Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"'''புலிகளின் குறியும் அரசின் குழப்பமும்""

Featured Replies

"'''புலிகளின் குறியும் அரசின் குழப்பமும்""

அமைதி கிழித்தொரு அதிரடி தாக்குதல் மிக விரைவில் நடந்தேறும்

அதில் எந்த ஜயபாட்டுக்குட் இடமில்லை.

புலிகள் தமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபித்து காட்ட வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள்

அத்தோடு மக்;களின் கொந்தளிப்பு அவர்களின் தாங்கென்ன துயரங்களை துடைக்கவேண்டும்

அதற்கமைவாகவே அவர்கள் தமது படையணிகளை மறுசீரமைத்து பல புதிய படையணிகளை

உருவாக்கி பரிச்சார்த்த நகர்வுகளையும் ஒத்திகைகளையும் நடாத்தி இருந்தார்கள் .

அன்மைகாலமாக பல படையணிகள் பயிற்சி பெற்று வெளியேறுவதென்பது எதை குறிக்கிறது

என்பதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் உள்ளாந்த அர்த்தம் எதுவென அறிந்து கொள்ளுதல் அவசியம்.

இந்த இடத்தில் சில உதரணங்களை இங்கே சுட்டி காட்டுதல் அவசியமாகிறது.

வன்னி நிலப் பரப்பின் பல பிரதேசங்களை தமது ஆதிக்கத்தில்

படையினர் வைத்திருந்தபோது எம் மக்கள் இதைவிட மோசமாகவே

புலிகளை சாடினார்கள் .அவர்கள் மட்டுமல்ல பல ஆய்வாளர்களும்

அதையே சுட்டி காட்டினர்.

ஆனால் அங்கு நடந்த நிலை வேறானது உலகமே வியப்பில் ஆழ்ந்தது

மூன்றாம் தரப்பு அந்த போர் களத்தில் உள்நுழைய இருந்தது.

இப்பொழுதும் அவ்வாறான ஒரு நிலை உள்ளதை நாம் உணரவேண்டும்.

தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற பேச்சு மூன்றாம் உலக நாடுகள் முன்னால்

நடப்பவை மிகவும் அவதானமாகவும் அதேவேளையில் மிக சாதுரியமாகவும் தமது

ராஜதந்திர நகர்வுகளை நகர்த்த வேண்டும் அதில் தான்

தமது படைகளையும் அந்த மக்களையும் காப்பது தங்கி உள்ளது.

அந்தந்த காலகட்டதிற்கேற்ப மாறுதல் அடையும் உலக

அரசியல் நிலைகளிற்கேற்ப தமது நகர்வுகளை மிக நுனுக்கமாக

நகர்த்தவேண்டியது புலிகளுக்குள்ள நிலைப்பாடாகும்.

ஒரு அரசின் பக்கம் உலகமே அணிதிரண்டு நிற்கும்

இங்கே புலிகளிற்கு அவ்வாறல்ல.

நாம் நினைப்பது போல அல்லது பேசுவது போலவோ

அவர்கள் செயற்பட முடியாது இதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் மீது இத்தனை மோசமான தாக்குதலை நடத்தி

புலிகிற்கும் மக்களிற்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை உண்டாக்கி

புலிகளை தாமாகவே போரை தொடங்கவிடுவதே இதன் உள்hர்ந்த நோக்கம்

ஆனால் அவ்வாறு செய்தும் ஏன் புலிகள் இன்னும் மௌனம் காக்கிறர்கள் என்பதே.

புலிகள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்பது

அரச பீடத்திற்கும்

பெரிய சந்தேகத்தையும் குழப்பத்தையும் கொடுத்துள்ளது.

வடக்கு கிழக்கு பிரிப்பென்பது தமிழர் நலன்களுக்கு முரனானது என புலிகள்

கூறியதும் தம்மால் அதை ஏற்று கொள்ள முடியதென்பதையும் திட்டவட்டமாக

தெரிவித்த புலிகள் அதன் ஊடாக அரசுக்கு தமது நிலைப் பாடு எதுவாக

இருக்குமென்புத கூறியாகி விட்டது.

இதுவரை காலமும் புலிகளே ஒப்பந்தத்தை மீறி கிழித்து போரை தொடங்கியதாக

கூறி வந்த அரசு தற்பொழுது தானகவே யாவற்றையும் நடாத்தி வருவதென்பது

போர் ஒன்று தீவிரமடையும் பட்சத்தில் அவை புலிகளுக்கு பெரும் உதவியாகவும்

அதே வேளை மூன்றாம் தரப்பு நாடுகளின் நடு நிலை சமச்சீரற்ற

முடிவுகளின் காரணத்தாலயே இவையாவும் நடந்தாதாக அவர்கள் மீதே

அந்த போர் தினிப்பு நிர்பந்தத்தை புலிகள் சாடுவார்.

