Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடித்தழிப்பு

Featured Replies


உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடித்தழிப்பு
 

article_1468393747-Houses%20%281%29.JPG

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர்.
கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு  பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இவ்வாறு அழிக்கப்படும் வீடுகளில் இருக்கும் ஓடுகள், கூரை மரங்கள், சீமெந்துத் தூண்கள், கற்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை, மறைவான ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது.

உயர்பாதுகாப்பு வலையத்துக்குள் உள்ள மக்களின் வீடுகளில், இராணுவத்தினர் தமது படை முகாங்களை அமைத்து நிலைகொண்டுள்ளனர். உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள வீடுகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், அந்த வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வெளியேறும் இராணுவத்தினர், தாம் நிலைகொண்டிருந்த வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் பொது மக்களின் சொத்துக்கள், இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

article_1468393756-Houses%20%282%29.JPG

- See more at: http://www.tamilmirror.lk/176922#sthash.gMDDIfxB.dpuf

வலி. வடக்கில் வீடுகளை இடித்தழிக்கும் இராணுவத்தினர்!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையம் என 26 வருடங்களுக்கு மேலாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள சில வீடுகளையும் இடித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வலிகாமம் வடக்கில் கட்டுவன், குரும்பசிட்டி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் 201 ஏக்கர் காணிகள் கடந்த மாதம் பகுதியளவில் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து படையினர் படிப்படியாக வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு வெளியேறும் படையினர் அங்கு இதுவரை இராணுவத்தின் பாவனையில் இடிக்கப்படாதிருந்த வீடுகளையே இடித்து அழித்து வருகின்றனர்.

இவ்வாறு இடித்தழிக்கப்படும் வீடுகளில் இருக்கும், ஓடுகள், சுரை மரங்கள், சீமெந்துத் துண்கள், கல்லுகள், கதவு மற்றும ஜன்னல்கள் போன்றவை மறைவான ஒரு இடத்தில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து வேறு இடங்களுக்கு இராணுவத்தினரால் கொண்டு செல்லப்படுகின்றன.

குறித்த பகுதிகளில் காணப்பட்ட பெரும் தொகையான பொதுமக்களின் பெருமளவான வீடுகள் இராணுவத்தினரால் ஏற்கனவே இடித்து அழிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் எஞ்சியுள்ள வீடுகளை அவர்கள் அழித்து வருகின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை குரும்பசிட்டிப் பகுதியில் பொதுமக்களின் கண் முன்பாகவே வீடுகளை இடித்து அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

வலி வடக்கில் காடுகளை அகற்றும் நடவக்கை ஆரம்பம்

வலி.வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து 26 வருடங்களின் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள பற்றைக் காடுகளை வெட்டி அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை, கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் 201 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தன.

கடந்த 26 வருடங்களின் பின்னர் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகள் முழுவதும் பற்றைக்காடுகள் போல் காட்சியளிக்கின்றன. இதனால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது காணிகளை இனங்கண்டு கொள்வதில் காணி உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் வழிநடத்தலில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குறுக்கு வீதிகளை தேடிக் கண்டிபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு இனங்காணப்படும் வீதிகள் பைக்கோ இயந்திரத்தின் மூலம் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று குறித்த வேலைத்திட்டம் குரும்பசிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

 

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

Tamils_houses_being_destroyed_by_Sin_Arm

http://www.tamilwin.com/living/01/110848

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை.. அடிப்படை கட்டமைப்புக்களை தகர்த்தால் தானே மக்களை காணியற்றவர்களாக்கி.. வீடற்றவர்களாக்கி.. ஒரு ஒதுக்குப் புறமாக அரச காணியில் வீடு கட்டி தான் விரும்பிய இடத்தில் குடி இருத்தலாம். மேலும் இன அழிப்புக்கான மானுடத்துக்கு எதிரான சித்திரவதைகளை அரங்கேற்றியதற்கான ஆதாரங்களையும் அழிக்கிறான்.

அப்ப தானே வெளி உலகிற்கு நல்ல பிள்ளையாகவும்.. மக்கள் காணிகளை அரச காணிகளாக்கி ஆட்டையைப் போட்டு இராணுவ முகாம்களும்.. சிங்களக் குடியேற்றங்களும்.. இராணுவ உல்லாச விடுதிகளும்.. இராணுவப் பண்ணைகளும்.. விகாரைகளும் அமைக்கலாம்.

