Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் விடியும் வேளை திடீர் என 50 அடி ஆழத்தில் புதையுண்ட வீடு! பதட்டத்தில் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய பகுதியில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக சேதமாகியுள்ளது.

அந்த பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாக இவ்வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஏற்கனவே அதிகாரிகள் ஊடாக அனுப்பப்பட்டதன் காரணமாக உயர் ஆபத்துக்கள், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் அப்பகுதியில் தொடர்ந்தும் பதட்டமான சூழல் நிலவுவதால் மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்கிறன்றனர்...

http://www.tamilwin.com/statements/01/113391

50 அடி ஆழத்தில் புதையுண்ட குடியிருப்பு...
 
07-08-2016 01:19 PM
Comments - 0       Views - 132

 article_1470556367-DSC02628.jpg

எஸ்.கணேசன், காமினி பண்டார

கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை  7.30 மணியளவில் நிலம் தாழிறங்கியதன் காரணமாக குடியிருப்பொன்று முற்றாக மண்ணுள்  புதையுண்டுள்ளதாகவும்  அப்பகுதியலுள்ள குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வீடுகளில் வசித்து வந்தவர்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

கினிக்தேனை, புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவதால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக, அப்பிரதேசத்தை அண்மித்துள்ள பகுதிகளில் நிலம் தாழிறங்கும் அபாயாம் தோன்றியுள்ளதாகவும் இதனால் தமது வீடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில்  கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

article_1470556379-DSC02626.jpg

article_1470556388-DSC02635.jpg

article_1470556396-DSC02632.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/178817/-அட-ஆழத-த-ல-ப-த-ய-ண-ட-க-ட-ய-ர-ப-ப-#sthash.Wr6tRLSW.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.