Jump to content

மரணத்தை வெல்லும் வழி !


Recommended Posts

பதியப்பட்டது

மரணத்தை வெல்லும் வழி !

 

 

மரணத்தை வெல்லும் வழி !

 மரணத்தை வெல்லுவதற்கு .இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் .

உலகியல் வழியில் செல்லாமல் ,அருளைப் பெறும் இறுதி வழியாகிய ,

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
 ஞானத்தில் ஞானம்

என்னும் சுத்த சன்மார்க்க பெறு நெறியாகிய தனிநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்கின்றார் .

முன்பு ஞான சரியை ,ஞான கிரியை ,ஞான யோகம் .என்றால் என்ன ? என்பதைப் பார்த்தோம் .இப்போது

"ஞானத்தில ஞானம்"  என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் .

ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கத்தைக் குறிப்பதாகும் .முன் சொன்ன இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் என்னும் உண்மை ஒழுக்கத்தை வள்ளலார் சொல்லியுள்ளபடி கடைபிடித்தால் மட்டுமே ஆன்ம ஒழுக்கத்திற்கு செல்ல முடியும் .ஆன்மாவை காண முடியும் .

வள்ளலார் சொல்லி உள்ள ஆன்ம ஒழுக்கம் !

 கடவுளால் அனுமதிப பெற்று மாயையால்  படைக்கப்பட்ட ,யானை முதல்  எறும்பு ஈறாகத் தோன்றிய சரீரங்களில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச்சபையாகவும் ,அதனுள் பரமான்வே பதியாகவும் கொண்டு யாதும் நீக்கமற ,எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் .ஆன்ம ஒழுக்கம் என்று சொல்லுகின்றார் .

இவைதான் மனிதனின் சாகாக்கல்வியின் இறுதி படிப்பு .இந்த  தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே .மரணம் இல்லாப்பெருவாழ்வு கிடைக்கும் .

முதல் மூன்று தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே . இறுதி தேர்விற்கு வரமுடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் .

முதல் மூன்று தேர்வு என்பது !

 ஞான சரியை என்னும் இந்திரிய ஒழுக்கம் ,ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் ,ஞான யோகம் என்னும் ஜீவ ஒழுக்கம் என்தாகும் ,இதில் மிகவும் முக்கியமானது ,இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழக்கம்  எனபவையாகும் .

இந்ந இரண்டு ஒழக்கங்களையும் முழுமையாக  கடைபிடித்தால் மேலே கண்ட ஜீவ ஒழுக்கமும் ,ஆன்ம ஒழுக்கமும  அருட் பெரும்ஜோதி ஆண்டவர் வந்து சொல்லிக் கொடுப்பார் .

வள்ளலார் பேருபதேசத்தில் இறுதியாக சொல்லி உள்ளதை நன்கு கவனிக்க வேண்டும் .

 இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள .

 உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரப்போகின்றார் ஆதலால் நான் சொல்லிய வண்ணம் உண்மை ஒழுக்கத்துடன் நல்ல  விசாரணையில இருங்கள் என்கிறார் .

இவ்விசாரணையில் இருந்தால் நமது ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக்கொண்டு இருக்கின்ற அனந்தத்  திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரை நீங்கி விடும் அது நீங்கினால் மற்ற திரைகள் அதிக விரைவில் நீங்கி விடும் என்கிறார் .

அந்த விசாரம் என்னவெனில் :--

ஆண்டவரை தோத்திம் செய்கின்றதிலும் ,தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக சுத்த உஷ்ணம் உண்டாகும் .

யோகிகள் வனம் ,மலை, குகை முதலிய இடங்களில்  போய் நூறு ஆயிரம் முதலிய வருஷகாலம் "தவம்" செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள் .

இப்படி தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகின்றதை பார்க்கிலும் , தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்றதிலும் .நினைக்கின்றதிலும் அதைவிடக் . . . . கோடி கோடி பங்கு அதிகமான சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்கிறார் .

