Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே

Featured Replies

இதுவும் நடக்குதா? :(:icon_idea::lol::lol:

  • Replies 86
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்புளையளின்ரை காலிலை விழுகிற உந்த நாய்ப்பழக்கமெல்லாம் நான் வெளிப்படையாய் வைச்சிருக்கிறதில்லை.எல்லாம் வீட்டோடைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில மட்டுமா வீடுகளிலும் ராச்சியம் அவைட கையிலதானே. விழுந்து கும்பிட்டு.. தான் காரியம் சாதிக்கனும் என்றிருக்காக்கும். என்ன நல்ல உடற்பயிற்சி ஆண்களுக்கு..! :lol::rolleyes:

அப்ப நெடுக்கருக்கு இன்னும் அது.(கலியாணம்) நடக்கேல்லை போல இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது பரவாயில்லை, சிட்னியில சில ஆண்கள் கல்யாணத்தின் பின்பு, மனைவியிடம் உப்பிடித்தான் பயந்து போய் (திட்டு, அடி தாங்காமல்) காலில் விழுகிறார்கள்.

நான் நினைச்சன் இஞ்சை மட்டுமாக்கு மெண்டு.அப்ப உந்த கூத்து எல்லா இடத்திலேயுமே?சும்மாவே சொல்லுறவை வீட்டுக்கு வீடு வாசற் படி எண்டு.இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாது கந்தப்பு நீர் குந்தி இருக்கிற இருப்பை பார்க்க தெரியுது வீட்டிலை எவ்வளவு சாத்துப்படி வாங்கிறீர் எண்டு.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நெடுக்கருக்கு இன்னும் அது.(கலியாணம்) நடக்கேல்லை போல இருக்கு.

கலியாணம் நடந்தாப் போல என்ன சார். நீங்கள் மரியாதை கொடுத்தா அவங்களும் தருவாங்க. ஆண் பெண் என்று பகுத்துப் பேசிக் கொண்டு குடும்பம் நடத்தக் கூடாது சார். அங்க இரண்டு உடல் ஒரு ஜீவன் என்ற நிலையில எப்பவும் இருக்க வேணும் சார். நீங்கள் அவங்களாவும் இருக்க கத்துக்கனும். நீங்கள் நீங்களாகவும் இருக்க வேணும். அப்படி இல்லைன்னாத்தான் காலில விழ வேணும். எப்பவும் சார் மதிக்கிறவையை மதிக்கனும்.. மனிசரா நடக்கிறவையை மதிக்கனும். அதற்காக மனித உருவில உள்ளவை எல்லாரையும் மதிக்கனும் என்றில்லை. :P :)

கலியாணம் நடந்தாப் போல என்ன சார். நீங்கள் மரியாதை கொடுத்தா அவங்களும் தருவாங்க. ஆண் பெண் என்று பகுத்துப் பேசிக் கொண்டு குடும்பம் நடத்தக் கூடாது சார். அங்க இரண்டு உடல் ஒரு ஜீவன் என்ற நிலையில எப்பவும் இருக்க வேணும் சார். நீங்கள் அவங்களாவும் இருக்க கத்துக்கனும். நீங்கள் நீங்களாகவும் இருக்க வேணும். அப்படி இல்லைன்னாத்தான் காலில விழ வேணும். எப்பவும் சார் மதிக்கிறவையை மதிக்கனும்.. மனிசரா நடக்கிறவையை மதிக்கனும். அதற்காக மனித உருவில உள்ளவை எல்லாரையும் மதிக்கனும் என்றில்லை. :P :unsure:

இப்படி தான் எல்லா ஆண்களும் காதலிக்கும் போதோ, கலியாணம் செய்யும் முதலோ சொல்வார்களாம். :P ஆனால், கலியாணம் எல்லாம் முடிந்தா பிறகு தங்கள் சுயரூபத்தை காட்டத்தொடங்குவார்களாம்.

நான், நான் ஆண் என்று கூரைக்கு மேல ஏறி நிற்ப்பார்களாம். இந்த பயத்தாலயே சிலர் (பெண்கள்) திருமணம் செய்ய பயப்பிடுகிறார்கள்.

காதலிக்க முதல் ஒரு கதை(இந்த stage இல் தான், காலில் விழுவது, கையில் விழுவதெல்லாம், தங்களின் வலையில் சிக்க வைப்பதற்க்கு), காதலிக்கும் போது ஒரு கதை, அப்புறம் கலியாணத்திற்க்கு பிறகு ஒரு கதை. :angry: :angry: :lol:

சிலருக்கு அனுபவம் பேசுது போல இருக்கு :unsure::lol:

Edited by யாழ்வினோ

சிலருக்கு அனுபவம் பேசுது போல இருக்கு :unsure::lol:

இல்லை..கண்ணால் பார்த்த அனுபவங்கள்

"Life is too short to learn from our own experience"..So better learn from other's experience :P

....எங்களுக்கு இப்படி செய்தால், தூங்கும் போது, மண்டையில் கல்லை தூக்கி போட்டிற மாட்டம்? :P :P

இந்த வம்பு தும்பு வேண்டாம் என்று தான் பேசாமல், நாம் உண்டு நம் படிப்பு உண்டு என்று இருக்கிறோம், மிகவும் நல்ல பிள்ளைகளாக! :lol::lol:

Edited by mooki

நாங்க கலியாணத்துக்கு பிறகு தலைக்கு "கெல்மெட்" போட்டுக்கொண்டு தான் நித்திரைக்கு போவம் :unsure:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இப்படி தான் எல்லா ஆண்களும் காதலிக்கும் போதோ, கலியாணம் செய்யும் முதலோ சொல்வார்களாம். :P ஆனால், கலியாணம் எல்லாம் முடிந்தா பிறகு தங்கள் சுயரூபத்தை காட்டத்தொடங்குவார்களாம்.

நான், நான் ஆண் என்று கூரைக்கு மேல ஏறி நிற்ப்பார்களாம். இந்த பயத்தாலயே சிலர் (பெண்கள்) திருமணம் செய்ய பயப்பிடுகிறார்கள்.

காதலிக்க முதல் ஒரு கதை(இந்த stage இல் தான், காலில் விழுவது, கையில் விழுவதெல்லாம், தங்களின் வலையில் சிக்க வைப்பதற்க்கு), காதலிக்கும் போது ஒரு கதை, அப்புறம் கலியாணத்திற்க்கு பிறகு ஒரு கதை. :angry: :angry: :unsure:

பாவம் mr.மூக்கி :P :P அனுபவம் பேசுது போல உண்மையா மூக்கி அக்கா

பாவம் mr.மூக்கி :P :P அனுபவம் பேசுது போல உண்மையா மூக்கி அக்கா

ஐயோ..ஐயோ...நான் அனுபவிக்கும் போது வந்து சொல்றன்..இப்ப ஆள விடுங்கப்பா!

நானும் என் பாடும் என்று இருகிற என்னை ஏம்பா வம்புக்கு இழுகிறிங்க? :lol:

நான் அடுத்தவரின் அனுபவத்தை தானே சொன்னேன்..? :unsure:

இதுக்கு தான் வாயை சும்மா வைத்து கொண்டிருக்க வேணும் என்று சொல்றது! :angry: ...எதை சொன்னாலும் அனுபவம் பேசுது எண்ட குண்டை தூக்கி போடுறாங்க! :angry:

நாங்க கலியாணத்துக்கு பிறகு தலைக்கு "கெல்மெட்" போட்டுக்கொண்டு தான் நித்திரைக்கு போவம் :lol:

இப்ப தானெ அசிட், கத்தி, அரிவாள் என்று பாவிகிறார்கள், கேள்விப்படலையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க கலியாணத்துக்கு பிறகு தலைக்கு "கெல்மெட்" போட்டுக்கொண்டு தான் நித்திரைக்கு போவம் :lol:

என்னதம்பி புதிசாய் சொல்லுறீர்.உதுதானே இப்ப கன வீடுகளிலை நடக்குது. :P

  • தொடங்கியவர்

இப்ப தானெ அசிட், கத்தி, அரிவாள் என்று பாவிகிறார்கள், கேள்விப்படலையா?

