Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை மகாமேரு என நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணமே: கண்டி மல்வத்தை பீட தேரர் ரணிலிடம் தெரிவிப்பு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளை பெரிய மகாமேரு என நாம் நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணம் என்பதை நாம் இப்போது உணர்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றிற்கிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இவ்வாண்டிறுதிக்குள் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என்பதே எனது பேரவாவாகும் என கண்டி மல்வத்த பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறீ சுமங்கள தேரர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை கண்டி சிறீ தலதா மாளிகைக்கு அல்லி மலர்களை கொண்டு சென்று வழிபட்டார். ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருக்மன் சேனநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் உட்பட பலர் சென்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசி வழங்கிய பின்னர் மகாநாயக்க தேரர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

மகாநாயக்கர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இரு பிரதான கட்சிகளும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர், அதல பாதாளத்திற்குள் சென்றிருந்த பொருளாதார நிலை சற்று முன்னேற்றம் கண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே எப்படியேனும் அனைவரும் ஒன்றுபட்டு சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என அனைத்து இன மக்களும் ஏற்கும் வகையிலான தீர்வினை முன் வைப்போமானால் விடுதலைப் புலிகளும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும். நாட்டில் உறுதித்தன்மையை நிலைநாட்டிக் கொள்வதற்கு முதலாவதாக தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும்.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலும் நான் இதனை தெளிவுபடுத்திய போது அவர்களும் நம் நாட்டில் அனைவரும் ஒன்று பட்டு சுமூகமான தீர்வு ஒன்றினை முன்வைக்கும் பட்சத்திலேயே நாட்டில் உறுதித்தன்மை ஏற்படுவதுடன் சமாதானமும் நிலைக்கும் என்றும் தாங்களும் அதனையே வலியுறுத்துவதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தாங்கள் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

முதலாவதாக தீர்க்கப்பட வேண்டியது தேசியப் பிரச்சினையாகும். இரண்டாவதாக பொருளாதார அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளலாம்.

சர்வகட்சி மாநாட்டில் நமது கட்சியும் பங்குபற்றியது. சர்வ கட்சி மாநாட்டின் தலைவரான திஸ்ஸ விதாரனவினால் வெளியிடப்படவுள்ள ஆலோனைகளுக்கு எமது ஆலோனைகளையும் வழங்கவுள்ளோம்.

சமாதான பேச்சுவார்த்தைகள் காலம் தாழ்த்தாமல் தொடரப்பட வேண்டும். அது தொடரும் பட்சத்தில் போர் நிறுத்தத்திற்கும் வழியேற்படும் என்றார் அவர்.

ஆதாரம்: வீரகேசரி

http://www.eelampage.com/?cn=30569

யார் புஸ்வானம் என கொஞ்ச நாளில் தெரியும்

கருணாவினை இழந்தது அதன் பின்பு நடப்பவை எல்லாம் எதிர்பார்க்கப்பட்டதே...ஆனால் பெரிய நிலப்பரப்புகளினை பெரும் ஆட், ஆயுத செல்வாக்குடன் ஆக்கிரமிக்கமுடியும் என்பது உண்மையெனில்...அது அமெரிக்காவாக இருக்கட்டும் அல்லது இலங்கையாக இருக்கட்டும் பொதுவாக எவராலும் முடியும் ஆனால்....இங்க விளக்கப்படபோவது இலங்கைக்கு மட்டும் அல்ல அகில உலகத்துக்கும் ஒரு செய்தி.

நீங்கள் வரலாம் நாங்கள் போவம் பிறகு நீங்கள் தூங்க முடியாது. ஒண்டுக்குப்போவதெண்டாலும் உங்களுக்கு ஒண்டுக்குவராதமாதிரிதான் நாங்கள் உங்களை கவனிப்போம்.உங்களால் இவ்வளவு செய்யமுடியுமாயின் பெரும் களம்கள் கண்ட எம் தலைவரின் தளபதிகளால்...எப்படி எல்லாம் செய்ய முடியும். ஆனாலும் ஏதோ ஒரு நோக்கம் நிறைவடையும் வரை பொறுமை காக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமும் கடைப்பாடும். ஆகவே வெடிக்கப்போகும் இப்பெரும் இருதிப்போரில் கடைசித்தமிழன் உயிருடன் உள்ளவரை போராட்டம் தொடரும்...தமிழனாகவே வலியவந்து களம் கண்டேயாக வேண்டிய ஒரு கால் கட்டத்தில் நாம் அனைவரும் நிற்கின்றோம். நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ...ஆதரவு கொடுக்கவேண்டிய மனோநிலைக்கு வரவேண்டிய காலம் வந்துவிட்டது என்பது நிதர்சனமான உண்மை.