இதுவரை எந்த உலக நாடுகளுமோ அல்லது அனுசரனையாளர்களும்

போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை சிங்கள அரசை கடைபிடிக்கும் படி

மிகவும் அழுத்தம் கொடுத்து அதற்கமைவாக கொண்டுவர முடியவில்லை

இது அவர்களின் கையாலாகதனத்தை காட்டுகிறது.

ஆனால் புலிகள் அவற்றை மீறும் பொழுது முண்டியடித்து

கண்டனங்களையும் அறிக்கைகளையும் விடும் உலகம் அரச செய்யும் போது மட்டும்

அடக்கி வாசிப்பது எதை குறிகிறது என்பதை மக்களே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

அன்மைகாலமாக புலிகளின் பல பிரமுகர்களின் செவ்வி எதை கோடிட்டு காட்டியுள்ளது

என்பதை நாம் தெழிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

மகிந்த அரசுக்கு புலிகள் மிக துள்ளியமானதும் மிக நேர்த்தியானதுமான

பெரும் தாக்குதலை நிகழ்தி அரசமட்டத்திலும் அது சார்ந்த மக்களிடத்திலும்

எதிர்புனர்வை உருவாக்குவார்கள் என்பது தின்னம்.

தற்போது கிழக்கில் நடந்த ஒட்டுகுழுக்கள் மீதான் தாக்குதல் என்பவை அரச படைகளிற்கும்

அந்த அரசுக்கும் ஒரு முன் எச்சரிக்கை என்பதும்

அடுத்த கட்ட தங்களது நகர்வுகள் எதுவாக

இருக்குமென்பதும் இதனுடாக மீண்டும் ஒரு முறை கூறியாகிற்று.

""தற்பொழுது விடுதலை புலிகள் தமது திட்டங்களிற்கேற்ப தமது இல்குகள் மீது

குறிவைத்து தமது நகர்வுகளை துரிதமாகவும் மிக அமைதியாகவும்

சுறு சுறுப்பாகவும் செயற் பட்டு கொண்டிருப்பதை நடந்தேறும் நிகழ்வுகள்

தெழிவு படுது;தி நிற்கின்றன.""

அடுத்த கட்ட விடுதலை புலிகளின் பாய்ச்சால் எங்கே

எந்த பகுதியில் என்பதே அரசபடைகளிறி;கும் மக்களுக்கும்

உள்ள கேள்வி . இதற்கு எதிர் வரும் காலங்கள்

பதில் கூறும். அப்பொழுது தற்பொழுது புலிகளை சாடி விமர்சித்த உதடுகள்

அவர்களை போற்றி பறையடிக்கும் என்பதே உறுதி.

-வன்னி மைந்தன் -

அற்புதமான கருத்து வன்னி மைந்தன் அவர்களே. இனிவருங்காலங்களில் விடுதலைப்புலிகளின் போர்த்தந்திரங்கள் படைநகர்த்தல்கள் அனைத்தும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரங்களிலும் முறைகளிலும் தான் அமையப்போகிறது. புலிகள் போரிட்டு வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளிலும் பார்க்க அவர்கள் தமிழர் பிரதேசங்களில் நிலைத்திருக்க வேண்டுமெனப் பாடுபடுவதுதான் தமிழ் மக்களின் இன்றைய கடமையாக இருக்கமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//அப்பொழுது தற்பொழுது புலிகளை சாடி விமர்சித்த உதடுகள்

அவர்களை போற்றி பறையடிக்கும் என்பதே உறுதி.//

எல்லாம் சரி.. ஆனால் இதே வன்னி மைந்தன் தான் புலிகள் நித்திரையில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் கவி பாடியவர். இப்போ அதே உதடுதானா போற்றிப் பறையடிக்கிறது.?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்,,, வன்னி மைந்தனின் ஆய்வு எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பதை "தேனி நெருப்பு அதிரடி இணையத்தள பிரதம ஆசிரியர்" எண்ட நினனப்பில் இருக்கும் நெடுக்கால போவான் கருத்தையும், "யாழ் கள இக்பால் அத்தாஸ்" என்று தன்னை தானே நினைத்துக்கொள்ளும் குறுக்கால போவானின் கருத்துக்களை பார்த்த பின்புதான் சொல்ல முடியும்... ;)

சுவாரசியமான பதிவு...நன்றி

டக்கு - ஹி ஹி ஹி வந்திட்டிங்களா? ;)

டன் என்னை சரியாக கணிப்பிட்டிருக்கிறீர் நன்றி.

