Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் மகன் நாமல் கைது

Featured Replies


மஹிந்தவின் மகன் நாமல் கைது
 

article_1462859029-naa.jpgமுன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான> ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் இன்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். இந்நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/176741/மஹ-ந-தவ-ன-மகன-ந-மல-க-த-#sthash.ZxJUdKsX.dpuf

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் கைது

 
 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன், நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நிதி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டார்.

 

150821144141_namal_rajapaksa_512x288_bbc

  150807112510_namal_rajapaksa_512x288_bbc

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

160309184012_namal_rajapaksha_640x360_na  

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷவும் இன்றைய தினம் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160711_namal_rajapaksa_arrest

  • தொடங்கியவர்

 நாமலுக்கு விளக்கமறியல்.!

 

 

முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/176760/ந-மல-ர-ஜபக-ஷ-ந-த-மன-ற-ல-ஆஜர-#sthash.hHbXKoBU.dpuf

 

நாமலுக்கு விளக்கமறியல்.!

 

 

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஜுலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக  வந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/8815

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாமலுக்கு விளக்கமறியல்...( படங்கள் இணைப்பு )
 
 

article_1468246691-xc1.jpg

முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,  எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)

article_1468246700-xc2.jpg

article_1468246709-xc3.jpg

article_1468246718-xc4.jpg

article_1468246661-xc.jpg

article_1468246755-xc5.jpg

- See more at: http://www.tamilmirror.lk/176784/ந-மல-க-க-வ-ளக-கமற-யல-#sthash.vdADozkj.dpuf

Edited by நவீனன்

நாமல் - ஜானகிக்கு இடையிலான உறவு தொடர்பில் தகவல்கள் அம்பலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மற்றுமொரு மோசடிகள் குறித்த தகவலை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பேன் ஏசியா வங்கியின் தலைவர் நிமல் பெரேராவினால், நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலம் ஊடாக நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் இயக்குனரான ஜானகி சிறிவர்தன எனப்படும் ஜானகி வீரகொடவுக்கு இடையிலான பல தொடர்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக நிதி மோசடி தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜானகி சிறிவர்தன எனப்படும் பெண் வர்த்தகர் கடந்த ராஜபக்ச ஆட்சியுடன் மிகவும் நெருக்காக செயற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் மஹாதேவன் நிறுவனத்தின் (கிரிஷ் இலங்கை நிறுவனத்தின் தாய் நிறுவனம்) உரிமையாளர்களை இந்த நாட்டில் முதலிட்டுக்காக அழைத்து வரப்பட்டதும் இவரால் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த நாட்டில் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும் போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுடன் முதலில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றமையினால் சிறிவர்த்தன என பெண் இந்திய வர்த்தகர்களுக்கு முதலில் நாமல் ராஜபக்சவை அறிமுகப்படுத்தி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச ரகர் வீரர் என்பதனால் இந்த நாட்டு ரகர் விளையாட்டிற்கு அனுசரணை பெற்றுக்கொடுக்க முடியும் என சிறிவர்தனவின் ஆலோசனைக்கமைய இந்திய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய 70 மில்லியன் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது. அந்த பணம் நாமல் ராஜபக்சவினால் வழங்கப்பட்ட வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. நிமல் பெரேரா என்பவரே அந்த கணக்குகளின் உரிமையாளராகும்.

நிமல் பெரேரா மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு இடையில் பல விசேட வர்த்தக தொடர்புகள் காணப்பட்டுள்ளன.

நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான பல நிறுவனங்களின் விலாசமாக அடையாளப்படுத்தப்படும் கவர்ஸ் ஸ்ட்ரீட் கட்டடம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும் இந்த நிமல் பெரேரா என்பவராகும்.

அவர் அந்த இடத்தை கைப்பற்றிய முறை தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த காணியின் வயோதிப உரிமையாளரை காணியில் இருந்து துரத்தி விட்டு அவர் உயிரிழந்த பின்னர் அந்த காணியை உயர் அறக்கட்டளை திணைக்களத்திற்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

அங்கிருந்து நகர அபிவிருத்தி அதிகார சபை அந்த காணியை கைப்பற்றியுள்ளது. அதன் பின்னர் நிமல் பெரேராவினால் ராஜபக்சர்களின் உதவியுடன் நிமல் பெரேரா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளமை தொடர்பில் தகவல் உள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு கிரிஷ் நிறுவனத்தின் முதலீட்டுத் தேவையாக காணப்பட்டுள்ளன.

நாமல் ராஜபக்ச ஊடாக அதற்கு ராஜபக்ச அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுகொள்வதற்கான விசேட முயற்சிகளை ஜானகி சிறிவர்தன மேற்கொண்டு வந்துள்ளார்.

எப்படியிருப்பினும் ஹம்பாந்தோட்டை சீன ஆதிக்கத்தின் கீழ் இருந்த நகரமாக காணப்பட்டுள்ளமைக்கமைய இந்த சந்தர்ப்பம் கிரிஷ் நிறுவனத்திற்கு கைநழுவி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் கற்பிட்டியவில் 30 ஏக்கர் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்கு அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 40 மில்லியன் கொடுக்கல் வாங்கல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவின் தலையீட்டிற்கமைய அந்த காணியை கொள்வனவு செய்யும் ஒருங்கிணைப்பிற்கு அப்போதைய சுற்றுலா சபை தலைவராக செயற்பட்ட பேராசிரியர் நாலக கொடஹேவா இதற்கு தலையிட்டுள்ளார்.

எனினும் அந்த காணி பத்திரத்தில் தீர்வு இல்லாமை மற்றும் அப்போதைய காணி அமைச்சராக செயற்பட்ட ராஜித சேனாரத்ன இந்த நாட்டு காணிகளை வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய தடைவிதித்து சட்டம் கொண்டு வந்தமையினால் அந்த காணி தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த காணி கொடுக்கல் வாங்கல்களை ஜானகி சிறிவர்தன மற்றும் சஜின் வாஸ் குணவர்தன இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய தரகு கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜபக்சர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கற்பிட்டிய காணி கொடுக்கல் வாங்கலில் பெற்றுகொண்ட 40 மில்லியன் பணத்தை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய மீளவும் செலுத்தப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் ஜானகி சிறிவர்தன தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலக கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி ஆகியோர் மற்றும் பிரபல வர்த்தகர்கள் பலரை இலங்கை அழைத்து வருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.

அதற்கமைய அம்பானி பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/crime/01/111154

வெலிக்கடையில் நாமலுக்கு வழங்கும் விசேட வரப்பிரசாதங்கள்

வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி வெலிக்கடையில் கைதி ஒருவரை பார்ப்பதற்கு மூன்று பேரே அனுமதிக்கப்படுகின்ற போதும் நாமலை பார்க்க பலர் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏனைய கைதிகளுக்கு சிறைக்குள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த முடியாது என்ற போதும் நாமலுக்கு அதற்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாமல் ராஜபக்ச படுப்பதற்கு மெத்தை வழங்கப்பட்டுள்ளமை குறித்து சிறைச்சாலை பேச்சாளரிடம் கேட்டபோது ஏனைய கைதிகளுக்கும் மெத்தைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/111171

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.