Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீ.எஸ்.என் நிறுவனத்தின் பணம் 157.5 மில்லியன் மத்திய வங்கிக்கு மாற்றம்..!

Featured Replies

சீ.எஸ்.என் நிறுவனத்தின் பணம் 157.5 மில்லியன் மத்திய வங்கிக்கு மாற்றம்..!

 

 

csn.jpg

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட மூலதன நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/10027

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் 157 மில்லியன் ரூபா பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையை நடாத்திச் செல்வதற்காக முதலீடு செய்த 157.5 மில்லியன் ரூபா கறுப்புப் பணம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்தப் பணத்தை நாமல் ராஜபக்ஸ நண்பர் ஒருவரின் ஊடாக முதலீடு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தப் பணத்தை அரசுடமையாக்க அனுமதியளிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கடுவெல நீதிமன்றில் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால குறித்த பணத்தை அரசுடமையாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பணம் யோசித ராஜபக்ஸவிற்கு சொந்தமானது எனவும் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீ.எஸ்.என்னின் 157.5 மில்லியன் ரூபாய்கள், பஷிலின் நிலங்கள் அரசாங்கத்தின் வசமாகின:-


 சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாக முதலிட்ட 157.5 மில்லியன் ரூபாய் நிதியை, மத்திய வங்கிக்கு மாற்ற கடுவளை நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கடுவளை மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள காணிகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய கடுவளையிலுள்ள காணியில் பொலிஸ் பயிற்சி மத்திய நிலையத்தையும், மாத்தறையிலுள்ள காணியில் சுற்றுலா பயிற்சி மத்திய நிலையத்தையும் அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமானப் படையினருக்கான எட்டு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

விமானப் படை வசமுள்ள தாக்குதல் விமானங்களிள் ஆயுட் காலம் நிறைவடைகின்றதோடு, அதனை வேகமாக பயன்படுத்த முடியாதுள்ளமையால், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134836/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுடையது என நம்பப்படும் சுமார் 158 மில்லியன் ரூபா பணத்தை அரசுடமையாக்குமாறு கடுவெல நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசைக்கு கிடைத்த 158 மில்லியன் ரூபா பணம் யோசிதவின் நெருங்கிய நண்பரான ரொஹானின் வங்கிக் கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் தன்னுடையதல்லவென்றும் யோசிதவினுடையது எனவும் அவர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுடையது என நம்பப்படும் சுமார் 158 மில்லியன் ரூபா பணத்தை அரசுடமையாக்குமாறு கடுவெல நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசைக்கு கிடைத்த 158 மில்லியன் ரூபா பணம் யோசிதவின் நெருங்கிய நண்பரான ரொஹானின் வங்கிக் கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் தன்னுடையதல்லவென்றும் யோசிதவினுடையது எனவும் அவர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

   

இது குறித்து பொலிஸார் நேற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து குறித்த பணத்தை அரசுடமையாக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.

சி.எஸ்.என். அலைவரிசைக்கு முதலீடு செய்யப்பட்ட 234 மில்லியன் ரூபா பணத்தில் ஒரு பகுதி போலி கணக்கு வழக்குகள் மற்றும் சட்டபூர்வமற்ற வழிவகைகளினூடாக போலி ஆவணங்கள் ஊடாக பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163328&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.