சனத்தொகை அவர்களிடம் இல்லை. சனத்தொகையில் வளர்ச்சி இல்லாமல் ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் மக்கள் எண்ணிக்கை இருக்கப்போவதில்லை என டொனால்ட் ரம் மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் கனடாவிலுள்ள சிந்தனையாளர்களுக்கு நன்கு தெரியும். குடிவரவினால் மட்டுமே சனத்தொகை பெருக்கம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்ட அமெரிக்கா மற்றும் கனடா பொன்ற நாடுகள் அவற்றின் குடிவரவுக் கொள்கைகளை அதற்கேற்றாற் போல் ஆக்கி வைத்திருக்கின்றது. 

பட்டப்படிப்பிற்காக மாணவர்களை உள்வாங்குகின்றது. தொடர்ந்து அவர்களிற்கு தகைமை சார்ந்தோரிற்கான குடியுரிமை வழங்குகின்றது. ஆய்வுப் பட்டங்களை நிறைவு செய்தோரிற்கு ஆதரவு என்ற அடிப்படை அவர்களிற்கு தங்களது நாட்டில் இல்லையென்றாலும் கூட வதிவிட உரிமை வழங்கி தமது நாட்டில் குடியேற்றுகின்றது. தமது நாட்டிற்கு மக்கள் எண்ணிக்கை தேவை என்பதை கருத்திற்கொண்டு அந்த மக்கள் யார் என்பதையும் அறிவுபூர்வமாக இந்த நாடுகள் தெரிவு செய்கின்றன.

இதனாலேயே இவ்வாறான நிலைப்பாட்டை கன்சவேட்டிவை சார்ந்த தற்போதைய பிரதமர் டேவிட் கமரூன் எடுக்கிறார். தனது கட்சிக்குள்ளேயே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான குரல் வலுப்பெறத் தொடங்கியதும், 2015 பொதுத் தேர்தலிற்கு முன்பாக அதாவது ஒரு குறுங்கால அமைதியாக ஏற்படுத்தும் நோக்கோடு ஒரு வாக்குக் கொடுத்து இருந்தார். அதாவது "தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்து இருப்பதா அல்லது அதிலிருந்து வெளியேறுவதா என தீர்மானிக்கும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவதாக"


இதில் என்னவென்றால், ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த சிக்கல் உள்ள ஒரு குறுங்கால விடையத்தை  கையளுவதற்காக, அந்த சிக்கலை பிரித்தானியாவின் பொருளாதாரத்தை, ஆதிக்கத்தை, பிரித்தானியாவின் எதிர்கால போக்கை மற்றும் கமரூனின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் சிக்கலாக பெரிதாக்கி விட்டார் கமரூன்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பது பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்பது வணிக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் டேவிட் கமரூனிற்கு நன்கு தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவராக இருந்து வேலையில்லா சிக்கல், சூழல் தொடர்பான சிக்கல் மற்றும் பயங்கரவாத சிக்கல்களை எளிதில் சமாளிக்கலாம் என்பது கமரூனிற்கு தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கான விருப்பு மிகவும் புறக்கணிக்கத்தக்க சதவீதத்தாலேயே முன்னிலை வகிப்பதால், கமரூன் தனது முழுச் சக்தியையும் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டாம் என பிரித்தானியரை நோக்கி கேட்டிருக்கின்றார்.

பன்டோராவின் பெட்டி:


23 ஆம் தேதி பிரித்தானியர்கள் வாக்களித்து முடித்திருப்பார்கள். வாக்குகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக தீர்மானிக்குமெனில், அது பிரித்தானியாவிற்கு பேராபத்தாகவே அமையும். அது இனவாத போக்கை ஏற்படுத்தும் என்பதுடன், பொருளாதார நலனையும் இன அடிப்படையிலான சமநிலையையும் பாதிக்கும். எப்படியெனிலும் பன்டேராவின் பெட்டி அதாவது எதிர்வு கூற முடியாத புதிய சிக்கல்களை உருவாக்க கூடியதான விடையம் திறக்கப்பட்டு விட்டது. ஸ்கொட்லாண்ட் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதில் வசதியை உணருவதோடு கடந்த தேர்தலில் தான் பிரித்தானியாவில் இருந்து விலகாமல் ஒருமித்து இருக்க விரும்புவதாக உணர்த்தியது. (55.3% இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தால், ஸ்கொட்லாண்ட் அதனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். சில இத்தாலியர்களும் வாக்கெடுப்பை கோருகின்றார்கள். இது தொடர்பிலான பிரித்தானியாவின் தீர்மானம் வெள்ளிக்கிழமையே தெரியவரும். பிரித்தானிய தேர்தல் ஆணையகம் croissants எனப்படும் பிரான்ஸ் நாட்டு உணவினை அடையாளமாக பகிர்வதை கூட பிரித்தானியா தடை செய்தது. ஏனெனில் இது ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுப் பிரச்சார அடையாள உத்தியாக இருக்கும் என்பதாலாகும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்த செய்தி இலங்கையில்.


