Jump to content

கொக்கட்டிச்சோலை தேர்த் திருவிழா


Recommended Posts

பதியப்பட்டது

கொக்கட்டிச்சோலை தேர்த் திருவிழா

 

 

கொக்கட்டிச்சோலை தேர்த் திருவிழா

 

இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது.

கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.

பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர்வடம்பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலய வெளி வீதியில் மற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படும். இது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா என்பது நோக்கத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2252&mode=head

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி நவீனன் ....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈஸ்வரருக்கு அரோகரா...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.