உந்த தேரர் மாருக்கு பொதுவாகவே விளக்கம் கொஞ்சம் குறைவு தான்.

தேரோக்களே...!

கிழக்கிலை உங்கடை ஆக்கள் திரியைக் கொழுத்திப் போட்டினம். அது இப்ப எரிஞ்சு(சீறி) கொண்டிருக்கு. அதை நீங்கள் புஸ்வானம் எண்டு நினைக்கிறீங்கள்.

அதுக்கு கனகாலம் இல்லை.திரி எரிஞ்சு முடிஞ்சா என்ன நடக்கும் தெரியுமோ? :D

திரி எரிஞ்சு முடிஞ்ச பிறகு நடக்கும் விசயத்தைப் பார்த்து புஸ்வாணம் எண்டு நினைச்சம் ஆனா அவங்கள் மகாபேரு என இருக்கிறாங்கள் என நீங்கள் கட்டாயம் சொல்லமாட்டீங்கள் ஆனா மனசுக்குள்ள நினைப்பீங்கள்.

Edited by மின்னல்

தமிழீழ விடுதலைப் புலிகளை பெரிய மகாமேரு என நாம் நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணம் என்பதை நாம் இப்போது உணர்கின்றோம்.

இது வரைக்கும் அவர்கள் சொல்வது சரி

  • கருத்துக்கள உறவுகள்

துறவி என்றாங்கள்..அப்புறம் மாளிகையில வாழ்க்கை...! ஏதோ இப்ப உலகத்தில சொல்லுக்கும் செயலுக்கும் உண்மைக்கும் இடையில தொடர்பில்லைத்தானே..!

வெயிட் மிஸ்டர் மொட்டை.. தலதா மாளிகை இன்னும் ஒருக்கா புட்டுக்கொண்டு போகேக்க தெரியும்...புஸ்வானமா..அல்லது புலிப் பதுங்கலா என்று..! :D:D

தமிழீழ விடுதலைப் புலிகளை பெரிய மகாமேரு என நாம் நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணம் என்பதை நாம் இப்போது உணர்கின்றோம்.

இது வரைக்கும் அவர்கள் சொல்வது சரி

தேரர்களே நீங்களாவது புத்திசாலிகள் என நினைத்தோம். நீங்களும் முட்டாள்கள் என்று நிரூபித்துவிட்டீர்கள். விரைவில் உங்கள் கருத்துக்களை திருத்திக்கொள்ளவேண்டிவரும

தமிழீழ விடுதலைப் புலிகளை பெரிய மகாமேரு என நாம் நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணம் என்பதை நாம் இப்போது உணர்கின்றோம்.

இது வரைக்கும் அவர்கள் சொல்வது சரி

உம்மட ஆ'வென்ட வாய்க்க கொள்ளிகட்டைய வைக்க! :P அந்த லோசு மொட்டைகள் தான் அப்படி கதை விடுகிது என்றால் உமக்கு எங்கே புத்தி போய்ட்டுது? இன்னும் கொஞ்ச காலத்துக்கு இவர்களின் இம்சை தாங்க முடியாதுப்பா! :angry:

உம்மட ஆ'வென்ட வாய்க்க கொள்ளிகட்டைய வைக்க! :P அந்த லோசு மொட்டைகள் தான் அப்படி கதை விடுகிது என்றால் உமக்கு எங்கே புத்தி போய்ட்டுது? இன்னும் கொஞ்ச காலத்துக்கு இவர்களின் இம்சை தாங்க முடியாதுப்பா! :angry:

நீங்கள் இலங்கைப்படைகள் வன்னியை கூட தங்களின் கட்டுப்பாட்டிலை கொண்டு வந்தலும் நீங்கள் புலி பதுங்குது என்றுதான் சொல்விர்கள்???