எல்லாத்தையும் பாவிக்க ரை பண்ணுரீங்க போல என்னபாவம் செய்தாரோ mr மூக்கி இப்படி சித்திரவதை படுறாரே

:lol::D:D :P

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை..கண்ணால் பார்த்த அனுபவங்கள்

"Life is too short to learn from our own experience"..So better learn from other's experience :P

....எங்களுக்கு இப்படி செய்தால், தூங்கும் போது, மண்டையில் கல்லை தூக்கி போட்டிற மாட்டம்? :P :P

இந்த வம்பு தும்பு வேண்டாம் என்று தான் பேசாமல், நாம் உண்டு நம் படிப்பு உண்டு என்று இருக்கிறோம், மிகவும் நல்ல பிள்ளைகளாக! :D:D

நீங்கள் சில ஆண்களைப் போல சில பெண்களைப் போல தவறான உதாரணங்களையே கண்ணால் பார்த்துள்ளீர்கள் என்று நினைக்கின்றோம்.

காதலிக்கும் போது ஆணோ பெண்ணோ தனது பொசிட்டிவ் சைற்றைத்தான் காண்பிப்பார்கள் என்றும் நெகட்டிவ் சைற்றைக் காண்பிக்க மாட்டார்கள் என்பதும் பொதுவான அபிப்பிராயம். நீங்களும் அதையே ஆண்களுக்கு என்றாக்கிச் சொல்கிறீர்கள்.

நாம் விதிவிலக்குகளை உதாரணமாகக் கொள்வதில்லை. அவற்றை விதிவிலக்குகளாகவே கணித்து வைத்துள்ளோம்.

அண்மையில் ஒரு இளைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொடர்பு கொண்டு தன்னைக் காதலித்து பின் தொடர்புகளைத் துண்டித்த காதலிக்காக அவரின் தொடர்பை பெற்றுத்தர உதவிசெய்யச் சொல்லிக் கேட்டு அழுதார். கேட்கவே பாவமாக இருந்தது. அவரின் காதலி பெற்றோரின் கதையைக் கேட்டுக் கொண்டு இன்னொருவரை மணமுடிக்க உள்ளதாக தான் அறிந்ததாகவும் அவர் பகிரங்கமாகச் சொன்னார். எதேச்சையாக பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்ச்சியில் இது..

இப்படி எத்த்னையோ... தினமும் நிகழுது. ஒருவரைக் காதலிக்கிறது இன்னொருவரை மணம் முடிக்கிறது என்ன மிருகப் பிழைப்போ..!

இன்னோர் இடத்தில் சுமார் 25 வருடங்கள் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட பெண் ஊரில் இருந்து லண்டன் வந்து 5 ந்தே வருடங்களில் தனது கணவனிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும் எங்கிறாராம். இவர்களுக்கு மிகவும் வளர்ந்த பிள்ளைகள் வேறு. அவர் சொன்ன காரணம் கணவர் குடிக்கிறார் என்பது. ஆனால் இந்தக் கணவர் சுமார் 16 வருடங்களாக குடிப்பழக்கத்தோடுதான் வாழ்ந்து வந்துள்ளார். 16 வருடங்கள் சகித்துக் கொண்டவர் ஏன் தற்போது விவாகரத்துக் கேட்கிறார் என்று கணவர் கேட்கிறார். காரணம் குறித்த பெண்ணின் சகோதரர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதுடன் அவரை வேலைக்கும் அனுப்பி அவரின் வருமானனத்தையும் பெறுகின்றனர். அவரின் பிள்ளைகளைக் கூட அந்தப் பெண் நிராகரித்து விட்டுள்ளார். அவர்கள் வேறொரு நாட்டில் வாழ்கின்றனர்..!

இப்படியும் இருக்கு.. இன்னும் இருக்கும்... லண்டனில நம்மாக்கள் சிலர் பண்ணுற கூத்துகளுக்கு கடவுளை மன்றாடுவதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை. எங்க போகினம் எங்கட தமிழர்கள் என்பது.. திசை தெரியாக் காட்டில் விடப்பட்ட மந்தைகள் போல அவர்தம் வாழ்வு.. திசை மாறிப் போகிறது.

இப்படிச் சொன்னதற்காக எல்லாத் தமிழர்களும் என்றில்லை. அநேகர் மிகவும் அன்பாக குடும்ப வாழ்வில் தனித்துவங்களோடும் வாழ்கின்றனர். அதையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும்..! :lol:

  • தொடங்கியவர்

உண்மைகள் வருகின்றனவே :P

தொலைகாட்சி நிகழ்சியில் அழுத நபர் சஜீவன் என ஊர் குருவி சொல்லுது உண்மையா? :lol:

நீங்கள் சில ஆண்களைப் போல சில பெண்களைப் போல தவறான உதாரணங்களையே கண்ணால் பார்த்துள்ளீர்கள் என்று நினைக்கின்றோம்.

காதலிக்கும் போது ஆணோ பெண்ணோ தனது பொசிட்டிவ் சைற்றைத்தான் காண்பிப்பார்கள் என்றும் நெகட்டிவ் சைற்றைக் காண்பிக்க மாட்டார்கள் என்பதும் பொதுவான அபிப்பிராயம். நீங்களும் அதையே ஆண்களுக்கு என்றாக்கிச் சொல்கிறீர்கள்.

நாம் விதிவிலக்குகளை உதாரணமாகக் கொள்வதில்லை. அவற்றை விதிவிலக்குகளாகவே கணித்து வைத்துள்ளோம்.

அண்மையில் ஒரு இளைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொடர்பு கொண்டு தன்னைக் காதலித்து பின் தொடர்புகளைத் துண்டித்த காதலிக்காக அவரின் தொடர்பை பெற்றுத்தர உதவிசெய்யச் சொல்லிக் கேட்டு அழுதார். கேட்கவே பாவமாக இருந்தது. அவரின் காதலி பெற்றோரின் கதையைக் கேட்டுக் கொண்டு இன்னொருவரை மணமுடிக்க உள்ளதாக தான் அறிந்ததாகவும் அவர் பகிரங்கமாகச் சொன்னார். எதேச்சையாக பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்ச்சியில் இது..

இப்படி எத்த்னையோ... தினமும் நிகழுது. ஒருவரைக் காதலிக்கிறது இன்னொருவரை மணம் முடிக்கிறது என்ன மிருகப் பிழைப்போ..!

இன்னோர் இடத்தில் சுமார் 25 வருடங்கள் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட பெண் ஊரில் இருந்து லண்டன் வந்து 5 ந்தே வருடங்களில் தனது கணவனிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும் எங்கிறாராம். இவர்களுக்கு மிகவும் வளர்ந்த பிள்ளைகள் வேறு. அவர் சொன்ன காரணம் கணவர் குடிக்கிறார் என்பது. ஆனால் இந்தக் கணவர் சுமார் 16 வருடங்களாக குடிப்பழக்கத்தோடுதான் வாழ்ந்து வந்துள்ளார். 16 வருடங்கள் சகித்துக் கொண்டவர் ஏன் தற்போது விவாகரத்துக் கேட்கிறார் என்று கணவர் கேட்கிறார். காரணம் குறித்த பெண்ணின் சகோதரர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதுடன் அவரை வேலைக்கும் அனுப்பி அவரின் வருமானனத்தையும் பெறுகின்றனர். அவரின் பிள்ளைகளைக் கூட அந்தப் பெண் நிராகரித்து விட்டுள்ளார். அவர்கள் வேறொரு நாட்டில் வாழ்கின்றனர்..!