பொதுநலவாய நாடுகளின் வாக்களிப்பு வலையமைப்பு கூட்டத்திற்காக நான் ரிறினிடாட் மற்றும் ரொபாக்கா என்ற இடத்தில் நான் நிற்கின்றேன். அங்கு இது பற்றி அதிகம் பேசப்படுகின்றது. இவ்வாறு பாரிய விளைவை ஏற்படுத்தப் போகின்ற இந்த தேர்தல் பற்றி மிகக் குறைந்தளவிலான கலந்துரையாடல்களே இலங்கையில் காணப்படுகின்றது. அமைதியான வாக்கெடுப்பு மூலமாக மக்கள் தமது வழியில் போய்விட முடியும் என்ற பீதியான சிந்தனை இலங்கையில் காணப்படுவது போல் தோன்றுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக வாக்கெடுப்பு என்பது ஒரு சனநாயக நடைமுறையே.

கியூபெக்:


பிரித்தானியாவில் இருந்து விலகுவதை தீர்மானிக்கும் வாய்ப்பை ஸ்கொட்லாண்ட் மக்களிற்கு வழங்கிய போது அவர்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிவதில்லை எனவே முடிவெடுத்தார்கள். 1980 களில் எவ்வாறு கியூபெக்கோய்ஸ் என்ற பிரிவினைவாத கட்சியின் பின்னால் கியூபெக் மக்கள் நின்றார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நான் மொன்ரேரியாவில் மாணவனாக இருந்த போது கல்வியறிவு குறைந்தவர்களே பிரிவினை கோரி நின்றனர் என்பதைக் கண்ணுற்றேன். 
அப்போதைய பிரதமர் பியரி ருறுடோ பன்பவர் பிரஞ்சுக்காரர் ஆனால் அவரது தாயார் ஆங்கிலேயர். அதாவது தற்போதைய கனடாவின் பிரதமரான ஜஸ்ரின் ரிறுடோவின் தந்தையாவார். கியூபெக் மக்கள் பிரிந்து போவதைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பு வாய்ப்பை அவர் வழங்கினார். இது ஒரு ஆபத்தான நகர்வாக அந்த நேரத்தில் பார்க்கப்பட்டது. 1967 இல் பிரான்சின் அதிபர் சாள்ஸ் சி கௌலி மொன்ரியலுக்கு வருமை தந்து "வாழ்க மொன்ரியல் வாழ்க கியூபெக்" என்று கோசமிட்டு கைதட்டல்களின் நடுவே "வாழ்க சுதந்திர கியூபெக்" எனவும் கோசமிட்டார். இப்படியாக ரிறுடேயின் உத்தி வெற்றி கண்டது. அவர் பிரான்சிய கலாச்சாரத்தை விரிபுபடுத்த சமஸ்டி அரசாங்கத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்தினார். 59.56% க்கு 40.44% என்ற அடிப்படையில் இறைமை குறித்த முன்மொழிவுகள் தோற்கடிக்கப்பட்டது. 

லியுசின் பௌசாட் என்ற மிகவும் கவர்ச்சியான பிரான்சு தலைவர் பிரிவினை நிகழ்ச்சி நிரலிற்கு மீண்டும் புத்துயிரளித்தார். 50.58%.  வாக்குகளால் 1995 ஒக்டோபர் மீண்டும் இந்த பிரிவினை தோற்கடிக்கப்பட்டது. இன்று கனடாவின் தாராளமயவாத கொள்கைகளினால் ஜஸ்ரின் ரிறுடோ என்ற அடுத்த பிரான்ஸ்காரர் மீண்டும் பிரதமராகியுள்ளார். 