ஏன்? கொண்டுவரவில்லையா? 96, 97 ல் என்ன நடந்தது? ஒருபக்கம், கிளிநொச்சி 55ம் கட்டை வரைக்கும் வந்திருந்தார்கள், மறுபக்கம் மாங்குளம், ஒட்டிசுட்டான், கரிபட்டை முறிப்பு வரைக்கும் பிடித்தார்கள் தானே? அது வரைக்கும் புலி பொறுமை காக்கவில்லையா?அப்போது கூட புலி பதுங்கி தானே பாய்ந்தது?

அப்ப பாய முடிஞ்சது. இப்ப அவங்களும் ஆயுதபலத்தோடதான் இருக்கிறாங்கள். அப்ப இராணுவத்தட்ட மல்ரிபரல் இல்லை. சில கிபீர் விமானங்கள் மட்டும். இப்ப மிக் கிபீர் என்று பலமான விமானப்படை. அமெரிக்க இஸ்ரேலிய இந்திய தொழில்நுட்ப உதவிகள். பாகிஸ்தானிய மல்ரிபரல்கள். சீன இஸ்ரேலிய பிரிட்சிஷ் கப்பற்படை...நவீன ஆயுதங்கள்..ஏவுகணைகள்...என்று பலம் பல மடங்கு....அதையும் கவனியுங்கோ...! வெளிநாட்டில் பயிற்சி எடுத்த கொமோண்டோக்கள்...கருணாவின் வழிகாட்டல்கல்...! புலிகளின் பலவீனம் சொல்ல ஒருத்தன் உள்ள இருக்கிறான்..அதையும் மறக்காதையுங்கோ..! :D

Edited by nedukkalapoovan

நீங்கள் இலங்கைப்படைகள் வன்னியை கூட தங்களின் கட்டுப்பாட்டிலை கொண்டு வந்தலும் நீங்கள் புலி பதுங்குது என்றுதான் சொல்விர்கள்???

அப்ப பாய முடிஞ்சது. இப்ப அவங்களும் ஆயுதபலத்தோடதான் இருக்கிறாங்கள். அப்ப இராணுவத்தட்ட மல்ரிபரல் இல்லை. சில கிபீர் விமானங்கள் மட்டும். இப்ப மிக் கிபீர் என்று பலமான விமானப்படை. அமெரிக்க இஸ்ரேலிய இந்திய தொழில்நுட்ப உதவிகள். பாகிஸ்தானிய மல்ரிபரல்கள். சீன இஸ்ரேலிய பிரிட்சிஷ் கப்பற்படை...நவீன ஆயுதங்கள்..ஏவுகணைகள்...என்று பலம் பல மடங்கு....அதையும் கவனியுங்கோ...! வெளிநாட்டில் பயிற்சி எடுத்த கொமோண்டோக்கள்...கருணாவின் வழிகாட்டல்கல்...! புலிகளின் பலவீனம் சொல்ல ஒருத்தன் உள்ள இருக்கிறான்..அதையும் மறக்காதையுங்கோ..! :D

இது விளங்குதல்லோ? உதை தானே குறுக்காலாபோவானும் வந்து திருப்பி திருப்பி சொல்லிட்டு போறார். அப்ப புலிகளின் பலத்தை பலபடுத்துவது யாரின் கைகளில் தங்கியுள்ளது? புலம் பெயர்ந்த மக்களாகிய உங்களின் கைகளில் தானே? அதை முதலில் செய்யுங்களேன்? அதைவிட்டு விட்டு நக்கல், நையாண்டி பண்ணிக்கொண்டிருகிறீர்கள்? உண்மையான பற்றுள்ளவர்களாக இருந்தால், எம்மவர்களின் கரங்களை பலபடுத்த கூடிய கருத்துக்களை முன் வையுங்கள்! எங்களுக்கு இப்படி ஒரு நிலை வர என்ன காரணம் என்று சிந்தியுங்கள்! உந்த நக்கல், நையாண்டி, சொறி சேட்டை எல்லாம், சிங்களவனும், துரோகிகளும் தான் செய்வார்கள்,இப்பொழுது உள்ள எங்கள் நிலையை பார்த்து!