இப்படியும் இருக்கு.. இன்னும் இருக்கும்... லண்டனில நம்மாக்கள் சிலர் பண்ணுற கூத்துகளுக்கு கடவுளை மன்றாடுவதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை. எங்க போகினம் எங்கட தமிழர்கள் என்பது.. திசை தெரியாக் காட்டில் விடப்பட்ட மந்தைகள் போல அவர்தம் வாழ்வு.. திசை மாறிப் போகிறது.

இப்படிச் சொன்னதற்காக எல்லாத் தமிழர்களும் என்றில்லை. அநேகர் மிகவும் அன்பாக குடும்ப வாழ்வில் தனித்துவங்களோடும் வாழ்கின்றனர். அதையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும்..! :D

நாங்கள் இங்கெ விதி விலக்கை பற்றி கூறவில்லை..உங்கள் கருத்தில் பெண்ணடிமைத் தனம், எவ்வளவு புரையோடிப் போயிருகிறது என்று பாருங்கள்.

.பெண் என்பவள் எப்பவும் ஆணுக்கு அடிமையாக இருக்கவேன்டும் என்றெ நிங்கள் கருதுகிறிர்கள்..நீங்கள் சொன்ன உதாரணத்தை எடுத்தால்...16 வருடம் சகித்த பெண்ணால், ஏன் இன்னும் சகித்து கொள்ள முடியாது என்று கேட்கிறிர்கள்? உண்மையாலுமே உங்கள் தலையில் கல்லை தூக்கி போடத் தான் எண்ணத் தோன்றுகிறது :angry: :angry: :angry: ....

எங்களுடைய பார்வையில் அந்த பெண் இவ்வளவு காலம், குடிகார கணவனை சகித்து கொண்டு வாழ்ந்திருகிறாரே!..அவரை பாரட்டத்தான் வேன்டும்...அந்த பெணுக்கு தன் சொந்த காலில் நிற்க்க தகுதியிருந்தும் என் அவரை இவ்வளாவு காலமும் சகித்து கொண்டிருந்தார் என்பது தான் என் கேள்வி...அவர் இப்போ செய்திருப்பது சரியான முடிவே..பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்..பின் எதற்க்காக, பிடிக்காத குடிகாரனுடன் குடும்பம் நடத்த வேண்டும்?...

உங்களை பொறுத்த வரையில்..ஆண்கள் என்ன வேண்டுமென்டாலும், ஆட்டம் போடலாம், குடிக்கலாம்,விபச்சாரியிடம் போகலாம்..ஆனால் பெண்கள் மட்டும் எல்லாம் சகித்து கொண்டிருக்க வேண்டும்?..

ஏன் அந்த குடிகார கணவனுக்கு மனைவி பிள்ளைகள் மேல் அவ்வளாவு பாசம் இருந்தால் குடியை விடலாம் தானே? அந்த பெண் after all குடியை தானே விட சொல்லி கேட்டா..உயிரை விட சொல்லி கேட்கவில்லையே? ஆக, உங்களுக்கு எதையும் விட்டு கொடுக்க முடியாது..ஆனால்..நாங்கள் மட்டும் நீங்கள் போடும் கூத்தை எல்லாம்..வாழ்க்கை முழுக்க சகித்து கொண்டு வாழ வேணும்? என்னையா நியாயம் இது? உங்களுக்கே அபத்தமாக தெரியவில்லையா?...

இங்கேயே..இந்த பெண் ஒரு குடிகாரியாக இருந்தால், அந்த கணவர் ஒரு நாள், அல்லது ஒரு வாரம் பொருத்திருந்திருப்பாரா?

...தயவு செய்து பெண்ணை அடிமை படுத்துவதில் காட்டும் முனைப்பை உங்கள், படிப்போ, தொழில் துறையிலோ காட்டினீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையாவது முன்னேற்றம் அடையும்! :angry: :angry: :lol:

Edited by mooki

நீங்கள் சில ஆண்களைப் போல சில பெண்களைப் போல தவறான உதாரணங்களையே கண்ணால் பார்த்துள்ளீர்கள் என்று நினைக்கின்றோம்.

காதலிக்கும் போது ஆணோ பெண்ணோ தனது பொசிட்டிவ் சைற்றைத்தான் காண்பிப்பார்கள் என்றும் நெகட்டிவ் சைற்றைக் காண்பிக்க மாட்டார்கள் என்பதும் பொதுவான அபிப்பிராயம். நீங்களும் அதையே ஆண்களுக்கு என்றாக்கிச் சொல்கிறீர்கள்.

நாம் விதிவிலக்குகளை உதாரணமாகக் கொள்வதில்லை. அவற்றை விதிவிலக்குகளாகவே கணித்து வைத்துள்ளோம்.

அண்மையில் ஒரு இளைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொடர்பு கொண்டு தன்னைக் காதலித்து பின் தொடர்புகளைத் துண்டித்த காதலிக்காக அவரின் தொடர்பை பெற்றுத்தர உதவிசெய்யச் சொல்லிக் கேட்டு அழுதார். கேட்கவே பாவமாக இருந்தது. அவரின் காதலி பெற்றோரின் கதையைக் கேட்டுக் கொண்டு இன்னொருவரை மணமுடிக்க உள்ளதாக தான் அறிந்ததாகவும் அவர் பகிரங்கமாகச் சொன்னார். எதேச்சையாக பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்ச்சியில் இது..இப்படி எத்த்னையோ... தினமும் நிகழுது. ஒருவரைக் காதலிக்கிறது இன்னொருவரை மணம் முடிக்கிறது என்ன மிருகப் பிழைப்போ..!

இன்னோர் இடத்தில் சுமார் 25 வருடங்கள் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட பெண் ஊரில் இருந்து லண்டன் வந்து 5 ந்தே வருடங்களில் தனது கணவனிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும் எங்கிறாராம். இவர்களுக்கு மிகவும் வளர்ந்த பிள்ளைகள் வேறு. அவர் சொன்ன காரணம் கணவர் குடிக்கிறார் என்பது. ஆனால் இந்தக் கணவர் சுமார் 16 வருடங்களாக குடிப்பழக்கத்தோடுதான் வாழ்ந்து வந்துள்ளார். 16 வருடங்கள் சகித்துக் கொண்டவர் ஏன் தற்போது விவாகரத்துக் கேட்கிறார் என்று கணவர் கேட்கிறார். காரணம் குறித்த பெண்ணின் சகோதரர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதுடன் அவரை வேலைக்கும் அனுப்பி அவரின் வருமானனத்தையும் பெறுகின்றனர். அவரின் பிள்ளைகளைக் கூட அந்தப் பெண் நிராகரித்து விட்டுள்ளார். அவர்கள் வேறொரு நாட்டில் வாழ்கின்றனர்..!

இப்படியும் இருக்கு.. இன்னும் இருக்கும்... லண்டனில நம்மாக்கள் சிலர் பண்ணுற கூத்துகளுக்கு கடவுளை மன்றாடுவதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை. எங்க போகினம் எங்கட தமிழர்கள் என்பது.. திசை தெரியாக் காட்டில் விடப்பட்ட மந்தைகள் போல அவர்தம் வாழ்வு.. திசை மாறிப் போகிறது.

