Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒத்திகை தான் என்கிறார் மஹிந்த! - பாதயாத்திரை முடிவில் சூளுரை

Featured Replies

மீண்டும் வருவோம் : விட்டுச் செல்ல இல்லை எடுத்துச் செல்ல மீண்டும் வருவோம் : கொழும்பில் மஹிந்த

 

13906874_10153554364101467_8364543609923

நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால் மீண்டும் நாம் வருவதற்கு தயாராக உள்ளோம். நீங்கள் கேட்பது எதுவோ அதை பெற்றுகொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக பேராதனையில் கடந்த வியாழக்கிழமை (28)ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது. பேரணியின் இறுதிக் கூட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.13912569_10153554363756467_9159688827353

இங்கு உரையாற்றிய அவர்,

 வைத்தியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் என பலரும் இங்கு வந்திருக்கிறார்கள். மாணவர்களுக்கான சீருடையில் ஏமாற்றப்பட்ட பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் பலர் வந்திருக்கிறார்கள். எமது பாதயாத்திரை தொடர்பில் செய்தி எழுதுவதற்காக இவர்கள் வரவில்லை. தற்போதைய ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வதைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே எம்மோடு கைகோர்த்துள்ளார்கள். 13900244_10153554364166467_4431122440856

வரலாற்றில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்ட இந்த பாதயாத்திரையில் பெருந்திரளான மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர். இதேபோன்று பிரேமதாஸ ஆட்சி காலத்தில் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன உள்ளிட்ட பலர் பாதயாத்திரை சென்றோம். இக்காலப் பகுதியிலும் எமக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் இப்போது ஆட்சியில் உள்ளவர்களை போல் பிரேமதாஸ நீதிமன்றுக்கு சென்று பாதயாத்திரையை தடை செய்யுமாறு  கெஞ்சவில்லை. 13901543_10153554364361467_8883750108326

ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் 8 மாதமும் நிறைவடைய முன்னரே எட்டு இலட்சம் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். ஆனால் இன்று எமக்கு எதிரான ஆயுதமாக குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி பிரிவு ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். நாங்கள் இதற்கு பயந்தவர்கள் அல்ல. சிறையில் அடைத்தாலும் எமது போராட்டம் முற்றுப்பெறாது. 13895015_10153554364021467_6553525734373

ஜனநாயகத்தை இல்லாதொழித்து சர்வதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். உலகில் சர்வதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை இந்த ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.13895507_10153554363586467_2655268789352

எதிர்க் கட்சி என்கிறார்கள். ஆனால் அங்கு ஐந்தோ ஆறு பேர்தான் இருக்கின்றார்கள்.  மக்கள் மீது வரிச்சுமையை விதித்துள்ளனர். இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கின்றார்கள். 13882234_10153554364041467_4321211666579

நாட்டை காக்க போராடிய இராணுவ வீரர்கள் வாய்கால் சுத்தம் செய்கின்றனர். இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை இல்லாமல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் இராணுவ வீரர்களை குப்பை வாளியில் போட்டுள்ளனர். 13882353_10153554363511467_1435920225817

இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுச் செல்ல முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இதற்காகவே இந்த கூட்டம் கூடியுள்ளது. நீதியை ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் மாற்ற முடியாது என்றார்.

13872930_10153554364391467_8183354174071

http://www.virakesari.lk/article/9670

  • கருத்துக்கள உறவுகள்
 

 

Posted by Namal Rajapaksa on Sonntag, 31. Juli 2016

 

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டு எதிர்க்கட்சி மேற்கொண்ட பாதயாத்திரை ஒரு ஒத்திகை மாத்திரமே என்றும், அடுத்த முறையில் வீதியில் இறங்குவது திரும்பிச் செல்வதற்காக அல்ல, எடுத்துச் செல்வதற்கானதாகவே இருக்கும் என்றும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதயாத்திரை முடிவில் கொழும்பில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி மேற்கொண்ட பாதயாத்திரை ஒரு ஒத்திகை மாத்திரமே என்றும், அடுத்த முறையில் வீதியில் இறங்குவது திரும்பிச் செல்வதற்காக அல்ல, எடுத்துச் செல்வதற்கானதாகவே இருக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதயாத்திரை முடிவில் கொழும்பில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