சிங்களன் மிகத் தெளிவான மூலோபாயத்தோடு தான்.. இவற்றை அரங்கேற்றி வருகிறான். மொத்த இலங்கையையும் சிங்கள பெளத்த மயமாக்குவது தான்.. இலங்கையில் நீடித்திருக்கும் இனப்பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அதற்கு இராணுவ ஆக்கிரமிப்பை அவன் பயன்படுத்திறான்.

எங்கடையள்.. ஆமிக்காரன் வீடு கட்டிறான்.. துண்டுக்காணி விடுகிறான்.. வெடி கொழுத்த விடுறான்.. என்று அர்ப்பங்களை அபரிமிதமாகக் காட்டி அதில் சுய சுகிப்புச் செய்யுதுகள்.. சூழும் ஆபத்தை உணராமல்.. உணர்த்தாமல். இதுவும் தமிழரின் அழிவில் தான் போய் முடியும். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

எங்கடையள்.. ஆமிக்காரன் வீடு கட்டிறான்.. துண்டுக்காணி விடுகிறான்.. வெடி கொழுத்த விடுறான்.. என்று அர்ப்பங்களை அபரிமிதமாகக் காட்டி அதில் சுய சுகிப்புச் செய்யுதுகள்.. சூழும் ஆபத்தை உணராமல்.. உணர்த்தாமல். இதுவும் தமிழரின் அழிவில் தான் போய் முடியும். :rolleyes:tw_angry:

வலிகாமம் வடக்கில் விடப்பட்ட காணிகளுக்கு இன்னமும் உரிமையாளர்கள் வந்து உரிமை கோரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை விட முதல் நீங்க ஒருக்கா இஞ்ச வந்து ஏதாவது செய்ய முடியுமா எண்டு பாருங்கோ. இல்லை கணனியில் மட்டும்தான் உங்கட வீரம் என்றால் " சந்திரனை பாத்து டோக் குலைச்ச கதைதான்"

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஜீவன் சிவா said:

வலிகாமம் வடக்கில் விடப்பட்ட காணிகளுக்கு இன்னமும் உரிமையாளர்கள் வந்து உரிமை கோரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை விட முதல் நீங்க ஒருக்கா இஞ்ச வந்து ஏதாவது செய்ய முடியுமா எண்டு பாருங்கோ. இல்லை கணனியில் மட்டும்தான் உங்கட வீரம் என்றால் " சந்திரனை பாத்து டோக் குலைச்ச கதைதான்"

இதைச் செய்ய வேண்டியது விடுவிக்கப்பட்ட பகுதி கிராம அலுவர்கள். வெளிநாடுகளில் மற்றும் உள்நாட்டில் வாழும் இடம்பெயர்ந்தோர் மத்தியில் இந்தச் செய்தி செல்லத்தக்க வகையில் ஊடகங்களுக்கு ஒரு அறிவிப்பை விட வேண்டும். எந்தெந்த கிராம சேவகர் பிரிவில்.. எவ் எல்லைவரை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.. என்றும்.. காணி உரிமையாளர்கள்.. குறித்த காலத்துக்குள் காணிகளுக்கு உரிமை கோர வேண்டும். இன்றேல்.. காணிகள்.. வடக்கு மாகாண சபை ஒத்துழைப்புடன் காணிகளற்ற தமிழ் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இதில் ஏதிலிகளாக உள்ள மக்கள்.. தமிழகத்தில் இருந்து தாயகம் திருப்பி காணிகள் அற்றிருக்கும் மக்கள்.. வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்கள்.. முன்னாள் போராளிக் குடும்பங்கள்.. போரினால் பாதிக்கப்பட்டு காணிகள் அற்று வாழும் குடும்பங்கள் கருத்தில் எடுக்கப்பட்டு.. அவர்களின் வதிவிடம் வருவாய்க்கு உகந்த வகையில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என்று ஒரு அறிவிப்பை விட்டால்...

