Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர வைக்கும் ஆபிரிக்க மூட நம்பிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரின் மூட நம்பிக்கைகள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம்.

படிப்பறிவு இல்லாவிடில் இந்த மூட நம்பிக்கையை வைத்து பயம் காட்டி பிழைக்கும் ஒரு கூட்டம் உலகெங்கும் உள்ளது. சென்னையில் முன்பு ஒரு மோசடிக் கும்பல் உலாவுவார்கள் . மண்டை ஓட்டினை வைத்து ஏதோ வித்தை செய்வார்கள். மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள். தீடீரென அவர்களது ஆட்களில் ஒருவர் கிளம்புவார். அதோ சைத்தூண் கைலே துட்டு வைக்காம போறன், ரத்தம் கக்கி விழுவான் பாரு என்பார், வித்தை  காட்டுபவர். அவரும் பெரு நடிப்பு நடித்து ரத்தம் கக்கி விழுவார். தீடிரென எழுந்து வந்து, 100 ரூபா நோட்டினை  வைத்தவுடன், மந்திரக் கோலை  தலையில் வைத்து ஏதோ மந்திரம் சொல்லி, இப்ப சைத்தான் சந்தோசம். உனக்கு ஒன்னும் இல்லை. போ என்றவுடனும் அவரும் சிரித்த வாறே போக, அங்கே நின்று விடுப்பு பார்த்தவர்கள், மூட நம்பிக்கையில் பணத்தை எடுத்து போட்டு நகர்வார்கள்.

அதே போல் கடவுள், காட்டேரி, பேய், பிசாசு பெயர்களில் கிராம பூசாரிகள் பண்ணும் அடடாகாசங்கள் வேறு ரகம்.

இதை எல்லாம் ஜுஜுபி ஆக்கும், அட இப்படியுமா என அதிர வைக்கும் வகை தான் இந்த ஆபிரிக்க மூட நம்பிக்கை.

ஆபிரிக்காவின் ஒரு வறுமை மிக்க நாடு மாலாவி . இந்த நாட்டின் தென் பகுதியின் குக்கிராமங்களில் இன்றும் நிகழும் இந்த கருமாந்திரம் பிடித்த மூட நம்பிக்கை குறித்து பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது.

நம்மூர் கிராமங்களில், சலவை செய்வோர், முடி வெட்டுவோர், பூசாரி, பரியாரி, வாத்தியார், வெட்டியான் என தொழில் ரீதியாக இருப்பதை போல,
இந்த கிராமங்களில் கெயினா (Hyena) என்னும் நபர்கள் உள்ளார்கள். இவர்களது வேலை அதிர வைக்கும் ரகம். ஒன்றும் பெரிதாக இல்லை. விதவையான பெண்களை, வயதுக்கு வரும் சிறுமிகளை பாலியல் ரீதியாக புனிதப் படுத்துவது. (sexual "cleansing").

Eric Aniva

Hyena: Eric Aniva

கால் முதலில் வெளியே வரும் வகையில் பிறப்பவர்கள், எண்ணெய் போட்டு உருவித் தேய்த்தால், உளைவு நீங்கும் என்ற வகையில் ஒரு சில நம்பிக்கைகள் எமது ஊரில்  உள்ளனவே. அதே போன்ற சில வகை காரணங்கள் காரணமாக ஊரின் கெயினா தெரிவு செய்யப் படுவார்.

பெண் ஒருவரின் கணவர் இறந்து விட்டால், இந்த கெய்யனாவுடன் உறவு கொண்டு, உடலை சுத்தப் படுத்திய பின்னே, அந்தப் பெண்ணின் கணவனைப் புதைக்க முடியும் என்பது ஊர் நம்பிக்கை.

அதே போல பூப்படையும் சிறு பெண்கள் அந்தப் பெண்களின் பெற்றார் ஏற்பாடு 

செய்யும் நிகழ்வில், இந்த கெய்யனா கிளம்பி வந்து அந்த சிறு பெண்ணுடன் உடலுறவு கொண்டு அந்த சிறுமியை பாலியல் ரீதியாக புனிதமாக்குவார். 

அதிர, அருவருக்க வைக்கும் இந்த மூட நம்பிக்கை கலாச்சாரம் பல ஆண்டுகளாக இந்த கிராமங்களில் நடந்து வருகின்றது. 

இந்த வகை பாலியல் புனிதமாக்குதலினால், குழந்தைப் பருவத்தில் இருந்து சிறுமி, குடும்ப நிர்வாகம் செய்யும் பக்குவம் மிக்க பெண் பராயத்துக்குள் செல்கிறாராம். அதே போல் விதவைப் பெண், இந்த புனித தாக்குதல் மூலம், மறுமணம் செய்யலாம், அதன் காரணமாக கோபமடையக் கூடிய முன்னைய இறந்த கணவனின் ஆவித் தாக்குதலுக்கோ உள்ளாக மாடடார். இந்த வகை புனிதமாக்குதலுக்கு கிளப்பு முன், தனக்கு தேவையான 'சக்தியினை' அளிக்க, ஒரு வேர் ஒன்றினை அவித்து குடித்து தான் கிளம்புவாராம்.

