Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீன்பிடி அபிவிருத்திக்கு வருகை தந்த நிதியில் 67அடி புத்தர் சிலை!

Featured Replies

வடமராட்சி கிழக்குப் பிரதேசமான மணற்காட்டு கடற்கரை சந்தைக் கட்டட அபிவிருத்திக்கென ஒருக்கப்பட்ட 3.2மில்லியன் ரூபா நிதி நயினாதீவில் அமைக்கப்பட்டுவரும் 67அடி புத்தர் சிலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிக்குவின் வேண்டுகோளுக்கிணங்கவே குறித்த நிதி நயினாதீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதே வேளை வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை மற்றும் சங்கு பிடிப்பதனை உடனடியாக தடை செய்து கரை வலை தொழிலை சுதந்திரமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ் வந்திருந்த இலங்கை மீன்பிடி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடபகுதி மீனவருக்கு தற்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக கடல் அட்டை பிடிக்கும் தொழில் காணப்படுகிறது. கடல் அட்டை மற்றும் சங்கு பிடிப்பதால் எமது வளம் அழிக்கப்படுகிறது. இந்திய மீனவர், உள்ளுர் இழுவைப்படகு தென்னிலங்கை மீனவர் என எமது வளங்களை அழிக்கின்றனர்.கடல் அட்டை சங்கு பிடிக்கும் தொழிலை தென்னிலங்கை மீனவர் செய்கிறார்கள். அமைச்சர்கள் சிலரின் அனுமதியை பெற்று செய்கிறார்கள்.

வடமாராட்சி கடற்படப்பில் இத்தொழிலலை தொடர்ச்சியாக செய்கிறார்கள். அதனால் கடல் வளம் முற்றாக அழிகிறதெனவும் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மீன்பிடி அமைச்சர் கடல் அட்டை பிடிப்பதில் சிங்கள மீனவர் ஈடுபடுவதில்லை தமிழ் முஸ்லிம் மக்கள் தான் இங்கு கடல் அட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

வடபகுதியில் 12 கடல் அட்டை நிறுவனம் உள்ளது. 2 வருடத்துக்குள் இவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.இத்தொழிலை உடனடியாக நிறுத்த முடியாது. நடவடிக்கை எடுக்க வேண்டும். முற்று முழுதாக நிறுத்த முடியாது ஏனெனில் ஏற்கனவே அவர்களுக்கு சட்டரீதியாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை சமாதான முறையில் செய்ய வேண்டும்.இந்தியாவில் இருந்து வந்து கோடிக்கணக்கான அட்டை பிடிக்கிறார்கள் இந்தியாவில் விற்க முடியாததால் இங்கு விற்பனை செய்கிறார்கள் இதை விளங்கிக்கொள்ள வேண்டும்.நீரியல் வளத்துறை திணைக்களத்தின் அனுமதியுடன் அனுமதிப்பத்திரம் வழங்கபபடுகிறது. கிலோ மீற்றருக்குள் வந்து தொழில் செய்பவர்களை ஆதாரத்துடன் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=38767

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Athavan CH said:

வடமராட்சி கிழக்குப் பிரதேசமான மணற்காட்டு கடற்கரை சந்தைக் கட்டட அபிவிருத்திக்கென ஒருக்கப்பட்ட 3.2மில்லியன் ரூபா நிதி நயினாதீவில் அமைக்கப்பட்டுவரும் 67அடி புத்தர் சிலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடகிழக்கு பகுதி அபிவிருத்திக்கென சர்வதேசங்களினால் ஒதுக்கப்பட்ட நிதியையும்/அன்பளிப்புகளையும் சுருட்டி ஏப்பவிடுவது சிங்கள இனவாதிகள் மட்டுமே.

சுனாமி நிவாரண நிதியில் நடந்த பிரச்சனைகளை இங்கே நினைவு கூரவேண்டும்.,

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்குக்கு என்ன செய்தாலும்

அங்க புத்தரும் எளுந்தரணும்

அது தான் விதி

புத்தர் தனிய வரமுடியும்

புத்தரில்லாமல் எதுவும் வராது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 ல் வெற்றிவாகை சூடிவிட்டோம் என கர்ச்சித்த சிங்கள கோட்டையின் தமிழ் எடுபிடிகள்.......இவ்வளவு அரசியல் நடவடிக்கைகளை சந்தித்தும் இன்னும் எடுபிடிகளாகவே இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

2009 ல் வெற்றிவாகை சூடிவிட்டோம் என கர்ச்சித்த சிங்கள கோட்டையின் தமிழ் எடுபிடிகள்.......இவ்வளவு அரசியல் நடவடிக்கைகளை சந்தித்தும் இன்னும் எடுபிடிகளாகவே இருக்கின்றனர்.

பாவம் அண்ணா

அவர்களே

விழுங்கவும் முடியாமல்  மெல்லவும் முடியாமல்......

ஒவ்வொருத்தராக களண்டபடி....

01/01/2017 நெருங்குதில்ல...

ஒருபடியேனும்....?

ஒரு சிறைக்கைதிகளையே விடக்காணோம்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வோ......????

46 minutes ago, விசுகு said:

பாவம் அண்ணா

அவர்களே

விழுங்கவும் முடியாமல்  மெல்லவும் முடியாமல்......

ஒவ்வொருத்தராக களண்டபடி....

01/01/2017 நெருங்குதில்ல...

ஒருபடியேனும்....?

ஒரு சிறைக்கைதிகளையே விடக்காணோம்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வோ......????

1 hour ago, குமாரசாமி said:

வடகிழக்கு பகுதி அபிவிருத்திக்கென சர்வதேசங்களினால் ஒதுக்கப்பட்ட நிதியையும்/அன்பளிப்புகளையும் சுருட்டி ஏப்பவிடுவது சிங்கள இனவாதிகள் மட்டுமே.

சுனாமி நிவாரண நிதியில் நடந்த பிரச்சனைகளை இங்கே நினைவு கூரவேண்டும்.,

வெறும் விகாரைகளை மட்டுமில்லாமல் பள்ளி வாசல்களையும் கவனிப்பது நல்லது !!!!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Dash said:

வெறும் விகாரைகளை மட்டுமில்லாமல் பள்ளி வாசல்களையும் கவனிப்பது நல்லது !!!!

இரு இனங்களும் ஒரு முடிவுக்கு வராவிட்டால்....

இருவருக்கும் இல்லை..

41 minutes ago, விசுகு said:

இரு இனங்களும் ஒரு முடிவுக்கு வராவிட்டால்....

இருவருக்கும் இல்லை..

விளங்கவில்லை !!!

On 23/8/2016 at 0:30 PM, Athavan CH said:

வடமராட்சி கிழக்குப் பிரதேசமான மணற்காட்டு கடற்கரை சந்தைக் கட்டட அபிவிருத்திக்கென ஒருக்கப்பட்ட 3.2மில்லியன் ரூபா நிதி நயினாதீவில் அமைக்கப்பட்டுவரும் 67அடி புத்தர் சிலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிக்குவின் வேண்டுகோளுக்கிணங்கவே குறித்த நிதி நயினாதீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மைத்திரி தலைமையில் "சிங்கள-பௌத்த-நல்லாட்சி" என்ற போர்வையில் நடக்கும் மிக மோசமான சிங்கள-பௌத்த பயங்கரவாதம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.