Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஷில்பா ஷெட்டி மீது இனவெறி தாக்குதல்

Featured Replies

இந்தியின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் உள்பட பல ஸ்டார்களின் முன்னாள் காதலியான இவர் சினிமாவிலிருந்து டி.வி.க்கு வந்திருக்கிறார்.

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சேட்டிலைட் சேனல் 'சேனல் 4.' இதன் பிரதான நிகழ்ச்சி 'பிக் பிரதர்.'

பிரபலமான நபரின் ஒருமாத வாழ்க்கையை அப்படியே லைவ்வாக காண்பிக்கும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதன்முறையாக இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை 'சேனல் 4' தேர்ந்தெடுத்திருக்கிறது.

ஒருமாதம் வேறு சில பிரபலங்களுடன் தங்கியிருக்கும் ஷில்பாவை லைவ்வாக காண்பிக்கப் போகிறார்கள். எழுத்தாளர்கள், பாப் இசைக்கலைஞர்கள் கொண்ட இந்த குழுவில் அனைவரையும் கவர்ந்தவர் ஷில்பா ஷெட்டிதான் என்கிறார்கள்.

ஒருமாத லைவ் கூத்துக்கு ஷில்பாவுக்கு கொடுக்கப்பட இருக்கும் சம்பளம் இரண்டரை கோடி!

ஷில்பாவை இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும்போது 'சேனல் 4' அவரை 'இந்தியாவின் சூப்பர் ஸ்டார்!' என குறிப்பிட்டது.

அப்படினா... அமிதாப்பச்சன் யாருங்க?

post-1618-1168495741_thumb.jpg

:D:D

  • Replies 71
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஷில்பா ஷெட்டி மீது இனவெறி தாக்குதல்

newsem3.jpg

பிரிட்டனின் பிரபல்யமான பிக் பிரதர் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இன பாகுபாடு காட்டி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சேனல் 4 டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்சசியில் பங்கேற்றுள்ள ஷில்பா ஷெட்டியை, இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக இன பாகுபாடு காட்டி இழிவுபடுத்தியுள்ளனர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, ஜடே கூடி என்ற நடிகையும், டேனிலி லாயட் என்ற முன்னாள் அழகியும், ஜோ ஓ மியாரா ஆகியோர் தான் ஷில்பா ஷெட்டியை இழிவுபடுத்தி நடந்துள்ளனர் என்ற கூறப்படுகிறது. இதில் ஜடே கூடி, ஷில்பா ஷெட்டியை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

டேனிலி லாயட், ஷில்பா ஷெட்டியை நாய் என்று கூறியுள்ளார். ஷில்பா ஷெட்டியை அவமதித்த நிகழ்ச்சி பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

shilpapk2.jpg

பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான channel 4 நடாத்தும் big brother நிகழ்ச்சியில் இந்திய நடிகை சில்பா செட்டியும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மற்றய வெள்ளை இன போட்டியாளர்கள் அவரையும் அவருடைய இனத்தையும் அவமானப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மேலதிக செய்தி ஆங்கிலத்தில் http://news.bbc.co.uk/1/hi/entertainment/6268401.stm

  • கருத்துக்கள உறவுகள்

_42459853_shettygetty203ok.jpg

பிரித்தானியாவில்.. லண்டனில் மிக்ஸ் என்ற படியால் கொஞ்சம் குறைவு.. வெளி இடங்களில் வாழ்ந்திருந்தால் இரண்டு முக்கிய இம்சைகளை சந்திக்க தயாராக இருந்திருக்க வேண்டும். ஒன்று பள்ளில படிக்கிறதில இருந்து மீன் விற்பவன் வரை "பாக்கி" என்று அழைப்பதை சகித்தாக வேண்டும். இரண்டு எதிர்பார்க்காத வகையில் முகத்தில் உமிழ்வார்கள். சிலர் அடியும் வாங்கி இருக்கிறார்கள்.

சரி விடயத்துக்கு வருவோம்..பிக் பிறதர்கள் என்று ஒரு தொலைக்காட்சிச் தொடர். அது பிரபல்யமானது பிரித்தானியாவில். நம்ம சில்பா செட்டிக்கு ஏதோ கெளவரமளிக்கவென்று அவரைக் கூப்பிட்டு அழ அழ நக்கல் அடித்துவிட்டது இந்த பிக் பிறதர் கலைஞர்கள் குழு.

