Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் எம்.பிக்குப் பிணை

Featured Replies

நாமல் எம்.பிக்குப் பிணை
 

article_1468822000-fg.jpgமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை  நீதவான் நீதிமன்றத்தால், இன்று திங்கட்கிழமை (18), பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/177317/ந-மல-எம-ப-க-க-ப-ப-ண-#sthash.PE80Xiq7.dpuf
  • தொடங்கியவர்
நாமலுக்குப் பிணை...
 
 

article_1468832790-4.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, கொழும்பு கோட்டை  நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவினால் பிணையில் விடுதலைசெய்யப்பட்டார்.

article_1468832807-5.jpg

article_1468832815-6.jpg

article_1468832825-7.jpg

- See more at: http://www.tamilmirror.lk/177336/ந-மல-க-க-ப-ப-ண-#sthash.uBZsM4uT.dpuf

Edited by நவீனன்

நாமலின் விடுதலைக்காக போராடிய கொலையாளிகள் மற்றும் சமூக விரோதிகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்க மறியிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐம்பதாயிரம் பிணை மற்றும் 5 இலட்சம் சரீர பிணை மூன்றில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாமலின் விடுதலையை வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்களினால் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தங்காலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரபல இடம் ஒன்றில் வெளிநாட்டு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, பெண்ணின் காதலனை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்ர புஷ்பகுமாரவின் ஆதரவாளர்களினால் இந்த நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பத் சந்ர புஷ்பகுமார அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்த ஒருவராகும்.

கொலையாளி மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவரையும் அவரது ஆதரவாளர்களையும் விடுதலை செய்து கொள்வதற்கு ராஜபக்சர்கள் அப்போதைய காலப்பகுதியில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சர்வதேச மட்டத்தில் காணப்பட்ட அழுத்தங்களுக்கமைய சிறிய சிறை தண்டனையை வழங்கி பிரச்சினையில் இருந்து தப்பித் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெளியாகும் தகவல்களுக்கமைய அன்று அந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதற்கு தொடர்புடைய, எனினும் சட்டத்தில் இருந்து தப்பித்து கொண்ட பலரும் நாமலை விடுதலை செய்யும் நாடகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

மோசடியாளர்களுக்கு நாமலின் உதவி தேவை என்பதையே இந்த நாடகம் எடுத்துக் காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமல் ராஜபக்சவை விடுவிக்குமாறு எந்தவொரு அறிவுசார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் கோரவில்லை.

நாமலுக்காக களமிறங்கிய அனைவரும் ஊழல் மோடி மற்றும் பல குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/111300

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.