   

அடுத்த முறை எடுத்துச் செல்லவே வீதிக்கு வருவோம். இது ஒத்திகை மாத்திரமே, 20 ஆண்டுகள் ஆளும் கட்சியில் இருந்தவர்களுக்கு எதிர்க்கட்சியில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காட்ட வேண்டும். நாங்கள் தயார். நீங்கள் தயார் என்றால், நீங்கள் எதனை கேட்கின்றீர்களோ அதனை நாங்கள் பெற்றுத்தருவோம் என்றார்.

அதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் லிப்டன் சுற்று வட்டாரத்தில் நடைபெற்றது. பாத யாத்திரையின் இறுதி நாளான இன்று கொழும்பில் பொதுக்கூட்டமொன்றை நடத்த ஹைட்பார்க் மைதானத்தை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்த கூட்டு எதிர்க்கட்சி வாசுதேவ நாணயக்காரவின் பெயரில் அதனை முன்பதிவு செய்திருந்தது. எனினும் மேலிட அழுத்தம் காரணமாக குறித்த முன்பதிவை மீறி ஹைட்பார்க் மைதானத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அங்கு பொதுக்கூட்டமொன்றை நடத்த முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இதனையடுத்து பொரளை கம்பல் மைதானத்தை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமர் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்த போதும் ஜனாதிபதி செயலகத்தின் தலையீடு காரணமாக மைதானத்தை ஒதுக்கிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக கடும் கோபமுற்றிருந்த மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் டார்லி வீதி வழியாக கொழும்பு-07 லிப்டன் சுற்று வட்டாரம் வரை பாத யாத்திரையை நகர்த்தியிருந்தனர்.

பின்னர் பாத யாத்திரையின் பின்னால் செலுத்தி வரப்பட்ட தற்காலிக மேடை லிப்டன் சுற்று வட்டாரத்தில் நிறுவப்பட்டதும், அவ்விடத்தில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. பொதுக்கூட்டத்தில் முதலாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றினார்.

 

mahinda-yathra-0107816-seithy%20(1).jpg

 

 

mahinda-yathra-0107816-seithy%20(2).jpg

 

 

mahinda-yathra-0107816-seithy%20(3).jpg

 

 

mahinda-yathra-0107816-seithy%20(4).jpg

 

 

mahinda-yathra-0107816-seithy%20(5).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162705&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிக்கு ரணிலுக்கும் ஏற்படும் - மஹிந்த:-

 

சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிக்கு ரணிலுக்கும் ஏற்படும் - மஹிந்த:-

 


சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


பாத யாத்திரையின் நிறைவில் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய பாத யாத்திரை இதுவெனவும், அன்று லிப்டன் சுற்று வட்டத்தில் பாத யாத்திரையை ஆரம்பித்து கதிர்காமம் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அந்தக் காலப்பகுதியிலும் அடக்குமுறைகள் காணப்பட்டதாகவும் எனினும் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச நீதிமன்றில் மண்டியிட்டு பாத யாத்திரையை தடுக்க முயற்சிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களுமே கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றார்கள், இதனால் எனக்கு பயந்து அரசாங்கம் நடுங்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைவரையும் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்துகின்றனர், புலனாய்வுப் பிரிவினரும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளரும் இந்த தரப்பிற்கு உதவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


உலகில் சர்வாதிகாரிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


தலைவலி காய்ச்சலுக்குக் கூட இன்று அரசாங்கத்திற்கு 15 வீத வரியை செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


மக்களை திரட்டி இந்த அரசாங்கத்தை கவிழ்க்கத்தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134578/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த குடும்ப அரசியலை கொஞ்சம் அடக்கி வாசிப்பாரேயானால் அடுத்தமுறை இவர்தான் ஜனாதிபதி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.