Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட கால வதிவிட வீசா : அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

மூன்று  இலட்சம் டொலர்களை வைப்பிலிடும்  வெளிநாட்டவருக்கு  10 வருட கால வதிவிட வீசா  : அரசாங்கம் அறிவிப்பு

 

இலங்கையில் 3 இலட்சம்  டொலர்களை  வைப்பு  செய்யும்  வெளிநாட்டவர்களுக்கு  10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது  என்று  அமைச்சரும்  அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். dollar-sri-lanka-gov-travel-visa.jpg

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை வழங்க 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. 

அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டி உள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தின் மூலம் 300,000 அமெரிக்க டொலர்களை இங்கு வைப்பிலும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட வதிவிட விசாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ,

 அதற்காக குறித்த தொகையினை 10 வருட காலத்துக்கு குறித்த சிறப்பு வைப்புக்கணக்கில் பேண வேண்டும். அவ்வாறு வெளிநாட்டவர் இங்கு தங்கியிருக்கும்போது    எந்தத் தொழிலையும் செய்ய முடியாது.  பல நன்மைகளை கொண்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நிதியமைச்சர்  ரவி கருணாநாயக்கவினால்   முன்வைக்கப்பட்ட யோசனைக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

http://www.virakesari.lk/article/10037

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மாங்காய் மடையன் செய்வான்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.