Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகாம்பிகை அம்மன் ஆலய காணியில் விகாரை அமைக்கும் பணிகள் தீவிரம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நான்கரை ஏக்கர் காணி நிரந்தரமாக பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ள ஆலய நிர்வாகம், குறித்த காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயம் 1957 ஆம் ஆண்டு இரணைமடு குளத்தை தீர்த்தமாகக் கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நான்கரை ஏக்கர் காணி நிரந்தரமாக பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ள ஆலய நிர்வாகம், குறித்த காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயம் 1957 ஆம் ஆண்டு இரணைமடு குளத்தை தீர்த்தமாகக் கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

   

இறுதிக்கட்ட யுத்தம் காரணமாக கிளிநொச்சி உட்பட இரணைமடு பிரதேசத்தை விட்டு ஒட்டுமொத்தமாக மக்கள் மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக மீளக்குடியேற்றப்பட்டனர். இந்தநிலையில் அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விடுவிக்கப்படாது உள்ளது.

 

kili-kanagambikai-110816-600-seity-001.j

 

இதுஇவ்வாறிருக்க இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக புத்தர் சிலையை வைத்திருந்த இராணுவம், தற்போது அங்கு நிரந்தரமான பௌத்த விகாரையொன்றை அமைத்து வருகின்றது. இதற்காக ஆலயத்தின் நான்கரை ஏக்கர் காணியை மூடி நிரந்தர மதில் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அங்கு 80 அடி உயரம் கொண்ட விகாரைக்கான தூபியொன்றை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரணைமடு – கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலிருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள் இந்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கென அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி அமைந்துள்ள காணியில் இராணுவத்தினரால் கொங்கிறீட் தூண்கள் நிறுவப்பட்டு முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

எனினும் குறித்த பகுதியில் நிரந்தர மதில் அமைக்கும் பணியில் தற்போது இராணுவம் ஈடுபட்டுள்ளது. சிங்கள மக்களே இல்லாத இந்த இரணைமடு பகுதியில் ஆலயத்திற்கு உரித்தான காணியை அடாத்தாக கையகப்படுத்தி இவ்வாறு விகாரை அமைக்கப்படுகின்றமை தமிழர் பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் திட்டமிட்ட ஒரு செயலென பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

சட்டவிரேதமான முறையில் இந்து ஆலய காணியை அபகரித்து விகாரை அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, ஆலயத்திற்கு சொந்தமான காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163266&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

90 கோடியை செலவழிக்க வெளீக்கிட்டா புத்தர் என்ன பிச்சையா எடுப்பது..எனக்கும் பங்கு இருக்கெண்டு காட்டத்தானே வேணூம்....

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழரசு said:

சிங்கள மக்களே இல்லாத இந்த இரணைமடு பகுதியில் ஆலயத்திற்கு உரித்தான காணியை அடாத்தாக கையகப்படுத்தி இவ்வாறு விகாரை அமைக்கப்படுகின்றமை தமிழர் பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் திட்டமிட்ட ஒரு செயலென பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ஏன் தமிழ் மக்கள் வழிபடக்கூடாது என்று சட்டமிருக்கோ?தமிழ் மக்கள் தேவாரம் பாடி ,புத்தருக்கு பாலாபிசேகம் செய்தால் புத்தர் எங்கன்ட சாமியாகிவிடுவார்.பிறகு புத்தர் அப்பே ஆளுவா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.