அப்படி என்ன நக்கல்..பெரிசா ஒன்றுமில்லை..இந்தியர்கள் ஏன் ஒல்லியென்றால் ஒழுங்காக சமைக்காத உணவை உண்டு வருவதால் தான்..என்று சொல்லி இருக்கிறார்கள். செட்டி கொஞ்சம் ஒல்லி போல..!

செட்டி.. விருந்துக்கு இருந்த உணவில் கை வைத்துப் பார்த்திருக்கிறார்..உடனே இந்த கை எங்க இருந்திச்சோ என்று ஒரு பிரபல்யம் கேட்க...இந்தியர்கள் கையால் உணவைக் கையாள்வதை நக்கல் அடித்துள்ளனர்..என்று கதை வந்திட்டுது.

சரி செட்டிக்கு இவை புதிதாக இருந்ததால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அது இருப்ப இந்திய - பிரித்தானிய உறவையே சிக்கலில் கொண்டு விட்டுவிடுமோ என்ற அளவுக்கு அரசியல்பட்டுப் போயிட்டு.

எல்லாத்துக்கும் கால் சனல் 4 என்ற ஒளிபரப்பு நிலையம் ஒளிபரப்பிய நிகழ்சியில் பல இலட்சம் இரசிகர்கள் இந்த நக்கல்களைக் கண்டு ரசித்ததுதான். பிக் பிறதரில் நக்கல் வழமைதானே..!

பாவம் செட்டி அங்க இருந்து இங்க வந்து அவமானப்பட்டுப் போனன் என்று வருத்தமாக இருக்கிறாராம்..!

செட்டிக்கே இந்த நிலை என்றால் அகதியா வந்து இருக்கிற எங்கட ஆக்களுக்கு என்ன மதிப்பு என்று நீங்களே கணிப்பிட்டுக் கொள்ளுங்கோ....................! :huh::huh:

வேணும் வெள்ளைக்காரன் தாறன் என்ற உடன ஏந்த வாறவைக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..!

வெள்ளைக்காரன் என்றால் கரண்டியாலதான் சாப்பிடுவான் முழுசா சமைச்சுத்தான் சாப்பிடுவான் என்று மட்டும் நினைச்சுப் போடாதேங்கோ..கண்றாவி பன்றியைக் கூட ஒழுங்கா வேக வைக்க முதல் சோசை விட்டு விரலை நக்கி நக்கி தின்னுறதுகள் அதுகள்..! சில்பா செட்டிக்கு உந்தச் சங்கதி தெரியல்லைப் போல பாவம் பிள்ளை நொந்து போயிட்டுது...! :rolleyes::D

http://news.bbc.co.uk/1/hi/entertainment/6269953.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் சில்பா!அந்த பூப்போன்ற மனம் என்ன கஸ்டப்பட்டுதோ?ம்ம்ம்.......(பெருமூச்சாம்) :huh:

இன வெறியர்களிடம் சிக்கிய ஷில்பா!

இங்கிலாந்தின் சேனல்4 தொலைக்காட்சியின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் ஸ்டார் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக இன துவேஷ வார்த்தைகளைக் கூறி சக போட்டியாளர்கள் சிலர் அவமானப்படுத்தினர்.

இங்கிலாந்தின் சேனல் 4 என்ற தனியார் தொலைக்காட்சி பிக் பிரதர் என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் பிரபலமானவர்களை தேர்ந்தெடுத்து ஒரே வீட்டில் தங்க வைத்து அவர்களது அன்றாட செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

