Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக விசாரணையை வடக்கு, கிழக்கு மக்கள் நம்பவில்லை! - பாக்கியசோதி சரவணமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை, சர்வதேச விசாரணை வேண்டும் என அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணியிடம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்  மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு, கிழக்கு மக்கள் இதனையே விரும்புவதாக நல்லிணக்க செயலணியின் செயலாளரும், மாற்று கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான  கலாநிதி பாக்கியசோதி  சரவணமுத்து தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை, சர்வதேச விசாரணை வேண்டும் என அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணியிடம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு, கிழக்கு மக்கள் இதனையே விரும்புவதாக நல்லிணக்க செயலணியின் செயலாளரும், மாற்று கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளனர்.

   

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவினால் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு ஒன்று கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டது. இந்த செயலணியினர் யுத்த பாதிப்புக்களில் இருந்து இன்றுவரை மீளமுடியாது பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்துவரும் வடக்கு, கிழக்கு மக்களிடம் அவர்களின் பாதிப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையை விரும்புவதாக பாதிக்கப்பட்ட மக்கள்,செயலணியினரிடம் நேரடியாக தெரிவித்திருப்பதாக பாக்கியசோதி சரவணமுத்து சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த செயலணியின் மக்கள் கருத்தறியும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தமது செயற்பாட்டை நிறைவுசெய்துள்ளனர். செயலணியினரால் வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்ட மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கள் அறிக்கையாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மாவட்ட ரீதியாக இந்த செயலணிக்குள் தெரிவு செயப்பட்ட ஆறு பேரினால் தமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் செயற்பாடு தொடர்பான அறிக்கை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த செயலணியpன் மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162979&category=TamilNews&language=tamil

கொலையை கொலைகாரர்களே விசாரிப்பதை புத்திசுவாதீனம் உள்ளவர்கள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த விடயத்திலில் ஹிந்திய அரசினரின் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை பண்புள்ள உலகம் அறியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.