உண்மையான தமிழர் இல்லை. நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று நீங்களே முடிவு பண்ணுங்கள். :D

இஞ்ச பாருங்கோ பலப்படுத்திறது என்றதை குறுக்காலபோவன் தான் வந்து எழுதனும் என்றில்லை. அது எல்லாருக்கும் தெரியும்..!

ஆனால் பாருங்கோ.. பலப்படுத்திறது என்றது யாழ் களத்தில பனர் செய்து பேஸ்ட் பண்ணுறது போல காரியமில்ல..

காசு கொடுத்தால் போல அது ஆயுதமாகப் போய் சேராது. போராளியாக மாறாது.

பல தடைகள்.. ஒரு ஆயுததைக் கொண்டு போக.. பல நெருக்கடிகள்... வாங்கப் பல நெருக்கடிகள்.. இவற்றுக்கு மத்தியில் போராளிகளுக்கு நடமாடும் மருத்துவ சேவைகள்.. உயர் மருத்துவ வசதிகள்.. இடநெருக்கடிகள்.. எதிரியின் உயர் தொழில்நுட்பங்களை சமாளிக்கக் கூடிய ஆயுதங்கள்.. போர்க்களத்துக்கு அவசியமான ஆயுதங்கள் தளபாடங்கள்... மக்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பு.. மக்களை பாதுகாப்பாக நகர்த்த செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் இப்படிப் பலப்பல தேவைகள் சேவைகள் அவசியமாக உள்ளன. இவை அனைத்தும் பலப்படுத்தப்பட வேண்டும்.

எப்படி.. உலகெங்கும் தடை. காசு கொடுக்க மனசுள்ள தமிழர்களுக்கு நேரடியாக பங்களிக்க மனசில்ல. எப்ப கேற் திறப்பாங்கள் கொழும்பு போய் வெளிநாடு ஓடலாம் என்றிருக்கும் அநேக மக்கள். வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய நிபுணத்துவ உதவிகள் தாமாக முன்வந்து உதவக் கூடிய வகையில் இன்மை.. இப்படிப் பல பலவீனங்களை வைத்துக் கொண்டு பலப்படுத்துவோம் பலப்படுத்துவோம்.. என்று யாழில் எழுதிவிட்டு படுத்து தூங்கி காலையில் வேலைக்குப் போயிட்டு பின்னேரம் மீள வந்து தான் எழுதினதுக்கு பதில் எழுதுறவையை ஒரு வாங்கு வாங்கிட்டு போறது அல்ல பலப்படுத்தல்.

மக்கள் போராளிகளை மனோ ரீதியிலும் பல்லபடுத்த வேண்டும். அதற்கு உலகத்தமிழர்கள் ஓரணியில் நிற்பதாக செயலில் காட்ட வேண்டும். களத்தை நோக்கி படையெடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த இளைஞர் யுவதிகள் களம் போக முன் வர வேண்டும். தமது சேவைகள் திறமைகளைப் போராளிகளுக்கும் மக்களுக்கும் வழங்க முன்வர வேண்டும். அதுதான் அவர்களை போராடத் தூண்டும்.

அதைவிடுத்து புதினம் சங்கதி யாழில எழுதிற சரியா பிழையா என்று முட்டையில மயிர் பிடிங்கிக் கொண்டு மட்டும் போராட்டத்தைப் பலப்படுத்த முடியாது. மக்கள் சுயநலத்தை திறக்க வேண்டும். தமிழீழத்துக்காக தங்களை அர்பணிக்க வேண்டும். ஓரிருவர் அல்ல மிகப் பலரும் இதைச் செய்ய முனையும் போது எதிரி தானே ஓடுவான். சர்வதேசம் தானே நேசக்கரம் நீட்டும். செய்ய முடியுமா.. அப்படிப் பலப்படுத்த நீங்கள் தயாரா.. எல்லோரும் ஓரணியில் நிற்போம் வாரீர்களா.. அப்படி என்றால் நாமும் தயார். இல்ல நான் இங்க இருந்து காசு அனுப்பிட்டு பிள்ளை குட்டி மனிசியைக் கொஞ்சிட்டு இருக்கிறன் நீங்கள் போய் பலப்படுத்துங்கோ வாகரையை மீளுங்கோ என்றால் அதுக்கு நான் மாட்டன். பேசாமல் கலியாணம் முடிச்சிட்டு பிள்ளை குட்டி பெறுகிற வேலையைப் பாக்கப் போறன் ஆளை விடுங்கோ...! :P :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வீண் அலட்டல்கள்? சிங்களத் தளபதி சரத் பொன்சேகா சொன்னவர்தானே கிழக்கில் இருந்து புலிகளை விரட்டியடைப்போம் என்று.. தற்போது படுவான்கரை மட்டும்தான் எஞ்சியுள்ளது. அதையும் புது ஏப்ரலுக்கு முன்னர் பிடிக்கத் திட்டம் உள்ளது. வடக்கிலும் போர் ஆரம்பித்தால் அதுவும் இவ்வருட இறுதிக்குள் முடிந்துவிடும்.. எல்லாச் சண்டையும் முடிந்தபின் எஞ்சுபவர்கள் அங்கு வாழட்டும்; புலத்தில் வந்து குடியேறியவர்கள் இங்கு தமிழ்ச் சங்கங்களை அமைத்து இடையிடையே விழாக்கள் வைத்து காலத்தை ஓட்டவேண்டியதுதான்.