இப்படிச் சொன்னதற்காக எல்லாத் தமிழர்களும் என்றில்லை. அநேகர் மிகவும் அன்பாக குடும்ப வாழ்வில் தனித்துவங்களோடும் வாழ்கின்றனர். அதையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும்..! :D

ஆகா, யாரோ ஒருத்தர் TVஇல் எடுத்து புலம்பினாராம்..இங்கெ அவருக்கு நியாயம் கேட்டு ஒருத்தர்... :lol:

நீங்கள் (ஆண்கள்) எத்தனை பெண்களின் வாழ்க்கயை சீரழிதிருபீர்கள்?? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.. :angry:

எத்தனை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு..பெண் கற்பழிக்கபட்டாள், மானபங்க படுத்தபட்டாள் என்று பழியையும் அவள் மேலே சுமத்தி விடுகிறிர்கள்...காதலிகிறோம் என்ற போர்வையில் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சூரையாடியிருப்பீர்கள்?.... :lol:

தொன்று தொட்டு காலமாக நீங்கள் இதை தானே செய்து வருகிறிர்கள்?..ஆரம்பத்தில் பெண்ணின் கல்விக்கு தடை போட்டீர்கள், வாக்குரிமையை பறித்தீர்கள், உடன் கட்டை ஏற்றினீர்கள், வாயாடி பெண்களை "Taming of the Shrew" என்று சொல்லி சித்திரவதை செய்தீர்கள்..இப்படி எத்தனை கொடுமைகள் ஐயா பெண்ணுக்கு நீங்கள் செய்தீர்கள்? :o

பெண்களை கொடுமை படுத்துவதில் தான் நீங்கள் எல்லோரும் இன, மத, வயது வேறுபாடின்றி ஒன்று பட்டு நிற்கிறீர்கள்?? :angry:

Edited by mooki

  • தொடங்கியவர்

ஆகா நல்ல போட்டி நான் நடுவராய் இருக்கட்டுமா ?????

எல்லாத்தையும் பாவிக்க ரை பண்ணுரீங்க போல என்னபாவம் செய்தாரோ mr மூக்கி இப்படி சித்திரவதை படுறாரே

:D:lol::lol: :P

ஆமாம்..எல்லாம் ஈழவன் யாழ் களத்தில் கொடுத்த ஐடியா என்று தான் சொல்லுவேன்( police case ஆகிவிட்டால்)..நீங்க தானே 'அண்ணனை கொன்ற தங்கையின்' செய்தியை இங்கே போட்டது? :P :P

எதுக்கும் அந்த Mr.மூக்கியை??? ஒரு பிஸ்டலுடன் தான் இருக்க சொல்லவேன்டும்... :P

எல்லாத்தையும் பாவிக்க ரை பண்ணுரீங்க போல என்னபாவம் செய்தாரோ mr மூக்கி இப்படி சித்திரவதை படுறாரே

:o:o:o :P

ஆகா, ஈழவன், நல்ல் ஐடியா...அது ஏன் கலியாணம் ஆனவுடன் எங்கள் பெயரை போடமல், கணவரின் பெயரை போட வேண்டும்? :lol:

ஈழவன் சொன்ன மாதிரி Mr.மூக்கி என்று, அதாவது, காதலி ஏமாத்தி விட்டா என்று சொல்லி கண்ணீர் விட்டு கதறும் ஆண்கள், தங்கள் மனைவி பெயரை தங்கள் பயருக்கு பதிலாக போட முன்வருவார்களா, உதாரணதிற்க்கு நெடுக்க்ஸின் மனைவி பெயர் முனியம்மா என்றால், நெடுக்ஸ், Mr.முனியம்மா என்று போட முன்வருவாரா? :lol: :P

அப்புறம், பெண்கள் திருமணம் செய்தால் Miss(செல்வி) யிலிருந்து Mrs ஆகிவிடும்..ஆனால் ஆண்கள் மட்டும் எப்பவுமே மன்மத குஞ்சுகள் என்ற நினைப்பில் Mr என்றே போடுகிறார்கள்..அவர்களும் ஏன் தங்கள், திருமணத்திற்க்கு பிறகு தங்கள் Title ஐ மாத்தகூடாது... :D

நாங்கள் இப்போ ஒரு மாதிரி சண்டை பிடித்து Ms எண்று ஆகிவிட்டோம், Miss & Mrs பொதுவாக Ms அக்கிவிட்டோம், ஆனால் தமிழில் இன்னும் அது மாறவில்லை என்று நினைகிறென்..செல்வி, திருமதி என்று தான் இன்னும் பாவிகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கெ விதி விலக்கை பற்றி கூறவில்லை..உங்கள் கருத்தில் பெண்ணடிமைத் தனம், எவ்வளவு புரையோடிப் போயிருகிறது என்று பாருங்கள்.

.பெண் என்பவள் எப்பவும் ஆணுக்கு அடிமையாக இருக்கவேன்டும் என்றெ நிங்கள் கருதுகிறிர்கள்..நீங்கள் சொன்ன உதாரணத்தை எடுத்தால்...16 வருடம் சகித்த பெண்ணால், ஏன் இன்னும் சகித்து கொள்ள முடியாது என்று கேட்கிறிர்கள்? உண்மையாலுமே உங்கள் தலையில் கல்லை தூக்கி போடத் தான் எண்ணத் தோன்றுகிறது :angry: :angry: :angry: ....

16 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்க வேண்டிய தீர்மானத்தை எடுக்கப் பலமில்லாத நிலையில் அந்த ஆணில் தங்கி இருந்துவிட்டு 16 ஆண்டுகளின் பின்னாடி தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் விலகிப் போகின்றார் அந்தப் பெண். 16 ஆண்டுகள் கூடி வாழ்ந்த பிள்ளைகளை விட்டு கணவனை விட்டு இப்போ அவர் தனது சகோதரங்களுக்காக வாழ விளைந்துள்ளார். தனக்காகக் கூட இல்லை. ஏன் அவர் பிள்ளைகளோடு வாழப் போயிருக்கக் கூடாது...??! தன்னை விட்டாலும் பறுவாயில்லை பிள்ளைகளை ஒதுக்க என்ன தேவை வந்தது என்பதே அந்தக் கணவரின் வினா..?! அவர் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லவே இல்லை. பிரிந்து போக நினைத்த போதே தான் அதற்கு அனுமதித்து விட்டதாகச் சொன்னார். கணவரின் விசா உரிமையை வைத்துத்தான் அந்தப் பெண் விசாவும் பெற்றுள்ளார். ஆக ஒரு ஆணை வைத்து பிழைப்பு நடத்தும் மட்டும் நடத்திவிட்டு கழற்ற வேண்டிய நேரத்தில் கழற்றலாம். அது குற்றமே அல்ல. அந்தக் கணவர் திருமணம் செய்ததன் பின்னரே குடிக்கவும் தொடங்கியுள்ளார். ஏன் அந்தப் பெண் அந்த ஆண் குடிக்கிறார் அதற்கு என்ன காரணம்.. தான் அவருக்கு முழுமையான அன்பை வழங்கினேனா.. வழி காட்டுதல் வழங்கினேனா அல்லது இன்று போல் எப்போதுமே எனது சுயநலமே பெரிதென்று வாழ்ந்திருந்தேனா என்று அந்தப் பெண் சிந்திக்கவே இல்லை என்பதையே சுயநலத்துக்காக பிள்ளைகளைக் கூட பிரிய முனைந்த அந்தச் சுயநலப் பெண்ணின் செயற்பாடு காட்டுகிறது. அவரின் பக்கம் நீதி இருக்கலாம் அல்லது அதர்மம் இருக்கலாம்..! இரண்டையுன் கடந்து மனிதம் இல்லவே இல்லை என்பதையே அந்தப் பெண்ணின் சுத்த சுயநலச் செயற்பாடு காட்டுகிறது. 16% ஆண்டுகள் அந்தப் பெண் சகித்துக் கொண்டார் என்பதிலும் 25 ஆண்டுகள் அந்தப் பெண்ணுக்கும் சாப்பாடு போட்டது அந்தக் கணவன் தானே..! 25 வருடங்கள் ஒரு நாய்க்கு சாப்பாடு போட்டு வளர்த்திருந்தால் கூட அது காலடியில் வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருக்கும்..!