எனவே இந்திரிய ஒழக்கத்தாலும் கரண ஒழுக்கத்தாலும் .சுத்த தேகம் பெற்று இம்மை இன்ப வாழவு வாழலாம் .அதற்கு ஞான சரியை ,ஞான கிரியை என்று பெயர் .

அடுத்த ஜீவ  ஒழுக்கத்தால்  சாதி சமயம் மதம் இனம் நாடு போன்ற பேதம்  அற்று எல்லா மனித ஜீவர்களையும் தம் உயிர் போல் நேசிக்க வேண்டும் .அதுவே ஞான யோகம் என்பதாகும் .

அதனால் கிடைக்ககூடிய லாபம் பிரணவ தேகம் . மறுமை இன்ப லாபம் . மறுமை இன்ப வாழ்வு , .அதுவே ஞானம் யோகம்  என்பதாகும் .

இந்த  மூன்று ஒழுக்கங்களும் ,இரண்டு லாபங்களும் முழுமை அடைந்தால் மட்டுமே ஆன்ம லாபம் என்னும் பூரண அருள் கிடைக்கும் ,

  பூரண அருள் கிடைத்தால் மட்டுமே உண்மைக் கடவுள் யார் ? என்பது தெரியும் . அதற்கு அருள் அறிவு என்று பெயர் .ஞானத்தில் ஞானம் என்பதாகும் .ஆன்ம ஒழுக்கம் என்பதாகும் .

அப்போது தான் எல்லா ஜீவராசிகளிலும் உள் ஒளியாக (ஆன்மா) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து செயல் படுகிறார எனபதை நேருக்கு நேர் காண முடியும் . மரணம் இல்லாப்பெருவாழ்வு கிடைக்கும் .

எனவே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் ,எவ்வளவும் ,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும் என்கிறார் .

அவற்றைததான் :--

சாகாக்கல்வி
தத்துவ நிக்கிரகம் செய்தல்
ஏம சித்தி
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்

என்னும் நான்கு சுத்த சன்மார்க்க பயிற்சியைக் காட்டிக் கொடுத்து உள்ளார் .

இதுவே  ஆன்ம ஒழுக்கம் என்னும் ஞானத்தில் ஞானம் எனபதாகும் . பேர் அறிவு .அருள் அறிவு ன்பதாகும் .

அறிவாலே அறிவினை அறிகின்ற போது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !
என்றும் . . . 

அருளாலே அருள் இறை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் 
திரு நடம் இன்பம் என்று அறியாயோ மகளே !

என்று உண்மை அறிவு .அனுபவம் ,அருள் .அருள் நடனம்  என்பதை எல்லாம் தெளிவாக சந்தேகம் இல்லாமல் விளக்கம் தந்து உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு அடிப்படையானது ஜீவ காருண்யம் அடுத்ததுதான் சத்விசாரம் .இந்த இரண்டு வழிகளை இடைவிடாமல் பின் பற்ற வேண்டும் .

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு ! என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் .

அருளைப் பெறுவதுதான் சுத்த சன்மார்க்கம் !

அருள் நெறி ஒன்றே தெருணெறி மற்று எல்லாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே !

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே !

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமன் ஆகுக ஒங்குக !

இறை அருளைப் பெற ஒரே மார்க்கம் .வள்ளலார்  தோற்றுவித்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் " என்ற மார்க்கம் மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் .