நான் எழுதுவதன் நோக்கம் "எமது பலம் காணாது எம்மை மேலும் பலப்படுத்த புலம் பெயர்ந்தவர்கள் பல வழிகளில் முயற்க வேண்டும். இராணுவ சமபலத்தில் திருப்த்திப்படாது மேலாண்மையை பெறவேண்டும். அத்தோடு எதிரியின் பலங்கள் என்ன எதிரியைப் பலவீனப்படுத்த வேண்டும். எதிரியை பெருளாதாரரீதியிலும் பலவீனப்படுத்தாவிட்டால் அது இராணுவ பலமாக மாற்றமடைந்த பின்னர் அதை எதிர்கொள்ளுவது என்பது நனைத்து சுமப்பதை விட மோசமானது."

இக்பால் அத்தாஸ் சிறீலங்கா வின் தேசிய ஒருமைப்பாடு இறமை என்பவற்றில் விசுவாசமாக இருந்து கொண்டு சிறீலங்காவின் மக்களிற்கும் எழுதுவது "சிறீலங்கா படைகள் பலமடைய வேண்டும், ஊழல்கள் களையப்பட வேண்டும், அரசியல் தலையீடுகள் இராணுவ நகர்வுகளில் இருக்கக் கூடாது. புலிகள் பலமாக எங்கு எப்படி இருக்கிறார்கள். புலிகளைப் பலவீனப்படுத்துவதன் அவசியம். புலிகளை பலவீனப்படுத்த யார் யாரை துணைக்கு இழுக்கலாம்".

அதாவது எதிரி பலமாக இருக்கிறான் எதிரியைப் பலவீனப்படுத்த வேண்டும் எம்மை இன்னமும் பலப்படுத்த வேண்டும். அதிக சவால்கள் எமக்காக காத்திருக்கு அதற்கு மக்கள் தயாராக வேண்டும். எமது பலவீனங்களை மூடிமறைத்து தொடராது கண்டறிந்து விமர்சிக்கப்பட்டு களையப்பட வேண்டும் என்ற தார்மீகக் கடமையை எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தயங்காது நேர்மையாக செய்கிறது Wijeya Publication இன் சண்டே ரைம்ஸ், டெயிலி மிரர். அவற்றில் வரும் அரசியல் ஆய்வோ இல்லை இக்பால் அத்தாஸ் இன் இராணுவ ஆய்வோ அல்லது பொருளாதாரம் பற்றிய விமர்சனங்களோ ஒரே நோக்கத்தைத்தான் கொண்டவை. மக்களிற்கு நாம் பலமாக இருக்கிறோம் எதிரி பலவீனமாக இருக்கிறான் என்று பெறுப்பற்ற முறையில் எழுதுவது இல்லை. தேவையற்ற முறையில் எதிர்பார்ப்புகளை கூட்டி எழுதுவது இல்லை. மக்களை முன் கூட்டியே சவால்களிற்கு தயார்படுத்துவதை வர இருக்கும் நெருக்கடிகள் எதிரியின் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் பின்னணிகளை ஆய்வு செய்வதில் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதாவது புலிகளின் பலம் பற்றி அவர்கள் எழுதுவது தமது தரப்பு சரியாக தயார்படுத்தப்பட வேண்டும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கே.

சிங்களவனிற்கு Wijeya Publications இருக்கு எமக்கு இருப்பது ?

அது கிடக்க...

டன் அட்வான்ஸ் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள். :)

நான் எழுதுவதன் நோக்கம் "எமது பலம் காணாது எம்மை மேலும் பலப்படுத்த புலம் பெயர்ந்தவர்கள் பல வழிகளில் முயற்க வேண்டும். இராணுவ சமபலத்தில் திருப்த்திப்படாது மேலாண்மையை பெறவேண்டும். அத்தோடு எதிரியின் பலங்கள் என்ன எதிரியைப் பலவீனப்படுத்த வேண்டும். எதிரியை பெருளாதாரரீதியிலும் பலவீனப்படுத்தாவிட்டால் அது இராணுவ பலமாக மாற்றமடைந்த பின்னர் அதை எதிர்கொள்ளுவது என்பது நனைத்து சுமப்பதை விட மோசமானது."

நீங்கள் சொல்ல வருவது எல்லாம் சரி புலிகள் இன்னும் பலம் பெறவில்லை எனும் கூற்றுத்தான் தேவை இல்லாதது போல இருக்கிறது... இதுவரை எப்பிடியோ இன்னிவரும் காலங்களில் புலிகள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டு வந்தார்கள், சமாதான காலங்களில்தான் பலம் பெற்றார்கள் எனும் இலங்கையின் பிரச்சாரத்துக்கு அணி சேர்ப்பதாகத்தான் அமையும்.. புலிகள் இப்போது மட்டும் இல்லை எப்போதும் பலமாகத்தான் இருக்கிறார்கள்.

