Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கன் ஆர்பாட்டத்தில் குண்டுவெடிப்பு, 30 பேர் பலி, ஏராளமானோர் காயம்

Featured Replies

ஆப்கன் ஆர்பாட்டத்தில் குண்டுவெடிப்பு, 30 பேர் பலி, ஏராளமானோர் காயம்

160701153219_kabul_attack_police_640x360

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளில் பல இறந்த உடல்களும், காயமடைந்த பலரும் கிடப்பது தெரிகிறது.

160701153124_kabul_attack_police_640x360

இந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் குறைந்தது ஒன்று, தற்கொலை தாக்குதல் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அடிக்கடி பாரபட்சத்திற்கும், வன்முறைக்கும் உள்ளாகும் ஹஸாரா சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

நாட்டின் மத்தியில் இருக்கும் தங்களின் மாகாணத்துக்கு வெளியே புதிய மின்னிணைப்பு வினியோகப் பாதையை திசை திருப்புகின்ற அரசின் தீர்மானத்திற்கு எதிராக அவர்கள் இந்த ஆர்பாட்த்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160723_afghan_attack

  • தொடங்கியவர்

60 உயிர்களை பலி கொண்ட குண்டுத் தாக்குதல் (புகைப்பட தொகுப்பு)

ஆப்கன் தலைநகர் காபூலில் பேரணியின் போது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 60க்கும் மேலானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

160723122619_kabul_attack_640x360_ap.jpg

 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

160723123248_kabul_attack_624x351_afp_no

டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளில் பல இறந்த உடல்களும், காயமடைந்த பலரும் கிடப்பது தெரிகிறது.

160723114739_kabul_blast_demo__640x360_a

 60க்கும் மேலானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

160723132608_kabul_attack_624x351_gettyi

 ரத்த தானம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

160723132304_kabul_attack_624x351_gettyi

 பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

160723115436_kabul_demo_blast_640x360_ha

 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

160723115826_hazara_protest_kabul_640x36

 ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்களின் இந்த பேரணிக்கு கடும் போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

160723122432_kabul_demo_640x360_hakimmoz

 ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.

160723112217_kabul_624x351_getty_nocredi

 நாட்டின் மத்தியில் இருக்கும் தங்களின் மாகாணத்துக்கு வெளியே புதிய மின்னிணைப்பு வினியோகப் பாதையை திசை திருப்புகின்ற அரசின் தீர்மானத்திற்கு எதிராக அவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினார்கள்.

160723052527_kabul_demo_tutap_640x360_ar

 அடிக்கடி பாரபட்சத்திற்கும், வன்முறைக்கும் உள்ளாகும் ஹஸாரா சிறுபான்மை இனத்தினரால் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

160719083202_isis_isil_islamic_state_fla

 இந்த தாக்குதலை இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பானது நடத்தியதாக தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160723_kabul_attack_album

  • தொடங்கியவர்

ஆப்கன் தாக்குதல்: 80 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கன் தலைநகர் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டம் நடத்திய ஹஸாரா சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் தங்களுடைய இரண்டு தற்கொலை தாக்குதல்தாரிகளால் வெடிக்கச் செய்யப்பட்டதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு கூறியிருக்கிறது.

ஹஸாரா இனத்தவர் ஷியா முஸ்லிம்கள் என்ற உண்மையை அழுத்தமாக தெரிவித்திருக்கும் அந்தக் குழு, பிரிவினைவாத மோதலை அதிகரிப்பதற்கான நோக்கத்தையும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ பிரிவு இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளது.

கொல்லப்பட்டோரின் இந்த இரத்தத்திற்கு பழிவாங்கப்படும் என்று தெரிவித்திருக்கும் அதிபர் அஷரப் கனி, ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160723_afghan_attack_update

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு மதமா? தனது சொந்த மதத்தினரையே வேறு பிரிவு என்பதற்காகக் கொல்லும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் ?

80 பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு, ' எமது மதப்பிரிவுகளுக்கிடையிலான பிளவை இன்னும் பெரிதாக்கி மதப்பிரிவு வன்முறைகளை ஊக்குவிக்கவே இவ்வாறு செய்தோம்" என்று இஸ்லாமியர்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறும் ஐஸிஸ் அமைப்பினர் உரிமைகோர, உலகெங்கும் உள்ள ஐஸிஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் ' ஆகா, இதுவல்லவோ மதம், இப்படியொரு அமைப்பையும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தையும் நாம் அடைய என்ன பேறு செய்தோம்' என்று நெஞ்சுருகிப் புலகாங்கிதம் அடைந்து ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள்.

எனக்கொன்று புரியவில்லை. முஸ்லீம்களுக்காகத்தான் போராடுகிறோம் என்றால், அவர்களின் தாக்குதல்களில் அதிகம் கொல்லப்பட்டவர்கள்  முஸ்லீம்களாக இருப்பது ஏனோ ? ஓ......சிலவேளை பாசமிகுதியால், அவர்களை ஓடிப்போய் அரவணைக்கிறார்களோ ............................மடியில் குண்டோடு ???!!!!!!

Edited by ragunathan
எழுத்துப்பிழை

43 minutes ago, ragunathan said:

அவாங்கட பிரச்சனையை விடுங்கோ, போகிற போக்கில் வட மாகாணமும் இவங்கடா கையில் தான் போக போகுது . வன்னி முழுவதும் கள்ள காணி , யாழ்பணத்தின் வியாபாரம் முழுக்க இவர்களிடம்.
இனிமேல் வடக்கிலும் நாம் இவர்களுக்கு அடிமைகள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.