Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் இருந்த வீடுகள் படையினரால் வேண்டுமென்றே அழிப்பு! மக்கள் கவலை

Featured Replies

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டகாங்கேசன்துறையில் ஒரு பகுதியில் நிலப்பரப்பில் இருந்த 2 ஆலயங்கள், பொதுச் சந்தைமற்றும் மக்களின் 30 ற்கும் மேற்பட்ட வீடுகள் ஆகியன இருந்த இடம் தெரியாதவாறுபடையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அப்பிரதேசத்தில் இருந்த சிறிய வீதிகளையும் இராணுவத்தினர் மூடி தமதுதேவைக்காக மாற்று வீதிகளை அமைத்துள்ளனர். இதனால் எமது காணிகளை கண்டுபிடிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என மீள்குடியேறுவதற்காக அங்கு சென்ற மக்கள் கவலை வெளியிட்டனர்.

காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து 63 ஏக்கர் காணிகள் 26 வருடங்களுக்கு மேலான இராணுவஆக்கிரமிப்பில் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டது. குறித்த பகுதிகளில் ஏற்கனவே இருந்த உயர் பாதுகாப்பு வலய எல்லைகள் அகற்றப்பட்டுமக்கள் மீள்குடியேற விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட தமது காணிகளைபார்வையிடுவதற்காக நேற்று பொது மக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தனர். எனினும் தமது காணிகளை அடையாளம் கண்டுகொள்ள அவர்கள் பெரும் சிரமங்களைஎதிர்கொண்டுள்ளனர்.

இங்கு நெருக்கமாக இருந்த பொது மக்களின் சுமார் 30 வீடுகள் இருந்த இடமே தெரியாதவாறு அத்திபாரங்களுடன் அழிக்கப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர மக்களுடைய குடிமனைகளை ஒட்டியும், ரயில் நிலையத்தினை அண்மித்தும் காணப்பட்டபொதுச் சந்தை கட்டிடம் அங்கு இருந்தமைக்கான அடையாளங்களே இல்லை.

மேலும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பிள்ளையார் அம்மன் ஆலயங்களும் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது. குறித்த இரு ஆலயங்களுக்கு பின்புறமாக இருந்த வீரபத்திரர் ஆலயம் மட்டும் இடிபாடுகளுடன்காணப்படுகின்றது. இவ்வாலயத்தில் இருந்த விக்கிரகங்கள், வாகனங்கள் போன்ற ஆலயத்தின் பொருட்களும் இப்போது அங்கு இல்லை.

காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் பல சிறு வீதிகளும் இருந்தஇடம் தெரியாமல் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் யுத்தத்தின் போது அழிக்கப்படவில்லை. வேண்டுமேன்றே கட்டங்கள் அனைத்தும் அத்திபாரத்துடன் அழிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் தாம் நிலை கொண்டிருக்கின்ற வீடுகள் மட்டும் உடைவுகள் ஏற்பாடாதவாறு உள்ளது. அதனை உள்வாங்கியே அவர்கள் முகாம்களை அமைத்துள்ளார்கள். ஆனால் எங்களுடையவீடுகளை வேண்டுமென்றுதான் உடைத்துள்ளார்கள் என்றும் காங்கேசன்துறையில் மீள்குடியேறச் சென்ற மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

KKS_Destruction_02.jpg

KKS_Destruction_01.jpg

http://www.tamilwin.com/development/01/109251

  • தொடங்கியவர்

விடுவிக்கப்பட்ட காணிகளில் மீண்டும் இரகசிய கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவம்!

காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரையான காணி நேற்றைய தினம் மக்கள் பார்வைக்காக விடுவிக்கப்பட்டு காங்கேசன்துறை வீதியில் அமைந்திருந்த சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் சோதனைச் சாவடி இருந்த இடத்துக்கு அருகில் புதிதாக காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் அங்கு தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அந்த வழியாகச் செல்லும் மக்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நேற்று இந்தப் பகுதியில் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் இந்த வழியாகச் சென்று வருவதில் உள்ள மறைமுக அச்சுறுத்தல்கள் குறித்துப் பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

வலி.வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் 201.3 ஏக்கர் காணிகள் 26 வருடங்களுக்குப் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட 63 ஏக்கர் காணிகளும் இதில் உள்ளடங்கும்.

விடுவிக்கப்பட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் காங்சேன்துறையில் வீதியில் இராணுவம் அமைத்திருந்த சோதனைச் சாவடி மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையம் வரையான ஒரு தொகுதி காணிகளும் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதிகள் கடந்த 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டதைப் போன்றே மறுநாள் 26 ஆம் திகதி அங்கிருந்த இராணுவ சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டது. அங்கிருந்த படையினரும் வெளியேறிச் சென்றதைக் கண்ட மக்கள் நின்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் நேற்று குறித்த சோதனைச் சாவடி இருந்த இடத்திற்கு அருகில் திடீரென புதிய பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அந்தக் காவலரணில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்வது குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

KKS_Destruction_04_Sin_Terror.jpg

KKS_Destruction_03_Sin_Terror.jpg

http://www.tamilwin.com/politics/01/109245

1 hour ago, போல் said:

காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் பல சிறு வீதிகளும் இருந்தஇடம் தெரியாமல் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் யுத்தத்தின் போது அழிக்கப்படவில்லை. வேண்டுமேன்றே கட்டங்கள் அனைத்தும் அத்திபாரத்துடன் அழிக்கப்பட்டுள்ளது.

