Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்

Featured Replies

பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்

 

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பொது சந்தை  கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தினால் முற்றுமுழுதாக சேதமடைந்தனால் வர்த்தகர்களின் நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  அவரச உதவிகோரிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் 

Sritharan-e1459515741685.jpg

குறித்த கடிதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முறை மிக மோசமானதாவும் நாளாந்த சீவியத்திற்கான அவர்களின் எதிர்பார்ப்பு  பரிதாபத்திற்குரியதாவும் மாறியுள்ளது. 

எமது மாவட்டத்தில் நிலவுகின்ற அனர்த்த முகாமைத்துவதிற்கான வளக் குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு படையின் சேவையினை பெறமுடியாது உள்ளமை என்பவற்றால் தீயை  உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. 5 மணிநேரங்களுக்கு மேலாக பெரும் சுவாலையாக எழுந்த தீயினால் பொதுச்சந்தையில் அமைந்திருந்த புடைவைக்கடைகள், மளிகைக்கடைகள் பழக்கடைகள், உட்டபட 124 கடைகளுக்கு மேல் ஏரிந்து அழிந்துள்ளது.

இங்கே அமைந்திருக்கின்ற ஒவ்வொரு கடைகளும் சராசரி இருபது இலட்சம் ருபாய்களுக்கு மேற்ப்பட்ட முதலீட்டை கொண்டிருக்கின்றன. இவர்களின் மொத்த இழப்பு 221 மில்லியன் ருபாய்களுக்கு மேற்பட்டது  என ஆரம்ப கணிப்புகளில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 22 பழக்கடைகள் 42 இலட்சம் ருபாய்களையும் புடவைக்கடைகள் 9 கோடி ருபாய்களையும் மளிகைக்கடைகள் 4 கோடி அறுபது இலட்சம் ருபாவினையும் தையல் கடைகள்  6 இலட்சம் ருபாய்களையும்  பகுதி ரீதியான அழிவுகளின்; மதிப்பீடு 4 கோடி ருபாய்களையும்  கொண்டு உள்ளது என ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கை விளித்துள்ளது.

ஏற்கனவே  யுத்தத்தினால் இழக்கப்பட்ட சொத்துகளிற்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படதாத நிலையில் வங்கிகளிலும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிலும் பல இலட்சம் ருபாய்களை கடனாக பெற்றிருக்கிறார்கள். எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலட்சக்கணக்கான ருபாய்களுக்கு கடன் கொள்வனவிலும் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.  திடீரென ஏற்பட்ட  தீவிபத்தினால் வர்த்தகர்கள் பெரு நட்டம் அடைந்துள்ளதுடன் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். 

அத்துடன் வர்த்தகர்களின் நீண்ட கடைத்தொகுதிகள் எரிந்து தரைமட்டமாகியுள்ளதால் உடனடியாக வர்த்தகத்தை மீள மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் தென்படவில்லை ஆகவே மேற்படி விடயம் குறித்து தாங்கள் அதிவிசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவுமாறும் தங்களின் விசேட பணிப்பின் பேரில் அதி உச்ச நட்ட ஈட்டினை வழங்கி உதவுமாறும்  மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/11560

அடுத்த மகா நடிகன், இவருக்கு அக்கறை இருந்தால் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களிடம் , சமுக  அமைப்புக்களிடம் உதவி கேட்கலாமே , நான் அன்றும் கூறினேன்  15 லட்சம் புலம் பெயர் மக்கள் ஆளுக்கு  $ 10 அனுப்பினால்  இலங்கை  ரூபாய் 21 கோடிக்கு மேல் , அந்த பணத்தை என்னவெல்லாம் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் சுருட்டி வைக்க அய்யாவீட்டிலை இடமில்லையாமே...அதுதான் யோசிக்கிறார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவிகள்/கடமைகள் என்ற பொன்வாத்து முட்டைகள் ஏராளம் ஏராளமாக இருக்கும் போது.......
தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக பொன்வாத்தையே அறுக்க நினைப்பவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.