இந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பங்கேற்றுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3 கோடி (முதல் 2 கோடி என்றார்கள்) சம்பளமாக கொடுக்கப்படுகிறது. பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன் உள்ளிட்ட மொத்தம் 8 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஷில்பா ஷெட்டிதான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரை இன வெறி துவேஷத்தால் சக போட்டியாளர்கள் சிலர் கேவமாக பேசியும், திட்டியும் வருவது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் இந்தியர்கள் இதுதொடர்பாக இங்கிலாந்தின் ஒளிபரப்பு கண்காணிப்பு நிறுவனமான ஆஃப்காம் அமைப்புக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக ஆஃப்காம் தெரிவித்துள்ளது. இந்தப் புகார்களை விசாரித்த அந்த அமைப்பு ஷில்பா ஷெட்டி அவமானப்படுத்தப்பட்டது குறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுககுமாறு சேனல் 4 நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டியை அவமானப்படுத்தியதற்கு ஆசிய வானொலி நிலையங்களும், பல்வேறு இணைய தளங்களிலும் கடும் கண்டனம் தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியர் என்றாலே இப்படித்தான் என்பது போன்ற வார்த்தையைச் சொல்லி ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளர்கள் கேவலமாக விமர்சித்துள்ளனர். பிரசுரிக்கவே முடியாத சில வார்த்தைகளையும் கூறி ஷில்பாவை அவர்கள் திட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகேவ ஷில்பாவை அவர்கள் சரமாரியாக கிண்டலும், கேலியும் செய்து பேசி வருகின்றனர். ஷில்பாவை சீண்டி வருபவர்கள் அனைவருமே பெண்கள். டேணியல் லாய்டு என்ற முன்னாள் இங்கிலாந்து அழகி ஷில்பாவை நாய் என்று கூறித் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.

ஜேட் கூடி என்ற இன்னொரு பெண், ஷில்பாவை அசிங்கமாகத் திட்டியுள்ளார். அவரது மகளான ஜேட், ஷில்பாவின் பின் பக்கம் குறித்து அசிங்கமாக விமர்சித்துள்ளார்.

ஷில்பா சமைத்த சிக்கன் சாப்பாட்டை சாப்பிட மறுத்த ஜோ மியாரா என்ற பெண், அது அரை வேக்காடாக உள்ளதாக கூறி கண்டித்தார்.

இவர்களின் இந்த இன வெறி சீண்டலால் அதிர்ந்து போன ஷில்பா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது ஜாக்சனின் சகோதரான ஜெர்மைன் ஜாக்சன் தான் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி ஷில்பாவை அமைதிப்படுத்தியுள்ளார்.

ஷில்பாவை அவமானப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது பொம்பளைங்க சண்டை, இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று சேனல் 4 நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இனவெறிக்கு இடமில்லை, அதை அனுமதிக்க மாட்டோம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று அந்த நிறுவனம் விளக்கியுள்ளது.

திங்கள்கிழமை பிக் பிரதர் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அவரசமாக கூடி ஷில்பா விவகாரம் தொடர்பாக தீவர ஆலோசனை நடத்தினர். ஷில்பா அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக தங்களுக்கு வந்துள்ள புகார்களை தீவிரமாக விசாரித்து தவறு செய்தவர்களை போட்டியிலிருந்து வெளியேற்றுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளையர்களே, புத்தியையும் அதே 'கலரில்' வைத்துக் கொள்ளுங்களேன்!...

http://thatstamil.oneindia.in/specials/cin...lpa_070117.html

'ஷில்பா ஷெட்டி மீது இனவாத ஏளனம்'- இந்தியா கண்டனம்

பிரிட்டனில் செலிபிரிட்டி பிக் பிரதர் எனப்படும் யதார்த்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்குபெறும் மும்பையைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி இனப்பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய அரசு விசாரித்து வருவதாகக் கூறிய இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒருவர்- ஷில்பா ஷெட்டியின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டதால், அவரை இந்தியர் என அழைத்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து பிரிட்டனிலுள்ள ஆயிரக் கணக்காணவர்கள் புகார் கூறியுள்ளார்கள்.