போல் 

80 களில் நடைபெற்ற சில கண்ணிவெடி தாக்குதல்களை தவிர காங்கேசன்துறையில் யுத்தமே  நடைபெறவில்லை. இவை யாவுமே மகிந்தவின் சிந்தனையால் சில வருடங்களின் முன்னர் புடுங்கி எறியப்பட்டவை. விடுவிக்கப்பட்ட பகுதியில்  (அதாவது கல்லூரி வீதிக்கும் பருத்தித்துறை வீதிக்கும் இடையில், தண்டவாளத்துக்கும் கே கே எஸ் வீதிக்கும் இடையான பகுதியில்) நிச்சயமாக 50 மேற்பட்ட கடைகளும், 150 மேற்பட்ட வீடுகளும், சந்தையும், ஒரு தியேட்டரும் இருந்துள்ளது. இன்று மிஞ்சி இருப்பது 5 வீடுகள் + பெட்ரோல் நிலையம் மட்டுமே. இந்த 5 வீடுகளும் எனக்கு தெரிந்தவர்களது வீடுதான். இங்கு காணியை கண்டு பிடிப்பதென்பது சிவனின் அடி முடி தேடியது போலத்தான் இருக்கும்.

கல்லூரி வீதி, தையிட்டி, ஊறணி, பலாலி, மயிலிட்டியை விட்டால் இதைவிட இன்னும் பல ஆச்சரியம் வெளிவரும். அங்கும் எதுவுமே மிச்சமில்லை.

  • தொடங்கியவர்
4 minutes ago, ஜீவன் சிவா said:

போல் 

80 களில் நடைபெற்ற சில கண்ணிவெடி தாக்குதல்களை தவிர காங்கேசன்துறையில் யுத்தமே  நடைபெறவில்லை. இவை யாவுமே மகிந்தவின் சிந்தனையால் சில வருடங்களின் முன்னர் புடுங்கி எறியப்பட்டவை. விடுவிக்கப்பட்ட பகுதியில்  (அதாவது கல்லூரி வீதிக்கும் பருத்தித்துறை வீதிக்கும் இடையில், தண்டவாளத்துக்கும் கே கே எஸ் வீதிக்கும் இடையான பகுதியில்) நிச்சயமாக 50 மேற்பட்ட கடைகளும், 150 மேற்பட்ட வீடுகளும், சந்தையும், ஒரு தியேட்டரும் இருந்துள்ளது. இன்று மிஞ்சி இருப்பது 5 வீடுகள் + பெட்ரோல் நிலையம் மட்டுமே. இந்த 5 வீடுகளும் எனக்கு தெரிந்தவர்களது வீடுதான். இங்கு காணியை கண்டு பிடிப்பதென்பது சிவனின் அடி முடி தேடியது போலத்தான் இருக்கும்.

ஜீவன்!  உண்மையில் இந்த அழிவுகளைப் பார்க்கும் போது அடையும் வேதனைகளுக்கு அளவு கணக்கு இல்லை.
யுத்தத்தின் பின்னர் யப்பான் மீண்டு எழுந்தது போல நாமும் சுறுசுறுப்பாக இயங்கி எழ வேண்டும்.
காங்கேசன்துறை சிங்கப்பூரை விஞ்சிய நகரமாக உருவெடுக்க வேண்டும்.
இந்த நோக்கத்துடன் உங்கள் (உழைப்பவர்கள் ) முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு. 

நன்றி போல்

சில கிழமைக்கு முன்னர் புலம்பெயர்ந்த நண்பனை இங்கு வந்தபோது சந்திக்க அளவெட்டி போயிருந்தேன். அவனும் இது சித்தப்பாவின் வீடு, பெரியம்மாவின் வீடு, அத்தையின் வீடு, மாமாவின் வீடு என்று அடுக்கிக்கொண்டே போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. 26 வருடங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, கனடாவிலோ யாம் அறியோம் பராபரமே. காங்கேசன்துறை வந்தேறு குடிகளால் நிரப்பப்பட்ட ஒரு இடம். இங்கு சாதி, மத, இன பேதமின்றி வாழ்ந்தவர்கள் நாம். இது மறுபடியும் எமக்கு கிடைக்காது. வசதி உள்ளவர்கள் ஒன்றில் புலம் பெயர்ந்து விட்டார்கள் அல்லது இங்கு எங்கேயோ சொந்தமா வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் இங்கு வந்து காணியை பாத்து போவார்களே தவிர குடியிருக்க போவதில்லை. இந்த நரகம் மறுபடியும் நகரமாக குறைந்தது 10 வருடங்களாவது பிடிக்கலாம் - அப்போது ஒரு புதிய சந்ததி இங்கு உருவாகி இருக்கும்.

  • தொடங்கியவர்
1 hour ago, ஜீவன் சிவா said:

ஒருசிலர் திரும்பும் எண்ணம் இல்லாமல் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

நான் அறிந்த சிலர் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும், சிலர் கொழும்பிலும் நிரந்தர குடிகளாக உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் காங்கேசன்துறையில் தமது இடங்களை வீட்டுக் கொடுக்கத் தயாரில்லை. தமது வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ஆர்வமாக உள்ளனர்.

முன்னர் இருந்த சீமெந்து தூள் (மாசு) பிரச்சினை இப்போது இல்லை என பலர் மகிழ்ந்ததையும் கண்டுள்ளேன்.

மேலும்  நான் அறிந்த சில குடும்பங்கள் 2009 போரில், வாரிசுகள் கூட இல்லாமல் முழுமையாக அழிந்துவிட்டன என்பது மிகவும் கவலையான நிகழ்வுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த காலத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டு பலரது வீடுகள் இல்லாமல் அழித்தது உண்மை தான்  அவர் இன்னும் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக தான் இருந்து இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.