Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகாவில் தமிழருக்கெதிரான வன்முறையை நிறுத்தக்கோரி யாழில் உண்ணாவிரதம்

Featured Replies

கர்நாடகாவில் தமிழருக்கெதிரான வன்முறையை நிறுத்தக்கோரி யாழில் உண்ணாவிரதம்
 
 
கர்நாடகாவில் தமிழருக்கெதிரான வன்முறையை நிறுத்தக்கோரி யாழில் உண்ணாவிரதம்
இந்தியாவில் கன்னட மாநிலத்தில் தமிழக தமிழர்களுகெதிராக நடந்து வரும் வன்முறைகளை நிறுத்துமாறுகோரி   இருவர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கு முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
நாவற்குழி பிரதேசத்தை சேர்ந்த விநாயமூர்த்தி சகாதேவன் , பிரேம் ஆகிய இருவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த உண்ணாவிரதம் குறித்து விநாயகமூர்த்தி சகாதேவன் குறிப்பிடுகையில் நாங்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். எமது இயக்கத்தில் 2200 க்கும் அதிகமான அங்கத்தவர்கள் உள்ளனர். அதில் தாம் இருவர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார் 
ing.jpg
எமது அலுவலகம் 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வவுனியாவில் இயங்கி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக யாழ்ப்பாணத்தில் இல.27 கண்டி வீதி நாவற்குழியில் இதன் கிளை இயங்கிவருகிறது 
 
தற்போது இந்தியாவில் நமது சகோதரர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
 
வன்முறைகளை கர்நாடகத்தில் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் மீறி நிறுத்தாவிடில் உலகில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகம் முழுவதும் போராட்டம் நடாத்தப்படும் எனவும் கூறினார் 
 
இன்று காலை 9.௦௦ மணிக்கு ஆரம்பித்த உண்ணாவிரதம் மாலை  4.00 மணியளவில் முடிவடையுமெனவும் இதன்போது மகஜர் ஒன்றினை இந்திய துனைத்தூதுவரிடம் கையளிக்கவுள்ளதாகவும்  அவர் கூறினார்

http://onlineuthayan.com/news/17669

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவராவது இல்லையே என்று கவலைப்பட்டேன்.... இருவர் இருக்கின்றனர். இருவரையும் போற்றுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

ஒருவராவது இல்லையே என்று கவலைப்பட்டேன்.... இருவர் இருக்கின்றனர். இருவரையும் போற்றுகிறேன்.

உங்களது... கருத்தில்  உள்ள, வேதனையை...... புரிந்து கொள்கின்றேன்.
அந்த..... நன்றி மறவாத,  இருவருக்கும்.... பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

கர்நாடக தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கைத் தமிழ் கட்சிகள்: சி.வி.விக்னேஸ்வரனும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

 

யாழ்ப்பாணத்தில் ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்று கூடி, கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலையும் கரிசனையும் தெரிவித்து யாழ் துணைத் தூதர் மூலம் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றன.

இந்தியத் துணைத் தூதரிடம் மனுக்கொடுக்கும் கட்சிப் பிரதிநிதிகள்

 

 இந்தியத் துணைத் தூதரிடம் மனுக்கொடுக்கும் கட்சிப் பிரதிநிதிகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் கையெழுத்திட்டுள்ள இந்தக் கடிதம் வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதர் நடராஜனிடம் கையளிக்கப்பட்டது.

கர்நாடகாவில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள இந்தக் கட்சிகள் தமிழகத்தில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கோரியிருக்கின்றன.

தமிழர்களுக்கு தார்மிக ஆதரவு

 

 தமிழர்களுக்கு தார்மிக ஆதரவு

இதேவேளை, கர்நாடகாவில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், அங்கு மேலும் வன்முறைகள் நடைபெறாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண தமிழ் மக்கள் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கோரியிருக்கின்றார்.

வன்முறைகளின் துயரங்களை நேரடியாக அனுபவித்துள்ள வடமாகாண தமிழ் மக்கள் கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்து அவர்களுக்குத் தமது அனுதாபத்தையும் ஆறுதலையும் வெளியிட்டிருக்கின்றனர் என அந்தக் கடிதத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வருக்கும் தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும் வடமாகாண முதலமைச்சர் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையில், கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் எதிரில்  அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37383443

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ராசவன்னியன் said:

 

120px-Nanri_nanri.png

ராஜ வன்னியன் அண்ணா....
எல்லாம்... உங்கள், அரசியல் வாதிகளிடம் படித்தது தான்.....
நாங்களும் பிரதமர் மோடிக்கு, கடிதம் அனுப்பியிருக்கிறம்  எல்லோ....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலைக்கான போராட்டத்தை நசுக்கி ஒழிக்கும் செயற்பாடுகளுக்கு, இந்தியாவுக்குப் பெரும் உதவி நல்கிச் செயற்பட்ட, எட்டப்பன் வழிவந்த கட்சிகள், இன்று தமிழரைப் பாதுகாக்குமாறு இந்தியாவை வேண்டுவதற்கான உரிமைகொண்டுள்ளதை மறுக்க முடியாது.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.