எங்களுடைய பார்வையில் அந்த பெண் இவ்வளவு காலம், குடிகார கணவனை சகித்து கொண்டு வாழ்ந்திருகிறாரே!..அவரை பாரட்டத்தான் வேன்டும்...அந்த பெணுக்கு தன் சொந்த காலில் நிற்க்க தகுதியிருந்தும் என் அவரை இவ்வளாவு காலமும் சகித்து கொண்டிருந்தார் என்பது தான் என் கேள்வி...அவர் இப்போ செய்திருப்பது சரியான முடிவே..பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்..பின் எதற்க்காக, பிடிக்காத குடிகாரனுடன் குடும்பம் நடத்த வேண்டும்?...

உங்களை பொறுத்த வரையில்..ஆண்கள் என்ன வேண்டுமென்டாலும், ஆட்டம் போடலாம், குடிக்கலாம்,விபச்சாரியிடம் போகலாம்..ஆனால் பெண்கள் மட்டும் எல்லாம் சகித்து கொண்டிருக்க வேண்டும்?..

ஆண்கள் மட்டுமா குடிக்கிறார்கள்..பெண்கள் போடாத ஆட்டமா.. நீங்கள் விழிக்கும் விபச்சாரிகளே பெண்கள் தான். ஆண்கள் ஆட்டம் போட பெண்கள் தான் காரணம். விபச்சாரிப் பெண்களை ஒழிப்பதன் மூலம் ஆண்கள் விபச்சாரியிடம் போகின்றனர் என்ற நிலை மாறும். வீட்டில் அன்போடு பண்போடு நடந்து கொண்டால் எந்த மனிதனும் குடிக்கவோ தவறான பாதையில் போகவே முனைய மாட்டான். ஆக ஆண்கள் அதிக நம்பிக்கை வைக்கும் அவர்களின் துணைகள் அன்பை பண்பைக் காட்டுவதற்குப் பதில் நான் பெண் நீ ஆண் என்ற கோரத்தனமான சிந்தனை வெளிப்பாட்டை மனதில் இருந்திக் கொண்டு வன்மைத்தனமான சிந்தனைகளோடு செயற்படின் எப்படி குடும்பத்தில் உள்ளவர்களின் மனநிலை அமைதியாக சந்தோசமாக இருக்கும். இன்று பெண்கள் குடிக்கின்றனர்.. சிகரட் புகைக்கின்றனர் டேற்றிங் என்று கண்டவனோடும் போகின்றனர்.. இன்னும் இன்னும் என்னென்னனோ செய்கின்றனர். அவர்கள் கூத்தடிக்கவில்லையா..??!

எமது நோக்கம் ஆண்கள் பெண்கள் கூத்தடிக்கின்றனர் என்று நிறுவுதல் அல்ல. ஏன் குடும்பங்கள் பிரிகின்றன. அதற்கான தவறுகள் காரணங்களை யார் யார் செய்கின்றனர். அவற்றைக் களைவதற்கான வழி என்ன..?! சகிப்புத்தன்மை எல்லையற்ற அன்புப் பரிமாற்றம் பண்பான அமைதியான நடத்தைகள் புரிந்துணர்தல் சேர்ந்து முடிவெடுத்தல் போன்ற பண்புகள் அருகி எதற்கும் ஆண்- பெண் போட்டி மனப்பான்மை வளர்க்கப்படுவதுவே இப்படியான செயல்கள் அதிகரிக்கக் காரணம். மனிதர்கள் மட்டுமல்ல உலகில் மற்றைய உயிரினங்களில் ஆணும் பெண்ணும் சொந்தக்காலில் தான் நிற்கின்றனர். அதற்காக அவை தங்கள் இணை சேர்வதை அல்லது சமூகவாழ்வை நிராகரிப்பதில்லை. பல பறவைகள் சோடி பிரியாமலே வாழும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. ஏன் மனிதர்கள் சிந்திக்கத் தெரிந்தும் வழிகாட்டல்கள் இருந்தும் வழி தவறிப் போகின்றனர். ஆண்- பெண் என்ற ஒருவரை ஒருவர் அதிகரம் செய்யும் அதிகார மனநிலை இருவரிடமும் பெருகி வருவதே அதற்குக் காரணம். இந்த நிலை தொடர்ந்தால் மனிதனின் சமூக வாழ்வியல் கட்டமைப்பு பலமான தாக்கத்தைச் சந்திப்பதோடு சமூகக் குற்றவாளிகளின் பெருக்கம் தடுக்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும். பிரித்தானியாவில் சிறைகளில் இடமில்லாத அளவுக்கு குற்றவாளிகள் வருடம் தோறும் அதிகரிக்கின்றனர்.சுமார் 14 மில்லியன் குற்றவாளிகள் சிறைகளில் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்களும் உள்ளனர். இன்னும் சிறு குற்றம் செய்த பல்லாயிரக்கணக்கான குற்றவாளிகள் சிறைகளில் இடமில்லாததால் வெளியில் நடமாடுகின்றனர். ஏன் மனிதரில் இந்த நிலை..???! மிருகங்களை விட கீழ்நிலையாக இல்லையா..?! காரணம் என்ன.. அன்பற்ற குடும்பச் சூழல். மனதில் உள்ளதை பகிரவும் தீர்வுகளைத் தேடவும் வாய்ப்பளிக்காத துணைகள். சுயநலப்ப்போக்கோடு செல்லும் ஆண் பெண் வாழ்வியல்..பொருளாதாரக் காரணிகள்..போதைப் பொருள் பெருக்கங்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படை எது. குடும்பம் என்ற அலகில் ஏற்பட்டுள்ள பலவீனமான நிலை அதற்குக் காரணம் ஆண்- பெண் என்ற அதிகாரப் போட்டி மனநிலை. சகிப்புத்தன்மையற்ற அதிகாரப்போட்டியே..!

ஏன் அந்த குடிகார கணவனுக்கு மனைவி பிள்ளைகள் மேல் அவ்வளாவு பாசம் இருந்தால் குடியை விடலாம் தானே? அந்த பெண் after all குடியை தானே விட சொல்லி கேட்டா..உயிரை விட சொல்லி கேட்கவில்லையே? ஆக, உங்களுக்கு எதையும் விட்டு கொடுக்க முடியாது..ஆனால்..நாங்கள் மட்டும் நீங்கள் போடும் கூத்தை எல்லாம்..வாழ்க்கை முழுக்க சகித்து கொண்டு வாழ வேணும்? என்னையா நியாயம் இது? உங்களுக்கே அபத்தமாக தெரியவில்லையா?...

இங்கேயே..இந்த பெண் ஒரு குடிகாரியாக இருந்தால், அந்த கணவர் ஒரு நாள், அல்லது ஒரு வாரம் பொருத்திருந்திருப்பாரா?