வரவேண்டியவை விழுந்தடிச்சு வருவினம். tw_blush:

அதைவிட்டிட்டு.. பாதுகாப்பு அமைச்சு பம்மாத்து அவசியமில்லை. அப்படி ஒரு ஆபத்து இருக்குமானால்.. அதனை தடுப்பதற்கான செயற்திட்டத்தை கணணியில் அமுல்படுத்த முடியாது. அங்குள்ள சிவில் நிர்வாக அமைப்புக்களை எச்சரித்து அவற்றின் மூலம் தான் அமுலாக்க வேண்டும். அதில் கிராம உத்தியோகத்தர்கள்.. உள்ளூராட்சி மன்றங்கள்.. மற்றும் மாகாண அமைச்சு.. உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்.. இதில் உடனடிக் கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும். tw_blush:

7 minutes ago, nedukkalapoovan said:

அதைவிட்டிட்டு.. பாதுகாப்பு அமைச்சு பம்மாத்து அவசியமில்லை. அப்படி ஒரு ஆபத்து இருக்குமானால்.. அதனை தடுப்பதற்கான செயற்திட்டத்தை கணணியில் அமுல்படுத்த முடியாது. அங்குள்ள சிவில் நிர்வாக அமைப்புக்களை எச்சரித்து அவற்றின் மூலம் தான் அமுலாக்க வேண்டும். அதில் கிராம உத்தியோகத்தர்கள்.. உள்ளூராட்சி மன்றங்கள்.. மற்றும் மாகாண அமைச்சு.. உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்.. இதில் உடனடிக் கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும். tw_blush:

விடப்பட்ட இடங்களை மறுபடியும் மக்கள் குடியேற்றம் உள்ள ஒரு பகுதியாக மாற்றுவதற்கு இங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் ( அரசாங்க அதிபர் முதல் கிராம சேவையாளர்கள் வரை), தன்னார்வல நிறுவனங்கள், பொதுநலம் கொண்ட சில மனிதர்கள் இங்கு படும் பாடு உங்கள் அறிவுக்கு புலப்பட முடியாது என்று எனக்கு தெரியும். தமிழ் நெட்டுக்கும், விக்கிப்பீடியாவுக்கும் வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது. மாகாண சபையோ, பாராளுமன்ற உறுப்பினர்களையோ இந்தப்பக்கம் காணவே முடியவில்லை. அவர்கள் இனி எதையாவது மக்கள் உருவாக்கினால் திறப்புவிழாவுக்கு படம் எடுக்க வருவார்கள். அப்ப சேந்து வாங்கோ நானும் உங்களையும் சேர்த்து படம் பிடிச்சு இஞ்ச போடுறேன்.

இன்றும் விடப்பட்ட காங்கேசன்துறை நகரப்பகுதியில் உள்ள வீடுகளில் 3 வீடுகளை தவிர மிகுதியாகவுள்ள இடிக்கப்படாத சகல வீடுகளிலும் போலீசார் தங்கியுள்ளனர். இவர்களை  உரிமையாளர்கள் வெளியேற்ற படும் பாடு சொல்ல முடியாது. உங்களுக்கென்ன எல்லாரையும் வெளியேற்றி காங்கேசன்துறை சுமுகமாக வர காணி விலையும் கூடிவிடும். கமுக்கமாக ஹொலிடேய்க்கு இங்க வந்து கஷடப்பட்டவர்களுடன் 4 படம் எடுத்திட்டு,  அதை மூஞ்சி புத்தகத்திலயும் போட்டிட்டு, காணியையும் ஆமிக்காரனுக்கோ நேவிக்கோ இல்லை சிங்களவனுக்கோ நல்ல விலையில வித்திட்டு, மறுபடியும் கணனிக்கு முன்னால இருந்து தேசியம் பேசி நீலிக்கண்ணீர் வடியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

விடப்பட்ட இடங்களை மறுபடியும் மக்கள் குடியேற்றம் உள்ள ஒரு பகுதியாக மாற்றுவதற்கு இங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் ( அரசாங்க அதிபர் முதல் கிராம சேவையாளர்கள் வரை), தன்னார்வல நிறுவனங்கள், பொதுநலம் கொண்ட சில மனிதர்கள் இங்கு படும் பாடு உங்கள் அறிவுக்கு புலப்பட முடியாது என்று எனக்கு தெரியும்.