மக்கள் புலிகளுக்கு பண உதவி செய்ய வேணும் எண்ற கவலை வேண்டாம்.. செய்யாதவர்கள் ஊருக்கு போகும் போது வட்டி குட்டியுடன் குடுக்கும் காலம் தமிழீழத்தில் அமையலாம்... தமிழீழ சுத்ந்ந்திரத்துக்காய் அவர்கள் விலை குடுக்க கடமைபடாதவர்கள் நாட்டுக்கு செல்லவேண்டாமே சொத்துக்களை அங்கேய்யே விட்டுவிடலாம்... பாதிக்கப்பட்ட மக்கள் பாவிப்பதற்காக..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் ஆற்றலும், செயற்திறனும், ஆன்ம பலமும் இருக்கின்றது. எனினும் ஆளிழப்புக்களைக் குறைத்து சிங்களப் படைகளை புறமுதுகிட்டோடத் தேவையான ஆயுத பலம் அதிகமாக இருப்பதாகச் சொல்லுவதுதான் சரியாகத் தெரியவில்லை. பிரதேசங்களைக் கைப்பற்றுவதும், தக்கவைப்பதும் மட்டும் தமிழீழத்தை அடைய உதவாது. தேசியத்தை வளர்க்கவும் நாடொன்றைக் கட்டியெழுப்பவும் இன்னும் பலவிடயங்களைச் செய்யவேண்டும். எல்லாமே இருக்கின்றதென்றால் தமிழீழம் மலர்ந்திருக்கும்!

உலக யுத்தங்களும் அத்தியாவசியப்பொருட்களுக்கா

புலிகள் எந்தவிதமான தாக்குதலையும் செய்யாமல் அவர்களின் பலம் என்ன என்று எவராலும் கணிப்பிட முடியாது.ஆனால் தமிழ் ஈழத்தை நாம் ஒரு பாதுகாப்பான, பலமான நாடாக , நிரந்தர சமாதனத்தோடு அமைக்க வேண்டும் என்றால், புலத்தவரான எங்கள் கைகளில் புலிகளின் பலத்தை இன்னும் இன்னும் வளர்க்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

புலிகள் தற்காப்பு நிலையில் இருந்து வெளியேறி ஒரு பாச்சலை மேற்கொண்டாலும், சரிவு கண்ட சிறிலங்கா இராணுவமும் தன்னை மீளக் கட்டியமைக்கும். நாம் தொடர்ந்தும் இந்த இராணுவச் சமனிலையைத் தக்க வைக்க வேண்டியதாக இருக்கும்.உலகின் வல்லராசான அமெரிக்காகூட தனது பலத்தை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக தொடர்ந்து பொருளாதார தொழில் நுட்பத் துறைகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியா,சீனா என்று எந்த நாடுமே தன்னை ஸ்திரமானதாக் வைத்துக்கொள்ள தொடர்ச்சியான உழைப்பயும் அர்ப்பணத்தையும் அதன் குடி மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும்.

இங்கே புலிகளைப் பலப்படுத்துவது எமது தேசத்தின் இருப்பைப் பலப்படுதுவதாகவும் அதன் விடுதலையை விரைவு படுத்துவதாகவும் இருக்கும்.ஆகவே புலிகள் பலமிழந்து விட்டனரா இல்லையா எங்கிற கேள்விகள் அர்த்தம் அற்றவை. நாம் எமதுதேசத்தை விடுதலை செய்ய என்ன செய்தோமென்பதே முக்கியமானது.

புலிகள் பலமிழந்து விட்டனர் என்று கூறுவதும், புலிகள் பலமானவர்கள் என்று கூறுவதும் ஒன்றே.புலிகளை வேறாகவும் எம்மை வேறாகவும் பார்க்கும் அன்னியப்பட்ட பார்வைகளே இவை. நமது பலத்தை வளர்க்க நாம் என்ன செய்தோம் என்பதே நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வி.

புலிகள் பலமிழந்து விட்டனர் என்று கூறுவதும், புலிகள் பலமானவர்கள் என்று கூறுவதும் ஒன்றே.புலிகளை வேறாகவும் எம்மை வேறாகவும் பார்க்கும் அன்னியப்பட்ட பார்வைகளே இவை. நமது பலத்தை வளர்க்க நாம் என்ன செய்தோம் என்பதே நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வி.

நாரதர் அண்ணாவின் இந்த கருத்தையே எல்லாருக்குமான எனது பொதுவான பதிலாகக்க விரும்புகிறேன்..

புலிகளிடம் கேள்வி கேளுங்கள் என்பவர்களும்... புலிகள் பதில் ஏன் சொல்லவில்லை என்பவர்களும் நன்கு கவனத்தில் எடுத்தால் நல்லது... இது புலிகளுக்கான போராட்டம் கிடையாது எங்களின் போராட்டம்... அதில் புலிகள் தலைமை ஏற்றவர்கள்.. பேதங்கள் எல்லாம் தமிழீழத்தில் தனித்து வைத்துக்கொள்ளப்பட வேண்டியவை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.