...தயவு செய்து பெண்ணை அடிமை படுத்துவதில் காட்டும் முனைப்பை உங்கள், படிப்போ, தொழில் துறையிலோ காட்டினீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையாவது முன்னேற்றம் அடையும்! :angry: :angry: :D

பெண்கள் மட்டுமல்ல உலகில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவகையில் ஒரு மனிதன் இன்னொருவனால் அடிமைப்படுத்தப்படுகின்றான். அதைப் பெண்களும் செய்கின்றனர் ஆண்களும் செய்கின்றனர். பெண்கள் ஒன்றும் ஆண்களுக்கு சுதந்திரமான உலகைக் காட்டிவிட்டு தங்களை தியாகிகள் ஆக்கிக் கொண்டிருக்கவில்லை. அவர்களும் ஆண்களுக்கு மேலதிகமாக சலுகைகளையும் வாய்ப்புக்களையும் பாவித்து ஆண்களை கொடுமைப்படுத்துகின்றனர் அடிமைப்படுத்துகின்றனர். சுயநலத் தேவைகளுக்காக பெண்களால் அடிமைப்படுத்தப்படும் ஆண்கள் பலர். அதேபோல் இனங்களாக ஆணும் பெண்ணும் வேறோர் இனத்தவரால் அடிமைப்படுத்தப்படுகின்றனர். இப்படி அடிமை வாழ்வு பல வழிகளில் திணிக்கப்படுகிறது. ஆக பெண்கள் மட்டுமே அடிமைப்படுத்தப் படுவதாக பன்னெடுங்காலமாக புலம்பிவருவதும் அனுதாபம் தேடுவதும் எனி அவசியமில்லை. பெண்கள் தங்களுக்காக தாங்களே போராட வேண்டும். ஆண்கள் தங்களுக்காக தாங்கள் போராடிக் கொள்வார்கள். ஆண்களின் அடிமை விலங்கு தகர்க்கப்படும் போது பெண்களும் தகர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் ஆண்- பெண் குடும்ப நிலையில் இந்த அடக்குமுறை விடுதலை என்பது ஒரு தலைப்படசமானவை அல்ல. இருவருக்கும் பொதுவானது. பெண்கள் தங்களின் சுதந்திரம் பற்றிப் பேசும் போது ஆண்களின் சுதந்திரம் பற்றிச் சிந்திக்க வேண்டும். அந்தச் சுதந்திரம் குடும்ப எல்லைகளை நலங்களை பாதிக்காத வகையில் எல்லையிடப்படுகிறதா என்று ஆணும் பெண்ணும் சிந்திக்க வேண்டும். குடும்பம் என்ற நிலையில் நின்று கொண்டு சுயநலத் தேவைகளுக்கு முதன்மை அளிப்பதை ஆணும் பெண்ணும் தவிர்க்க வேண்டும். சுதந்திரம் ஆண் பெண் இடைவெளியைக் கூட்ட அனுமதிக்கக் கூடாது. மாறாக அது நெருக்கத்தைப் புரிந்துணர்வின் அளவை சேர்ந்தியங்கும் தன்மையை மனிதத்தை வளர்ப்பதை அதிகரிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே அமைதியான அன்பான ஒற்றுமையான குடும்பங்களையும் மனித சமூகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அதனால் வளரும் நீடித்த ஆயுளையும் விளைவாக்க முடியும்..! இன்றேல் சீரழிவுதான். ஆண்- பெண் என்ற அதிகாரப் போட்டி மனப்பான்மைக்கு சுதந்திரம் என்ற ரீதியில் மகுடம் சூடுவதை நிறுத்துங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, ஈழவன், நல்ல் ஐடியா...அது ஏன் கலியாணம் ஆனவுடன் எங்கள் பெயரை போடமல், கணவரின் பெயரை போட வேண்டும்? :lol:

ஈழவன் சொன்ன மாதிரி Mr.மூக்கி என்று, அதாவது, காதலி ஏமாத்தி விட்டா என்று சொல்லி கண்ணீர் விட்டு கதறும் ஆண்கள், தங்கள் மனைவி பெயரை தங்கள் பயருக்கு பதிலாக போட முன்வருவார்களா, உதாரணதிற்க்கு நெடுக்க்ஸின் மனைவி பெயர் முனியம்மா என்றால், நெடுக்ஸ், Mr.முனியம்மா என்று போட முன்வருவாரா? :o :P

அப்புறம், பெண்கள் திருமணம் செய்தால் Miss(செல்வி) யிலிருந்து Mrs ஆகிவிடும்..ஆனால் ஆண்கள் மட்டும் எப்பவுமே மன்மத குஞ்சுகள் என்ற நினைப்பில் Mr என்றே போடுகிறார்கள்..அவர்களும் ஏன் தங்கள், திருமணத்திற்க்கு பிறகு தங்கள் Title ஐ மாத்தகூடாது... :D

நாங்கள் இப்போ ஒரு மாதிரி சண்டை பிடித்து Ms எண்று ஆகிவிட்டோம், Miss & Mrs பொதுவாக Ms அக்கிவிட்டோம், ஆனால் தமிழில் இன்னும் அது மாறவில்லை என்று நினைகிறென்..செல்வி, திருமதி என்று தான் இன்னும் பாவிகிறார்கள்

இந்த செய்தி ஒன்றே போதும் பெண்களின் அர்ப்பத்தனமான சிந்தனைப் போக்கையும் போட்டி மற்றும் அதிகார மனப்பான்மையின் சுயநலத்தின் விருத்திப் போக்கைக் காட்டுவதற்கு.

ஆண்கள் Mas. Mr. என்று போட்டுக் கொள்கிறார்கள். பெண்கள் Miss. Mrs/Ms என்று போட்டுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் யார் போடச் சொல்லிக் கேட்டது. போடாவிட்டால் நீங்கள் ஆணோ பெண்ணோ என்ற நிலை இல்லாமல் போயிடுமா..?! ஒரு திருமணமான பெண் தன்னை Mrs என்று அடையாளப்படுத்துவதால் எதை இழக்கிறாள்..???! Ms என்று போடுவதால் எதை பெறுகிறாள். சுத்த முட்டாள் தனமான நடைமுறைகளுக்காக போட்டி போடும் நிலை. இதுதான் இப்போ உலகில் பெண்ணிலைவாதம் என்ற போர்வைக்குள் நடக்கும் விவாதத்தின் பெறுபேறுகள்.

தினமும் பல ஆயிரம் கருக்கலைப்புக்கள் சத்தமில்லாமல் நடக்கின்றன.. தினமும் புகைப்பிடிப்பதன் மூலம் பல ஆயிரம் குழந்தைகள் தாயின் வயிற்றிலேயே நஞ்சூட்டப்படுகின்றன .. தினமும் குடிபதன் மூலம் பல குழந்தைகள் தாயின் வயிற்றிலும் குடும்பத்திலும் பிரச்சனைகளில் வீழ்கின்றன. கணவன்மார் கவனிப்பாரற்று விடப்படுகின்றனர். போதாக்குறைக்கு ஆடம்பர வாழ்வின் பின் இழுபடுவதால் பல பெண்கள் குடும்பச் சூழலைப் புரிந்துகொள்ளவே முடியாமல் சுயநலத்தோடு குடும்பங்களைப் பிரிகின்றனர். இதனால் பாரமரிப்பற்ற குடும்பங்களும் குற்றவாளிகளும் உருவாகின்றனர். அரசுகளுக்கு தேவையற்ற செலவீனங்கள் அதிகரிக்கின்றன. ஆண்கள் பெண்களால் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர் குறிப்பாக வீதி விபச்சாரமும் போதைப் பொருட்பாவனையும். ஆபாசமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய வகையில் நடத்தைகளில் பெண்களின் அதீத ஈடுபாடு குறிப்பாக உடை அலங்காரங்கள். இவற்றை எல்லாம் சுதந்திரம் என்ற எல்லைக்குள் பெண்ணிலைவாதம் அடக்கி வைத்துள்ளது. ஆக பெண்கள் கொடுமைக்காரிகளாக மனிதமே அற்றவர்களாக உருவாக வேண்டும். அதுதான் பெண்களின் விடுதலை எஙகிறதா பெண்ணிலைவாதம்.