இஞ்ச பாருங்கோ பலப்படுத்திறது என்றதை குறுக்காலபோவன் தான் வந்து எழுதனும் என்றில்லை. அது எல்லாருக்கும் தெரியும்..!

ஆனால் பாருங்கோ.. பலப்படுத்திறது என்றது யாழ் களத்தில பனர் செய்து பேஸ்ட் பண்ணுறது போல காரியமில்ல..

காசு கொடுத்தால் போல அது ஆயுதமாகப் போய் சேராது. போராளியாக மாறாது.

பல தடைகள்.. ஒரு ஆயுததைக் கொண்டு போக.. பல நெருக்கடிகள்... வாங்கப் பல நெருக்கடிகள்.. இவற்றுக்கு மத்தியில் போராளிகளுக்கு நடமாடும் மருத்துவ சேவைகள்.. உயர் மருத்துவ வசதிகள்.. இடநெருக்கடிகள்.. எதிரியின் உயர் தொழில்நுட்பங்களை சமாளிக்கக் கூடிய ஆயுதங்கள்.. போர்க்களத்துக்கு அவசியமான ஆயுதங்கள் தளபாடங்கள்... மக்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பு.. மக்களை பாதுகாப்பாக நகர்த்த செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் இப்படிப் பலப்பல தேவைகள் சேவைகள் அவசியமாக உள்ளன. இவை அனைத்தும் பலப்படுத்தப்பட வேண்டும்.

எப்படி.. உலகெங்கும் தடை. காசு கொடுக்க மனசுள்ள தமிழர்களுக்கு நேரடியாக பங்களிக்க மனசில்ல. எப்ப கேற் திறப்பாங்கள் கொழும்பு போய் வெளிநாடு ஓடலாம் என்றிருக்கும் அநேக மக்கள். வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய நிபுணத்துவ உதவிகள் தாமாக முன்வந்து உதவக் கூடிய வகையில் இன்மை.. இப்படிப் பல பலவீனங்களை வைத்துக் கொண்டு பலப்படுத்துவோம் பலப்படுத்துவோம்.. என்று யாழில் எழுதிவிட்டு படுத்து தூங்கி காலையில் வேலைக்குப் போயிட்டு பின்னேரம் மீள வந்து தான் எழுதினதுக்கு பதில் எழுதுறவையை ஒரு வாங்கு வாங்கிட்டு போறது அல்ல பலப்படுத்தல்.

மக்கள் போராளிகளை மனோ ரீதியிலும் பல்லபடுத்த வேண்டும். அதற்கு உலகத்தமிழர்கள் ஓரணியில் நிற்பதாக செயலில் காட்ட வேண்டும். களத்தை நோக்கி படையெடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த இளைஞர் யுவதிகள் களம் போக முன் வர வேண்டும். தமது சேவைகள் திறமைகளைப் போராளிகளுக்கும் மக்களுக்கும் வழங்க முன்வர வேண்டும். அதுதான் அவர்களை போராடத் தூண்டும்.