இன்னும் விரிக்கில் பெறுகும் 

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிறைவேறாத ஆசையுள்ள உயிர்கள் அதன் சார்ந்த/ உடல் எடுத்த ஆன்மாவை கடைசிவரை நிறைவேற்ற மீண்டும் மீண்டும் உடல் எடுக்க வேண்டி தூண்டுகின்றன.. (மறுபிறவி) அல்லாவா / கிறிஸ்துவா /சைவம்/வைஸ்ணவம் மேற்படி என்ன ? என்பதை நாம செத்ததிற்கு அப்புறம் தான் நமக்கே தெரிய போகுது..! கொடுரமாக கொலை செய்யபட்ட உயிர்கள் ஆன்மாவை தன் பாதையிலே இழுத்து சென்று புவியின் வளி மண்டலத்திற்கு அப்பால் நிறுத்தி வைக்கின்றன.. அதனதன்  தர்ம அதர்ம கணக்கெடுப்பின் பேரிலே .. மிகச்சரியான கருப்பையை தேர்ந்தெடுத்து மீண்டும் பிறக்கின்றன.. இங்கு சிலருக்கு கேள்வி இருக்கலாம் அதென்ன தர்ம அதர்ம கணக்கெடுப்பு.. ? யார் நடாத்துகிறாகள்.. எல்லாம் ஐஸ்டின் கண்டுபிடிப்பு 3 ம் விதிதான் காரணம் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு!! அது  போக நல்விதமாக வாழ்ந்த உயிர்கள் அவர்களினட ஆன்மாக்கள் நிலைமை என்ன ஆகும் ?  அது  மனதிற்கு உள்ளாகவே அடங்கிவிடும்.. மூளைக்கும் மனதிற்கும் டிபர்ன்ஸ் இருக்கு அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்..இயற்கையால்/கடவுளால்  அமைக்கட்டது மனது அதை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் .குறிப்பாக இறக்கும் போது.. இந்த மூளை அது நீ இறந்த பின்பு எதற்கும் கூட வராது..! ஆனால் மனது அது இயற்கை/இறைவனால் வழங்கபட்ட வழி!! அதாவது உங்களின்ட ஆசை எல்லாம் அந்த ஆன்மாவை சுற்றி ரேகை போல படிந்து விடுகிறது எனவெ..,. ஆசைபடாதீர் / அவதிபடாதீர்.. இதைதான் புத்தமார்க்கம் / சமண மார்க்கம் சைவ மார்க்கம் சொல்கிறது.

டிஸ்கி:


இதற்கும் உள்குத்து போட திராவிட கோஸ்டிகள் ரெடியாக இருப்பார்கள்.. அவர்களுக்காக .. நீங்கள் ஏன் மனிதர்களா பிறந்தீர்கள்.. ? உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எதற்கு நாயாக பிறந்தது..? கேட்டால் இயற்கை என்பீர்கள்..ரைட்டு ..விடு .. உட்கார்ந்து யோசிக்க உங்களுக்கு நேரம் கிடையாது..

 

  • 2 months later...
Posted

மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்! அதிர்ச்சி தகவல்!

 

மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவுமேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

மரணம்தான் இறுதியானது. மறுபிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பதோ கிடையாது. மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள். மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த வியப்பூட்டும் அறிவிப்பு எனபது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்டவையாகவும்.

இந்த சர்சைக்குரிய ஆய்வு கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்து கலவைகள் கொண்டு நடத்தப்பட்டது. எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ரீ அனிமேசன் முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

 

அதனைத்தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்கு, அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.

அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அந்த கருவியின் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில வருடங்களில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.

தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடையச் செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்டவ மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

ஆனால் மனிதகுல வரலாற்றின் பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் கூறுகிறார்.

http://www.netrigun.com/2016/10/29/மரணத்திற்கு-பின்-என்ன-நட/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி...நுணா!

இந்தப் பதிவின் ஆங்கில மூலம் ஏதாவது கிடைத்தால் ...இணைத்து விடுங்கள் நுணா!

எல்லோரையும் போல...மரணத்தின் பின்னான வாழ்வு பற்றி அறிய மிகவும் ஆர்வமாகவுள்ளேன்!

ஆனால் எமது மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழி பெயர்க்கும் போது ..மூலக்கருத்தை விட்டுவிடுவார்கள்!

உங்கள் பதிவிலிருந்து ஓரளவுக்குப் புரிகின்றது! ஆனால் 'முழுவதும்' மொழி பெயர்க்கப்படவில்லை போலவும் உள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.