அதேவேளை இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இது குறித்து பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேரின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கேட்ட போது, தாம் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றும், ஆனால் நிறவெறிக் கொள்கை என்பது எந்த வகையில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

BBC Tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான சம்பவங்கள் அந்த பிக் பிரதர் நிகழ்ச்சியையும் அந்த தொலைக்காட்சியையும் பிரபல்யபடுத்துவதற்காக திட்டமிட்டு செயல் படுத்தியிருக்கலாம்.காரணம் இந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியாது இது உண்மை.இவையெல்லாம் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி.அத்துடன் இது முழுக்க முழுக்க விளம்பரதாரர்களின் விளம்பரத்திற்க்காக நடாத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.எல்லோர் கண்ணும் தங்கள் பக்கம் திரும்ப வேண்டுமாயின் இப்படியான அதிரடி நடவடிக்கையை எந்தவோர் ஊடகமும் செய்ய தயங்குவதில்லை.சரி இப்ப என்ன?அந்த ஊடகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் போச்சு.ஆனால் இதன் மூலம் விளம்பரத்திற்கான பணம் நிறைய கொட்டுமே.சில்பாவிற்கும் லண்டனில் விளம்பரம் ஆகிவிட்டதே.அத்துடன் இந்தியாவிலும் இது பிரபல்யமாவதிற்கு வாய்ப்புகள்.

நிச்சயமாக. இங்கிலாந்தின் இன்றைய தினபத்திரிகைகள் பலவற்றில் இதுதான் தலைப்பு செய்தி. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பிக் பிரதர் நிகழ்ச்சியின் பிரபல்யம் அதிகரித்து, இதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.இது நிகழ்ச்சியை நடாத்தும் சானல் 4 நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்க கூடியது தான்.

இது ஒரு இணைப்பு:

http://www.youtube.com/watch?v=DyvZWoQ39wM

இங்கே நடப்பது

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி போல

திட்டமிட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும்

ஒரு பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை கவர முயல்வதாகவுமே தெரிகிறது.

இங்கே ஒருவரை நீக்கியதாக சொல்வது கூட

திட்டமிட்டு ஒருவரை இணைத்து நீக்க வைத்துள்ளார்கள்

போலும்

உதாரணமாக

பேசும் பேச்சுக்கள் அருமையாக ஒலிப்பதிவு ஆக

ஒலி வாங்கிகளை (fm மைக் சிஸ்ட்டம்) அனைவரும் வைத்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு கருவிகளால்

குளோஸ் அப் (cu)

மிட் சாட் (ms)

மற்றும் லாங் சாட் ( Ls)

போன்ற எதிலும் அடுத்த கமரா கூட தெரியாத படி

இது ஒரு தொலைக் காட்சி தொடரின்

மாமியார் மருமகள் சண்டை காட்சி போல்

ஒளிப்பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இதை நல்லதொரு விளம்பர யுத்தியாகவே என்னால் கருத முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரத்துக்காக பிரித்தானியா தன் மீதான இனவாதப் பார்வையை அனுமதிக்குமோ என்பது கேள்வி. காரணம் பிரித்தானியர்கள் இன்னும் ஜேர்மனியர்களைத் தான் இனவாதிகள் என்று அழைத்துக் கொண்டு திரிகின்றனர்.

விளம்பரம் தேவை என்றால் சில்பா செட்டியை தள்ளிவிட்டு கையைக் கால முறிச்சே விளம்பரம் தேடி இருப்பார்கள்..! இது கொஞ்சம் சீரியஸ் வழியாச்சே..! ஒருவேளை சனல் 4 க்கு எதிரான சதியோ..??!

இப்படியே மாறி மாறிப் பேசி நாங்கள் அதுக்கு விளம்பரம் பண்ணிடுவம். எங்கட நிலையை சிந்திக்கவே மாட்டம். நாங்கள் தூசுக்கும் அங்க அனுமதிக்கப்படமாட்டம்..! :P :rolleyes::huh:

பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஜேட் மற்றும் சில்பா இடையேயான சண்டையின் ஒரு பகுதியை இந்த இணைப்புக்களில் காணலாம் ....

http://www.channel4.com/player/v2/player.j...tialClipId=5482

http://www.channel4.com/player/v2/player.j...tialClipId=5563

http://www.channel4.com/player/v2/player.j...tialClipId=5482

நன்றி - Channel Four Television Corporation and 4 Ventures Limited

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவின் மூலாதரமே ஊடகங்கள்தான்.ஒரு சிறிய சம்பவத்தைக்கூட பூதாரமாக கூடிய திறமை இங்கிலாந்து ஊடகங்களுக்கு உண்டு.உலகின் இன்றைய அரசியல் நகர்வுகளைக்கூட ஊடகங்கள் தான் முன்னெடுத்துச்செல்கின்றன.அத

பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஜேட் மற்றும் சில்பா இடையேயான சண்டையின் ஒரு பகுதியை இந்த இணைப்புக்களில் காணலாம் ....

http://www.channel4.com/player/v2/player.j...tialClipId=5482

http://www.channel4.com/player/v2/player.j...tialClipId=5563

http://www.channel4.com/player/v2/player.j...tialClipId=5482

நன்றி - Channel Four Television Corporation and 4 Ventures Limited

இணைப்புக்கு நன்றி மதன்.

அண்மைக் காலத்தில் வெளி வந்த ஒளிப்பதிவுக் கருவிகளை (Camera)

நீங்கள் இணைத்த இணைப்புகள் வழி காணக் கூடியதாக இருக்கிறது.

நான் முன்னர் இணைத்த பகுதிகளில் அவற்றை காண முடியவில்லை.

இக் கமராக்களை இயக்குவதற்கு ஒளிப்பதிவாளர்கள் தேவையில்லை.

ஒரு இடத்தில் பொருத்தி வைத்து விட்டு (Ex: CCTV போல)

எடிட்டிங் அறையில் இருந்தே இயக்கலாம்.

(சூம் பண்ணலாம் & திருப்பலாம்)

இங்கே நடப்பதை சென்சர் பண்ணியிருக்கலாம்!

ஆனால் ஏன் வெளியிடுகிறார்கள்?

இதன் முன்னய நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை.

அவை கூட இப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்

பாலிவுட் நடிகை ஷில்பாவை அவமதித்த விவகாரம் விஸ்வரூபம் * பிரிட்டன் பார்லிமென்ட்டிலும் சர்ச்சை எழுந்தது

fpn03ku0.jpg

லண்டன்: பிரிட்டன் "டிவி' நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இன பாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத் துள்ளது. இப்பிரச்னை பிரிட்டன் பார்லிமென்ட்டிலும் எழுப்பப் பட்டது. ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக எட்டாயிரம் வாசகர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் சேனல் 4 என்ற "டிவி' நிறுவனம் சார்பில் "பிக் பிரதர்' என்ற நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது.

பிரபலங்களாக இருக்கும் சிலரை ஒரே வீட்டில் சில நாட்களுக்கு வசிக்க வைத்து, மற்றவர்களுடன் அவர்கள் எப்படி அனுசரித்து போகின்றனர் என்பதை சோதிப்பர். இந்த நிகழ்ச்சி "டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் தேர்வு செய்யப்படுள்ளார். கடந்த 2ம் தேதி முதல் ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் ஒன்பது பேர் ஒரு வீட்டில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் இருக்கும் பெண் பிரபலங்கள் மூன்று பேரால் ஷில்பா ஷெட்டி இன பாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப்பட்ட காட்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகின. ஜடே கூடி, டானிலி லாயிட், ஜோ ஓ மியாரா ஆகியோர் ஷில்பா ஷெட்டியை உடலின் நிறத்தை சுட்டிக் காட்டி இழிவுப்படுத்தியது, நாய் என்று திட்டியது, ஷில்பா சமைத்த உணவை சாப்பிட மறுத்தது இதன் காரணமாக ஷில்பா கண்ணீர் விட்டு அழுதது ஆகிய காட்சிகள் ஒளிபரப்பாகியதால் பிரிட்டன் "டிவி' ரசிகர்கள் கொந்தளிப்பு அடைந்தனர்.