அதைவிடுத்து புதினம் சங்கதி யாழில எழுதிற சரியா பிழையா என்று முட்டையில மயிர் பிடிங்கிக் கொண்டு மட்டும் போராட்டத்தைப் பலப்படுத்த முடியாது. மக்கள் சுயநலத்தை திறக்க வேண்டும். தமிழீழத்துக்காக தங்களை அர்பணிக்க வேண்டும். ஓரிருவர் அல்ல மிகப் பலரும் இதைச் செய்ய முனையும் போது எதிரி தானே ஓடுவான். சர்வதேசம் தானே நேசக்கரம் நீட்டும். செய்ய முடியுமா.. அப்படிப் பலப்படுத்த நீங்கள் தயாரா.. எல்லோரும் ஓரணியில் நிற்போம் வாரீர்களா.. அப்படி என்றால் நாமும் தயார். இல்ல நான் இங்க இருந்து காசு அனுப்பிட்டு பிள்ளை குட்டி மனிசியைக் கொஞ்சிட்டு இருக்கிறன் நீங்கள் போய் பலப்படுத்துங்கோ வாகரையை மீளுங்கோ என்றால் அதுக்கு நான் மாட்டன். பேசாமல் கலியாணம் முடிச்சிட்டு பிள்ளை குட்டி பெறுகிற வேலையைப் பாக்கப் போறன் ஆளை விடுங்கோ...! :P :D:lol:

சரி, அதை தொடங்களாமே?ஏன் தாமதம்? யாழ் களத்தில் உள்ளவர்களை கேளுங்கள், உங்கள் நண்பர்களை கேளுங்கள், வருபவர்களை கூட்டிகோன்டு புறபடுங்களேண்? என்ன தயக்கம்? :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி, அதை தொடங்களாமே?ஏன் தாமதம்? யாழ் களத்தில் உள்ளவர்களை கேளுங்கள், உங்கள் நண்பர்களை கேளுங்கள், வருபவர்களை கூட்டிகோன்டு புறபடுங்களேண்? என்ன தயக்கம்? :D

நாம் தான் கேட்க வேண்டுமென்றில்லை. தாம் தாம் கேட்டு கூடுங்கள் ஓரிடத்தில் ஆயிரக்கணக்கில் போவோம் இன்றே...! அடுத்தவை வாய் பார்க்கிறதென்றால்..வாகரை வெருகல் என்று கதை பேசாமல் வாயைப் பொத்திட்டுப் போங்கோ. அடுத்தவன் பார்த்துக்குவான்..என்ன செய்ய வேணும் என்றதை..! :D:lol:

சிங்களவன் தமிழனை அடிக்கிற படைக்கு பணம் திரட்டி அதிநவீன வைத்திய உபகரணங்கள் வாங்கி வைத்தியசாலைகள் அமைச்சுக் கொடுத்திருக்கிறாங்கள் இராணுவத்துக்கு. அமெரிக்கா கொடுக்குது வைத்திய நிபுணத்துவ உதவி. காயமடையும் போராளிகளைக் காப்பாற்றக் கூட மனிதாபிமான உதவியில் அமையக் கூடிய பலப்படுத்தலைக் கூட செய்ய முன்வராத புலம்பெயர் விண்ணர்களா...???! புலிகளோடு கைகோர்த்து போராட்டத்தில் இணைவர்..!

ஒன்றில் புலி வால் அல்லது புலி எதிர்ப்பு.. வாயால செய்திட்டு எதிரியிடமே வாழ்க்கைப் பிச்சை கேட்டு வாழ்வார்கள். கொலிடேக்கு போக கட்டுநாயக்காதான் வேணும்..பொறுங்கோ...! இன்னும் 2 மாதம் கழியட்டும். வடிவா ஊருக்கு போகலாம். ஆமி ஏ 9 திறந்திடுவான். அதுதான் தேவை உங்களுக்கு..! :P

Edited by nedukkalapoovan

நாம் தான் கேட்க வேண்டுமென்றில்லை. தாம் தாம் கேட்டு கூடுங்கள் ஓரிடத்தில் ஆயிரக்கணக்கில் போவோம் இன்றே...! அடுத்தவை வாய் பார்க்கிறதென்றால்..வாகரை வெருகல் என்று கதை பேசாமல் வாயைப் பொத்திட்டுப் போங்கோ. அடுத்தவன் பார்த்துக்குவான்..என்ன செய்ய வேணும் என்றதை..! :D:D

