Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் முழு அளவில் மோதல் தவிர்ப்பு தமிழரின் இறுதி நம்பிக்கை வன்னிப் பெருநிலப்பரப்புக்கு மேலதிக பலத்தைத் தரும்.

Featured Replies

ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை, இந்த வருடம் இலங்கைக்குள் பாயவுள்ள பெரும் தொகையான பிரித்தானிய முதலீடுகள், பழம்பெரும் இந்திய நிறுவனமான டாடா இலங்கையில் உள்ள தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவமொன்றை வாங்க உள்ளதாக வந்துள்ள செய்திகள் எமது போராட்டத்தில் அடுத்து வரவிருக்கும் செங்குத்தான வளைவுகளை முன்னறிவிக்கின்றன.

வாகரை மோதல்களின் முடிவு கிழக்கில் ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு வழிகோலலாம் என்பதால் கருணா குழுவுடன் முழு அளவிலான ஒரு யுத்த நிறுத்ததை மேற்கொள்வதன் மூலம் கிழக்கில் தமிழர் தரப்பு இன்னொரு வடிவத்தில் பலத்தை இழந்து விடாது தக்கவைப்பதே வன்னி பெருநிலபரப்புக்கு கூடுதல் பலத்தை தரும். இல்லையெனில் கிழக்கில் தமிழர் மூன்றாம் சிறுபான்மையாகி எந்த காலத்திலும் எம்மிடம் வராதவாறு தமிழகத்தில் 'கடல் கொண்ட தென்னாடு' போல் ஈழத்தில் 'போர் கொண்ட கிழக்கு' என்றாகும் அபாயம் உள்ளது.

தயவுசெய்து வெறும் உணர்ச்சி விவாதங்கள் விடுத்து அறிவுபூர்வமாக பார்ப்போம்

INDIAN GIANT TATA TO TAKE OVER SRI LANKA’S SECOND LARGEST LAND BASED TELEPHONE COMPANY SUNTEL AND STARTS NEGOTIATIONS

UN says: "Target LTTE political and military leadership"

INVESTMENT: The UK-Sri Lanka Business Council in UK is looking at possibilities to promote Sri Lanka as a major investment destination among UK investors.

  • கருத்துக்கள உறவுகள்

அட எதிர்பார்த்த மாதிரி புதிய தலைப்பில் வந்து விட்டீர்களே? பழைய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய பாக்கி இருக்கின்றது.

ஆமாம். கிழக்கை கருணாவுக்கும், வடக்கை டக்ளஸ்சுக்கும், வன்னியை புளோட்டுக்கும் கொடுத்து விட்டு, சிங்களவன் என்ன போடுவான் என்று வாயைப் பிளந்து கொண்டு நிற்க வேண்டும். கருணாவைப் பணத்துக்கு அடிமையாக்கி, சிங்களத்தேசத்தின் காலை நக்கச் சொல்லி யாராவது கேட்டார்களா? தானாகப் போய் தானே விழுந்தான். கிழக்கில் மக்கள் பாதுகாப்பு வேண்டு மென்றால் அந்த ஆள் சிந்திக்க வேண்டும். எதிரியோடு சேர்ந்து நின்று பணத்துக்காக மக்கள் கொலை செய்பவனை நம்பி எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்?

அறிவுபூர்வ விவாதங்கள் என்று படம் காட்டாதீர்கள். முதலில் யாதார்த்த பூர்வமாக சரிவருமா, நடக்க கூடியதைப் பற்றித் தான் கதைக்கின்றீர்களா என்று சிந்தியுங்கள். அப்படி ஏதும் அறிவுரை கூற வேண்டுமானால் பிழையான வழியில் நிற்பவர்களுக்குப் போய்ச் சொல்லுவதே நல்லது. இங்கல்ல.

பெங்கல் விசேட சலுகை தள்ளுபடி விலையில் ஏதோ குடுக்கிற மாதிரிக் கிடக்கு. :lol:

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. எவ்வளவு அறிவாளியாக இருக்கின்றார்.. வாசித்தவுடன் பூரிப்படைந்துவிட்டேன்.. இப்படி எங்களுக்குத் தோன்றவில்லையே எனும்போது என்மேலேயே வெறுப்பு வந்தது...

ஆனால் ஒரு கேள்வி.. புலிகள் மோதல்களைத் தவிர்ப்பதானால்தானே தற்போது அமைதி இலங்கை முழுவதும் நிலவுகின்றது.. அவர்களும் மோதல்களை ஆரம்பிக்கவில்லைத்தானே. அத்துடன் கருணாவுடன் இரகசிய மோதல் தவிர்ப்புக்கு உடன்பட்டதால்தானே பொலநறுவையிலும், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மற்றும் கொழும்பிலும் அவர்கள் சுதந்திரமாகக் கவலையின்றித் திரிகின்றார்கள்.. பிறகேன் புதிதாக மோதல் தவிர்ப்பு??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.