பெண்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உரிமைகளை சமனாக மதிக்கக் கோரலாம். மதிக்கக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு போது பெண் ஆணுக்கு நிகர்த்தவளாக முடியாது. அதுபோல் ஆண் பெண்ணுக்கு நிகர்த்தவனாக முடியாது. பெண்களுக்கு சில பலவீனங்கள் இயலானது. அதை வெறும் வாதங்களால் மாற்றியமைக்க முடியாது. பெண்கள் தங்கள் பலவீனங்களை மறைக்க முடியாது. ஆனால் ஆண்களிடம் உரிமைப் பாதுகாப்பளி என்று அந்தப் பலவீனங்களை ஆண்கள் தங்களின் பலத்தின் மூலம் ஆளுமை செய்வதை தடுக்க முயலலாம். மற்றும்படி பெண்கள் தங்கள் பலவீனங்களை 100% எந்த வாதத்தாலும் அகற்ற முடியாது. எப்பவும் ஆண்களின் அனுதாபச் சிந்தனை பெண்களின் பலவீனங்கள் மறைக்கப்பட அவசியம். பெண்கள் கராட்டி பழகலாம்..எதுவும் பழகலாம். ஆனால் உடலளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அது பெண்களை பலவீனமாக்கியும் உள்ளது. அதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் அந்தப் பலவீனம் அவர்களின் ஆளுமையை அடிப்படை மனித உரிமைகளை அவர்கள் பெறுவதில் இருந்து அவர்களுக்கு தடையாக அமைய முடியாது. அதேபோல் பெண்கள் 100% உரிமை பெற வேண்டின் ஆண்களின் அனுதாபம் தேவை. இன்றேல் அவர்களின் பலவீனமே ஆண்களால் அவர்கள் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்காது. ஆக ஆண் - பெண் சமூகச் சமத்துவம் என்பது ஆண் பெண் புரிந்துணர்வின் அன்பின்பால் பட்டதே அன்றி பெண் நான் தனித்தியங்குவதன் மூலம் அது கிடைத்திடும் என்று கனவு கண்டால் அது அழிவையோ பாதிப்பையோதான் தேடித்தரும்.

கணவனின் தயவில் இருந்து சகோதரர்களின் தயவுக்குப் போவதை சுதந்திரம் என்று கருதும் நிலையே பெண்களுக்கு இன்று. ஆக தயவு என்பது... பெண்களுக்கு அவசியம்..! உணர்வார்களாக..!!! :lol:

  • தொடங்கியவர்

அப்படி போடுங்க அரிவாளை தற்போது சிறப்பாக பெண்ணடிமை வாதம் பற்றிய மூக்கி அவர்களின் குற்றசட்டுக்கு நெடுகாலபோவான் தன் வாத திரமையை காட்டியுள்ளார் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்துகின்றனர் எனவும் அவர் பக்க நியாயங்களை வழங்க எதிர் தரப்புவாதி மூக்கியை மேடைக்கு அழைகின்றேன்.

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, யாரோ ஒருத்தர் TVஇல் எடுத்து புலம்பினாராம்..இங்கெ அவருக்கு நியாயம் கேட்டு ஒருத்தர்... :D

நீங்கள் (ஆண்கள்) எத்தனை பெண்களின் வாழ்க்கயை சீரழிதிருபீர்கள்?? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.. :angry:

எத்தனை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு..பெண் கற்பழிக்கபட்டாள், மானபங்க படுத்தபட்டாள் என்று பழியையும் அவள் மேலே சுமத்தி விடுகிறிர்கள்...காதலிகிறோம் என்ற போர்வையில் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சூரையாடியிருப்பீர்கள்?

(பெண்கள் எல்லாம் சுயபுத்தி உள்ளவர்கள். அவர்களை ஏதோ ஏமாளிகள் போலவும் ஆண்கள் அவர்களை ஏமாற்றுபவர்கள் போலவும் நீங்கள் சொல்கிறீர்கள். உண்மை அதுவல்ல. பெண்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப ஆண்களைப் பாவிக்கின்றார்கள் என்பதே உண்மை. அதற்கு ஏற்றாப் போல் ஆண்களும் பெண்களைப் பாவிக்கின்றனர்.

எங்கள் மனச்சாட்சிப் படி நாம் மனிதர்கள் எவருக்குமே தீங்கு செய்ய நினைக்கவில்லை. மனிதர்கள் எனும் போது பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் குழந்தைகள் வயோதிபர்கள் நோயாளிகள் ஊனமுற்றவர்கள் என்று எல்லோரும் அடங்குவர். ஆக நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. தர்க்கம் மட்டும் புரிந்திருக்கின்றோம்.. நியாயங்களைத் தேடல் செய்வதால்..! ஆனால் ஒன்று அம்மா என்ற அந்த உயர்நிலைப் படைப்பைத் தவிர பெண்கள் மீது முழு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவர்களும் இல்லை நாமும் இல்லை- நீங்கள் எம்மீது குற்றம்சாட்டியதால்..இது சொல்லப்பட்டுள்ளது.

தொன்று தொட்டு காலமாக நீங்கள் இதை தானே செய்து வருகிறிர்கள்?..ஆரம்பத்தில் பெண்ணின் கல்விக்கு தடை போட்டீர்கள், வாக்குரிமையை பறித்தீர்கள், உடன் கட்டை ஏற்றினீர்கள், வாயாடி பெண்களை "Taming of the Shrew" என்று சொல்லி சித்திரவதை செய்தீர்கள்..இப்படி எத்தனை கொடுமைகள் ஐயா பெண்ணுக்கு நீங்கள் செய்தீர்கள்?

பெண்களைக் கல்விக்கு போக ஏன் தடை போட்டார்கள்.. சமூகத்தில் பெண்களுக்கு இருந்த பலவீனமான பாதுகாப்புச் சூழல் கருதி. இன்று அந்த நிலையில்லை அவர்கள் படிக்கிறார்கள். பெண்களே தங்களைத் தாங்களே ஏன் பாதுகாக்க முனையவில்லை. குரங்குகளின் ஆண் குரங்கு தலைமை தாங்கினும் பெண்ணின் பாதுகாப்பை பெண் தான் உறுதிப்படுத்தும். அதற்காக அது ஆண் குரங்கோடு போய் சண்டை போடாது. நான் தான் கூட்டத்துக்கு தலைவி.. எப்பவும் ஆணான நீயா தலைவனாக இருக்கிறது. போ செத்து ஒழி. பார் என் சுதந்திரத்தை என்று வீராப்புப் பேசாது. அது ஆணின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் அதே நேரம் தனது மற்றும் குட்டிகளின் குலாமிம் (ஆண் உள்ளடங்க) பாதுகாப்புக்கு தன்னையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் மனிதப் பெண்கள் குகைக்காலம் தொடங்கி ஆண்களின் பாதுகாப்பிலேயே அதிகம் வாழ்ந்துள்ளனர். இன்று சமூகப்பாதுகாப்பு என்பது வலுவான நிலையில் உள்ளதால் பெண்கள் ஆண்களின் பாதுகாப்பை மறைமுகமாகப் பெற்றுக் கொள்வதோடு பெண்களே பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் நிலை உள்ளது. அதற்காக பெண்கள் பாதுகப்புத் தேடுகின்றனர் என்று ஆண்களோடு மோத முடியாது. மோதின் அழிவு தான் மிஞ்சும். உடன்கட்டை ஏறுதல் வாக்குரிமை என்பதெல்லாம் மனிதர்கள் அறிமுகப்படுத்தியவை. அவை இயற்கை தீர்மானித்ததல்ல. கால ஓட்டத்தோடு அவை சரிவர விளங்கப்பட்டு தவறுகள் திருத்தப்பட்டுள்ளன. பெண்களின் உரிமைகள் அவ்விடயங்களில் சரி வர வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இயற்கையின் தீர்மானமான சமூக வாழ்வையே இன்று பெண்கள் சீரழிக்கின்றனரே அதற்கு என்ன தண்டனை வழங்கலாம். கருவில் அழிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான சிசுக்களில் நிலைக்கு எவர் குரல் கொடுக்கிறீர்கள். அது பெண்ணின் உரிமை எங்கிறீர்கள். அப்போ ஏன் உடன் கட்டை ஏறுதலை மட்டும் கண்டிக்கிறீர்கள்..! இங்கும் உயிர்ப்பலிதான் அங்கே கருப்பையில் நிகழ்த்தப்படுவதும் உயிர்ப்பலிதான். கட்டுப்பாடற்ற பெண்களின் செயற்பாடுகளே கரு உருவாக்கத்துக்கும் கருக்கலைப்புக்கும் அதிகம் காரணம். பெண்கள் ஆண்களை ஏமாற்ற முனையும் போதே ஆண்களும் பெண்களை ஏமாற்ற முனைகின்றனர். ஆக பெண்கள் ஆண்களின் புரிந்துணர்வுக்கு இடமளிக்கும் போது ஆண்களும் புரிந்துணர இடமளிக்கின்றனர். இந்த நிலையில் ஆண் - பெண் அதிகார முன்னிலைப்படுத்தல் போட்டி இருப்பின்..அனைத்துமே நாசம்..!