பிரிட்டனில் "ஆப் காம்' என்ற அமைப்பு மீடியாக்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை கட்டுப் படுத்தும் அமைப் பாக உள்ளது. இந்த அமைப்புக்கு இதுநாள் வரை எட்டாயிரம் வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சேனல் 4 "டிவி' நிறுவனத்துக்கும் நேரிடையாக இரண் டாயிரம் வாசகர்கள் போன் மற்றும் இமெயில் மூலம் புகார்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருவதாக "ஆப்காம்' அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி., கீத் வாஸ் என்பவர் பார்லிமென்ட்டில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ""அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், பயன்படுத்தப்பட்ட விதம் ஆகியவை இந்த காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று'' என்று அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பிரபலமான வெளிநாட்டு வாழ் இந்திய "டிவி' நடிகையான மீரா சியாலும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக போர்க்கொடி துõக்கியுள்ளார். இன பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்து மேற்கொள்ளப் பட்டுள்ள பிரசாரத்தை அவர் தலைமையேற்று நடத்தி வருகிறார். வாசகர்களின் ஆதரவை இழக்கும் பிரபலங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்பது தான் " பிக் பிரதர்' நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். அந்த வகையில், இன பாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப்பட்டதால் பிரிட்டன் வாசகர்களிடம் ஷில்பா ஷெட்டிக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடி வருகிறது. தற்போது அவர் இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.

மத்திய அரசு கவலை: பிரிட்டன் "டிவி' நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனபாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப் பட்டுள்ளது கண்டு மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இது குறித்து வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில்,""இந்த பிரச் னையை கவனத்தில் எடுத்து கொண்டுள்ளோம். பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக் கப்படும். அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் இந்தியா அடியோடு எதிர்த்து வருகிறது என்பதை உலகமே அறியும்'' என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் போர் பிரிட்டன் மீது எமது பாரத தேசம் உடனடியாக போர் தொடங்க வேண்டும் இது அவமானம்.

டொனி பிளையரை உடனே தூக்கில் போட வேண்டும்.

அட விடிச்சுட்டுதா அப்போ இவளவு நேரமும் கனவாகண்டேன் :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பிட்ட ஊடகங்கள் என்ன நினைத்தார்களோ அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.தங்களை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றால் எதையும் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் போர் பிரிட்டன் மீது எமது பாரத தேசம் உடனடியாக போர் தொடங்க வேண்டும் இது அவமானம்.

டொனி பிளையரை உடனே தூக்கில் போட வேண்டும்.

அட விடிச்சுட்டுதா அப்போ இவளவு நேரமும் கனவாகண்டேன் :huh:

:huh::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes::huh:

என்ன இது சண்டை இன்னும் தொடங்கவில்லை இப்பவே ஒரு பதிக்கப்பட்ட உறவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயம் தற்போது இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.இதை வைத்து கொஞ்ச நாளைக்கு அரசியல் பண்ணலாம்.சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயம் தற்போது இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.இதை வைத்து கொஞ்ச நாளைக்கு அரசியல் பண்ணலாம்.சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.

பின்ன ஆட்சிய கவுத்ட மாட்டோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி மதன்.

அண்மைக் காலத்தில் வெளி வந்த ஒளிப்பதிவுக் கருவிகளை (Camera)

நீங்கள் இணைத்த இணைப்புகள் வழி காணக் கூடியதாக இருக்கிறது.

நான் முன்னர் இணைத்த பகுதிகளில் அவற்றை காண முடியவில்லை.

இக் கமராக்களை இயக்குவதற்கு ஒளிப்பதிவாளர்கள் தேவையில்லை.

ஒரு இடத்தில் பொருத்தி வைத்து விட்டு (Ex: CCTV போல)

எடிட்டிங் அறையில் இருந்தே இயக்கலாம்.

(சூம் பண்ணலாம் & திருப்பலாம்)

இங்கே நடப்பதை சென்சர் பண்ணியிருக்கலாம்!

ஆனால் ஏன் வெளியிடுகிறார்கள்?

இதன் முன்னய நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை.

அவை கூட இப்படியா?