Eric Aniva #

வேர்: வெட்டி வேறு வாசம்...விடலைப் பிள்ளை நேசம்

அங்குள்ள வழக்கப் படி, இவர் உறவு கொள்ளும் போது, கொண்டம் போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில்லையாம். சிறுமிகளாயின், முதலாவது மாதப் போக்கின் பின் ஒரு குறித்த, கருத்தரிக்க முடியாத நாளை கணக்கில் வைத்து புனிதமாக்குதல் நடை பெறும். விதவையாயின்..... ?

இந்த வகை புனித மாக்கல் நடக்காவிடில்,அல்லது அந்தப் பெண்கள் புனிதமாக்கலுக்கு மறுத்தால் அந்த பெண்களின் குடும்பத்தில், நோய் நொடிகள், சாபங்கள், துர் மரணங்கள் நிகழும் என்ற மூட நம்பிக்கையே இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணம்.

இவரது சமூக சேவைக்கு பணம் காணிக்கையாக கொடுக்கப் படுகிறது. £5 ($7) வரை ஒரு புனிதமாக்குதலுக்கு கிடைக்கும். இரு மனைவிகள் மூலம் இவருக்கு ஐந்து பிள்ளைகள். ஆனால் தனது புனிதமாக்குதல் மூலம் எத்தனை பெண்களை, சிறுமிகளை தாயாக்கி உள்ளார் என்பது தெரியாதாம். இது வரை சுமார் 104 பெண்கள், சிறுமிகளுடன் உடலுறவு கொண்டதாக சொல்லும் இவர், உண்மையாக கணக்குகள் வைப்பதில்லை என்பதால், சரியான தொகை தெரியாதாம்.

தான் சிறுமிகளுடன் மிக மென்மையாக நடந்து கொள்வதால் அவர்கள் அந்த இரவினை மிகவும் ரசிப்பு மிக்கதாக அனுபவிப்பதாகவும் அடுத்தநாள் அவர்களே, சூடு நீர் வைத்து தன்னை குளிப்பாட்டி அனுப்புவதாகவும் இவர் ஒரு 'சரியான ஆம்பிளை' என்றும், இந்த கெய்யனா தமக்கு புனிதமாக கிடைத்ததில் பெருமை அடைவதாக, வேறு பெண்களிடம் தன்னை சிபாரிசு செய்வதாக பெருமை கொள்கிறார்., மறு புறத்தே அந்த சிறுமிகள் BBC நிருபரிடம், மென்மை இன்றி நடந்த அந்த மனிதரை சந்திக்காமலே இருந்திருக்கலாம், எல்லாம் எமது தாய் தந்தையர் செய்த வேலை என குறை சொல்லி இருக்கிறார்கள்.

தான் புனிதமாக்கும் சிறுமிகள் 12 முதல் 13 வயதான பாடசாலை செல்பவர்கள் என்கிறார் அவர். இது கிராம கலாசார வழக்கம் ஆகையால், ஒரு பெரும் தவறாக கருதப் படுவதில்லை. சமுகத்தில் உள்ள 10 கெயினாக்களில் தானும் ஒருவர் எனும் எரிக், ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு கெய்னா இருப்பார் என்கிறார். 

கொண்டம் பாவிக்காத இந்த 'சேவையினால்'  HIV பரவும் அபாயம் உள்ளது. உண்மையில் இந்த கெயினா  எரிக் ஒரு HIV Positive நபர். தன்னை சேவை செய்ய அழைக்கும் பெற்றாருக்கு இதனை சொல்வதில்லை என்கின்றார் எரிக். இருப்பினும், அவர் நோயினைப் பரப்ப மாடடார். மாறாக அவரது புனிதமாக்கல் சேவையினால், அந்த பெண்ணுக்கோ அல்லது அவரது குடும்பத்தினையோ நோய் நொடி, தீவினை அண்டாது என்ற மூட நம்பிக்கை நிலவுகிறது.

10ல் ஒருவர்  HIV நோய் கொண்டவராக இந்த சமூகத்தில் உள்ளனர் என ஐநா அறிக்கை சொல்கிறது. 

பிபிசி நிருபர் தனது அருமை பெருமைகளை ரசிக்கவில்லை என குறிப்பால் அறிந்து கொண்ட, ஒரு கால் ஊனம் கொண்ட எரிக், தான் முன்னைப் போல இப்போது சேவை செய்வதில்லை என்றும் நிறுத்திக் கொண்டு வருவதாகவும் சொன்னார்.