சிங்களவன் தமிழனை அடிக்கிற படைக்கு பணம் திரட்டி அதிநவீன வைத்திய உபகரணங்கள் வாங்கி வைத்தியசாலைகள் அமைச்சுக் கொடுத்திருக்கிறாங்கள் இராணுவத்துக்கு. அமெரிக்கா கொடுக்குது வைத்திய நிபுணத்துவ உதவி. காயமடையும் போராளிகளைக் காப்பாற்றக் கூட மனிதாபிமான உதவியில் அமையக் கூடிய பலப்படுத்தலைக் கூட செய்ய முன்வராத புலம்பெயர் விண்ணர்களா...???! புலிகளோடு கைகோர்த்து போராட்டத்தில் இணைவர்..!

ஒன்றில் புலி வால் அல்லது புலி எதிர்ப்பு.. வாயால செய்திட்டு எதிரியிடமே வாழ்க்கைப் பிச்சை கேட்டு வாழ்வார்கள். கொலிடேக்கு போக கட்டுநாயக்காதான் வேணும்..பொறுங்கோ...! இன்னும் 2 மாதம் கழியட்டும். வடிவா ஊருக்கு போகலாம். ஆமி ஏ 9 திறந்திடுவான். அதுதான் தேவை உங்களுக்கு..! :P

அதெப்படி? நீங்க தானே இந்த ஐடியாவை முதலில் வைத்தது..அப்ப நீங்க தானே சொல்லவேன்டும், எப்படி, என்ன செய்யவேண்டும் என்று?

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி? நீங்க தானே இந்த ஐடியாவை முதலில் வைத்தது..அப்ப நீங்க தானே சொல்லவேன்டும், எப்படி, என்ன செய்யவேண்டும் என்று?

அடுத்தவன் ஐடியா சொல்லி செயற்படுத்தும் வரை நீங்கள்..சிந்தனையே இல்லாமல்..களத்தில அலட்டப் போறீங்களோ. முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியில தெரியும் என்பார்கள்..!

-------------------

இவற்றை விட்டு செய்திக்கு வருவோம்...

ரெயிட்டரின் செய்திப்படி.. அரசாங்கத்தகவல் மையம் கூறியதன் படி புலிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தொப்பிக்கல நோக்கி ஓடி வருவதாகவும் படையினர் அவர்கள் ஓடும் பாதைகளை மடக்கி தாக்கி வருவதாகவும் அதில் 4 புலிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 18 துப்பாக்கிகளுடன் ஆயுதங்களும் உடல்களும் மீடக்கப்பட்டுள்ளனவாம். பல வாகனங்கள் எரிக்கப்பட்ட நிலையில் இராணுவம் மீட்டுள்ளதை படங்களில் காட்டுகிறார்கள்.

இதற்கிடையில் இளந்திரையனைத் தொடர்பு கொண்ட ரொயிட்டர் அவரின் கூற்றை அப்படியே பிரசுரித்துள்ளது.

அவர் தங்கள் போராளிகளின் நிலைகள் மாறி இருக்கக் கூடும் என்றும் புலிகள் திருமலையில் இல்லை என்ற நிலை இருப்பதாகக் கருத முடியாது என்றும் தாங்கள் இன்னும் தாக்குதிறனுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்..!

The Tigers remain defiant.

"The location (of our fighters) may have changed, but we still have our fighting capacity," Tiger military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from the northern stronghold of Kilinochchi.

"It doesn't mean the LTTE has gone nil in Trincomalee," he added, refusing to comment further.

http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage2

Edited by nedukkalapoovan

ஏன் இன்டைக்கு விகாரைக்கு பெட்டையள் ஓண்டும் யின்சோட வரவில்லையோ பாவம்

முதல்ல மகிந்தவின்ர பல்லுக்கு புசைவையும் புத்தர்ர பல்லவிட்டு பிறகு புலியை பற்றி கதைக்கலாம்

புத்தர் சரணம் மகிந்தர்ர பெண்சாதி சரணம்

வணக்கம் நானும் இப்ப தான் கண்டுபிடிச்சன்

தளத்தின்ர நல்வா கிழ போய் எழுத்துரு மாற்றம் எண்டு கிடக்கு அதில பாமினி யை மாத்தும் பிறகு தான மாறும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.