ஆமாம்.. அந்தப் பகுதிகளை விட்டிட்டு.. கட்டாந்தரையில் இராணுவக் குடியிருப்பை அமைக்க அடிக்கல் நாட்டுவதில் அரசாங்க அதிபர் முக்கியமா முக்கிக்கிட்டு இருக்கார்.. என்பது தெரியுது. அதுவும் இராணுவம்.. வா என்றதும் போய் முன்னுக்கு நிற்கினம்.

மக்கள் வா என்றால் யாரும் போக மாட்டினம். tw_blush:

ஆனால்.. இதுவரைக்கும் இடம்பெயர்ந்த மக்களை நோக்கி.. அவர்களை அங்கு வந்து குடியேறவோ.. காணிகளைப் பொறுப்பெடுக்கவோ.. எந்த உத்தியோகபூர்வ விளம்பரங்களும்.. ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அனுப்பப்பட்டதாக இல்லை.

மாகாண சபைக்கு இந்தக் குடியிருப்புக்கள் தொடர்பில் இராணுவம் சொல்லிச்சோ இல்லையோ.. ஊடகங்களுக்கு இராணுவம் செய்தி கொடுத்த அளவுக்கு... விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும்.. தங்கள் காணிகளை பெற்றுக்கொள்ள யாரும் மக்களை நோக்கி அந்தச் செய்தியை நம்பிக்கைக்குரிய வடிவில் தெளிவாக காவிச் செல்ல முனையவில்லை.

மாறாக.. கஸ்படுகினம்.. சிலர்.. காயினம் என்று கொண்டு.. நிற்கினம். எலிப்புழுக்கைகள் என்னத்துக்கு காயுதுங்களோ..யார் அறிவார். ஆனால்.. மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது மட்டும் நிகழ்கிறது.

எனவே யாழ் கள வாசகர்களாக உள்ள மக்கள்..

வலி வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதிகள் எவை.. எந்த எல்லை வரை.. விடுவிக்கப்பட்டுள்ளன.. அங்கு மிதிவெடிகள்.. கண்ணிவெடி ஆபத்துக்கள் இல்லையா... மற்றும் சொந்தக் காணிகளை அளவிட்டு மீளப் பெறுவதற்கான மார்க்கங்கள் என்ன என்பதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களை தொடர்பு கொண்டு கேட்பதன் ஊடாகவும்.. அவ்வாறு தகவல்கள் எதனையும் ஊடகங்கள் கொண்டிராத போது அவற்றை உரியவர்களிடம் பெற்று செய்தி இடுமாறு கோருவதோடு.. மாகாண சபைக்கு.. சிவில் அமைப்புக்களுக்கு.. இப்பிரேதங்களை பிரதிநிதிப்படுத்தும்.. மாவை சேனாதிராஜா போன்ற தூங்கு மூஞ்சி.. கேக் வெட்டு புகழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விழித்தெழ கோருமாறும் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.

மாறாக.. இராணுவம் வெட்டுது புடுங்குது.. சிலர் கமராவும் கையுமா காணி அளக்கினம்.. களைக்கினம் என்று கதை அளந்து.. சுய பட்சாதாபமும்.. விளம்பரமும் தேடலாமே தவிர மக்களுக்கு பயனாளிகளுக்கு அவை பயன்பட வாய்ப்புக் குறைவு. tw_blush:

முன்னர் காணிகள் விடுவிக்கப்பட்டதும்.. ஓடி ஓடி பார்க்கும் பிரேமச்சந்திரன்.. கஜேந்திரன்..  போன்றவர்களை வீட்டில் குந்தி இருக்க வைச்சிட்டு.. கொழும்பு வாசி சுமந்திரனுக்கும்.. வவுனியாவில் தட்டிப்பறிப்பு பிழைப்பு நடத்த யாழ்ப்பாணத்தில் வாக்குச் சேர்க்கும் சித்தார்த்தனுக்கும் வாக்குப் போட்டால்.. காணி விட்டது பற்றி அவருக்கு என்ன கவலை. அறிக்கை விட்டிட்டு அடுத்த கேசை வாசிச்சுக்கிட்டு இருப்பினம்.. எத்தனை இலட்சம் அதில வரும் என்று.  மக்களும் தங்களின் தவறுகளை எனியாவது களைய முற்பட வேண்டும். tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.