றணில் விக்கிரமசிங்கவும் அவரது ஒப்பந்தங்களும்:


பிரித்தானியாவைப் போலவே இலங்கையில் உள்ள தலைவர்களிற்கும் தெரியும் எமக்கான சந்தை எமது எல்லைகளுடன் மட்டும் இல்லை என. உதாரணமாக ஒரு சின்ன விடையம், இலங்கையில் நாம் ஒரு புத்தகத்தை எழுதினால் அதனை வாங்க யாருமில்லை. வெளிநாட்டில் வெளியிடப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டதாலேயே எனது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின. உள்நாட்டில் புத்தகங்கள் இலாபத்தை ஈட்டித்தருவதில்லை. இதனால் அனுசரனையாளரில் தங்கியிருக்க நேரும். இதனால் உயரிய தரத்தை பேண முடியாது. பேராசிரியர்கள் தெரிவின் போது உண்மையான தரத்தை விளங்கிக்கொள்பவர்கள் மிகச் சிலரே. அதனாலேயே பல்கலைக்கழகங்களின் தரம் வீழ்ச்சியில் இருக்கின்றது. சர்வதேசவாதியாக இருப்பதற்கு நாம் எமது தரத்தை உயர்ந்தளவில் உயர்த்த வேண்டியுள்ளது. உதரணமாக சிங்கப்பூர் தனது குடிவரவுக் கொள்கையினால், நல்ல சர்வதேச தரத்தில் உள்ளது. இதை நன்கு புரிந்துள்ளதனாலேயே இந்தியாவுடனான ஒப்பந்தங்களையும் சார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களையும் ஊக்குவிக்கின்றார். குறுக்கு கலாச்சார தொடர்பை விரும்பாதவர்கள் தங்களது நிலையை காப்பாற்றிக் கொண்டு போட்டியை விரும்பாதவர்களேயாவர். இலங்கையில் எமக்கு கல்வியறிவின்மைக்கும் இந்துவ தனிமைக்கும் இடையில் உறவு உண்டா?  பிரத்யேகவாத நிபுணர்கள் திறமை என்பதிலும் நாட்டுப்பற்று என்ற அடிப்படையில் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் தமது நிலையை பாதுகாப்பதுடன், வர்த்தக நலன்கள் அனைவருக்கும் சென்றடைவது இயலாதுள்ளது.


பிரிவினைவாதத்தினை வெற்றி கொள்ளல்:

பிரிவினைவாதத்திற்கெதிராக இலகுவாக வெற்றி கொள்ளலாம். இது நம்முள் சிதைந்து போகும் கலாச்சாரமாகும். இதனால் எவருக்கும் நன்மையில்லை. இது நம்முள் சமத்துவமின்மை காணப்படும் போதே ஊக்குவிக்கப்படும். இதனை வெற்றிகொள்வதற்கு இலங்கை உண்மையில் ஒரு சமத்துவ நாடாக இருக்க வேண்டும். போர்க் குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், தமிழ் மக்கள் கொல்லப்படுவது என்பது ஒரு விடையமே இல்லை என சொல்லுவதைப் போன்றதாகி விடும். இப்படியான சூழலில், எந்த தமிழன் தான் இலங்கையனாக இருக்க விரும்புவான்? போர்க் குற்றம் நடந்திருக்கவில்லை எனின், சர்வதேச விசாரணை குறித்து பீதியடையத் தேவையில்லை. மோசமான போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என இந்தப் பாதிப்புகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுடன் உரையாடியவர்கள் எவருக்கும் தெரியும்.

இல் நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன என மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குற்றஞ் சாட்டியுள்ளார். வேலை வாய்ப்புகளில் தமிழருக்கெதிரான பாரபட்சம், தமிழர்களின் நிலங்களை தேவையின்றி இராணுவம் தொடர்ந்து வைத்திருத்தல், வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தொடர்ச்சியாக அரசியல் கைதிகள் தொடர்ந்து அடைத்து வைக்கப்படல் என்பன தொடர்பில் சம்பந்தன் குற்றஞ் சாட்டியுள்ளார்.  

அரசாங்கம் இந்தப் பிழைகளை சரிசெய்து உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டினாலே தமிழர்கள் மத்தியில் இருக்கும் பிரிவினைவாதத்தை நீங்கச் செய்யலாம். இப்படிச் செய்த பின்னர், இலங்கை ஒரு வாக்கெடுப்பை நடத்தினால், ஒருங்கிணைந்த இலங்கைக்கான வாக்குகளாகவே அது கிடைக்கும். இதனை ஸ்கொட்லாண்டும் கியூபெக்கும் நிரூபித்துள்ளது. ஐரோப்பியாவில் பிரித்தனியாவிற்கு முழு உரிமைகளும் இருப்பதனால், பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போகாது என்றே நான் நினைக்கின்றேன்.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலயத்திற்காகவும், இற்காகவும் ஊடகங்களிற்காகவும் அல்லாமல், இதய சுத்தியுடன் உண்மையாகவே சமத்துவத்தை உருவாக்குமா? சிறுபான்மையோரை ஊக்குவிக்கும் நம்பகத்தன்மையுள்ள தேசியத் தலைவர்கள் இலங்கையில் உண்டா?

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133431/language/ta-IN/--Brexit-.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.