பழமையான மத நம்பிக்கை என்றாலும் பரவாயில்லை, ஆனால் இவர்கள் கிறீஸ்தவ மதத்தினை பின் தொடர்பவர்கள். ரகசியமாக இருந்து இப்போது வெளியே தெரிய வந்த இந்த ஆபத்தான கலாச்சார சீர்கேடு, வெளியே அரச, தர்ம ஸ்தாபன, ஐ நா அமைப்புக்களினால் கண்டிக்கப் பட்டு உள்ளது.

Eric Aniva with his family

கெய்னா  எரிக் குடும்பத்துடன்

கெய்யனா எரிக்குக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி பானி, விதவையானவுடன், புனிதப் படுத்தலுக்கு இந்த கெயினா அழைக்கப் பட்டிருந்தார். பின்னர் ஆசையில் அவரையே மனைவி ஆக்கிக் கொண்டார். 

இவர் செய்யும் தொழில் அவர்களுக்கு தெரிகிறது. பானி அதனை விரும்பவில்லை, எனினும் குடும்பத்துக்கு அதுதான் இப்போது போதிய வருமானத்தினை தருகிறது.

அவரது மடியில் இருந்த இரண்டு  வயது பெண் குழந்தை இதே போன்ற புனித சேவைக்கு  இன்னும் 10 வருடத்தில், ஏற்பாடு செய்வீர்களா என்று கேட்டவுடன் 'இந்த சடங்கு நிறுத்தப் பட வேண்டும், நாங்கள் எமது விருப்பத்துக்கு மாறாக கெய்னாவுடன் உறவு கொள்ள நிர்பந்திக்கப் பட் டோம். இது எங்கள் விருப்பத் தெரிவு அல்ல. பெண்களுக்கு இது மிகவும் துன்பகரமானது என்றார் பானி. 

தனக்கு இருமுறை கெய்னாவுடன் படுக்கையினைப் பகிர நேர்ந்ததை இன்றும் வெறுப்பதாக சொல்கிரார் அவர்.

அதே கேள்விக்கு , 'எனது பெண் பிள்ளைக்கா, இல்லை நான் ஒத்துக்க கொள்ளப் போவதில்லை' என்கிறார், ஊரில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எல்லாம் புனிதமாக்குதல் என்ற பெயரில், அங்கீகரிக்கப் பட்ட பெரும் பாலியல் வன்புணர்வுகளை செய்யும் எரிக்.

கல்வி அறிவு மூலமே இந்த சீர்கேட்டினை களைய முடியும் என்கிறது உலகிuன் வறுமை மிக்க மாலாவி நாட்டின் அரசு. 

இந்த பிபிசி அறிக்கை மூலம் உலக கவனம் இங்கே திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

மூலம்:  http://www.bbc.co.uk/news/magazine-36843769

  • யாழுக்காக முடிந்தவரையில் எனதுதமிழ் மொழி பெயர்ப்பு:  இதனை வாசிக்கும் போது அதிர்ச்சியும், நெருடலும் உண்டானது. பகிர நினைத்தேன். நன்றி.

  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது புதுசு புதுசா இருக்கிறது   இப்படி  இருந்தால் ஏண்டா எயிட்ஸ் பரவாது கொஞ்சமாவது திருந்துங்களடா பிளடி ஆப்பிரிக்கன்ஸ்:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா இது? 

காரசாரமான பின்னூட்டங்கள் வரும் என்று பார்த்தால்...

இது உண்மையா இருக்குமோ? பிபிசி செய்தியாக் கிடக்குதே என்ற யோசனை போல.....

முன்னர் அரசர்கள் காலத்தில் சில இராச்சியங்களில் இது போன்ற நிகழ்வுகள் இருந்ததாம். தெய்வம் போன்ற அரசர்களுக்கே முதல் சமர்பணம்....

இந்த காட்டுமிராட்டித்தனம் படிப்பறிவு கூடும் போது குறைந்தது. 

ஆனால் பயம் கொள்ள வைத்து, பிளாக்மஜிக் கிலி கிளப்பி தொடர்வதே இந்த ஆபிரிக்கன் காட்டுமிராண்டித்தனம்.

tw_anguished:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கிட்டாங்களே சிங்கனை

Malawi man arrested after describing sex with young girls

https://uk.news.yahoo.com/malawi-man-arrested-describing-sex-young-girls-140704960.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்காவில் எயிட்ஸ் முற்றி சனம் செத்துப்போனால் அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கலாம் எண்டு ஒரு குறூப் கணக்குப் போடும்.. tw_astonished: மொழிபெயர்ப்புக்கு நன்றி நாதம்ஸ்.. 0474.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.