பெண்களை கொடுமை படுத்துவதில் தான் நீங்கள் எல்லோரும் இன, மத, வயது வேறுபாடின்றி ஒன்று பட்டு நிற்கிறீர்கள்?? :angry:

பெண்கள் மட்டும் ஏதோ ஆண்களைக் கொடுமைப்படுத்தவில்லையா..?! உலகில் பெண்களால் தொல்லைகளை அழிவை நிம்மதியை இழந்த மனிதர்கள் எத்தனை எத்தனை. அவற்றையும் எண்ணிப்பாருங்கள். அதனால் தான் பெண்கள் இப்படி ஆகியுள்ளனரோ யார் அறிவார்.

முதலில் ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறென்..நாம் எப்பவுமே அன்புக்கு அடிமை.. அன்பால், யாரையும் கட்டி போடலாம்..ஆனால், அதிகாரத்தால், ஆணவத்தால் அடக்கும் போது தான் குடும்பம் என்ற கட்டமைப்பு ஆட்டம் காணுகிறது...

16 ஆண்டுகள் கூடி வாழ்ந்த பிள்ளைகளை விட்டு கணவனை விட்டு இப்போ அவர் தனது சகோதரங்களுக்காக வாழ விளைந்துள்ளார். தனக்காகக் கூட இல்லை. ஏன் அவர் பிள்ளைகளோடு வாழப் போயிருக்கக் கூடாது...??! தன்னை விட்டாலும் பறுவாயில்லை பிள்ளைகளை ஒதுக்க என்ன தேவை வந்தது என்பதே அந்தக் கணவரின் வினா..?! அவர் தான்
திரும்பவும் சொல்கிறென் அந்த பெண் செய்த்தது சரியானதே! அவர் 16 வருடம் பொறுமை காத்தது தன் பிள்ளைகளுக்கு தான் என நினைக்கிறென்..அந்த பெண்னை பார்த்து கேள்வி கேக்க அந்த கணவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? அந்த பாழைபோன குடியயை அவரால் தன் குடுபதிற்க்காக விட்டு கொடுக்க முடியாது, ஆனால் மனைவி மட்டும் தன் விருப்பு வெறுப்புகள் எல்லாத்தையும் விட வேண்டும்? பிறந்த நாள் முதல், சாகும் வரைக்கும் கூடி வாழும் கூட பிறந்த சகோதரங்களிற்க்காக, 16 வருடம் கூடி குடியுடன் வாழ்பவர்களை விடுவதில் தப்பில்லை என்று நினைகிறென்...

16% ஆண்டுகள் அந்தப் பெண் சகித்துக் கொண்டார் என்பதிலும் 25 ஆண்டுகள் அந்தப் பெண்ணுக்கும் சாப்பாடு போட்டது அந்தக் கணவன் தானே..! 25 வருடங்கள் ஒரு நாய்க்கு சாப்பாடு போட்டு வளர்த்திருந்தால் கூட அது காலடியில் வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருக்கும்..!

அப்புறம், நாய்க்கு சாப்பாடு போட்டிருந்தால் கூட நன்றியுடன் வாலையாட்டி கொண்டிருந்திருக்கும் என்று சொல்கிறீர்? அப்போ உமக்கு பெண்கள் என்ன நாய்க்கு சமமா? உம், தாய், அக்கா, தங்கை, மனைவி எல்லொரையும் என்ன நாய்க்கு ஈடாகவா பார்க்கிற்ர்? பேசாமல் ஒரு நாயை கட்டிகொண்டு குடும்பம் நடத்துமேன், அது கடைசி மட்டும் உமக்கு வாலை ஆட்டிகொண்டிருக்கும்?

ஒரு பெண் இல்லத்தரசியாக(housewife) இருந்தால், உங்களை நம்பி இருகிறாள் என்று அர்த்தமா? அதுவும் ஒரு தொழிலே! ஒரு கணவன் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை பர்த்து குழந்தைகளை கவனித்தால், அவரை குரிக்கும் சொல்லும் housewife தான். ஒரு Doctor, ஆசிரியர் மாதிரி அதுவும் தொழிஐ க்றிக்கும் சொல்லே. அப்படியிருக்கும் போது, அந்த பெண், இவரின் தேவைகளை, கவனித்து, இவரின் குழந்தைகளை, பெற்று, வளர்த்து, குடும்பத்தை இந்த 25 வருட காலமாக பார்த்தற்கு அந்த கணவர் என்ன சம்பளாம் கொடுத்தார்?..அந்த பெண் அதற்க்கு கணக்கு போட்டு கேட்டால், இவர் எவ்வளவு தொகை கொடுக்க வேன்டி வரும்?அப்புறம் சீதனம் என்ற பகல் கொள்ளை வேற அடித் திருப்பார்களே?உங்கள் பார்வையில் பெண் உங்கள் காலடியில் நாய் மாதிரி வாலை ஆட்டிகொண்டிருக்க வேணும்? அப்படி தானே?

காரணம் என்ன.. அன்பற்ற குடும்பச் சூழல். மனதில் உள்ளதை பகிரவும் தீர்வுகளைத் தேடவும் வாய்ப்பளிக்காத துணைகள். சுயநலப்ப்போக்கோடு செல்லும் ஆண் பெண் வாழ்வியல்..பொருளாதாரக் காரணிகள்..போதைப் பொருள் பெருக்கங்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படை எது. குடும்பம் என்ற அலகில் ஏற்பட்டுள்ள பலவீனமான நிலை அதற்குக் காரணம் ஆண்- பெண் என்ற அதிகாரப் போட்டி மனநிலை. சகிப்புத்தன்மையற்ற அதிகாரப்போட்டியே..!

னீங்கள் குடிக்க போவத்ற்க்கும் பெண் தான் காரணம்? என்ன சுயநலமான பேச்சு? அனேகமான ஆண்கள். திருமணம் செய்ய முதலே குட்டிக்கு அடிமை ஆகி விடுகிறீர்களே, அதுக்கு என்ன, யார் காரணம்..எல்லாத்தயும் பெண்னின் தலையில் போட்டு அவலை ஒரு Scapegoat ஆக்கி விட்டு நீங்கள் தப்பித்து கொள்கிறிர்கள்.

இங்கே நாங்கள் அதிகாரதுக்கு அடிபடவில்லை..என்களையும் சக மனிதர்களக மதித்து எங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள் என்று தான் கேட்கிறொம்..அந்த கணவ்ர், அந்த மனைவின், ஏற்று கொள்ளகூடிய நியாயமான உணர்வுக்கு மதிபளித்திருந்தால், அந்த குடும்பம் சிதைந்திருக்காது..நீங்கள் ஒன்றில் பெண்னை, அடிமையாக்கி காலடியில் போட்டு மிதிகிறிங்கள் ..இல்லாவிட்டால், தேவதைகள், கடவுள்களாக்கி எட்டா உயரத்தில் வைத்து பார்க்றீர்கள்...எப்போ சக மனுஷியாக பார்க்க போகிறிர்களோ தெரியாது. :D

Edited by mooki

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.