ஜெர்மனியில் பல வருடங்களுக்கு முன் அநேகமக்களால் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பிரதர்.ஆரம்பத்தில் சாதாரண மக்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள்.பின்னர் அதன் மதிப்பு குறைய குறைய திரை மற்றும் அரசியல் பிரபல்யங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள்.இப்போது அதற்கும் மரியாதை இல்லை.உண்மையில் இது ஒரு கேடுகெட்ட நிகழ்ச்சி.சின்ன பிள்ளைகளுடன் இருந்து பார்க்கக்கூடியதல்ல.இதில் பலானான ஜில்மா காட்சிகள் எல்லாம் இடம் பெறும்.குளிப்பது முதல் சகல விடயங்களையும் நேரடியாக காட்டுவார்கள். B) இது ஒரு கட்டண தொலைக்காட்சி சேவை.இதை விட இன்னும் விசேடமாக நீங்கள் பார்க்கவேண்டுமானால் மேலதிகமாக பணம் செலுத்தி இணயத்தளம் மூலமாக 24 மணித்தியாலமும் அவர்களுடைய கூத்துக்களை(காலைக்கடன் முதல் மற்றவர்களோடு ......)கண்டு களிக்கலாம்.கிட்டத்தட்ட ஒரு மிருகக்காட்சிசாலையை கண்டு களித்த சந்தோசம் இருக்கும்.இதெல்லாம் தெரியாமல் தொப்புள் அழகி வந்தவவாம்.ஒண்டும் தெரியாத பாப்பா. :huh:

நல்ல நகச்சுவை. இலங்கை இந்தியாவில சொந்த நாட்டு மக்கள் எதிர்கொள்ளிற சாதி வெறியை விட வெள்ளைகள் காட்டும் இனவெறி நிறவெறி பெரிதாக எனக்கு ஒரு போதும் தெரிந்தது இல்லை.

இதுவே கிழக்கு நாடுகள் முன்னேறி முதலாம் உலக நாடுகளாக ஆண்டாண்டு காலமாக இருக்கிறார்கள் என்று வைப்போம் வறிய நாடுகளாக மேற்கு நாடுகளில் இருந்து வெள்ளைகள் அரசியல் பொருளாதார அகதிகளாக வருகிறார்கள் கல்விக்கு தொழில் வாய்ப்பிற்கு என்று வருகிறார்கள் என்று வைப்போம். எப்படி நடத்தப்படுவார்கள் என்று எண்ணினால் இன்று வெள்ளைகள் செய்வது ஒரு சிறு துளி.

கனக்க வேண்டாம் மத்திய கிழக்கு நாடுகளில் அரபியர்கள் இந்தியர்கள் ஆசியர்களை எவ்வாறு நடத்துகிறார்கள். இதுபற்றி இனவெறி என்று ஒப்பாரி வைத்திருக்கிறியளா? பொத்திக் கொண்டு உங்கடை பிழைப்பை பாக்கிறியள் தானே.

இந்தியாவில் உள்ள நேபாள, பங்களாதேசி, இலங்கை அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்?

ஆனா ஒரு நல்ல விசையம் இந்தியா வெளிநாடுகளில் சச்சரவுகளை சந்திக்கும் தனது குடிமக்களிற்கா குரல் கொடுக்கும் துணிவை நடிகர் நடிகைகள் என்று இல்லாது சமமாக சாதாரணமானவர்களிற்கும் ஒரளவு காட்டினால் இந்தியன் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்படுவார்கள் கூடிய விசுவாசமாகவும் (சீனர்கள் போல்) இருப்பார்கள்.

விஸ்வரூபம் எடுக்கும் ஷில்பா விவகாரம்

பிக் பிரதர் நிகழ்ச்சியில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக வி>வாக விசாரணை நடத்த வேண்டும் என இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கோ>க்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்றுள்ள ஜேட் கூடி என்ற செக்ஸ் நடிகையும் அவரது தாயாரான ஜேக்கி கூடியும் ஷில்பாவை நாய் என்று திட்டியும், கேவலமாக விமர்சித்தும், அவர் தயாரித்த உண்வை சாப்பிட மறுத்து கேலி செய்தும் அவமானப்படுத்தினர்.

அவரை இந்தியர் என்று சுட்டிக் காட்டி இனவெறி வார்த்தைகளால் அவமானப்படுத்தினர். இதைக் கண்டித்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான கண்டன புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஷில்பா அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்திற்கு மத்திய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு இங்கிலாந்து அரசை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், இந்த சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இனவெறியை எப்போதுமே இந்தியா ஆத>த்ததில்லை.

இதுதொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டிருப்பத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.