Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனில் தலைதூக்கும் நிறவெறி

Featured Replies

பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனில் தலைதூக்கும் நிறவெறி

 
படம்: ஏ.எஃப்.பி.
படம்: ஏ.எஃப்.பி.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளிக்க, அங்கு தற்போது அயல்நாட்டவர்கள் மீதான வெறுப்புப் பேச்சு, சுவரொட்டிகள், தாக்குதல் போன்ற 100 சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஒன்றின் வாசல் சுவரொட்டி “போலந்து புழு பூச்சிகளுக்கு இனி இடமில்லை” என்ற வாசகத்தை தாங்கியிருந்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் போலந்து சமூக மற்றும் பண்பாட்டு கூட்டமைப்பு கட்டடத்துக்கு வெளியேயும் இதே வாசகம் கொண்ட சுவரொட்டிகள், அட்டைகள் காணப்பட்டதால் ஸ்காட்லாந்து யார்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

அதே போல் செயிண்ட் பீட்டர் பள்ளி வாசலில் இதே வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் காணப்பட்டதாக கேம்பிரிட்ஜ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த சனியன்று பர்மிங்ஹாம் மசூதி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலீஸார் நிறவெறி வசைகள் கொண்ட பேனரை பறிமுதல் செய்தனர், அதில் “rapefugees not welcome” என்று அகதிகளை பாலியல் பலாத்காரவாதிகளாக உருவகித்து கூறப்பட்ட வாசகம் அடங்கியிருந்தது.

மேலும் அராஜகமாக, கிழக்கு லண்டன் அப்டன் பார்க் பகுதியில் நேரில் பார்த்தவர்களின் சாட்சியத்தின் படி போலந்து நாட்டைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரையும் கும்பல் ஒன்று தாக்கிய விவகாரமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் லண்டன் தெருக்களில் ‘நிலைமைகள் பாதுகாப்பாக இல்லை” என்று லண்டனைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகன் பேரோனஸ் வார்சி என்பவர் தெரிவித்தார்.

சில இடங்களில் அயல்நாட்டினரை தெருவில் வழிமறித்து, “ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற நாங்கள் வாக்களித்துள்ளோம், எனவே நீங்கள் இங்கிலாந்திலிருந்து வெளியேறுவது நல்லது” என்று சிலர் மிரட்டும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அதாவது ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என்பது இங்கிலாந்தில் உள்ள ஐரோப்பியர்கள் உடனடியாக வெளியேறுவதற்கான முடிவாக பலரும் தவறாக புரிந்து கொண்டதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/பிரெக்ஸிட்டுக்கு-பிறகு-பிரிட்டனில்-தலைதூக்கும்-நிறவெறி/article8779926.ece

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுங்கட்சி தலைவர் கமரோன் விலகல், எதிர்கட்சித் தலைவர் ஜெரமி விலக நிர்பந்தம். இரு கட்சிகளிலும் விலகல், சேரல் எனும் பெரும் பிளவு. இவை உறுதியற்ற அரசியல் நிலைமையை உண்டாக்கியதால் வந்த விளைவு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளுக்கு வந்திட்டு.. அல்லது குடியேறிகளுக்கு பிறந்திட்டு.. தாங்கள் என்னவோ பூர்வீக மக்கள் கணக்கில் நடந்து கொள்ளுபவர்கள் மீதும்.. இப்படி எழுதப்பட்டு வருகிறது. எல்லாரும் சுயநினைவுக்கு எனி வருவாங்க... போல.tw_blush::rolleyes:

Shazia Awan tweets:

http://www.bbc.co.uk/news/uk-36634786

Stories of abuse featuring on Worrying Signs Facebook page

  • தொடங்கியவர்

இஸ்லாமிய மக்களை இகழ்வதற்கு பிரிட்டன் இஸ்லாமிய சபை கண்டனம்

160625103656_protest_london_brexit_640x3

 

ஐரோப்பிய ஒன்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை தொடர்ந்து, வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சிறுபான்மையினர்களை குறிவைப்பது என்று அந்த அமைப்பு கூறும் அதிர்ச்சி தரும் சம்பவங்களுக்கு பிரிட்டன் இஸ்லாமிய சபை கண்டனங்களை தெரிவித்துள்ளது.

 

சமூக அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ஷூஜா ஷஃபீ தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது எழுந்துள்ள பிளவுகளை சரி செய்ய ஒன்றிணையுமாறு, உலகத் தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

முஸ்லீம்களை அவமதிக்கும் விதமாக ''சொந்த நாட்டிற்கு திரும்பி செல்'' , அல்லது அது போன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து தனக்கு எண்ணற்ற தகவல்கள் வருவதாக அவர் கூறியுள்ளார்.

இச்சூழலில், லண்டனில் இருந்த போலிஷ் சமூக கட்டிடம் ஒன்று சூறையாடப்பட்ட நிலையில், இது உட்பட பல தொடர்ச்சியான வெறுப்புணர்ச்சி குற்ற சம்பவங்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் போலிஷ் தூதர் விடோல்ட் சோப்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160627_muslim_council_of_britain_has_denounced?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரங்கள் கையில் இருக்கும் வரையில்தான் சகிப்புத்தன்மை. குடியேற்றவாசிகள் அரசியல் / பொருளாதாரம் இவற்றில் ஆட்சி செலுத்த ஆரம்பிக்கும்போது பிரச்சினைகள் எழும். யூதர்களுக்கு அப்போது ஜேர்மனியில் நடந்தது. இன்று எல்லா இடங்களிலும் சட்டங்கள் போட்டு அடக்கி வைத்துள்ளார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும்? :unsure:

  • தொடங்கியவர்

பிரிட்டனில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு குற்றங்கள்
=============================================
ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து நடந்த வெறுப்புக்குற்றங்கள் என்று அழைக்கப்படுபவை குறித்து பிரிட்டிஷ் காவல்துறையினர் புலனாய்வு செய்துவருகிறார்கள்.

ஹண்டிங்டனிலுள்ள போலந்து நாட்டைச் சேர்ந்தவர்களின் வீட்டுத் தபால் பெட்டிகளிலும் வேறு இடங்களிலும் "போலந்து புழுக்கள் தேவையில்லை" என்று எழுதப்பட்டிருந்த அட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவங்களை, பிரிட்டிஷ் அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்று, ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான போலந்து நாட்டின் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.