Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது – கமால் குணரட்ன

Featured Replies

யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது – கமால் குணரட்ன

 

யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது – கமால் குணரட்ன



யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது என மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.


படை வழியாக நந்திக்கடல் என்னும் தலைப்பிலான நூல் ஒன்றை அண்மையில் கமால் குணரட்ன வெளியிட்டிருந்தார். இந்த நூலில் யுத்த இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.


எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள கமால் குணரட்ன  தாம் எந்தவொரு காலத்திலும் யுத்த இரகசியங்களை வெளியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.


பிரபல்யத்தை தேடிக் கொள்ளும் நோக்கில் தான் நூல் எழுதவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஈடுபட்ட படையினரை புலம்பெயர்தரப்புக்கள் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருவதாகவும் அதனை ஆங்கிலத்தில் தெளிவுபடுத்தும் நோக்கிலும், வறிய பெற்றோர்களே அதிகளவில் படையில் தமது பிள்ளைகளை இணைத்துள்ளதாகவும் அவர்களுக்கு சிங்களத்தில் யுத்தம் பற்றிய தகவல்களை வழங்கவுமே இரண்டு மொழிகளிலும் நூல் வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.


யுத்த இரகசியங்களை அம்பலப்படுத்தும் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை எனவும் ஈடுபடப் போவதில்லை எனவும், ஒரு நாளும் அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135991/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது – கமால் குணரட்ன

 

யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது – கமால் குணரட்ன


யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது என மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இரகசியங்கள் மண்ணோடு புதைந்தாலும் அவை எழுந்து இரகசியங்களைப் பரகசியமாக்கும் என்ற இயற்கையின் இயல்புகளைப் புரிந்துகொள்ளாத மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன.

 

நீர்க் குமிழியே நீயே சாட்சி

பெருத்த மழை பெய்தபோது, எந்தத் தடயங்களுமின்றிக் கணவனால் கொல்லப்பட்ட மனைவியானவள், மழைத்துளியால் எழுந்த நீர்க்கும்ழியைப் பார்த்து, நீர்க் குமிழியே நீயே சாட்சி என்று நீர்க்குமிழியைச் சாட்சிக்கு அழைத்துவிட்டு இறந்தாள். பிறிதொருநாளில் தனது புதிய மனைவியுடன் மழைவெள்ளம் கலக்கி விளையாடிய நேரத்தில் எழுந்த நீர்க்குமிழியைக் கண்டு  கணவன் சிரித்தான். ஏன் சிரிக்கிறீர்கள்?“ என்று மனைவி கேட்டபோது அவன் தன்னை மறந்து முதல்மனைவியைக் கொன்று புதைத்ததைக் கூறிவிட்டான். அதனைக்கேட்டுப் பயந்த புதிய மனைவி அதுபற்றிப் புகார் செய்யவே கொலைகாரக் கணவன் பிடிபட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ரகசியங்கள் தான் உங்களோட  மண்ணுக்கு புதிய முன்னர், உங்களிடம் இருந்து விசாரித்து எடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது – கமால் குணரட்ன

அப்போ புத்தகத்தில் எழுதியிருப்பதெல்லாம் பொய்யி ....அதுதான் பார்த்தேன் 
அமெரிக்க நேவி சீல்களுடன் போரிடவும் தயாராக இருந்தோம் என்று கரடி விடும்போதே தெரிந்துவிட்டது புத்தகத்தில் இருப்பதெல்லாம் உண்மை என்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.