Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைநகரில் காணாமல் போயிருந்த மாணவி சடலமாக மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவியொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 காரைநகர் திக்கரையை சேர்ந்த சண்முகராஜா துவாரகா என்ற 16 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவியொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 காரைநகர் திக்கரையை சேர்ந்த சண்முகராஜா துவாரகா என்ற 16 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

   

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 நேற்று முன்தினம் இரவு சுமார் எட்டு மணியளவில் வீட்டில் இருந்து குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார். இதனையடுத்து அவரை தேடி அவரது பெற்றோர் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் உறவினர்கள் இணைந்து ஈடுபட்டிருந்த போதும் குறித்த மாணவியை கண்டுபிடித்திருக்க முடியவில்லை.

இந்நிலையிலேயே இன்று மாலை குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரமளவில் உள்ள வளவொன்றுக்குள் உள்ள கிணற்றுள் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வளவிற்குள் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக வந்த சிலரே கிணற்றினுள் சடலமிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இம்மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார். இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுள் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை சம்பவமா? என்பது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163559&category=TamilNews&language=tamil

article_1471239159-20.jpg

காரைநகரில், களபூமி, திக்கரை முருகமூர்த்தி ஆலயத்துக்கு அருகிலிலுள்ள கிணற்றிலிரந்து 15 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் சண்முகராஜக் குருக்கள் துவாரகா (வயது 15) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார்.

சனிக்கிழமை (13) இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், சம்பவ இடத்திற்கு சென்றதுடன் சிறுமியின் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.

http://www.tamilmirror.lk/179504

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி தற்கொலை : மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை  காரைநகர் திக்கரையைச் சேர்ந்த சண்முகராஜக் குருக்கள் துவாரகா எனும் பதினாறு வயது மாணவியொருவர் இரவு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் இருந்த காணியொன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

இந்நிலையில் குறித்த மாணவியின் சடலமானது மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

மாணவியின் மரணம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவிக்கையில்,

பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன்    அடிப்படையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. 

எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அதன் முழுமைத்தன்மைகளை ஆராய்ந்தறிந்து அதன் பின்னரே செய்தி அறிக்கையிடலை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/10299

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.